1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எங்கேயோ கேட்ட குரல் !!!

Discussion in 'Regional Poetry' started by MuhilNeel, Sep 2, 2013.

  1. MuhilNeel

    MuhilNeel Silver IL'ite

    Messages:
    393
    Likes Received:
    231
    Trophy Points:
    93
    Gender:
    Female




    [​IMG]


    வளைந்து நெளிந்தாடி
    பாடி வரும் தென்றல் வழி
    ஓடி வரும் இசையென
    தெவிட்டா அமுதூற்றென
    தேமதுரக் குரல் !!

    தனிமையையும் உணரவில்லை
    தவிப்பதுவும் தோன்றவில்லை
    நினைத்த நொடிதனில்
    இசை வெள்ளமென
    செவிதனில் பாயும் குரல் !!

    உடைந்து போன இசைத்தட்டாய்
    ஒலிநாடாவில் இருந்த போதும்
    சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என
    மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
    அதே குரல் !!

    கற்பனையாய் ஆனாலும்
    கனவதனில் தொலைத்தாலும்
    கடல் தாண்டி மலை தாண்டி நின்றாலும்
    நினைவுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கும்
    எங்கேயோ கேட்ட குரலாய் !!​
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    மிக நன்றாக இருக்கிறது முஹிநீல். வாழ்த்துக்கள்!
    நான் வருவதற்கு முன்பு
    அது இருந்ததா? தெரியாது!
    நான் போன பிறகும்
    இருக்கலாம் ஓயாது!
    எனைத் தீண்டி என்னுள்ளே என்றும்
    ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்திச் செல்லும்
    அக்குரலைப் பற்றி வேறொன்றும் தெரியாது!
    அதில் தோய்வதைப் போல் ஓரின்பம் கிடையாது!
     
  3. MuhilNeel

    MuhilNeel Silver IL'ite

    Messages:
    393
    Likes Received:
    231
    Trophy Points:
    93
    Gender:
    Female
    தங்களது அன்பான வாழ்த்துகட்கு மிக்க நன்றி ஶ்ரீனிவாசன் அவர்களே.
    தங்கள் கவிதை வரிகளை மிகவும் இரசித்தேன்.
     

Share This Page