1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 4

Discussion in 'Stories in Regional Languages' started by Saagini, Jan 27, 2012.

  1. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    இதுவரை இல்லாத உணர்விது - 4

    விசிலடித்து கொண்டே தன் வீட்டில் நுழைந்த சுந்தர் ராஜன் நேராக தன் தந்தை முன் சென்று நின்றான்.

    "அப்பா"என்று அவனுடைய அழைப்புக்கு நிமிர்ந்தார் அவன் தந்தை வீரபாண்டியன்.

    வீரபாண்டியன் என்ற பெயருக்கு ஏற்ப பெரிய மீசையுடன் கண்களில் மிடுக்குடனும் கம்பீரமாக இருந்தார்.

    " என்ன விசயம் "என்று வினவும் போது கண்களில் இருந்த மிடுக்கு குரலில் ஒலித்தது.

    " உங்க கிட்டே ஒரு முக்கியமான விசயம் பேசனும் " என்று அவன் கூறவும்.

    அந்த அறையை துடைத்து கொண்டிருந்த வேலையாளை நோக்கிய வீரபாண்டியன்.

    " ஏலே சின்னா போ போய் மத்த வேலையை கவனி இங்கேயே மச மசன்னு நிற்காம போ " என்று விரட்டினார். வேலையாள் முன் தன் வீட்டு விசயம் பேச அவர் எப்பொழுதும் விரும்ப மாட்டார்.

    வேலையாள் சென்றதும் , " இப்போ சொல்லுய்யா " என்றார்.

    " அதுவந்துப்பா நான் ஒரு பெண்ணை விரும்பறேன் "என்று தயக்கத்தோடு கூறினான்.

    " பட்டணத்து பொண்ணா ? " என்றார் மாறுபட்ட குரலில். அவர் குரலில் என்ன இருக்கு என்பதை உணர முடியாதவன் ' இல்லை ' என்று தலையசைத்தான்.

    " நம்ம ஊர் பொண்ணு தான் பா "

    " அப்பறம் என்ன தயக்கம் நெஞ்ச நிமிர்த்திட்டு சொல்ல வேண்டியது தானே. பொண்ணு நம்ம இனம் தானே ? " என்றார்.

    " இல்லைப்பா " என்று அவன் கூறவும் அவர் முகம் மாறியது.

    " என்னலே சொல்லறே ? " என்று வினவும் போது குரல் கடினமுற்று இருந்தது.

    " கீழை தெரு பொன்னாத்தா பேத்தி " என்று அவன் கூறிய மறு நொடி உஸ்னத்தில் இரண்டு கண்களும் சிவந்தன.

    " ஏலே உனக்கு கிறுக்கு கிறுக்கு பிடிச்சுச்சா ? கல்யாணம் கட்டிக்க ஒரு தராதரம் தெரிய வேண்டாம் ? வேலை கார பயலுகளை வச்சிட்டு நான் நம்ம வீட்டு விசத்தையே பேச மாட்டேன் . நீ என்னடான்னா வேலைகார குடும்பத்துகுள்ள போய் நுழையனும்னு நினைகறே ? " என்று காட்டமாக கத்தினார்.

    " இல்லைப்பா அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு " என்று அவன் சமாதானம் கூற துவங்கவும் அவரது கோபம் மேலும் கூடிற்று.

    " நிறுத்துலே . நீ என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன் . அவ எவ்வளவு பெரிய ரதியா இருந்தாலும் ஒரு அனாதை புள்ளைய வீட்டுகுள்ள விட மாட்டேன் . என் பங்காளி பெரிய கருப்பன் பொண்ணை பேசாம கட்டிக்கோ "

    " இல்லைப்பா நான் ராஜேஸ்வரியை தான் கட்டிப்பேன் "

    " இது தான் உன் முடிவாலே ? "

    " ஆமா " என்றான் உறுதியாக.

    " அப்போ இதையும் கேட்டுக்கோ . இந்த சொத்துல இருந்து ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன் . எல்லாத்தையும் உன் அண்ணனுக்கு கொடுத்துடுவேன் "

    " மனசுக்கு பிடிச்ச வாழ்கை வாழ சொத்து தான் தடையா இருக்குன்னா அது எனக்கு தேவை இல்லைப்பா . நீங்க எனக்கு படிப்பையும் உழைப்பையும் கொடுத்து இருக்கீக . அதுவே எனக்கு போதும் " என்று தன்னம்பிக்கையோடு கூறினான்.

    " நீ எப்படி அவ கூட வாழ்ந்துடுறேன்னு நான் பார்த்துடறேன் " என்று அவர் கருவவும்.

    " பட்டாளத்துல எதிரியை கண்டே பயப்பட கூடாதுன்னு என்னை வளர்த்து இருக்கீக . அப்படி இருக்கச்சே பெற்ற தகப்பனை பார்த்து பயந்துட்டு கட்டினவளை கை விட மாட்டேன்ப்பா " என்றவன் உறுதியோடு அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.

    தன் தந்தையின் உண்மையான நிறம் அறிந்தவன் இனி என்ன செய்வது என்ற யோசனையோடு தன் நண்பன் வீட்டை நோக்கி சென்றான்.

    தன் நண்பனோடு இணைந்து முடிவெடுத்தவன் அடுத்த நாள் காலைக்காக காத்திருந்தான்.

    இங்கு நடந்த எந்த விசயமும் தெரியாமல் எப்பொழுதும் போல் ஆத்தங்கரைக்கு தண்ணீர் எடுக்க சென்றாள் ராஜி . எப்பொழுதும் சுந்தர் ராஜன் நிற்கும் இடத்தில் கண்களை அலைய விட்டவள் அவனை அங்கு காணாது ஒரு பெரு மூச்சொடு ஆத்தங்கரையை நோக்கி சென்றாள் . (தினமும் பின்னாடி வந்தா ஏன் வந்தீகன்னு கேட்க வேண்டியது, வரலைன்ன பெருமூச்சு விட வேண்டியது. இது உனக்கே நியாயமா படுதா ராஜி??)

    அவன் நின்ற இடத்தை போலவே அவள் இதயமும் வேறுமையாக உணர்ந்தது.

    ' ஏழையா இருந்தா இதை எல்லாம் ஏத்துட்டு தான் ஆகனும் ' என்று தனக்கு

    தானே அறிவுரை கூறியவள் வீடு நோக்கி செல்ல துவங்கினாள்.

    திரும்பும் வழியிலும் அவனுக்காக அலையும் கண்களை அவளால் தடுக்க இயலவில்லை.

    கனத்த மனதோடும் வாடிய முகத்தோடும் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தவளுக்கு இன்ப அதிர்ச்சியாக சுந்தர் ராஜன் அமர்ந்திருந்தான்.

    அவனை கண்டதும் அவளது அகமும் முகமும் ஒரு சேர மலர்ந்தது . இதனை கவனித்தவன் ' இவளை எந்த காரணம் கொண்டும் தனியே தவிக்க விடகூடாது ' என்று முடிவெடுத்தான்.

    அவனது முடிவை கேட்ட விதி " என்ன மறந்து விட்டு முடி வெடுக்கிறாயே " என்று அவனை பார்த்து சிரித்தது. ( அதனா இன்னும் entry கொடுக்களையேன்னு நினைச்சேன் . சரியா வந்துடியே . யாராவது சந்தோசமா இருந்தா உனக்கு பொறுக்காதே )

    ராஜி உள்ளே நுழைவதை கண்ட பொன்னாத்தா " தண்ணிய வச்சிட்டு சீக்கிரம் வா புள்ள நம்ம வீரபாண்டி அய்யா மகன் ஏதோ சொல்லனும்னு வந்து இருக்காக . நீ வந்ததும் சொல்லறேன்னு சொல்லி இருக்காக . பார்த்துட்டு நிற்காம சீக்கிரம் போய் வச்சிட்டு ஓடிவா " என்று விரட்டினார்.

    அவள் திரும்பி வந்ததும் அவள் முகத்தை பார்த்தவன் பேச துவங்கினான்,

    " பாட்டி ஒரு முக்கியமான விசயம் சொல்லனும் " என்று தக்கத்துடன் ஆரம்பம் செய்தான்.

    " அட சும்மா பொன்னாத்தானே கூப்பிடுங்க "

    " அது மரியாதையா இருக்காது . அதனால நானும் உங்களை பாட்டினே கூப்பிடுறேன் " என்று அவன் கூறியதும்.

    " மரியாதைகார புள்ள " என்று பெருமைபட்டு கொண்டார்.

    " எனக்கு உங்க பேத்தியை பிடுச்சு இருக்கு . கல்யாணம் கட்டிக்கனும்னு ஆசை படறேன் " என்று அவன் கூறியதும்.பேயரைந்ததை போல் அமர்ந்திருந்தார் பொன்னாத்தா.

    பின் சுதாரித்து கொண்டு ராஜேஸ்வரியை நோக்கியவர் , " ஏன் புள்ள உனக்கு காதல் கத்தரிக்காய் எல்லாம் தேவையா ? பெரிய எடத்துல எல்லாம் எதுக்கு நீ தலையிடுரே " என்று பொன்னாத்தா திட்ட துவங்கினார்.

    அவருடைய வசை அனைத்தையும் தலை குனிந்து கேட்டு கொண்டாள் ராஜி.

    அவரின் பேச்சில் இடை புகுந்த சுந்தர் ராஜன்,

    " பாட்டி அந்த புள்ள மேலே எந்த தப்பும் இல்லை நான் என் மனசை தான் சொன்னேன் "

    " தம்பி நீங்க பெரிய எடத்து புள்ள இதெல்லாம் ஒத்து வராது . உங்க அப்பாரு சொல்லற பொண்ணை கட்டிகோங்க " என்று அறிவுரை வழங்கினார்.

    " இதை தான் அந்த புள்ளையும் சொல்லுது நீங்களும் சொல்லறீங்க . ஏன் ஒத்து வராது ? " என்று வினவவும் ராஜியை ஏறிட்டு பார்த்த பொன்னாத்தா பேச துவங்கினார்.

    " இதோ நிக்குதே இந்த புள்ள எனக்கு சொந்தமும் கிடையாது பந்தமும் கிடையாது . வெளியூர்காரவுக யாரோ இது பொட்ட புள்ளையா பொறந்துடுச்சின்னு ஆத்துல வீச போனப்போ நான் பார்த்து எனக்கு புள்ள இல்லைன்னு வாங்கியாந்தேன் . இந்த விசயத்தை நான் எப்போதும் இந்த புள்ள கிட்ட மறைச்சது இல்லை . ஏன்னா தன்னோட நிலை உணர்ந்து அது நடந்துக்கனும்னு நினைச்சேன். அது பொறந்ததுல இருந்து இதுவரை அதுக்கு நான் மட்டும் தான் துணை . உங்க அப்பாருக்கு இந்த விசயம் தெரிஞ்சா இந்த புள்ளைய என்ன வேண்டாலும் பண்ணுவாரு . இந்த கிழவியால ஏதும் பண்ண முடியாது . அதனால தயவு செஞ்சி இந்த விசயத்தை விட்டுங்க " என்றார் கண்களில் நீர் மல்க.

    இதை கேட்கும் ராஜேஸ்வரியின் கண்களிலும் நீர் கோர்த்து கொண்டது .

    " அப்படி எல்லாம் எதுவும் நடக்க நான் விட மாட்டேன் பாட்டி " என்று அவன் கூறியதும்.

    " நீங்க என்னையா பண்ணுவீக ? இப்போ கல்யாணங்கட்டி இந்த புள்ளைய இங்கே விட்டுட்டு பட்டாளத்துக்கு போயிடுவீக . அப்பறம் நீங்க திரும்பி வந்து பார்க்கும் போது இதை புதைச்ச எடத்துல புல்லை தான் பார்க்கனும் " என்று கோபத்தில் வெடித்தார்.

    " அப்படி எல்லாம் ஏதும் நடக்காது ஏன்னா நான் ராஜேஸ்வரியை என் கூடவே அழைச்சிட்டு போயிடுவேன் " என்று அவன் கூறியதும் , அவனை நம்பாது நோக்கினார்.

    " உண்மை தான் பாட்டிம்மா . கல்யாணத்துக்கு அப்பறம் ராஜேஸ்வரியையும் உங்களையும் என் கூட அழைச்சிட்டு போயிடுவேன் "

    " நான் எதுக்கு தம்பி வாழ்ந்து முடிச்ச கட்டை எனக்கு என்ன ஆனாலும் கவலை இல்லை இந்த புள்ள நல்லா இருந்தா போதும் "

    " உங்க பேத்தி சந்தோஷமா வாழரதை நீங்க பார்க்க வேண்டாமா . அதனால நீங்க ரெண்டு பேரும் தேவையான சாமாங்களை எடுத்து வச்சிகோங்க . நாளைக்கு காலைல கல்யாணம் மதியம் டிரைனில் பட்டணம் கிளம்பறோம் . அங்கே என் நண்பன் இருக்கான் . அவன் வீட்ல இரண்டு நாள் தங்கிட்டு நாகலாந்து போறோம் . சரி நீங்க ரெண்டு பேரும் தயார் ஆகுங்க " என்றவன் ராஜேஸ்வரியை பார்த்து புன்னகைத்து விட்டு சென்றான்.

    ஒரு நப்பாசையில் திருமணம் முடிந்ததும் தன் தந்தையை சந்திக்க சென்றான் ஆனால் பூட்டின கதவுகளே அவனை வரவேற்றன .

    மல மல என்று அனைத்து காரியங்களையும் முடித்து கொண்டு மெட்ராஸில் இருக்கும் தன் நண்பன் வீட்டில் வந்து தங்கினர் . அங்கு இருந்த இரண்டு நாட்களிலும் ராஜேஸ்வரி அவர்களில் ஒருத்தியாக மாறினாள்.

    சுந்தர் ராஜனின் நண்பன் மஹேந்திரனிற்கு தங்கையாகவும் , அவன் அன்னை ராஜத்திற்கு மகளாகவும் மாறி போனாள்.

    நாகலாந்து சென்று பின் சுந்தர் ராஜனின் அன்பு மழையில் அவளை மூழ்க செய்தான் . ஒரு குழந்தையாய் அவளை கைகளில் வைத்து தாங்கினான்.

    இருவரின் சந்தோஷமான வாழ்வை கண்ட பொன்னாத்தா ஒரு வருடத்தில் தன் வழ்க்கை பயணத்தை முடித்து கொண்டார் .

    அவரின் இழப்பு ராஜேஸ்வரிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது . அவளின் அன்பு கணவன் அவளை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர செய்தான்.

    அவர்களின் மூன்று வருட இன்பமான இல்லரத்திற்கு பரிசாக ராஜியின் வயிற்றில் அவர்கள் இருவரின் வாரிசு ஜனித்தது.

    சுண்டர் ராஜன் ராஜேஸ்வரியை பூப்போல் பார்த்து கொண்டான் . அவள் கால்களை தரையில் கூட படாது தேவதை போல் உணர வைத்தான்.

    ராஜேஸ்வரியின் ஏழாம் மாதம் அவளுக்கு வளைகாப்பு நடத்தி தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல மஹேந்திரன் குடும்பத்தினர் அங்கு வந்தனர்.

    முதலில் அதற்கு சுந்தர் ராஜன் சம்மதிக்க மறுத்தான். பின் மஹேந்திரன் தான் அவனை ஒரு வழியாக சமாதானம் செய்து ராஜேஸ்வரியை அழைத்து சென்றான் .

    பெண் குழந்தை இல்லாத ராஜம் ராஜேஸ்வரியை தன் குழந்தையாய் எண்ணி அழகு படுத்தி ஆனந்தம் கண்டார்.

    மஹேந்திரனும் அவன் மனைவி கண்மணியும் தங்கள் பங்கிற்கு அவளை தாங்கினர் . அப்பொழுது கண்மணி மூன்று மாத கருவை வயிற்றில் சுமந்தாள்.

    அவளுடைய மகன்கள் சபரிஸ¤ம் சந்தோஷ¤ம் ராஜேஸ்வரியிடமே ஒட்டி கொண்டு அலைந்தனர் .

    இவ்வளவு பாச பிணைப்பிற்குள் இருந்தாலும் அவளால் தன் கணவனின் பிரிவை தாங்கி கொள்ள இயலவில்லை . அவன் இடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது என்பதை நன்கு உணர்ந்து கொண்டாள் .

    வாரம் ஒரு முறை வரும் அவன் கடிதங்களுக்காகவே தவமிருந்தாள் . அவனுடைய அந்த கடிதத்திற்காக முழு வாரத்தையும் நெட்டி தள்ளினாள் .

    தோட்ட வேலை செய்வது , கண்மணியிடமிருந்து கைவினை பொருட்கள் செய்ய கத்து கொள்வது என்று சிறு சிறு வேலைகளால் தன் நேரத்தை கடத்தினாள் .

    கணவனின் நினைவு அதிகமாக வரும் நேரத்தில் தன் வயிற்றில் வளரும் அவனுடைய குட்டி ராஜ குமாரனையோ ராஜ குமாரியையோ தொட்டு பார்த்து ஆனந்தம் கொள்வாள்.

    --உணர்வுகள் விளையாடும்....​
    - நூருல் & நிலா
     
    1 person likes this.
    Loading...

  2. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hai friends :)
    ithoe naangaam athiyaayam pathithu vittoem padithutu sollunga. raji-rajan uravil konjam munnaetram ungalukku pidithu irukkanu sollunga :hide:
     
  3. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Noorul,

    nalla velai thadai illama kalyanam panni munu varusham varaikkum vidhiyai vilayada udama sandoshama ondu vandhuteenga.

    Super ponga. waiting for next episode
     
    1 person likes this.
  4. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Sagi,:hiya

    Unga kadhai super... :cheersneenga kuduththa 2 nd update padichchaen...But comment thara mudiyala....... kaadhalargala pirikkama serthuvechchuteenga..:)Super...... My guess...madhuraa voda amma daan raji nu...... madhura didnt tell about her ma in previous update na..... nimisha s kanmani's daughter........ only my guess...seekaram next update post panna, correct ah nu therijukkalaam...waiting eagerly...:thumbsup

    Vasupradha.S
     
    1 person likes this.
  5. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    interesting today. waiting for the next.
     
    1 person likes this.
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...rajan-raji kalyanam successfull ah mudinjadhu super...
    mahendran family raji mela paasam ah irukradhu romba nalla irukku....
    avanglukku porakka pora kulandhai MADHURA nu ninaikran
     
    1 person likes this.
  7. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    hi...
    athukula marriage mudinchuruchu...
    ponnu than amma appa va pathi ninachu pakurala...
    neenga semma twist kudupinga sudden ah...
    hero voda entry innum varala..
     
    1 person likes this.
  8. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hi Priya Lokesh.

    thanks a lot for ur comment ma :)
     
  9. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hi Vasupradha
    thanks ma :)
     
  10. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hi usha

    thanks ma :)
     

Share This Page