1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 5

Discussion in 'Stories in Regional Languages' started by Sweetynila, Jan 28, 2012.

 1. Sweetynila

  Sweetynila Silver IL'ite

  Messages:
  480
  Likes Received:
  42
  Trophy Points:
  50
  Gender:
  Female
  இதுவரை இல்லாத உணர்விது - 5

  அமைதியான காலை பொழுதில் ரோஜா இதழை போல அழகான தேவதையை ஈன்று எடுத்தாள் ராஜேஸ்வரி.

  பிரசவ வலியை அவள் அனுபவித்தாலோ இல்லையோ அவள் கணவன் துடித்துவிட்டான்.

  மயக்கம் தெளிந்ததும் கண் விழித்த ராஜேஸ்வரி தன் கணவன் முகம் தெளிவில்லாமல் இருப்பதை கண்டவள் மனதில் கிலி பிறந்தது.

  தன் நிலை தன் பெண்ணிற்கும் வந்து விடுமோ என்று ஒரு கணம் பயந்தவள்,

  " சே அப்படி எல்லாம் அவுக நினைக்க மாட்டாக , இது வேற ஏதோ பிரச்சனை " என்று எண்ணியவள் அவனிடமே வினவினாள்.

  " ஏங்க , என்னாச்சு ? ? ஏன் ஒரு மாதிரியா இருக்கீக ? ? "

  " ரொம்ப கஷ்டப்பட்டியாடா ? " என்றவன் தலையை வருடினான்.

  " அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க " என்று புன்னகைத்தாள்.

  அவள் பதிலில் திருப்தியடையாதவன் ,

  " இந்த ஒரு குழந்தையே நமக்கு போதும் வேற குழந்தையே வேண்டாம் " என்று அவன் குழந்தையாய் மாறி கூறவும் ,

  " பட்டாளத்துல இருக்குறவரோட பேச்சை பாருங்க . ரொம்பாவே தைரியசாலிதான் " என்று அவள் புன்னகைக்கவும் ,

  " நான் பட்ட அவஸ்தை எனக்குதானே தெரியும் " என்று சிணுங்கினான் .

  " உங்கள போல ஒரு குட்டி இளவரசனை பெத்து அவனையும் பட்டாளத்துக்கு அனுப்ப வேண்டாமா ? இப்படி பயந்த என்ன அர்த்தம் ? " என்று அவள் கூறவும் ,

  " எனக்கு எப்பவும் நீ தான் முக்கியம் " என்றவன் அவளை தன் தோள் மேல் சாய்த்து கொண்டான்.

  அதே நேரம் " என்னையும் மறந்து விடாதீர்கள் " என்று அவர்கள் குட்டி தேவதை சிணுங்கி அவர்கள் கவனத்தை ஈர்த்தாள்.

  அவன் மறு குழந்தை வேண்டாம் என்று எந்த அர்த்ததில் கூறினானோ ஆனால் அது பலிக்க போகிறது என்பதை அவன் அறியவில்லை .

  குழந்தை பிறந்த பத்தாம் நாளே குழந்தைக்கு என்ன பேர் வைப்பது என்று வினவி கொண்டு ராஜேஸ்வரி தன் கணவன் முன் வந்து நின்றாள் .  " எங்க அம்மா பேரு மதுரம்னு வச்சுடலாம் . நான் அவங்களை சின்ன வயசுல பார்த்தது . அப்புறம் அவங்க கூட இருக்கிற கொடுப்பினை எனக்கு இல்லாம போச்சு . அதனால அவங்க பேரையே வச்சிடலாம். நீ என்ன சொல்லுற ? "

  " நீங்க சொல்லி என்னைக்கு மறுத்து பேசி இருக்கேன் . எனக்கு முழு சம்மதம் "

  " அப்புறம் அம்மா பேர மட்டும் வச்சா என்னால கூப்பிட முடியாது . அதுனால மதுரவாணின்னு வச்சுடலாம் . நான் வாணின்னு கூப்பிட்டுப்பேன் "

  " ரொம்ப அழகான பேரு . அதையே வச்சிடலாம் " என்று இருவரும் சந்தோசபட்டனர்.

  மூன்றாம் மாதம் குழந்தையையும் ராஜியையும் அழைத்து செல்ல சுந்தர்ராஜன் அங்கு வந்தான் .

  அப்பொழுது நாகலாந்தில் உள்நாட்டு கலவரம் தொடங்கி இருந்தது .

  அதனால் அந்த சுழ்நிலையில் குழந்தையும் , தாயும் அங்கு இருப்பது நல்லதல்ல என்று தன்னுடனே வைத்துக் கொண்டார் மகேந்திரன் .

  நாட்கள் சந்தோசமாக சென்றன . மதுரவாணி தன் ஏழாம் மாதத்தை தொட்டிருந்தாள் . ராஜேஸ்வரிக்கு அவள் பின் ஓடுவதே முழு நேர வேலையாக இருந்தது .

  சுந்தர்ராஜன் வந்து விட்டால் அவரிடமே ஒட்டி கொண்டு தன் அன்னைக்கு விடுமுறை விட்டு விடுவாள் .

  நாகலாந்தில் போர் துவங்கி விட்டது என தந்தி வர விடுமுறைக்கு ஊர் வந்திருந்த சுந்தர் ராஜன் மீண்டும் நாகலாந்து செல்ல கிளம்பினார் .

  அவர் கிளம்பும் அன்று அவருடைய செல்ல மகள் தன் பிஞ்சு கால்களை ஊன்றி எழுந்து நின்று தன் முத்து பற்கள் தெரிய சிரித்தாள் .  இதனை கண்டவர் சந்தோசத்தின் உச்சிக்கே சென்று அவளை தூக்கி அணைத்து கொண்டார்.அன்று அந்த சந்தோசத்தோடு பிரிய மனமின்றி சென்றவர் திரும்பி வரவே இல்லை .  நாகலாந்து போரில் இவ்வுலகை விட்டு போனவர்களில் அவரும் ஒருவர் ஆனார் .

  இந்த விசயம் அறிந்ததும் ராஜேஸ்வரியை தேற்றுவது தான் பெரிய விசயமாயிற்று .

  உண்பதையும் உறங்குவதையும் மறந்து இருந்தவரிடம் மதுரவாணியை காட்டி அறிவுரை வழங்கினர் .

  கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்தவருக்கு மதுரவாணியே உலகமாகி போனாள் . அவர் முற்றிலும் அந்த எண்ணத்தை விட்டு வெளியே வரவில்லை .

  தன் குழந்தையின் உருவில் தன் கணவரை கண்டவர் மனதை ஓரளவிற்கு திட படுத்தி கொண்டார் .

  சபரிஷிற்கும் சந்தோசிற்கும் மதுரவாணியே விளையாட்டு துணையாகி போனாள் . கண்மணியின் இளைய மகளுடன் விளையாடினாலும் ராஜேஸ்வரியை போன்று அமைதியாக இருக்கும் மதுரவாணி தான் எப்பொழுதும் அவர்களுக்கு முதலிடம் .

  அவளாக வாயை திறந்து எதுவும் கேட்க மாட்டாள் என்பதை அறிந்து கொண்டு இருவரும் அவளுக்கு பிடித்ததை தேடி பிடித்து வாங்கி வந்து கொடுப்பர் . மஹேந்திரனும் இந்த பட்டியலில் இணைந்து கொள்ளுவார் .

  ராஜேஸ்வரி தன் கணவன் எப்பொழுதும் கடை பிடிக்கும் வாக்கியமான ,

  ' எப்பொழுதும் யாருக்கும் தொந்தரவாக இருக்க கூடாது ' என்ற வாக்கியத்தை கடை பிடித்து பல முறை அந்த வீட்டை விட்டு தன் ஊருக்கு செல்வதாக மஹேந்திரனிடம் கூறி பார்த்தார் . ஆனால் அவர் அதை திட்ட வட்டமாக மறுத்து விட்டார்.

  ராஜேஸ்வரியின் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு அவரை சமையல் வகுப்பிலும் , தையல் வகுப்பிலும் , கைவினை பொருட்கள் செய்யவும் இணைத்து விட்டார் .

  ராஜேஸ்வரிக்கும் இது தேவையாக இருந்ததால் முழு மூச்சோடு அதில் இணைந்து கொண்டாள் .

  மதுரவாணிக்கு சிறுவயது முதலே தங்கள் வாழ்வில் நடந்த அனைத்து விசயங்களையும் ஊட்டியே வளர்த்தார் .

  மதுரவாணியும் தன் தாயின் நிலை உணர்ந்து சமர்த்து பொண்ணாகவே வளர்ந்தாள் . சற்று சுடிக்கையான பெண் என்பதால் விசயங்களை உடனே கனித்து அடுத்தவர் மனம் நோகாமல் நடந்து கொள்ளுவாள்.

  மதுரவாணி தன் எட்டாம் வயது வரை மஹேந்திரனின் வீட்டிலேயே வளர்ந்தாள்.

  அன்று தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தவள் பூ தோடுத்து கொண்டிருந்த தன் அன்னையிடம் ஓடி வந்தாள் .

  " அம்மா , அம்மா " என்று ஓடி வரும் தன் மகளை கண்டவர் ,

  " என்னச்சும்மா ? " என்றார் கனிவாக .

  " உங்களை பார்க்க யாரோ வந்து இருக்காங்க . யாருன்னு கேட்டதுக்கு பெரியப்பான்னு சொல்லராங்க "என்று வந்து நின்றாள் .

  வாசலில் சுந்தர் ராஜனின் அண்ணன் தயாளன் நின்று கொண்டிருந்தார் .


  " வாங்க , உள்ளே வாங்க " என்று அவரை வீட்டினுள் அழைத்து சென்றாள் .

  " குழந்தையும் நீயும் எப்படி இருக்கீங்க ? " என்று வினவினார் .

  ' ம் ' என்று தலையை மட்டும் ஆட்டினாள் .

  " அப்பாக்கு உடம்புக்கு ரொம்ப முடியலை . சுந்தருக்கு தான் செய்த அனியாயத்தை நினைத்து இப்போ வருத்த படராக . கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் . அவன் இருக்கும் போது உணர்ந்திருந்தா அவனும் சந்தோசபட்டு இருப்பான் . சரி இப்போ அதை பத்தி பேசி என்ன பயன் . அவுக உன்னையும் புள்ளையயையும் பார்க்கணும்னு விருப்பப்படுராக . ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போக முடியுமான்னு கேட்டு போக வந்தேன் "

  அவள் எதுவும் சொல்லாமல் நிற்கவும் ,

  " எந்த பதில்லா இருந்தாலும் சொல்லு . நீ மாட்டேன்னு சொன்னா கூட கோவிச்சுக்க மாட்டேன் " என்று அவர் புணரவும்,

  " இல்லை இல்லை அப்படி எல்லாம் இல்லை . மஹேந்திரன் அண்ணா தான் எங்களுக்கு எல்லாம் அவுககிட்டே ஒரு வார்த்தை கேட்டு சொல்லறேன் "

  " அதுவும் சரி தான். அப்படியே செய்மா " என்றவர் மஹேந்திரனுக்காக காத்திருக்க துவங்கினார் .

  மஹேந்திரன் விசயத்தை கேட்டதும் ,

  " நீ என்னமா நினைக்கரே ? உனக்கு போகணும்னு விருப்பம் இருக்கா ? "

  " உடம்புக்கு முடியாதவர் அதுலேயும் பெரியவங்க அழைக்கும் போது மறுக்க மனம் வரவில்லைண்ணா "

  " சரிம்மா அப்போ என்ன முடிவு பண்ணி இருக்கே ? "

  " ஊருக்கு போகலாம்னு நினைக்கறேண்ணா "

  " அப்போ சரிம்மா . நானும் உன் கூட வரேன் " என்றார் .

  மூவருமாக ஊருக்கு கிளம்பினர்.

  ராஜேஸ்வரியையும் மதுரவாணியையும் அங்கு பத்திரமாக உள்ளனரா என்பதை உறுதி படுத்தி கொண்டு ஊர் திரும்புவதாக முடிவு செய்தார் மஹேந்திரன் .

  படுக்கையில் இருந்த வீரபாண்டியனை பார்க்க ராஜேஸ்வரிக்கு மிகவும் கஸ்டமாக இருந்தது .

  கம்பீரமாக திரிந்த மனிதர் துவண்டு போய் படுக்கையில் அசையாது கிடப்பது வருத்தத்தை கொடுத்தது .

  ராஜேஸ்வரியும் மதுரவாணியை கண்டதும் முகம் மலர ' வாம்மா ' என்று தன் அருகே அழைத்து அமர வைத்து கொண்டார் .

  மதுரவாணியின் முகம் தொட்டு பார்த்தவர் கண்களில் தன் மகனின் நினைவால் நீர் கோர்த்து .

  " இனிமேல் நீங்க ரெண்டு பேரும் என் கூட தான்மா இருக்கனும் . நல்லா இருக்கும் காலத்துல கவுரவத்த பார்த்து விலைமதிப்பில்லாத அருமையான சொந்தங்களை தொலைத்து விட்டேன் . வயசாகி படுக்கையில் விழுந்த பிறகு தான் அதன் அருமை தெரியுது . என் புள்ளையை தான் பக்கத்துல வச்சுக்க முடியலை அவன் வயத்து புள்ளையையாவது கடைசி வரை கூட வச்சுக்கனும்னு ஆசை படறேன்மா . அதனால நீ இங்கேயே இருந்துடு . இந்த கிழவனுக்காக அதை பண்ணுவியா ? " என்று அவர் கண்களில் கண்ணிரோடு வினவவும் ,

  " கண்டிப்பா நாங்க இங்கேயே இருக்கோமுங்க " என்று வேகமாக பதில் அளித்தாள் .

  இழப்பின் கொடுமையை அவளும் அனுபவித்து கொண்டு தானே இருக்கிறாள் . தன் மகளால் அவர் மனம் ஆறுதல் பெருமென்றாள் அதை செய்வது என்று முடிவெடுத்தாள் .

  மஹேந்திரனை நோக்க,

  அவரும் ' எல்லாம் சரி ' என்பது போல் கண்ணசைக்க நிம்மதி ஆனாள்.


  அவர்களின் வசதியை பார்த்து விட்டு மஹேந்திரன் ஊர் திரும்பினார்.

  --உணர்வுகள் விளையாடும்....

  - நூருல் & நிலா
   
  3 people like this.
  Loading...

 2. Padhmu

  Padhmu IL Hall of Fame

  Messages:
  9,920
  Likes Received:
  1,882
  Trophy Points:
  340
  Gender:
  Female
  very touching to day. sad to read about the demise of sundararajan. what is next? eager to read.
   
 3. suganyarangasam

  suganyarangasam Gold IL'ite

  Messages:
  1,133
  Likes Received:
  326
  Trophy Points:
  158
  Gender:
  Female
  hi ma...
  sundharrajan irandhadhu kastama irundhudhu....
  madhu ini thatha veetla valara porala!!!!!!!!
  eager to read next
   
  2 people like this.
 4. JananiSubbu

  JananiSubbu Silver IL'ite

  Messages:
  300
  Likes Received:
  57
  Trophy Points:
  68
  Gender:
  Female
  madhu voda hero eppo varuvaru....intha veetla irukara...??
   
  1 person likes this.
 5. Sweetynila

  Sweetynila Silver IL'ite

  Messages:
  480
  Likes Received:
  42
  Trophy Points:
  50
  Gender:
  Female
  Hi Padhmu,

  Thanks for the comment.
   
 6. Sweetynila

  Sweetynila Silver IL'ite

  Messages:
  480
  Likes Received:
  42
  Trophy Points:
  50
  Gender:
  Female
  Hi Suganya,

  Thanks for the comment.
  Thatha veetula koncha naal iruppa.
  Appuram thaniya vanthiduvanga ma.
   
 7. Sweetynila

  Sweetynila Silver IL'ite

  Messages:
  480
  Likes Received:
  42
  Trophy Points:
  50
  Gender:
  Female
  Hi Janani,

  Thanks for the comment.
  Madhuvoda hero vanthaachu.
  Intha veetula thanma irukaaru :)
   

Share This Page