1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன்னத உறவுகள்

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Feb 16, 2012.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    உன்னத உறவுகள் - 5

    அன்று ஞாயிறு கிழமை, காலை எழும்போதே இனம் புரியா சஞ்சலம் மனதை வாட்ட அதன் காரணத்தை யோசித்தபடியே படுக்கையில் இருந்து எழாமல் கிடந்தாள் ஸ்னேகு.அப்போது தான் கண்விழித்த ஸ்வீட்டி எழுந்து யோகா கிளாஸிற்கு தயாரகி வர இன்னும் படுக்கையை விட்டு எழாத ஸ்னேகுவை எழுப்பி

    "ஸ்னேகு இன்னைக்கு மதியத்துகுள்ள shopping முடிச்சுட்டு வரனும்ல? மணி 6.00 ஆகுது பாரு இதுக்கு மேல நீ meditation முடிச்சு நாம கிளம்ப லேட் ஆகும் சீக்கரம் ............fast fast........." என்று துரிதபடுத்தினாள்

    "ஸ்வீட்டி நானும் இன்னைக்கு வரணும்மா?......."

    "என்ன கேக்குற நீ?........" என்று அவள் முகம் பார்த்தவள் ஏதோ சரியில்லை என்றுணர்ந்து ஆதரவாய்

    "ஏன் டி என்னாச்சு?.........."

    "ச்சு ..... ஒன்னுமில்லை டி " என்றபடி எழ எத்தனித்தவள் ஸ்வீட்டியின் பார்வையில் மீண்டும் அமர்ந்து

    "இல்ல ஸ்வீட்டி மனசே சரியில்ல என்னமோ மாதிரி இருக்கு......."

    "ஒன்னுமில்லாத எல்லாம் யோசிச்சா அப்படிதான் இருக்கும் போ.... போய் வேலை பாரு" என்று விரட்டினாள். எங்கே பழைய விஷயங்களை எல்லாம் மறுபடியும் நினைக்க ஆரம்பித்துவிடுவாளோ என.

    ஸ்வீட்டியின் உந்துதலில் முகம் கழுவி தியான அரங்கை நோக்கி சென்றாள். செல்லும் வழியில் 3 நாட்களாய் கிழிக்காமல் இருந்த தினசரி கண்ணில் பட அந்த தேதிகளை கிழித்தபோது தான் இன்று என்ன நாள் என்பதும்,ஏன் காலையிலிருந்து மனம் பழைய விஷயங்களை அசைபோட அடம்பிடிக்கிறது என்றும் புரிந்தது அவளுக்கு.கண்கள் கலங்கி முன் இருப்பது எதுவும் தெரியாதபடி செய்தது.

    'எப்படி மறந்தேன் இந்த நாளை? ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஆவலாய் எதிர்பார்பேன்?... இந்த இரண்டு ஆண்டுகளாய் எதிர்பார்க்கவில்லை என்றாலும் மறக்கவும் இல்லையே....... என்னாயிற்று இந்த வருடம்? நான் எல்லாவற்றையும் மறந்துகொண்டுஇருக்கிறேனா?...........கடவுளே.........அந்த இனிமையான நாட்களை.....அன்னையை.........தந்தையை...........அவனை......... எல்லோரயும் மறக்கிறேனா?.......அய்யோ.......' என தனக்குள்ளயே நொறுங்கிகொண்டு இருந்தாள்.தூரத்திலிருந்து அவளை பார்த்த ஸ்வீட்டி


    "ஸ்னேகு இன்னும் போகலையா நீ?" என்று அதட்ட

    மெதுவாய் நடந்து தியான அரங்கிற்கு செல்லாமல் அருகே உள்ள மரத்தடி பெஞ்சில் அமர்ந்து கண்மூடினாள், அவளது கண்முன் அந்த இனிமையான நினைவுகள் அணிவகுத்து வர, மூடிய இமைகளில் இருந்து கண்ணீர் பெருகெடுத்தது.அதனை இரு விழிகள் இயலாமையோடு பார்த்துகொண்டிருந்தன...
     
  2. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    உன்னத உறவுகள் - 6

    தயாராகி சோர்வாய் வந்தவளை தனது கேள்விகளால் துளைத்து எடுத்தாள் ஸ்வீட்டி, ஆனால் அவளிடமிருந்து "ஒன்னுமில்லை" என்ற வார்த்தையை தவிர வேறு எதையும் ஸ்வீட்டியால் வாங்க முடியவில்லை. அதற்குள் மஞ்சு வந்துவிட அவளை அழைத்து கொண்டு இராமசந்திரனை காண சென்றாள். இவர்களை பார்த்தவர்


    "வாம்மா மஞ்சு, அப்பாவ பார்க்க இப்ப தான் டைம் கிடைச்சுதா?....."

    "என்ன பா பண்ணறது இவ நோட்ஸ்யும் சேர்த்து நான் தான் எடுகத்துட்டு இருக்கேன் அதான்.....வர முடியல" ஸ்வீட்டி முறைக்க

    "இப்ப தான் தெரியுது ஸ்வீட்டி ஏன் லாஸ்ட் டைம் ரொம்ப கம்மி பர்சன்டேஜ்னு"என

    "அப்பா........ இப்படி கவுத்துடீங்களே......."என சினுங்க ஸ்வீட்டி சிரித்து விட்டு

    "அப்பா.... நாங்க ரெடி போலாம?....."

    "எங்க மா?"

    "என்ன பா மறந்துடீங்களா?........ ஃபங்கஷனுக்கு தேவையானத எல்லாம் இன்னைக்கு வாங்கிட்டு வரலாம்னு நீங்க தான சொன்னீங்க....."

    "அய்யோ மறந்தே போச்சு டா, எனக்கு வேற வேலை இருக்கே என்ன பண்ணலாம்.......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"

    "தெரியும் எனக்கு இந்த மாதிரி தான் எதாவது பண்ணுவீங்கனு......போங்க பா...அதுனால தான் நான் ஸ்ரீய வண்டி கொண்டுவர சொன்னேன்...."

    "என் செல்லம் ......." அதற்குள் மஞ்சு

    "அப்பா இது என் ஐடியா...." என

    "அதானே இவளுக்கு அந்தளவுக்கு மூளை வேலை செய்யாதே.... நீ தான் என் செல்லம் " என்று அவர் மஞ்சுவை கொஞ்ச , ஸ்வீட்டி சினுங்க இருவரும் சிரித்தனர். அதற்குள் ஸ்ரீயும் வாசுவும் வந்துவிட, இருவரும் இராமசந்திரனிடம் சிறிது நேரம் பேசிகொண்டிருந்துவிட்டு ஸ்னேகுவையும் அழைத்துகொண்டு புறப்பட்டனர்.

    காரில் நால்வரும் கலகலப்பாக வர ஸ்னேகு மட்டும் அமைதியாகவே வந்தாள்.அவளது எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது, அவனது முகம் கண்முன் தோன்றி கண்ணை குளம் கட்டசெய்தது, யாரும் அறியாமல் ஜன்னல் பக்கம் முகம் திருப்பி கண்ணீர் வடித்தாள்.

    தீடிரென்று அவளது முகம் அதிர்ச்சியில் சுருங்கியது , தான் பார்ப்பது நிஜம் தானா என்று கண்களை ஒருமுறை கசக்கி பார்த்தாள், நிஜம் என்று உறைக்க பெருங்குரலேடுத்து கத்தினாள் "மகேஷ்"................
     
  3. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    உன்னத உறவுகள் - 7

    அவளது அலறலில் காரை சடன்பிரேக் போட்டு நிறுத்தினான் ஸ்ரீ.கார் நின்ற நொடி இறங்கி ஒடி ஒவ்வொரு முகமாக தேடினாள் ஸ்னேகு.அவளது அலறலும், தேடலும் ஸ்வீட்டிக்கு எதையோ உணர்த்த மஞ்சுவிடம்

    "இன்னைக்கு என்ன தேதி?" என

    மஞ்சுவின் பதிலில் அவளது சந்தேகம் உறுதியானது.அதற்குள் ஸ்ரீயும் வாசுவும் அவளை சமாதானபடுத்தி அழைத்து வந்திருக்க, அவள்

    "மகேஷ்டா" என்று புலம்ப

    "மகேஷ் இல்லை ஸ்னேகா...." என்ற ஸ்வீட்டியின் அழுத்தமான பதிலில் அமைதியாகி போனாள்.

    மஞ்சு"திரும்பி போலாம் ஸ்ரீ இன்னோரு நாள் வந்து பார்த்துகலாம்"

    ஸ்வீட்டி" அதெல்லாம் வேண்டாம் ஸ்ரீ வண்டிய நேரா கடைக்கு விடு" முவரும் அவளை பார்க்க கண்களால் சைகை செய்தவள்

    "வண்டிய எடு ஸ்ரீ" என காரை நகர்த்தினான். அங்கு ஒரு நிசப்தம் நிலவியது, கடையின் முன் காரை நிறுத்தியவன் "போகலாம்" என

    ஸ்வீட்டி" மஞ்சு இதுல லிஸ்ட் இருக்கு, நீ வாங்கிட்டே இரு நான் இவள கூப்பிட்டு வரேன்"

    வாசு"நானும் இருக்கட்டுமா?...."

    "வேண்டாம் வாசு நீ போ..... நான் கூப்பிட்டு வரேன், ஸ்ரீ இந்தா கார்ட்"

    "வேண்டாம் ஸ்வீட்டி எங்கிட்டே இருக்கு"

    "பரவாயில்ல இந்தா...." என்று அவன் கையில் திணித்தாள்.ஸ்ரீயும் மஞ்சுவும் முன்னாடி செல்ல வாசு திரும்பி ஸ்னேகு பார்த்தபடியே சென்றான்.

    அவர்கள் சென்றதும் இறுகிபோய் அமர்ந்திருந்த ஸ்னேகுவின் தலையை மென்மையாக வருடி கொடுத்தபடி

    "ஸ்னேகு மா என்னாச்சு?....."

    "ஸ்வீட்டி மகேஷ் டி"

    "மகேஷ் இல்லடா"

    "மகேஷ் தான் நான் பார்த்தேன் நான் கூப்பிட்டதும் அவன் .......அவன் போய்ட்டான்......." என குழந்தைபோல் அரற்ற

    "மகேஷ் வர மாட்டான் மா..... அழாத டா புரிஞ்சுகோ மா....." என அவளும் குழந்தைக்கு சொல்வது போல் சொல்ல

    "காலம் முழுக்க பிரியவே மாட்டோம்னு சொன்னான் இல்ல ......... அப்பறம் ஏன் டி போனான்...........இன்னைக்கு அவன் பிறந்தநாள் இன்னைக்கு தான் அவன் எனக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுத்தான்...... எப்படி டி மறந்துட்டு போனான்....." என்று தேம்பி தேம்பி அழுதவளை சமாதானம் செய்ய முடியாமல் அவளும் கண்ணீர் வடித்தாள். ஒரு வழியாய் அவளை சமாதனம் செய்தவள், அவளை அழைத்துகொண்டு கடையினுள் செல்ல அவர்களை ஒரு நிழல் தொடர்ந்தது............
     
  4. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    உன்னத உறவுகள் - 8

    தன்னை யாரோ தொடர்ந்து வருவதை அறியாமல் இருவரும் மற்ற மூவருடன் இணைந்து கொண்டனர் ஸ்னேகுவும், ஸ்வீட்டியும். அனைவரும் அமைதியாகவே வீடுவந்து சேர்ந்தனர். இன்பாலயத்திற்கு வந்ததும் ஸ்னேகு மரத்தடியை நாடி சென்றுவிட மற்ற நால்வரும் ஸ்வீட்டியை கேள்விகளால் துளைத்து கொண்டிருந்தினர்.

    வாசு" என்ன ஆச்சு ஸ்னேகுக்கு?"

    "ஒண்ணுமில்லை வாசு பழைய ஞாபகம் வந்திருச்சு அவ்வளவுதான்"

    ஸ்ரீ"எப்ப கேட்டாலும் இதையே தான் சொல்லற, அவள பத்தி எதுவும் சொல்ல மாட்டேங்கற"

    மஞ்சு" அவள பத்தி நாங்களும் கேட்டகாத நாள் கிடையாது அத நாங்க மறந்துட்டோம் அதை பத்தி மட்டும் கேட்டகாத நு சொல்லி வாய அடைச்சுட வேண்டியது இப்ப எங்களுக்கு தெரிஞ்சாகனும்"

    வாசு"ஆமா , எப்பவும் மகேஷ்னு குறிப்பிடுவியே அது யாரு? அவ அப்பா அம்மாவ எப்படி இழந்தா?எப்படி இங்க வந்தா? எல்லாமே தெரிஞ்சாகனும்"

    ஸ்வீட்டி " தெரியாது தெரியாது தெரியாது ......... எனக்கு எதுவுமே தெரியாது நானும் உங்கள போலதான் எனக்கும் எதுவும் தெரியாது ....."

    அனைவரின் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி .

    ஸ்ரீ"தெரியாதா? என்ன சொல்லற"

    "ஆமா முணு வருஷத்துக்கு முன்னாடி அப்பாவும் அம்மாவும் இவள கூப்பிட்டு வந்து இவ பேரு ஸ்னேகா உன்னோட ப்ரண்ட் , பத்திரமா பாத்துகோனு சொன்னங்க மேல விவரம் கேட்டதுக்கு அவள ஒரு ஆஸ்ரமம்ல இருந்து கூப்பிட்டு வரதகவும் அதுக்கு மேல எதுவும் தெரியாதுனும் சொன்னாங்க இவள கேட்டகலாம்னா எந்நேரம் அழுதுக்கிட்டே இருப்பா தூக்கத்துல திடிர்னு எழுந்து உட்கார்ந்து அழுவா, அவள இந்த மாதிரி கலகலப்பா கொண்டுவர நான் படாதபாடு பட வேண்டி இருந்தது, குழந்தைங்கள பார்த்து நாங்க சொன்ன புத்தி மதிய கேட்டு தான் கொஞ்சம் தேறினா அதுவும் அவளுக்கு இருந்த வெறி தான் அவள வெளிய கொண்டுவந்துச்சு தன்னை மாதிரி திக்கற்றவங்களுக்கு ஏதாவது செய்யனும்ங்கற வெறி, அவ பேசுறப்ப அப்பா,அம்மா,மகேஷ்னு அதாவது சொல்லுவா அதபத்தி கேட்டா அமைதி ஆகிடுவா........... இத்தனை வருஷத்தில என்னால அவளபத்தி ஒன்னையும் தெரிஞ்சுக்க முடியல.......... அந்தளவு அழுத்தக்காரி........... இந்த நாள் வந்தா மட்டும் எங்கேயும் போகாம கோவிலே கதின்னு கிடப்பா .......... அதுக்கு இன்னைக்குத்தான் பதில் கிடைச்சுது ............இன்னைக்கு மகேஷோட பிறந்த நாள் ........... "

    வாசு"அப்ப மகேஷ் யாருன்னு உனக்கு தெரியாதா?"

    "இல்ல வாசு என்னோட யூகம் மகேஷ் அவளோட தம்பியா இருக்கலாம்........"

    மஞ்சு"எப்படி சொல்லுற?"

    "நம்ம ரிஷி இருக்கான் இல்ல"

    "யாரு?"

    "அதான் இங்க 5த் படிக்கறானே அவன் தான் , அவன இவளுக்கு ரொம்ப பிடிக்கும் கேட்டா என்னோட மகேஷ் மாதிரியே நடந்துகறான்னு சொல்லுவா.......... அவன் இவள அக்கானு கூப்பிடறப்ப எல்லாம் பூரிச்சு போய்டுவா நான் கவனிச்சு இருக்கேன்.........."

    அந்த நேரம் இவர்களை தேடி இராமசந்திரனும் கமலாவும் வந்தனர் கூடவே ஒரு புதியவனும் அவனது பார்வை தேடலுடன் அந்த அறையை சுற்றியது.
     

Share This Page