1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 15

Discussion in 'Stories in Regional Languages' started by Saagini, Feb 16, 2012.

  1. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    இதுவரை இல்லாத உணர்விது - 15


    ஒரு வாரத்திற்கு பிறகு நேகா தன் ஊருக்கு கிளம்ப அயத்தமனாள் . (அப்பாடா இப்பவாச்சும் கிளம்புனியே )
    கிளம்புவதற்கு முன் மதுராவின் அறையில் வந்து நின்றாள் .

    அவளை அங்கு எதிர்பாராத மதுரா கையில் இருந்த புத்தகத்தை கிழே வைத்துவிட்டு எழுந்து நின்றாள் .

    அந்த அறையை சுற்றி தன் பார்வையை சுழலவிட்டவள் மதுராவிடம் வந்து நிறுத்தினாள் .
    மதுராவை தலை முதல் கால் வரை பார்வையிட்டாள் . அவள் பார்வை மதுராவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது .

    " ஒரு வேலைக்கார பொண்ணிற்கு இவ்வளவு ஆடம்பரமான அறையும் , காஸ்டிலியான சுடிதாரும் அதிகமாத்தான் இருக்கு " என்று உதட்டை சுளித்தாள். ( உன்னை யாராவது கேட்டாங்களா ?? )

    ' இவள் யாரை சொல்கிறாள் , என்ன சொல்கிறாள் ' என்று புருவம் முடிச்சிட புரியாது நோக்கினாள் மதுரா .

    " என்ன ஒண்ணும் தெரியாதது போல முழிக்குற ?? இந்த அறையில உன்னையும் என்னையும் தவிர வேற யாருமில்ல . அதோட இந்த அறை உன்னோடதுதானே ?? அப்போ உன்னைத்தான் சொல்லுறேன் " என்றாள் அசால்ட்டாக . ( இந்த அறை மதுராவோடதுன்னு தெரியுதில்ல. அப்புறம் அவ அனுமதி இல்லாமா உன்னை யாரு அவ அறைக்குள்ள வர சொன்னா ?? )

    எதுவும் பேசாது , ' என்னதான் சொல்ல வருகிறாயோ சொல் ' என்பது போல் பார்த்துக் கொண்டு நின்றாள் மதுரா .

    " நீ இப்படி எதுவும் தெரியாதது போல பார்த்துக் கொண்டு நின்றால் நான் சொல்லுறது உண்மையில்லைன்னு ஆகிடுமா ?? என்னதான் நீ அழகா இருந்தாலும் நீ ஒரு வேலைக்காரியோட பொண்ணுதானே " என்று அவள் சொன்னதும் ,

    மதுராவிற்கு இம்முறை கோவம் வந்தது . தன் தாயை பற்றி தவறாக பேசினால் யாருக்கும் கோவம் வருவதில் ஆச்சரியம் இல்லையே .


    " எங்கம்மா வேலைக்காரியா ?? " என்றாள் காட்டமாக .

    " நீ கோவப்பட்டா பயந்திடுவேனா ?? நீ எல்லாம் உழைக்கிற ரகம் . உனக்கெல்லாம் கோவமே வரக்கூடாது . அஹ் . ஏதோ கேட்டியே , உங்க அம்மா வேலைக்காரியான்னு ? வேலைகாரிங்குறதுனாலதான உங்க தாத்தா அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலை " என்றாள் குத்தலாக .

    யாரிடமும் நெருங்கி பழகாத தன் தங்கை வாணியை பற்றி விசாரிக்கிறாளே என்ற ஆர்வக்கோளாறில் மதுராவை பற்றி தனக்கு தெரிந்த எல்லா விசயங்களையும் ராகினி நேகாவிடம் கூறியதால் வந்த வினை .

    பற்களை கடித்துக் கொண்டு எதுவும் பேசாமல் நின்றாள் மதுரா . அதுவே நேகாவிற்கு சாதகமாய் போய் விட ,

    " உண்மை சுடத்தானே செய்யும் . தகுதி அறிஞ்சு நடந்துக்கனும் " என்று அவள் கூறியதும் ,

    ' அப்படி என்ன நான் தகுதி மீறி நடந்துக்கிட்டேன் ' என்று எண்ணியவள் அவளை தீர்க்கமாக பார்த்தாள் .

    " என்ன அப்படி பார்க்குற ? இந்த வீட்டில அண்டி பொழைக்குறே . உங்க அம்மா இருக்கும் போதும் அப்படித்தான் . இப்பவும் அப்படித்தான் . இப்படி இருக்கிற உனக்கெல்லாம் கோவம் , ரோஷம் எல்லாம் வரக்கூடாது " என்று கூறியவள் நிறுத்தி மதுராவின் முகம் நோக்கினாள் .

    மதுராவின் முகம் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது . அதற்கு மாறாக அவள் மனம் புலம்பிக் கொண்டிருந்தது .

    " இந்த மாதிரி பேச்சுக்கள் வரும்ன்னு தானாம்மா நீ வெளியே போய் தனியா கஷ்டப்பட்ட . இது தெரியாமல் நான் இங்கே வந்து இப்படி எல்லாம் பேச்சுக்கள் கேட்கிறேன் . அதோட உன்னையும் இதுல இழுத்து விட்டுட்டேனே" என்று மனதார மன்னிப்புக் கேட்டாள் .
    இதை எல்லாம் உணராது அவளை நோகடிப்பதிலேயே குறியாக இருந்தாள் நேகா .

    " இங்கே இருக்கிற வசதிகளே உனக்கு அதிகம் இதுல இந்த வீட்டுக்கே உரிமைக்காரி ஆகலாம்னு நினைக்குறியா ?? " என்று அவள் வினவியபோது உண்மையாகவே மதுராவிற்கு ஒன்றும் புரியவில்லை .

    " நீ இப்படி முழிச்சு முழிச்சு சந்தோஷை மயக்கினது போல என்னையும் மயக்கிடலாம்னு பார்க்குறியா ?? " என்று அவள் கேட்டதும் மதுராவின் முகம் மாறியது.

    " சந்தோஷ் என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறாரு . அதுனால நீ தேவையில்லாம உள்ளே நுழையாதே . அப்புறம் அசிங்கப்பட்டுத்தான் போவே " என்று அவள் கூறியதும் ,

    " இதற்கு மேல் அசிங்கம் வேண்டுமா ? " என்று மனதிற்குள் மட்டும் நினைத்துக் கொண்டாள் . வெளியில் சொல்லவில்லை . ' அப்புறம் அதற்கும் எதாவது ஏடாகூடாமாகத்தான் பேசுவாள் நமக்குத் தான் கேவலம் ' என்று வாயை இறுக மூடிக் கொண்டாள் . ( அவ தான் அறிவுகெட்டத்தனமா எதோ பேசுறானா , நீயும் வாயை மூடிகிட்டு கேட்டுட்டு இருப்பியா? நீ யாரு இதையெல்லாம் சொல்லுறதுக்கு ? முதல என் ரூமை விட்டு வெளிய போன்னு சொல்ல வேண்டியதுதானே ??? )

    " இனி சந்தோஷ்க்கிட்ட போய் பேசுற பழகிற வேலை எல்லாம் வச்சுக்காதே . வந்தமா ஓசில இருந்து தின்னாமான்னு போய்கிட்டே இரு ( அத நீ சொல்லுறியா நேகா ?? எதோ நிம்மி நிச்சயத்துக்கு கூப்பிட்டா வந்தமா பங்ஸன் முடிஞ்சதும் கிளம்பினமான்னு இல்லாம ஒரு வாரம் இங்கேயே டேரா போட்டுட்டு நீ இதை சொல்லுறியா ?? ) புரிஞ்சதா ?? உன் தகுதிக்கு ஏத்த ஒருத்தனை போய் கட்டிக்கோ . அதை விட்டுட்டு இங்கே உன் வேலையை காட்ட நினைக்காதே " என்று ஒற்றை விரலை காட்டி அவள் மிரட்டிக்கொண்டிருக்கும் போது,

    " நேகா " என்று குரல் கொடுத்து மதுராவை காப்பாற்றினாள் ராகினி .
    மதுராவை பார்த்து முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் நேகா .
    நேகா இந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் தன் இருக்கையில் ' பொத் ' என்று அமர்ந்தாள் மதுரா . அவளிடம் இன்னும் படபடப்பு குறையவேயில்லை .

    " சே , கொஞ்ச நேரத்துல எப்படியெல்லாம் பேசிட்டா ?? நரம்பில்லாத நாக்கு எப்படியெல்லாம் வளையுது ? இப்படிக் கூட மனிதர்கள் இருப்பாங்களா ?" என்று ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தாள் மதுரா .

    நேகாவின் ஒவ்வொரு சொற்களும் அவளை கூச செய்தது . அருவருப்பில் முகம் சுளித்தாள் .
    " ஒரு மனுசன் கூட பேசினா இப்படியெல்லாமா இட்டுக் கட்டி பேசுவாங்க?? அதுவும் நானா போய் பேசினாது கிடையாதே ? முழுதாய் எதையும் தெரிந்துக் கொள்ளாமல் எப்படியெல்லாம் பேசிட்டா ?? "

    " என்னை மட்டும் பேசி இருந்தா கூட பரவாயில்லை . தேவையில்லாம அம்மாவையும் இதுல இழுத்து விட்டுட்டு " என்று புலம்பியவள் மனம் உலைக்களமாய் கொதித்தது .

    " இதற்கெல்லாம் பயந்துட்டுத்தான் அம்மா என்னை வெளியே அழைச்சிட்டு போனாங்க போல . இப்போ இங்கே இருந்து போறதாய் இருந்தாலும் விட மாட்டாங்கலே " என குழம்பியவள் ,

    ' இனி என்ன செய்வது ' என்று யோசிக்க துவங்கினாள் .

    ' ஒதுங்கி இருப்பதே நல்லது ' என முடிவெடுத்தவள் , அதனை அந்த நொடியில் இருந்து செயல் படுத்தவும் தொடங்கினாள் .

    சந்தோஷிடம் பேசுவதை தவிர்த்தவள் , அவன் கண்ணில் படாமல் தன் அறைக்குள்ளேயே முடங்கினாள் . மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது அவன் வருவதை பார்த்தால் பின்பக்க வழியாக தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொள்வாள் . இப்படி கவனித்து ஓடுவதாலேயே அவன் வரும் நேரம் அவளுக்கு மனப்பாடம் ஆகியிருந்தது .

    ஒரு வாரமாக அவன் கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆடியவளுக்கு அந்த ஆட்டத்தை முடிக்கும் நேரம் நெருங்கியது .

    ஞாயிற்று கிழமை என்பதாலும் , திடீரென்று தோன்றி இருந்த குளிர்ந்த வானிலை என்பதாலும் சற்று கூடுதல் நேரத்தை தன் தூக்கத்தில் செலவிட்டான் சந்தோஷ் .
    ஜன்னல் வழியாக வந்து தடவிச் சென்ற தென்றல் அவனை இதமாக தாலாட்டி தூங்க செய்தது .

    ஒரு வழியாக உறக்கம் கலைந்து சோம்பல் முறித்து எழுந்தவன் சற்று நேரம் அப்படியே அமர்ந்து ஜன்னல் வழியாக தெரிந்த வானத்தை ரசித்தான் .
    தன் அருகே இருந்த கடிகாரத்தை பார்த்துக் கொண்டு எழுந்து குளியலறைக்கு சென்று முகம் கழுவிக் கொண்டு வந்தான் . வெளியில் தெரிந்த வானமும் மேகமும் அவனை இழுக்க பால்கனி கதவை திறந்துக் கொண்டு வெளியே சென்றான் .

    சுற்றிலும் தெரிந்த இயற்கை அழகை ரசிதவனது கண்கள் மரத்தடியில் அமர்ந்திருந்த மதுராவிடம் சென்று நிலைத்தது .

    மனதில் எந்த எண்ணங்களும் தோன்றாமல் , தன்னையும் அறியாமல் மதுராவை ரசிக்க தொடங்கினான் .

    அவளையே தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தவன் , மதுரா தன் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு எழுந்து உள்ளே ஓடவும் தான் சுய உணர்வு பெற்றவனாய் திரும்பி மணியை பார்த்து விட்டு வேக வேகமாய் குளிக்க சென்றான் .
    தலையை துவட்டிக் கொண்டு வந்தவன் , " சே, மணி எட்டாகுறது கூட தெரியாமல் வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன் . இன்னைக்கு ஜாக்கிங் வேற போச்சு " என்றவன் தன் சிந்தனையை தொடராமல் வேகமாக தயாராகி கிழே சென்றான் .
    கிழே சென்றவனை பார்த்து புன்னகைத்த கண்மணி , " என்னப்பா, நல்ல தூக்கமா ?? ஜாக்கிங் கூட போகலை ? " என்று வினவினார் .

    " climate நல்லா இருந்துச்சுமா . அதான் லேட் ஆகிடுச்சு " என்றவன் பேப்பரை எடுத்து அதை படிப்பதைப் போல் தன் முகத்தை மறத்துக் கொண்டான் . எங்கே தான் கூறும் பொய்யை அன்னை கண்டு பிடித்து விடுவாரோ என்ற பயம்தான் .
    இந்த செயலாலேயே இந்நேரம் சந்தோஷ் குளிக்க சென்றிருப்பான் என்று எண்ணி ஹாலிற்கு வந்த மதுரா அவனைக் கண்டு அரண்டு போய் திரும்பவும் தன் அறைக்குள் தஞ்சம் புகுந்ததை கவனிக்க தவறிவிட்டான் .

    தன் அறைக்குள் வேகாமாக வந்து புகுந்துக் கொண்ட மதுராவிற்கு படபடப்பில் மூச்சு வாங்கியது .

    ' சே, மதுரா நீ கொஞ்சம் கவனமா இருக்க வேண்டாமா ? அசால்ட்டா போறே ? நல்லவேளை அவர் உன்னை கவனிக்கலை . ஒரு வேளை நான் ஓடி வந்ததை பார்த்திருப்பாறோ ? ' என்று எண்ணியவள் தன் இருந்த இடத்திலிருந்தே மெல்ல தலை சரித்து எட்டிப் பார்த்தாள் .

    அங்கு யாரும் இல்லாததைக் கண்டு ," ஹப்பா " என்று நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டு நெஞ்சில் கைவைத்தாள் .

    " அவரு என்னை கவனிக்கலை. கவனிச்சிருந்தா இந்நேரம் இங்கே வந்திருப்பாரு " என்று எண்ணியவள் அவன் கவனிக்காததை நினைத்து சந்தோஷப்பட்டாள் .

    தான் கவனிக்க தவறியதை பற்றி அறியாமல் சாவகாசமாக பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் சந்தோஷ் .

    கவனித்திருந்தால் ?????!!!



    --உணர்வுகள் விளையாடும்....

    - நூருல் & நிலா.
     
    4 people like this.
    Loading...

  2. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    gananithirunthaal.... avanum ulle poyiurppano???
     
  3. soudha

    soudha Junior IL'ite

    Messages:
    41
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Thanks for the update
     
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    neha en ipdi ellam pesuna??? madhura paavam....
    eppavavudhu kandippa madhu neha ku nosecut kudukra madhiri oru scene konduvanga pa....
    santhosh yosikkave matan ah , yeh thidirnu madhu marathadi la irundhu room ku poitanu...
    story s very very interesting....
     
  5. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    hi.....
    kavanithu irunthal...jolly ah good morning madhu nu solli irupano????
     
  6. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Sweetsaghi,

    Ippadi madhu bayappadara, avakitta eppadi namma hero pesaporaru.... apparam daan propose pannanum... irundalum santhosh rombaaaa slow ah irukkaan.... nee madhu va love panra santhosh purinjukko...

    Vasupradha.S
     
  7. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi NooruNila..
    neha porapa vediyai kolutthi potutu poita..
    hmm. mathu santhosh kitta distance maintain panra but ippo than santhosh than kathalai unara aarambikka poran..
    enaku enna thonuthu na, santhosh propose panna poran intha mathu "ungalukkum neha kum thane marriage" nu solla pora, "thannai nambalaiye! than kathalai purinjukalaiye!" nu koba pattu santhosh hurting ah mathu pesa poran ava veeta vittu poga pora..
    wht pa? yeppadi en karpanai?
    eagerly waiting 4 next update..
    -devi.
     
  8. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
  9. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    when next update??????
    waiting for it.......
     
  10. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Hi... Super Story!!Santosh kavanithirunthal,'madhu' vai kupittu,Vaa,utkar! entru pechu kodukka arambitu erupann.
    waiting for the next!!
     
    2 people like this.

Share This Page