1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள்

Discussion in 'Stories in Regional Languages' started by g3sudha, Feb 1, 2012.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ' 3 '. ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

    பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், இளமைப்பருவம் என மூன்று பருவங்களில் காதலையும் இப்படத்தில் காட்டி இருக்கிறார்கள். அதனாலேயே படத்திற்கு பெயர் ' 3 '.

    இப்படம் தொடங்கப்பட்டதில் இருந்தே படத்தினை பற்றிய செய்திகள் பத்திரிகைகளையும் இணையதளங்களையும் ஆட்கொண்டு இருக்கிறது. படப்பிடிப்பு தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்றபோது நாயகியாக இருந்தவர் ஸ்ருதிஹாசன், ஆனால் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது நாயகியாக சந்தித்தவர் அமலா பால். ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய போது நாயகியாக நடித்தவர் ஸ்ருதிஹாசன்.

    படப்பிடிப்பு பற்றி பல்வேறு தகவல்களை படக்குழு தங்களது டிவிட்டர் இணையங்களில் பகிர்ந்து கொண்டு வந்தார்கள். ஆனால் இணையத்தில் எப்போது 'why this kolaveri' என்ற பாடல் வெளியானதோ அன்று முதல் இன்று வரை இளைஞர்கள் மத்தியில் 3 பாடல்கள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன.

    முதலாவதாக why this kolaveri பாடலின் single track வெளியிட்டார்கள். இணையத்தில் அப்பாடல் உருவான விதம் வீடியோ பதிவு youtube இணையத்தில் golden award வென்றது. அப்பாடல் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த பிரபலத்தால், இந்திய பிரதமர் அளித்த விருந்தில் கலந்து கொண்டார் தனுஷ்.

    பல்வேறு ஊர்களுக்கு சென்று flash mobல் கலந்து கொண்டார் தனுஷ். அதற்கு காரணம் அனைத்துமே 3 படத்தின் பாடல்கள் தான். 'why this kolaveri', 'கண்ணழகா','போ நீ போ' போன்ற பாடல்கள் தமிழக இளைஞர்களின் மொபைலின் caller tune ஆக வைத்து இருப்பது இப்படத்தின் பாடல்கள் வெற்றிக்கு ஒரு சான்று.
     
  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெருக்கமான நண்பர் பரத்பாலா. ஏ.ஆர்.ரஹ்மானின் வீடியோ ஆல்பங்கள் அனைத்தையும் இயக்கியவர் பரத்பாலா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    பரத்பாலா ஏற்கனவே 'hari om' என்னும் படத்தினை இயக்கி இருக்கிறார். இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ளது.

    இந்நிலையில் முதன் முறையாக பரத்பாலா ஒரு தமிழ் படத்தினை இயக்க இருக்கிறார். இப்படத்தினை சோனி நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

    ஆனால் தற்போது இப்படத்தினை ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது . நண்பனின் படத்திற்கு இசையமைக்க ஓகே சொல்லி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். தனுஷ் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

    வீடியோ ஆல்பமாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தும் பரத்பாலா. இப்படமும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
     
  3. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    தனுஷ் - யுவன் இருவரும் இணைந்து பணியாற்றி படங்களில் அனைத்து பாடல்களுமே வரவேற்பை பெற்றன.

    துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களில் இருவரும் இணைந்திருந்தார்கள். அதற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் இவர்கள் இணையவில்லை.

    இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைவார்களா என்று திரையுலகில் பேச்சுகள் நிலவின.

    யுவன் குறித்தும் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்தும் தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " எனக்கு யுவனின் இசை மிகவும் பிடிக்கும். என்னுடைய முதல் படத்திற்கு இசையமைத்தவர் என்பதால் யுவன் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல் தான். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன்.

    நிறைய கதைகளை கேட்டு விட்டேன். எந்த படத்தினை ஒப்புக் கொள்வது என்பது குழப்பமாக இருக்கிறது. நான் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
     
  4. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக இருக்கும் தனுஷ் இந்தியில் நாயகனாக நடிக்கும் முதல் படம் 'raanjhnaa'. இப்படத்தின் கதை காசி நகரப் பின்னணியில் நடைபெறுவது போன்று அமைத்து இருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ராய்.

    தனுஷ் ஜோடியாக நடிக்க நாயகி தேர்வு நடைபெற்று வந்தது. நாயகியாக நடிக்க சோனம் கபூரை அணுகி இருக்கிறாராம் இயக்குனர் ஆனந்த் ராய்.

    ஆனால் சோனம் கபூர் தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்து வருவதால் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆவது குறித்து தயக்கம் காட்டி வருகிறாராம். ஆனால், படத்தின் கதை தனக்கு பொருத்தமாக இருப்பதால் எப்படியாவது தேதிகள் ஒதுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மனம் அலைபாய்கிறாராம் சோனம் கபூர்.

    விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

    தனுஷ் நடித்து இருக்கும் ' 3 ' படம் வெளியான உடன் முழுவீச்சில் இப்பட பணிகளில் கலந்து கொள்வார் என்று கூறுகிறது தனுஷ் வட்டாராம்.
     
  5. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    தமிழ்நாட்டைத் தகிக்கவைத்த தமன்னா, இப்போது ஆந்திரத்தில் மையங்கொண்ட புயலாக மாறிவிட்டார். மீடியா ஆட்களிடம்கூட 'டச்’ இல்லாமல் 'நாட் ரீச்சபிள்’ எல்லையில் இருப்பவரை ஏழு மொபைல், நாலு இ-மெயில் தாண்டிப் பிடித்தேன்...

    ''இப்படியா தேட வைப்பீங்க உங்களை?''
    ''தேடப்படுறது நல்ல விஷயம்தானே... தெலுங்குல ரொம்பவே பிஸி. ராம்சரண் தேஜா, பிரபாஸ், ராம்னு எல்லா யங் ஹீரோக்களுடனும் படம் பண்ணிட்டு இருக்கேன். இதெல்லாம் முடிஞ்ச பிறகுதான் சென்னைக்கு ஃப்ளைட் பிடிக்க முடியும். தமிழ்ல மறுபடி தமன்னா அலை அடிக்கும்!''

    ''ஆனா, இங்கே அதுக்குள்ள அமலா பால், ஹன்சிகா, காஜல் அகர்வால்னு உங்களுக்கு நிறைய போட்டியாளர்கள் வந்துட்டாங்களே?''
    ''போட்டி இருந்தா நல்லதுதானே? நடிப்பு, டான்ஸ்னு எல்லாரும் ரொம்பவே நல்லா பண்றாங்க. நானும் இப்போ முன்னாடி மாதிரி இல்லை. நிறைய புது விஷயங்கள் கத்துட்டு இருக்கேன். மோதிப் பார்க்கலாம்.ஆனா, காஜல், சமந்தா, ஸ்ருதி, வேதிகா, பூனம் பாஜ்வானு எல்லாருமே என் ஃப்ரெண்ட்ஸ்தான். இருந்தாலும் நட்பு வேற... போட்டி வேற. அதுல எல்லாருமே தெளிவா இருக்கோம்!''

    ''ஜீவா நடிக்கப்போற படத்துல த்ரிஷா ஹீரோயின். நீங்க செகண்ட் ஹீரோயின்னு சொன்னாங்க... உண்மையா?''
    ''அந்தப் படத்தோட கதை கேட்டேன். என் கேரக்டருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அதனால 'ஸாரி’ சொல்லிட்டேன்!''

    ''இன்னுமா நீங்க யாரையும் காதலிக்கலை?''
    ''காதலிக்க ஆசையாத்தான் இருக்கு. ஆனா, நேரம்தான் இல்லை. சொல்லப்போனா, வரப்போற கணவர் எப்படி இருக்கணும்னு யோசிச்சதுகூட இல்லை. சரியான நேரத்துல... எல்லாம் சரியா நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. பார்ப்போம்!''

    ''திருப்பதி கோயிலுக்குப் போன உங்களை உள்ளே விடலையாமே... என்ன ஆச்சு?''
    ''ஹைதராபாத் ஷூட்டிங்ல திடீர்னு பிரேக் கிடைச்சது. உடனே கோயிலுக் குப் போலாமேனு தோணுச்சு. ஜீன்ஸ், டி-ஷர்ட்ல உடனே கிளம்பிட்டேன். ஆனா, மாடர்ன் டிரெஸ்ல கோயிலுக் குள் அனுமதி இல்லைனு சொல்லிட் டாங்க.
    இத்தனைக்கும் மேல ஷால் போட்டிட்ருந்தேன். கோயில் விதி களை மதிக்கணும்னு பேசாம வந்துட் டேன். அப்புறம் சல்வார் போட்டுட்டு கோயிலுக்குப் போய் வந்தேன்!''

    ''பிறந்த நாளுக்கு தனுஷை வரவெச்சு ஆட்டம் பாட்டம்னு தூள் கிளப்பிட்டீங்கபோல..?''
    ''அது ரொம்ப யதார்த்தமா அமைஞ்சது. தனுஷோட சேர்ந்து கொல வெறிப் பாட்டுக்குப் பாடி ஆடி... மறக்க முடியாத பிறந்த நாள். 'வேங்கை’ படத்துல நடிக்கும்போதே தனுஷ் மியூஸிக்பத்தி நிறைய பேசிட்டு இருப்பார். இப்போ தேசிய விருது வாங்கிட்டார். இன்டர்நேஷனல் அளவுல பிரபலம் ஆகிட்டார். சச்சினுக்கு ஆல்பம் பண்றார். கலக்குறீங்க தனுஷ்!''
     
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    'மகள்' சீரியலில் திறமைகாட்டி வரும் சத்யசாய் வளசரவாக்கம் 'அவர் ஏஞ்சல் மெட்ரிக்குலேஷன் ஸ்கூலி'ல் ப்ளஸ் ஒன் படிக்கிறார்.

    "தெலுங்குல குரு, சுந்தர காண்டம் சீரியல்கள்ல நடிக்குறேன். எனக்கு சார்ட்டட் அக்கவுண்டட் ஆகணும்னு ஆசை. ஒரு கல்யாணத்துல கௌதமி மேடமைப் பார்க்கும்போது, சீரியல்ல சேலைகட்டி பெரிய பொண்ணுமாதிரி இருக்குற. நேர்ல பார்த்தா குட்டிப் பொண்ணா இருக்கியேன்னு கேட்டாங்க.

    நான் இன்னும் டீன் ஏஜ் பொண்ணுதான். ஸோ.. என்கிட்ட லவ், ப்ரபோஸ் பண்ணதுன்னு நோ கிராஸ் கொஸ்டியன்ஸ்..
    சினிமாவுல பரத்துக்கு ஜோடியா நடிக்கணும். தனுஷுக்கு தங்கச்சியா நடிக்கணும். அது என்னவோ தனுஷைப் பார்த்தா ஒரு பிரதர் ஃபீலிங் தான் எனக்கு வருதுங்க!" லந்தோடு பேசுகிறார் சத்யசாய்.
    [​IMG]
     
  7. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    'அம்முவாகிய நான்’ பாரதியை ஞாபகம் இருக்கிறதா? திருமதி பாரதியும் இப்போது சீரியலில் கரை ஒதுங்கிவிட்டார். ஜெயா டி.வி. 'ருத்ரம்’ தொடரில் பத்திரிகையாளர் வேடத்தில் நடிப்பவர், ''கல்யாணம், குழந்தைனு செட்டில் ஆன பிறகு, சீரியல்தானே நமக்குச் சரி!?’ என்று சிரிக்கிறார். ''வழக்கமா எமோஷனல், சென்ட்டிமென்ட், பிளாக்மெயில் இல்லாத சீரியல் இது. இயல்பான காட்சிகள், ஷார்ப் வசனம், மிரட்டல் ட்விஸ்ட் இருந்ததாலதான் நடிக்கச் சம்மதிச்சேன். சினிமாவிலும் நெகட்டிவ் அல்லது சைக்கோ கேரக்டர் கிடைச்சா சூப்பரா பண்ணுவேன். என் பையன் ஹரிக்கு கிரிக்கெட்னா உயிர். சச்சின் மாதிரி அவனை பெஸ்ட் ப்ளேயர் ஆக்கணும்!''- பூரிக்கிறார் பாரதி.
    [​IMG]
     
  8. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    ஜெயா.டி.வியில் இருமலர்கள், சன்.டி.வியில் செல்லமே, இளவரசி என்று சீரியல் ராணியாக வலம் வரும் மகாலட்சுமி இப்போது விஜய் டி.வி 'அவள்' சீரியலில் வில்லி ரேஞ்சுக்கு நடிப்புத் திறமை காட்டி வருகிறார்.

    "ஒரே மாதிரி காம்பியர் பண்றது, நடிக்குறதுன்னு அலுத்துப்போயி நெகடிவ் ரோல் பண்ண ஆரம்பிச்சேன். நிறைய பேரு திட்டி, சாபம் விட்டாலும் அதை என் கேரக்டருக்கான் கிரெடிட்டா எடுத்துக்குறேன். சிலர் ஓவரா கோவத்தைக் காட்டும்போது அதை மகாலட்சுமி கிட்ட காட்டாதீங்க, கேரக்டர்கிட்ட காட்டுங்கன்னு சொல்லிடுவேன். நான் சஞ்சீவ் ஜோடியா நடிக்குறேன். சஞ்சீவை ஷூட்டிங்லதான் நேர்ல பார்த்தேன். ரொம்ப ஃபிரண்ட்லி.. ஒரு நிமிஷம் கூட சும்மா இல்லாம கலாய்ப்பாரு. செட்டே கலகலன்னு இருக்கும்.

    கணவர் அனில்குமார் எப்போ பார்த்தாலும் கிரிக்கெட்டே கதின்னு கிடப்பாரு. சீரியல்,படம் பார்க்கவே முடியலன்னு 52 இன்ச் எல்.சி.டி டி.வி வாங்கிட்டேன். இனிமே நான் நடிச்ச அத்தனை சீரியல்களையும் ஒரு எபிசோடு கூட விடாம பார்த்துடுவேன். சின்னதா ஒரு ரெஸ்ட் தேவைப்படுறதால அலப்பி போட் ஹவுசுக்கு கிளம்பிட்டு இருக்கோம். பை" என்று ஆசையாக பறக்கிறார் மகாலட்சுமி.
     
  9. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    விஜய் டி.வி சூப்பர் சிங்கர் ஜூனியர் - 3 நிகழ்ச்சியில் ஸ்டைலாக வந்து அலப்பறை செய்கிறார். மா.கா.பா. ஆனந்த்.

    ‘‘சமீபத்துல மிர்ச்சி சிவா பிறந்த நாள்ல பிரேம்ஜி , வைபவ், சுந்தர்.சின்னு பெரிய பட்டாளமே திரண்டு வந்து சிவாவை வாழ்த்தினோம். சுந்தர்.சி. நல்லா புரோகிராம் பண்றீங்கன்னு என்னை பாராட்டினாரு. கொலைவெறி பாட்டு ஹிட்டு கொடுத்த அனிருத்தை இன்டர்வியூ பண்ணது சுவாரஸ்ய தருணம். ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவுல அனிருத் இசையமைப்பாளரா மியூசிக் கம்போஸ் பண்ண, நான் வாய்ப்பு தேடுற இளைஞனா அவர்கிட்ட சான்ஸ் கேக்குற மாதிரி ஜாலியா நிகழ்ச்சி பண்ணேன். சினிமாவுல காமெடியனாக நடிக்கணும்னு வெறித்தனமான ஆசை இருக்கு. எந்த டைரக்டர் என்னை கமிட் பன்ணாலும் டக்குன்னு என் டிரேட் மார்க் காமெடியை தர தயாரா இருக்கேன்’’ தெளிவாகப் பேசுகிறார் மிர்ச்சி ஆனந்த.
    [​IMG]
     

Share This Page