1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

இதம் தரும் இனிய தமிழ் பாடல் வரிகள்

Discussion in 'Music and Dance' started by veni_mohan75, Aug 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: 4 ஸ்டூடண்ஸ்
    இசை: ஜாஸ்ஸி கிஃப்ட்
    பாடியவர்: ஜாஸ்ஸி கிஃப்ட்

    லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
    ராட்சசியோ தேவதையோ
    ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
    அடை மழையோ அணல் வெளியோ
    ரெண்டும் சேர்ந்த கண்ணோ
    தொட்டவுடன் ஓடுறீயே தொட்டாச்சிணுங்கி பெந்தானோ
    அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி
    (அடி லஜ்ஜாவதியே..)

    பூவரச இலையிலே பீப்பி செஞ்சு ஊதினோம்
    பள்ளிக்கூட பாடம் மறந்து பட்டாம் பூச்சி தேடினோம்
    தண்ணிப்பாம்பு வரப்பில் வர தலைதெறிக்க ஓடினோம்
    பணங்காயின் வண்டியில் பசு மாட்டு தொழுவத்தை
    சுற்றி வந்து பப்பாய்க்கு போனதாக சொல்லினோம்
    அடடா வசந்தம் அது தான் வசந்தம்
    மீண்டும் அந்தக் காலம் வந்து மகிழ்ச்சியாக மாறுமா

    Baby dont you ever leave
    I'm your don raja
    Come on anytime You are my dilruba
    I can never stop this feel in
    I'm your don raja
    yeah Hey Hey

    Baby run your body with this freaky thin
    and I wont let you go
    and I wont let you down through the fire
    through the limit
    To the wall to just to be with you
    I'm gladly risk it all
    Ha let me do it one more time
    do it one more time
    Ha baby come on and
    lets get it into the party

    காவேரி நதியிலே தூண்டில்கள் போட்டதும்
    கண்ணே உன் தூண்டில் முள்ளில் குட்டித்தவளை விழுந்ததும்
    கை கொட்டி கேலி செய்த ஞாபகங்கள் மறக்குமா
    கட்டை வண்டி மையினால் கட்ட பொம்மன் மீசையை
    கண்ணே நீ வரைந்து விட்டு ராஜ ராஜன் என்றதும்
    அடடா வசந்தம் அது தான் வசந்தம்
    காலம் கடந்து போன பின்னும்
    காதல் கடந்து போகுமா
    (அடி லஜ்ஜாவதியே..)
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : வின்னர் (2003)
    இசை : யுவன் சங்கர் ராஜா
    பாடியவர் : ஹாரீஸ் ராகவேந்திரா
    வரிகள் :

    எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
    எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

    எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
    இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
    இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
    அடி எனக்காக நீயும் வந்தாய்

    (எங்கிருந்தாய்...)

    நிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயா
    குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா
    கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
    மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
    இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்

    (எங்கிருந்தாய்...)

    இதழை சுழிக்காதே இயங்காமல் போவேன்
    இடையை வளைக்காதே இடிந்தே நான் சாய்வேன்
    அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
    ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
    ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்

    (எங்கிருந்தாய்...)
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : வருஷம் 16
    இசை : இளையராஜா
    பாடியவர் : Kj ஜேசுதாஸ்

    கண்மணியே ராதை எனும் காதலியே நான் விரும்பும்
    பெண்மணியே ஆடை கட்டும் பைங்கிளியே
    கண்ணன் வந்தான் பாட்டிசைக்க கவலைகளை விட்டு விடு
    காற்சதங்கை சத்தமிட மேடையிலே வட்டமிடு

    கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
    வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
    நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
    வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி
    உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
    வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
    கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
    வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி

    தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் நடை தான் பயில
    கத்தும் கடல் நீரலை போல் இங்கு குழல் தான் நெளிய
    இல்லை என யாவரும் கூறிடும் இடை தான் ஒடிய
    இன்பம் என என் விழி பார்த்தது இமை தான் விரிய

    காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி
    காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி
    முன்னம் பல ஜென்மம் வழியே உண்டானது உன் உறவே
    இன்னும் என்னைத் தொட்டுத் தொடர்ந்தே பந்தாடுது உன் நினைவே
    உயிர் வாழும் பெண்ணா வா வா கண்ணா

    கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
    வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
    நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
    வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி
    உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
    வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
    கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
    வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி

    தாக்கு தணகு தரிகிட தகதிமி தீக்கு தணகு தரிகிட தகதிமி
    தகிட தீம்த தாம் தாம் ததீம்த தீம்த ஜணுத தாம் தாம் ததீம்த
    தாம் தரிகிடதாம் ததீம்த ததீம்த
    தீம் தரிகிடதை ததீம்த ததீம்த
    தாம்த தகிடதக தாம்
    தீம்த தகிட தக தீம்

    சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்
    சுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்
    அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்
    அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்
    காத்திருப்பான் கை அணைக்க காதலியால் மெய் அணைக்க
    காத்திருப்பான் கை அணைக்க காதலியால் மெய் அணைக்க
    கண்ணன் மனம் அந்தப்புரமே வந்தாடிடும் முத்துச் சரமே
    அச்சம் விடும் பச்சைக் கிளியே அவன் தாள் தினம் நத்தும் கனியே
    நாளும் ஓதும்......காதல் வேதம்

    கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
    வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
    நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
    வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி
    உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
    வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
    உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
    வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: அண்ணாமலை
    இசை: தேவா
    பாடியவர்: Sp பாலசுப்ரமணியம்

    வந்தேண்டா பால்காரன்
    அடடா பசு மாட்டைப்பத்தி பாடப் போறேன்
    புது பாட்டு கட்டு ஆடப்போறேன்
    (வந்தேண்டா..)

    புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்
    உன்னால முடியாது தம்பி
    அச பாதிப்புள்ள பொறக்குதப்பா
    பசும்பாலை தாய்ப்பாலா நம்பி
    (வந்தேண்டா..)

    தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாகம் பிரிப்பது பசுவோட வேலையப்பா
    அது பிரிந்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா
    சாணம் விழுந்தா உரும்பாரு எருவை எரிச்சா திருநீறு
    உனக்கு என்ன வரலாறு உண்மை சொன்னா தகறாரு
    நீ மாடு போல உழைக்கலையே
    நீ மனுஷனை ஏச்சுப் பொழைக்கிறியே
    (வந்தேண்டா..)

    அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறுங்கூடு
    கண்ணதாசன் சொன்னதுங்க
    பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்
    நான் கண்டு சொன்னதுங்க
    அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
    ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலுங்க
    அண்ணாமலை நான் கொடுப்பதெல்லாம்
    அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க
    அன்னை வாரிக் கொடுத்தது தாய்ப்பாலு
    என்னை வாழ வைத்தது தமிழ்ப்பாலு
    (வந்தேண்டா..)
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: ஜெமினி
    இசை: பரத்வாஜ்
    பாடியவர்: சாதனா சர்கம்

    தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா
    தீவானா ஹோ தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீதானா
    என் வீட்டு கோலத்தில் புள்ளிக்குள் ஒளிந்து
    தன் காதல் சொல்லும் மாயக்கண்ணனா
    (தீவானா..)

    வெள்ளி கிழமையில் வீட்டுத் தோட்டத்தில்
    வால் முளைத்த சிட்டு ஒன்று வந்து விட்டதே
    கீச்சு கீச்சு என்றே கூச்சல் போட்டதே
    நெஞ்சு கூட்டி கூடு கட்ட மல்லுக்கட்டுதே
    சும்மா அது கத்தி செல்லுமோ
    இல்லையம்மா நெஞ்சை கொத்தி செல்லுமோ
    அன்னை தந்தையை ஆசை தோழியை
    காணும்போது நாணம் வந்து கண்கள் கூசுதே
    தூக்கம் விற்றுதான் காதல் வாங்கினாய்
    என்று எந்தன் பெண்மை என்னை கேலி பேசுதே
    ஐயோ இன்னும் என்னவாகுமோ
    எந்தன் ஆடை நாளை கொள்ளைபோகுமோ
    (தீவானா..)

    காதல் எண்ணமே ஐயோ அசிங்கமே
    என்ற கண்கள் காது மூக்கு பொத்தி கொண்டவள்
    காதல் காலடி ஓசை கேட்டதும்
    வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டவள்
    காதல் உள்ளே வந்துவிட்டது
    எந்தன் நாணம் வெளியே சென்றுவிட்டது
    தோழி ஒருத்தியை நேரில் நிறுத்தினாள்
    காதில் ஒற்றை சேடி சொல்ல நெஞ்சு முட்டுதே
    ஆனால் நாவிலே அனா ஆவன்னா
    இரண்டெழுத்தை தவிர வேறு வார்த்தை இல்லையே
    ஆசை வந்த தத்தளிக்குறேன்
    என் பாஷை மாற்றி உச்சரிக்கிறேன்
    (தீவானா..)
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: பிரியமானவளே
    இசை: Sa ராஜ்குமார்
    பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், ஹரிணி

    ஜூன் ஜூலை மாசத்தில் ரோஜாப்பூவின் வாசத்தில்
    ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்
    மனம் பாராசூட் கட்டித்தான் விண்ணில் பறக்கும்
    ஆரஞ்சு கன்னத்தில் ஆப்பிள் போன்ற வண்ணத்தில்
    பால் நிலா வீட்டுக்குள் பாதம் பறிக்கும்
    எந்தன் வர்ணங்கள் எல்லாமே துள்ளி குதிக்கும்
    யூ கேஜி பட்டர்ப்ளை நாளை கையில் கிடைக்கும்
    இனிஷியல் கேட்டுத்தான் அது மெல்ல சிரிக்கும்
    (ஜூன்..)

    வானத்தின் உச்சிக்கு நிலவு வந்த நேரத்தில்
    நீ என்ன சொட்டாக்கா பொண்ணு பிறக்கும்
    பூவெல்லாம் பூவெல்லாம் பூக்கப்போகும் நேரத்தில்
    நான் உன்னை தொட்டாக்கா பையன் பிறப்பான்
    மைனா மைனா ஒன்னு கூடும் நேரத்தில்
    நாம் அசைந்தால் அட ரெட்டை புள்ளதான்
    சீனத்தில் பொண்ணுதான் அடி ஒரே நேரத்தில்
    அஞ்சாறு பெத்தாளாம் அதை தாண்ட வேணாமா
    (ஜூன்..)

    கல்லுக்கு கல்லுக்கு சிற்பி தொட்டா சந்தோஷம்
    ஆணுக்கு அப்பாவா ஆனா சந்தோஷம்
    தொட்டில் கட்டி பாட்டு சொன்னா சந்தோஷம்
    எட்டி நின்னு அத பார்த்தா சந்தோஷம்
    தாய்ப்பாலு தரும்போது இந்த ஜென்மம் சந்தோஷம்
    இன்னொரு ஜூனியர் தந்தா ரொம்ப சந்தோஷம்
    (ஜூன்..)
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: பிரியமானவளே
    இசை: Sa ராஜ்குமார்
    பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

    அழகே அழகே
    உனை மீண்டும் மீண்டும்
    அழைத்தேன் அழைத்தேன்
    வர வேண்டும் வேண்டும்
    நான் வாழ்ந்த பூமியில்
    எல்லாமே வாணிகம்
    ஆன் பெண்கள் பந்தமே
    அன்றாட நாடகம் அன்பே

    அழகே அழகே
    உனை மீண்டும் மீண்டும்
    அழைத்தேன் அழைத்தேன்
    வரவேண்டும் வேண்டும்
    ஒப்பந்தம் போட்டது
    தப்பாகி போனதே
    இப்போது சக்கரை
    உப்பாகி போனதே அன்பே
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: பிரியமானவளே
    இசை: Sa ராஜ்குமார்
    பாடியவர்: சித்ரா

    என் ஆயுளின் அந்தி வரை
    வேண்டும் நீ எனக்கு
    உன் தோள்களில் தூங்கிட
    வேண்டும் நீ எனக்கு
    உன் விண்ணிலா ஓர் பெண் நிலா
    வானம் நீ எனக்கு
    உன் பேர் சொல்லும் ஓர் கோகிலம்
    கானம் நீ எனக்கு
    உன்னோடு நான் வாழ்ந்திட
    கால கணக்கு எதுக்கு
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: பிரியமானவளே
    இசை: Sa ராஜ்குமார்
    பாடிரவர்கள்; ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்

    எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
    நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
    உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
    பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
    (எனக்கொரு..)

    மேகமது சேராது வான் மழையும் வாராது
    தனிமையில் தவித்தேனே உனை எண்ணி இளைத்தேனே
    மேல் இமையும் வாராது கீழ் இமையும் சேராது
    உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
    சம்மதங்கள் உள்ள போதும் வார்த்தையொன்று சொல்ல வேண்டும்
    வார்த்தைகள் வந்து சேரும் போது நாணம் என்னை கட்டி போடும்
    மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிடுமே
    (எனக்கொரு..)

    கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சினுங்காமல்
    அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
    மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
    கனவுகள் ஒரு கோடி நீ கொடு என் தோழி
    அன்பை தந்து என்னை நீயும் தாங்கிக்கொண்டு நாட்களாச்சு
    பூவைத் தொட்ட பின்புதானே முட்கள் கூட பூக்கள் ஆச்சு
    விரல்கள் கொண்டு நீயும் பேசினால் விறகும் வீணையாகும்
    (எனக்கொரு..)
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: பிரியமானவளே
    இசை: Sa ராஜ்குமார்
    பாடியவர்கள்: ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்

    என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
    என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை
    உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
    உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
    என்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே
    (என்னவோ..)

    மழை தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா
    குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
    விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா
    நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா
    விடிகாலை வேளை வரை என் வசம் நீ சம்மதமா
    இடைவேளை வேண்டுமென்று விடை கேட்கும் சம்மதமா
    நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா
    என்னுயிரில் சரி பாதி நான் தருவேன் சம்மதமா
    (என்னவோ..)

    இமையாக நான் இருப்பேன் சம்மதமா சம்மதமா
    இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா
    கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
    கண் மூடி தவம் இருப்பேன் சம்மதமா சம்ம்தமா
    ஒரு கோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
    பிரியாத வரம் ஒன்றை தர வேண்டும் சம்மதமா
    பிரிந்தாலும் உனை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா
    (என்னவோ..)
    ப்ரியமானவளே
    ப்ரியமானவளே..
     

Share This Page