1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 10

Discussion in 'Stories in Regional Languages' started by Saagini, Feb 2, 2012.

  1. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    இதுவரை இல்லாத உணர்விது - 10

    எப்பொழுதும் அதிகாலையில் எழும் மதுரா அன்று உறங்கி கொண்டிருந்தாள். அவள் உறங்க தொடங்கியதே பொழுது புணர தொடங்கிய சற்று நேரத்திற்கு முன்பு தானே. இதில் எங்கு அதிகாலையில் எழுவது .

    புது இடம் புது மனிதர்கள் என்பதால் இரவு தூங்க மிகவும் சிரமப்பட்டாள் . எவ்வளவு தான் முயன்றும் தூக்கம் தூர நின்று நெருங்கி வர மறுத்தது .

    தூக்கத்தை தொலைத்தவள் அன்று நடந்த நிகழ்ச்சிகளை எண்ணி பார்க்க துவங்கினாள் . அனைவரும் அவளிடம் வைத்திருந்த பாசம் அவளை நெகிழச் செய்தது . இவை அனைத்தும் நட்பின் வெளிபாடு என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது . தன்னை போலவே தன் பெற்றோர்களை அவர்களும் மறக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்பதை உணர்ந்தாள் .

    இத்தனை அருமையான மனிதர்களை தனக்கு தேடி கொடுத்த கடவுளுக்கும் , பெற்றோர்களுக்கும் மானசிகமாக நன்றி தெரிவித்துக் கொண்டாள் .

    ஒவ்வொருவருடைய குணத்தையும் பகுத்தறிந்து கொண்டவளது மனம் சந்தோஷிடம் வந்து நின்றது . அனைவரும் அவளிடம் பாசத்தை மட்டும் வெளிக்காட்ட அவனுடைய கோபத்தை அவளால் உணர முடிந்தது . அது ஒரு வேளை வெறுப்பால் விளைந்ததாய் இருக்கலாமோ என்று சரியாய் தவறாக கணித்து குழம்பியவள் அப்படியே உறங்கி போனாள் .



    காலை எட்டு மணிக்கு பூட்டாமல் சாத்தியிருந்த கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தார் கண்மணி .

    நன்றாக உறங்கி கொண்டிருந்தவளின் தலையில் மென்மையாக வருடினார் .

    கனிவும் பாசமும் கலந்த அந்த வருடல் மதுராவின் கனவில் அவள் தாயை கொண்டு வந்து நிறுத்தியது . கனவில் வந்தவரை சந்திக்கும் பொருட்டு "அம்மா" என்று அழைத்துக் கொண்டே வேகமாய் எழுந்தாள் .

    தன் எதிரே நிற்கும் கண்மணியை கண்டு ஒரு கணம் மருண்டவள் பின் தான் எங்கு இருக்கிறோம் என்று சுதாரித்துக் கொண்டாள் .

    " சாரிமா . தூக்கத்தை கெடுத்துடேனா ? " என்று வருத்தத்தோடு வினவினார் கண்மணி .

    " அதெல்லாம் ஒண்ணுமில்லை " என்றவள் தன் அருகே இருந்த கைகடிகாரத்தை பார்த்து விட்டு ,

    " அச்சச்சோ !! மணி எட்டாச்சா ?? " என்று பதறி கொண்டு எழுந்தவளை தோளை பற்றி அமர வைத்தார் .

    " ஏன் இந்த அவசரம் ?? "

    " இல்ல நேரமாச்சின்னு... "

    " அதெல்லாம் ஒண்ணும் இல்லை . நீ நிதானமா தயாராகி வா " என்று தலையை வருடி விட்டு சென்றார் .

    தயாராகி ஹாலிற்கு சென்றவள் அங்கு மற்றொரு புது நபரை சந்தித்தாள் .

    மதுராவை கண்ட ராகினி ,

    " வாணி வா வா. இது என்னோட தங்கை நேகா . நேகா இது வாணி " என்று அறிமுகம் செய்து வைத்தாள் .

    மதுரா " ஹாய் " என்று புன்னகைக்க அலட்சியமாய் தலையசைத்தாள் நேகா .

    தோள் வரை வெட்டபட்ட தலைமுடி , தான் அழகியாய் ஜொலிக்க வேண்டும் என்று அழுத்தமாய் செய்யபட்ட ஒப்பனை பொய்த்து போகாமல் அழகியாய் ஜொலிக்கவே செய்தாள் . ஆனால் அந்த அழகினால் வந்த கர்வம் அவள் முகத்தில் தெரிந்தது . அதனாலேயே அவள் மற்றவர் கண்களுக்கு அழகியாய் தெரிய மறுத்தாள் .

    முதலில் அவளை பார்த்து வியந்த மதுரா பிறகு அவள் முகத்தில் தெரிந்த அசட்டையால் அவளிடம் எதுவும் பேசாது அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் .

    அங்கிருந்து கிளம்பியவள் நேரே தோட்டதிற்கு வந்தாள் . அழகான தோட்டத்தை மேலும் அழகாக்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் .

    சுற்றிலும் அட்கள் வேலை பார்க்க மெதுவாக தன் தாய் நட்ட மரத்தை நோக்கி நடந்தாள் மதுரா .

    அவள் வழியில் திடீரென்று வந்து நின்று " ஹாய் " என்று கை நிட்டினான் சந்தோஷின் நண்பன் முகிலன் .

    அவன் செயல் பயந்த சுபாவியான மதுராவிற்கு பீதியை கிளப்ப இரண்டடி பின்னே நகர்ந்தாள் . கவனியாது பின்னே நகர்ந்தவள் பின்னால் வந்து கொண்டிருந்த சந்தோஷின் மீது இடித்தாள் .

    " ஹேய் பார்த்து " என்று அவள் இரு தோள்களையும் பற்றி நிறுத்தினான் .

    " ஹேய் சந்து யாருப்பா இந்த பியூட்டி " என்று மதுராவை பார்த்து டண் டணாய் ஜொள்ளு விட்டுக் கொண்டே கேட்டான் முகிலன் . (அது என்ன சந்து பொந்துனு கூப்பிடுற முகிலன் ?? நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டு சந்தோஷ்ன்னு பேரு வச்சு இருக்கோம் ) .

    அவனுடைய நேரடி தாக்குதல் அவளை கூச்சத்தில் நெளிய செய்தது .



    அவள் தர்மசங்கடத்துடன் நெளிவதை கண்ட சந்தோஷ் ,

    " வாணி நீ போ " என்றவுடன் ' விட்டால் போதும் ' என்று அந்த இடத்தை விட்டு விரைந்து சென்று விட்டாள் .

    " ஹேய் நான் கேட்டதுக்கு பதில் எங்கே ? என்ன உன்னோட சைட்டா ? " என்று கண்ணடித்தான்.

    " சே ,சே அதெல்லாம் இல்லைடா . என்னோட ரிலேசன் . பேர் வாணி " என்று அறிமுகம் செய்தான்.

    " அப்ப •ப்ரியா தான் இருக்காளா ? நான் ஒரு லெட்டர் போட்டு பார்க்கறேன் " என்று கூறும் போது சந்தோஷிற்கு அநியாத்திற்கு கோபம் வந்தது .

    " தன் நண்பன் எப்பொழுதும் இப்படி தானே பேசுவன் எதுக்கு இதுக்கு போய் கோபப்பட்டுட்டு " என்று எண்ணியவன் தன்னை சகஜ நிலைக்கு கொண்டு வந்தான் . (அப்படியே உருப்படியா எதுக்கு கோபம் வந்துச்சுன்னு யோசிச்சிருந்தேனா உனக்கு உண்மை புரிஞ்சு இருக்குமே ) .

    முகிலன் நேகாவை இப்படி பேசும் போது வராத கோபம் மதுரவை பற்றி பேசும் போது ஏன் வந்தது என்று சற்று சிந்தித்து இருக்கலாமோ ?

    " டேய் என்னை இன்டர்டியூஸ் பண்ணாம விட்டுடியே " என்றான் வருத்தத்தோடு . ( ஆமா நீங்க பெரிய கலெக்டரு உன்ன இன்டர்டியூஸ் வேற பண்ணணுமோ ? )

    " இன்றைக்கு •புல்ல நீ இங்கே தானே சுத்த போறே . அப்போ நீ என் பிரண்ட் முகிலன் சரியன ஜொள்ளு பார்டின்னு அறிமுகப்படுத்தறேன் "

    " எல்லாம் ஓகே அந்த லாஸ்ட் லைன் மட்டும் தான் நாட் ஒகே "

    " உனக்கு இதே போதும் வா போகலாம் " என்று அவனை இழுத்து சென்றான்.

    மதிய உணவு முடிந்ததும் வழக்கம் போல் மதுரா மரத்தடியை தேடி சென்றாள் . அந்த மரத்தடியில் அமர்ந்திருப்பது தன் தாய் மடியில் சாய்ந்திருப்பதை போன்று சுகத்தை அவளுக்கு வழங்கியது .

    சந்தோஷ் தன் நண்பர்களோடு ஒரு மூலையில் பந்து விளையாட துவங்கினான் .

    மதுராவிற்கு சற்று தொலைவில் விழுந்த பந்தை வேண்டுமென்றே அவள் மேல் தூக்கி எறிந்து விட்டு ஒன்றும் தெரியாதவனை போல் அவளருகே சென்று ,

    " சாரி வாணி, தெரியாம பட்டுடிச்சு . பை தி பை ஐயம் முகிலன் " என்று பேச்சு கொடுத்தான் .

    அவனுடைய செயல்கள் அனைத்தையும் கவனித்தவள் எதுவும் கூறாமல் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள் .

    முகிலனுடைய நல்ல காலம் சந்தோஷ் இவற்றில் எதையும் கவனிக்கவில்லை .

    மாலை 4 மணிக்கு தன் அறையில் அமர்ந்து ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மதுராவின் முன் வந்து நின்றாள் நிமிஷா .

    " ஹாய் நிம்மி . என்ன இங்க வந்து இருக்க ?? ஆறு மணிக்கு பங்க்ஷன் இன்னும் ரெடி ஆகலையா ? " என்றாள் இருந்த இடத்தை விட்டு நகராமல்.

    " அதுக்கு தான் உன்னை அழைச்சிட்டு போகலாம்ன்னு வந்தேன் " .

    " என்னது என்னையா ?? எனக்கு அழகு படுத்துறது பத்தி ஒண்ணும் தெரியாது " என்று கைகளை விரித்தாள் (உன் ரூம்ல வந்து உன்ன கூப்பிடாம பின்ன என்ன சந்தோசையா கூப்பிட முடியும் ?? )

    " உனக்கு எதுவும் தெரியாதுகிறதுதான் எனக்கு தெரியுமே " என்றவள் 'அது தெரிஞ்சிருந்தா இவ்வளவு அழகுக்கு மெருகேத்தி தங்க சிலையாட்டம் ஜொலிச்சு இருப்பியே . உன்னை முதல்ல மாத்தனும் ' என்று மனதிற்குள் எண்ணினாள் .

    நேற்று இரவு கடையில் மதுராவிற்காக வாங்கிய அனைத்தையும் அவள் மறுக்க மறுக்க அவள் அறையிலேயே விட்டு சென்றிருந்தாள் நிமிஷா .

    அவள் வைத்த இடத்தை விட்டு சற்றும் அசையாதிருந்த பொருட்களை பார்த்ததும் நிமிஷாவிற்கு எங்கேயாவது சென்று முட்டி கொள்ளலாம் போல் இருந்தது .

    ' என்ன பெண்ணிவள் ' என்று புலம்பிக் கொண்டே அதிலிருந்து தேவையான பொருட்களை எடுத்து ஒரு பையில் வைத்தாள் .

    வைத்து விட்டு "சரி வா போகலாம் " என்றாள் .

    " எங்கே ? "

    " பியூட்டி பார்லருக்கு "

    " நான் எதுக்கு ?? நீ போய்ட்டு வா "

    " நிச்சயம் பண்ணற பொண்ணு தனியா போக கூடாது . அதான் உன்னை துணைக்கு அழைச்சிட்டு போக வந்தேன் "

    " அதுக்கு நான் எதுக்கு ?? ராகினி அக்கா இல்லை அம்மாவை அழைச்சிட்டு போ "

    " அவங்க எல்லாம் வீட்டுக்கு வரவங்களை கவனிக்க வேண்டாமா ? "

    " அப்போ நேகாவை அழைச்சிட்டு போ "

    " நான் அது கூட போறதுக்கு இப்படியே போய் உட்கர்ந்துடலாம் . நான் உன்னைத்தான் கூப்பிட்டேன் . நேகாவை கோகாவை எல்லாம் இல்லை " என்று மதுராவை இழுத்துக் கொண்டு சென்றாள் .

    அழகு நிலையம் சென்றதும் ' அழகு படுத்திக் கொள்ள மாட்டேன் ' என்று அடம் பிடித்தவளை சமாளித்து ஒரு வழியாக ஒப்பு கொள்ள வைப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்த உணர்வு தோன்றியது நிமிஷாவிற்கு.

    அவர்கள் இருவரும் வீடு திரும்பி வருவதை கண்ட வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் கண்களை சிமிட்ட மறந்து பார்த்தனர் . பின்னே தங்கள் எதிரே இரண்டு தேவதைகள் தரை இறங்கி வருவதை கண்டாள் மெய் மறந்து தானே போவார்கள் .

    இவர்களுக்கே இப்படி என்றால் நிமிஷாவை திருமணம் செய்து கொள்ள போகும் நிகிலனின் நிலைமையை கூற வேண்டுமா என்ன ? இமை கொட்டாது அவளையே விழுங்குவதை போல் பார்த்தான் .

    அருகே நின்ற அவன் நண்பர்கள், " போதும்டா மச்சான் . ஜொள்ளு பேக்டரிய மூடு " என்று கிண்டல் செய்த பிறகுதான் சுய உணர்வு பெற்றான் .

    நிமிஷாவுடன் இருந்த மதுரா அவள் அந்த நிகழ்ச்சியின் நாயகியாக அமரவும் தனியாக விழித்து கொண்டிருந்தாள் . (முழிக்குறதுக்கு உனக்கு சொல்லியா தரணும் மதுரா ? )

    தனியாக சுற்றி திரிந்தவளிடம் தேடி வந்து வம்பு செய்தான் முகிலன் . அவனுக்கு பயந்து ஓடி ஒளிபவளை ஒவ்வொரு இடமாக தேடி வருபவனை அவளால் என்ன செய்ய முடியும் . ( சந்தோஷ் கண்ணுல மட்டும் இது பட்டுச்சு மகனே நீ காலி ) .

    " இனி இங்கிருப்பது சரி இல்லை " என்று எண்ணியவள் வீட்டிற்குள் செல்ல எத்தனிக்க வழி மறித்தார் கண்மணி .

    " என்னம்மா , சாப்பிடலையா நீ ? " என்றவர் சற்று தொலைவில் இருந்த சந்தோஷை நோக்கி ,

    " சந்தோஷ் இங்க வா " என அழைத்தார்.

    " என்னம்மா " என்று அருகில் வந்தவனிடம் ,

    " வாணி இன்னும் சாப்பிடாம இருக்கா அழைச்சுட்டு போப்பா " என்றார் .

    " இல்லை வேண்டாம் " என்று அவள் கூற கூற அழைத்துச் சென்றான் .

    சாப்பாட்டு மேடைக்கு அருகில் செல்லும் போது அங்கே முகிலன் நிற்பதை மதுரா கண்டு கொண்டாள் .

    தயங்கி நின்றவளை திரும்பி பார்த்தவன் " என்ன " என்றான் .

    " இல்லை வேண்டாம் " என்றாள் பதட்டத்துடன்.



    " ஏன் ?? "

    " எ.. எனக்கு பசியில்லை . நான் ரூமுக்கு போறேன் " என்று செல்ல எத்தனித்தவள் கையை பிடித்து நிறுத்தினான் .

    " கொஞ்சமா சாப்பிடு . இப்போ பசியில்லனாலும் அப்புறமா பசிக்கும் " என்றவன் அவளை கையை பிடித்து அழைத்து சென்றான் . இல்லை இல்லை கையை பிடித்து இழுத்துச் சென்றான் என்று கூறினால் தான் சரியாக இருக்கும் .

    " ப்ளிஸ் ப்ளிஸ் எனக்கு வேண்டாம் " என்றவள் படபடப்புடன் தன் கையை அவன் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ள போராடினாள் . அதே சமயம் முகிலன் கண்ணில் பட்டு விட கூடாதே என்ற கவலை வேறு .

    ஒரு வழியாக அவன் பிடியில் இருந்து தன் கையை விடுவித்தவள்,

    "எனக்கு வேண்டாம் " என்று கூறிவிட்டு தன் அறைக்கு ஒரே ஓட்டமாக தன் அறைக்கு வந்து விட்டாள்.

    தன் அறைக்கு விரைவதிலேயே குறியாக இருந்தவள் ஒன்றை கவனிக்க மறந்து விட்டாள்.

    அவள் பின்னோடு விரைந்து வருபவனை அவள் சுத்தமாக கவனிக்க தவறி விட்டாள். கவனித்து இருந்திருந்தால் அவனிடம் தனியாக சிக்கி இருக்க மாட்டாள் .

    எலி தன் தலையை தானே பொறியில் சிக்க வைத்ததை போல் அயிற்று அவள் நிலைமை.

    --உணர்வுகள் விளையாடும்....​

    - நூருல் & நிலா.
     
    Loading...

  2. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    sorry guys konjam ilai rombavae late aagi vittathu. naan update pottuvitaen endra ninaipilaiyae irunthu vittaen. so sooo sorry. ithoe adutha athiyaayam ungal paarvaikku :)
     
    1 person likes this.
  3. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    ayyo vaani pinnadiye mukilan vantana???????
    santhosh epdiyum vandhruvanu ninaikren..
    mukilan friend oda relation ah romba tease panran.. idha kavanikkama santhosh ball vilayadran...
    neka enne ennna seyya poralo????
     
  4. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    santhosh ahhh pinnadi.....kandipa santhosh friend kooda sandai poda poran.....
    madhura vu ku santhosh mela soft corner varuma????
     
  5. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Ennapa ithu puthusa Mukilan character. Neha vera, Jodi yethavathu mathura idea irukka................
     
  6. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi NooruNila..
    enna pa Mathu Mugilan kitta maattika porala?
    Santhosh enna da pannitu irukka? un aal inga kasta pado pora, nee appadi entha velaiyai vetti murichchuttu irukka?
    Neha Santhosh ku route viduvalo? Mathu ku eththana kastangal than katthittu irukko?
    eagerly waiting pa..
    -devi.
     
    1 person likes this.
  7. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Sweetsaghi,

    Enna idhu mugil adi vaanga poraan santhosh kitta........ aanaalum madhu ivalo bayappada vendaam....santhosh kitta sonna avan friendkitta en madhu va, nee disturb pannadha nu solliduvaane......... neha va vechchu edhaavadhu kutti kuzhappam panna poreengala ma......... santhosh seekaram late pannaama un love ah sollidu......Story ia fast moving...super ah irukku.........

    Vasupradha.S
     
  8. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நிலா & நூருல்,

    கதை ரொம்ப நல்லா கொண்டுபோறீங்க பா......
    வாணி ஏன் இப்படி பயந்து நடுங்கறா?......
    என்ன ஆகபோகுது.... காத்துகிட்டு இருக்கேன் படிக்க.......
     
  9. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    going on very interesting.
     
  10. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    story is going good..
     

Share This Page