1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 1

Discussion in 'Stories in Regional Languages' started by Sweetynila, Jan 24, 2012.

  1. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    பொழுது மெல்ல மெல்ல புலர்ந்து கொண்டிருந்தது . சூரியன் தன் கதிர்களை பூமிக்கு அனுப்பி நிலமகளை எழுப்பி கொண்டிருந்தான் .

    புள்ளினங்கள் தங்கள் இரையை தேடி புறப்பட்டன . செடிகளும் , மரங்களும் மெல்ல கண் விழித்து பறவைகளை வரவேற்க தயாராகின.



    விடியலை ரசிக்க நேரமின்றி மக்கள் பரபரப்பாகத் தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர் . அலுவலகத்திற்கு செல்பவர்கள் அவசர அவசரமாக தங்கள் அலுவலகத்திற்கு கிளம்பி செல்ல , ஊற்சாகமாக தேனிக்களை போல் மாணவ மாணவிகள் தங்கள் பள்ளிக்கும் , கல்லூரிக்கும் சென்று கொண்டிருந்தனர்.

    நண்பர்களை தேடி அலையும் கண்களோடும் நண்பர்கள் விரல்களோடு பிணைந்த கைகளோடும் முகத்தில் புன்னகை மின்ன மலர்ந்த முகத்துடன் மாணவ மாணவிகள் தங்கள் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தனர் . அவர்களிள் ஒருத்தியாக தன் சுவடுகளை பதித்தாள் நம் தேவதை மதுரவாணி .

    மயில் தோகைப் போல் அடர்ந்த கேசம் , வில்லை போல வளைந்த புருவம் , துரு துரு கண்கள் , புன்னகையை சுமக்கும் ரோஜா இதழ்கள் , எவ்வித ஒப்பனையுமின்றி ஜொலிக்கும் முகம் , நீண்ட வெண்டை பிஞ்சு விரல்கள் , மெல்லிய தேகம் , பெண்களுக்கே உரிய உயரம் என்று எழிலோவியமாய் திகழ்ந்தாள் .


    அவள் உள்ளே வந்ததும் அவளை நோக்கி மலர்ந்த முகத்தோடு விரைந்தோடி வந்தாள் அவள் உயிர் தோழி ரேகா .

    " ரேகா மெதுவா மெதுவா ஏன் இந்த அவசரம் " என்று தன் தேன் குரலில் வினவினாள் மதுரவாணி .

    " சந்தோசமான விசயத்தை சொல்ல வேகமாக தானே வரணும் " என்று மூச்சு வாங்க கூறினாள் ரேகா .

    " அப்படி என்ன மேடம் சந்தோசமான விசயம் ? "

    " இன்றைக்கு C.O.P (Career Oriented Programe) க்ளாஸ் இருக்கு " என்று துள்ளி குதித்து கூறியவள் மறுபுறம் வெறும் புன்னகை மட்டும் பதிலாக கிடைக்கவும் ,
    " நல்லா படிக்கிற மதுரா மேடமுக்கெல்லாம் இது சப்ப மேட்டர் . என்னைப் போல முட்டி மோதி ஒரளவுக்கு படிக்கிறவங்களுக்கு எல்லாம் இது பெரிய விசயமாச்சே " என்று பெருமூச்சு விட்டாள் ரேகா .

    " சரி போதும் போதும் ரொம்ப வாறாதே . அசம்பிளிக்கு நேரம் ஆச்சு வா போகலாம் " என்று இழுத்துக் கொண்டு சென்றாள்.
    அனைத்து மாணவர்களும் அசம்ப்ளியில் கூட சரியாக ஒன்பது மணிக்கு அசம்பிளி ஆரம்பம் ஆனது . அனைவர் முன்னும் தோன்றிய முதல்வர் தன் பேச்சை துவங்கினார் .

    " டியர் ஸ்டுடென்ஸ் இன்றைக்கு 3rd இயர் பசங்களுக்கு C.O.P க்ளாஸ் " என்று அவர் கூறியதும் அனைத்து மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முகமும் பூவாய் மலர்ந்தது.

    பின் இருக்காதா C.O.P க்ளாஸை வைத்து தங்கள் வகுப்பு தேர்வு , அசைன்மெண்ட் , தூங்க வைக்கும் பாட வகுப்புகள் எல்லாவற்றையும் இரண்டு நாள் தள்ளி போடலாமே.

    முதலில் C.O.P க்ளாஸ் பற்றி பார்க்கலாம் ,

    C.O.P--Career Oriented Programming . மாணவர்களின் எதிர்காலதிட்டத்தை திடபடுத்த , தன்னம்பிக்கை வளர்க்க, பேச்சு திறனை மேம்படுத்த , தனிதிறமையை எடுத்துக்காட்ட இந்த க்ளாஸை பயன்படுத்தினர் . இந்த க்ளாஸை நடத்த H.Rல் இருந்து ஆட்களை வரவழைத்து இருந்தது நிர்வாகம்.

    ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த வகுப்பு நடை பெற்றது. மூன்று பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு பகுதி என்று வழங்கபட்டிருந்தனர்.
    ஒவ்வொரு பகுதியும் இரண்டு நாட்கள் நடை பெறும் . அந்த இரண்டு நாட்கள்தான் மாணவர்கள் தங்கள் படிப்பை மறந்து சந்தோசமாக இருந்தனர் . சிலர் தங்கள் க்ளாஸை கட் செய்து காண்டீனில் தஞ்சம் புகுந்து விடுவர் . இதை அறிந்த நிர்வாகம் இம்முறை வித்தியாசமான முடிவு எடுத்தது.

    "நீங்க எல்லோரும் எப்பவும் க்ளாஸ் கட் பண்ணுறிங்கன்னு எனக்கு தெரியும் . இந்த முறை அப்படி பண்ணாதிங்க. நீங்க எல்லோரும் பைனல் இயரில் இருக்கீங்க . சோ படிப்பில் கவனமா இருங்க . C.O.P க்ளாஸையும் கட் பண்ணாதிங்க . இது உங்களுக்கு ப்ளேஸ்மெண்ட் கிடைக்க உதவி செய்யும் . இந்த முறை க்ளாஸை கட் செய்பவர்களுக்கு இண்டெர்னல் மார்க்ஸில் 10 மார்க் கட் செய்யப்படும் . அன்ட் அட்டண்டண்ஸ் மார்க் கிடையாது . நீங்க க்ளாஸ் கவனிக்கிறது இல்லைன்னு கம்ப்ள்யிண்ட் வந்து இருக்கு.அதுனால இந்த தடவை பேட்ச் பிரிச்சிருக்கு . அந்த பேட்ச் படிதான் நீங்க க்ளாஸ் அட்டென் பண்ணனும் . ஒரே க்ளாஸை சேர்ந்தவங்க பக்கத்தில் அமர கூடாது " என்று அவர் சொன்னதும் .

    " மேம் " என்று ஒட்டு மொத்தமாக கூச்சல் இட்டனர் .



    " நோ நோ. இந்த ஆர்டரை நீங்க பாலோ பண்ணித்தான் ஆகணும் . யு ஹவ் நோ அதர் ஆப்சன் . இன்•பர்மேசன் அ•ப் யுவர் பேட்சஸ் வில் பி டிஸ்பேளேயிட் ஆன் யுவர் டிப்பார்ட்மெண்ட் நோட்டிஸ் போர்ட் . நவ் யு மே கோ டு யுவர் க்ளாஸ் " என்றவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    காலையில் இருந்த சந்தோசம் மறைய தங்கள் டிப்பார்ட்மெண்ட் நோட்டிஸ் போர்ட் நோக்கி சென்றனர்.

    நோட்டிஸ் போர்டில் கொடுக்கப்பட்டிருந்த தங்கள் வகுப்பறைக்கு சென்றனர்.

    தனக்கான அறைக்கு சென்ற மதுரவாணி சற்று திகைத்தாள் . ஏன் என்றால் சேர்கள் வரிசையில் போடுவதற்கு பதில் எதிர் எதிரே பார்த்து கொண்டு அமர்ந்திருப்பதை போல அமைக்கப் பட்டுயிருந்தது .

    அவளுடன் உள்ளே நுழைந்த அவள் வகுப்பு தோழிகள் ,

    " இந்த ப்ரின்ஸியோட அலப்பறைக்கு ஒரு அளவே இல்லாம போச்சுப்பா . ஒருத்தரோட ஒருத்தர் இன்டெராக்சன் பண்ணணுமாம் . அதுக்காகத்தான் இந்த மார்வலஸ் அரேஞ்ச்மெண்ட் " என்று அவர்கள் கூறிய பாணியை பார்த்தது மதுரவாணிக்கு சிரிப்பு வந்தது .

    " சரி சரி வாங்க வாங்க ஒரு ஒரு சேர் விட்டு எல்லோரும் உட்கார்ந்திடுவோம் . மத்த டிப்பார்ட்மென்ட் பசங்க வந்து காலி இடத்தை நிரப்பட்டும் " எனவும் அவ்வாறே அனைவரும் சென்று அமர்ந்தனர்.

    தன் பேக்கை டேபிள் அருகில் வைத்து விட்டு நோட்டை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தாள் மதுரா .

    மற்ற டிப்பார்ட்மெண்ட் மாணவர்கள் உள்ளே வரவும் சுற்று முற்றும் வேடிக்கை பார்க்க துவங்கியவாள் சற்று நேரத்தில் சலிப்பு தட்ட சேரில் கையை முட்டு கொடுத்து உள்ளங்கையில் கன்னத்தை பதித்து அமர்ந்தாள்.


    தன்னை ஒருவர் உற்று நோக்கி கொண்டிதிருப்பதையும் அதனால் தன் வாழ்வு தடம் மாறி செல்ல போகிறது என்பதையும் அறியாமல் தன் நோட்டில் எதையோ கிறுக்கி கொண்டிருந்தாள்.


    --உணர்வுகள் விளையாடும்.

    - நூருல் & நிலா
     
    3 people like this.
    Loading...

  2. Agnesdarl

    Agnesdarl Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    15
    Trophy Points:
    18
    Gender:
    Female
    ஹாய் பிரியா,

    தலைப்பே சூப்பர் டா. காலேஜ் சப்ஜெக்ட் வேற கலக்க போறீங்கனு புரியுது. நம் தேவதையை மீட் பண்ணியாச்சு. ஹீரோ எப்போ என்ட்ரி குடுப்பார்???

    வாணி லைப்ல என்ன பிரச்சனை பண்ண போறீங்க?? சாரி வில்லன் என்ன பண்ண போறார்?? இல்ல ஹீரோ தான் பிரச்சனையா???

    வைய்டீங் போர் நெக்ஸ்ட் பார்ட் டா..சீக்கிரம் அப்டேட் குடுங்க...

    அன்புடன்,
    கங்கா
     
    2 people like this.
  3. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    enga college la nadandha placement class nyabagathu ku varudhu ma....
    yaary vaani ya parkranga??? hero va??
    good start ma....
     
    1 person likes this.
  4. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    hi....
    college story padikave ennaku romba pidikum...
    hero sight adichitu irukara ??
     
    2 people like this.
  5. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Yeh nice start pa. College kadhai so romba enthuva irukku. Seekiram hero intro kodunga........
     
    1 person likes this.
  6. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Hi Vanathi,
    kalakkareenga..all the best for your new venture..
    good start,....I like that name Mathura...
    keep going!!
     
    1 person likes this.
  7. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Sweety,

    Really sweet beginning lik ur name.. and college galaatta va, super..... romba naal aachu coll galaatta padichchu....... Madhura, I love the name..... and you touched me by keeping it ..and your name selection for the story, made me to humm the song....... I lik it much..... nice selection....... hero daane madhuraa va paarkaradhu....
    Waiting for next update!!!!!

    Vasupradha.S
     
    1 person likes this.
  8. LillySam

    LillySam Gold IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    274
    Trophy Points:
    160
    Gender:
    Female
    very nice start...
     
    1 person likes this.
  9. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    good start
     
    1 person likes this.
  10. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Hi Ganga,

    Thanks for the comment ma.
    Vaani lifela enna pirachanai nu aduthu vara updatela therinchudum..
    Vilian ellam intha kadhaila illa.
    Villi thaan irukaa.
    Koodiya seekiram vaani lifela enna pirachanainu sollidurom.
     

Share This Page