1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

இதம் தரும் இனிய தமிழ் பாடல் வரிகள்

Discussion in 'Music and Dance' started by veni_mohan75, Aug 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
    வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
    பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
    வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
    வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

    பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு
    இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு
    வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு
    பச்ச மனசு பத்திக்கிருச்சு
    கைய கட்டி நிக்கச்சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
    காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
    சாமிகிட்ட கேளு யாரு போட்ட கோடு
    பஞ்சுக்குள்ள தீய வச்சு பொத்தி வச்சவுக யாரு

    வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
    வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
    பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
    வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
    வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

    ஒன்னக்கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
    கண்ணுக்குள்ள நான் தண்ணி வைக்கிறேன்
    சொல்லாமத்தான் தத்தளிக்கிறேன்
    தாளமத்தான் தள்ளி நிக்கிறேன்
    பாசம் உள்ள தர்மம் இத பாவமின்னு சொல்லாது
    குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது
    புத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்
    சாதிமத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

    வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
    வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
    பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
    வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
    வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

    படம்: முதல் மரியாதை
    இசை: இளையராஜா
    வரிகள்: வைரமுத்து
    பாடியவர்: மலேசியா வாசுதேவன், s.ஜானகி
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பூங்காற்று திரும்புமா?
    என் பாட்ட விரும்புமா?
    பாராட்ட* மடியில் வெச்சுத் தாலாட்ட
    எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?

    (பூங்காற்று திரும்புமா…)

    ராசாவே வருத்தமா?
    ஆகாயம் சுருங்குமா?
    ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
    அடுக்குமா சூரியன் கருக்குமா?

    என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
    மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
    இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
    ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

    ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
    சொல்லாத சோகத்த சொன்னேனடி

    சொக ரக சோகந்தானே

    யாரது போரது?

    குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

    (பூங்காற்று திரும்புமா…)

    உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
    நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
    உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
    எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

    மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
    முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

    எசப் பாட்டு படிச்சேன் நானே

    பூங்குயில் யாரது?

    கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

    அடி நீதானா அந்தக் குயில்?
    யார் வீட்டு சொந்தக் குயில்?
    ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததே ஒலகமே மறந்ததே

    நாந்தானே அந்தக் குயில்
    தானாக வந்தக் குயில்
    ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததா ஒலகம் தான் மறந்ததா?

    படம்: முதல் மரியாதை
    இசை: இளையராஜா
    வரிகள்: வைரமுத்து
    பாடியவர்: மலேசியா வாசுதேவன், ஜானகி
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மாமரச்சோலையில் பூமழை தேடுது
    மழை மேகம் வர வேண்டும்
    சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது..
    சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது..

    மேகம் கருக்குது மழை வர பார்க்குது
    வீசியடிக்குது காத்து காத்து

    ஏன் நிறுத்திட்டீங்க? பாட்டு நல்லா இருக்கு
    இன்னொரு தடவை பாடுங்களேன்
    அது.. அது வந்து..
    இந்த பாட்டு எதுக்கு உங்களுக்கு?
    பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
    கேட்கணும் போல ஆசையா இருக்கு
    அட.. பாடுங்கண்ணா..

    மேகம் கருக்குது மழை வர பார்க்குது
    வீசியடிக்குது காத்து
    காத்து மழை காத்து
    காத்து மழை காத்து

    (மேகம் கருக்குது…)

    ஒயிலாக மயிலாடும் அலை போல
    மனம் பாடும்

    (மேகம் கருக்குது…)

    தொட்டு தொட்டு பேசும் சிட்டு
    துள்ளி துள்ளி ஓடுவதென்ன

    (தொட்டு தொட்டு…)

    தென்றல் பட்டு ஆடும் மொட்டு
    அள்ளி வந்த வாசம் என்ன
    ஏதோ நெஞ்சில் ஆசை வந்து…
    ஏதோ நெஞ்சில் ஆசை வந்து..
    ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
    என்னனம்மோ ஆகிப்போச்சு
    சேராமல் தீராது
    வாடைக் குளிரில் வாடுது மனசு

    (மேகம் கருக்குது…)

    பூவுக்குள்ள வாசம் வச்சான்
    பாலுக்குள்ள நெய்யை வச்சான்

    (பூவுக்குள்ள..)

    கண்ணுக்குள்ள என்ன வச்சான்
    பொங்குதடி என் மனசு

    (கண்ணுக்குள்ள..)

    பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
    பைத்தியம்தான் ஆகிப்போச்சு
    நீ..
    நீ வாடி நீ வாடி
    ஆசை மயக்கம் போடுற வயசு

    (மேகம் கருக்குது…)

    படம்: ஆனந்த ராகம்
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: K.j.ஜேசுதாஸ் & s.ஜானகி
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஏரிக்கரை பூங்காற்றே…
    நீ போற வழி தென்கிழக்கோ….
    தென்கிழக்கு வாசமல்லி….
    என்னைத் தேடி வர தூது சொல்லு….
    (ஏரிக்கரை பூங்காற்றே)

    பாதமலர் நோகுமுன்னு நடக்கும்
    பாதைவழி பூவிரிச்சேன்… மயிலே
    பாதமலர் நோகுமுன்னு நடக்கும்
    பாதைவழி பூவிரிச்சேன்… மயிலே
    ஓடம் போல் ஆடுதே மனசு
    கூடித் தான் போனதே வயசு
    காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
    அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது
    (ஏரிக்கரை பூங்காற்றே)

    ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
    மூடி கொள்ள பார்க்குதடி அடியே
    ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
    மூடி கொள்ள பார்க்குதடி அடியே
    ஜாமத்தில் பாடுறேன் தனியா
    ராகத்தில் சேரனும் துணையா
    நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
    அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு
    (ஏரிக்கரை பூங்காற்றே)



    படம்: தூறல் நின்னு போச்சு (1982)
    பாடல்: ஏரிக்கரை பூங்காற்றே
    இசை: இளையராஜா
    பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
    வரிகள்: சிதம்பரநாதன்
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆரிராரிரோ..
    ஆரிராரிரோ..
    ஆரிராரிரோ..ஆரிராரிரோ
    ஆரிராரிரோ..ஆரிராரிரோ..

    சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
    சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
    அன்னை மணம் ஏங்கும்
    தந்தை மணம் தூங்கும்
    நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா
    சின்னஞ்சிறு கிளியே..

    சுகமே நினத்து சுயம்வரம் தேடி
    உடனே தவிக்கும் துயரங்கள் கோடி
    மழை நீர் மேகம் விழிகளில் மேவும்
    இந்த நிலை மாறுமோ
    அன்பு வழி சேருமோ
    கண்கலங்கி பாடும் எனது
    பாசம் உனக்கு வேஷமோ
    வாழ்வது போதுமடா
    வாழ்க்கை இனிமே..

    சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
    சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
    உன்னை என்னி நானும் உள்ளம் தடுமாறும்
    வேதனை பாரடா வேடிக்கை தானடா
    சின்னஞ்சிறு கிளியே …

    மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
    மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை
    என்னை நீ தேடி இணைந்தது பாவம்
    எல்லாம் நீயே எழுதிய கோலம்
    இந்த நிலை கானும் பொழுது
    நானும் அழுது வாழ்கிறேன்
    காலத்தின் தீர்ப்புகளை யாறரிவாரோ ஓஓ

    சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே

    உன்னை என்னி நானும் உள்ளம் தடுமாறும்

    நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா

    சின்னஞ்சிறு கிளியே..

    சித்திரப்பூவிழியே..

    படம்: முந்தானை முடிச்சு (1983)
    இசை: இளையராஜா
    பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியன் & எஸ்.ஜானகி
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
    தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
    மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
    ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
    தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ


    ஆ: காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
    உன் சேலையில் பூவேலைகள்.. உன் மேனியில் பூஞ்சோலைகள்
    பெ: அந்திப்பூ விரியும்.. அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
    இவளின் கனவு கனியும் வரையில் விடியாது திருமகள் இரவுகள்

    ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ


    பெ:ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
    ஆ: லாலா லாலலாலா.. லாலலால லாலா..
    பெ: தன்னோடுதான் போராடினாள்.. வேர்வைகளில் நீராடினாள்
    ஆ: லாராரரா.. ராராரரா.. ராராரரா.. ராராரரா..
    அன்பே ஆடை கொடு.. எனை அனுதினம் அள்ளிச் சூடி விடு
    பெ: இதழில் இதழால் ஒரு கடிதம் எழுது.. ஒரு பேதை உறங்கிட மடி கொடு

    ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
    பெ: மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
    ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
    ஆ&பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ…

    படம்: தூறல் நின்னு போச்சு (1982)
    பாடல்: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
    இசை: இளையராஜா
    பாடியவர்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
    பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
    பார்வதி தாயே பணிந்தேன் நானே
    பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ

    டேய் யாருடா அவன் பங்கஜத்த பத்தி பாடுறவன்

    நாந்தானுங்க சாமி

    பங்கஜம் என்னடா பங்கஜம் என் மங்களத்த பத்தி பாடுறா

    மங்களம் கடைசில தானுங்க பாடனும்

    டேய் நான் சொல்றேன் முதல்லியே பாடுறா

    இன்னும் அட்வான்ஸ் கூட வாங்களைங்களே

    அட்வான்சாவது கிட்வான்சாவது

    நீ தள்ளிக்கட நாங்களே படுறோம்

    மாமா

    மாப்ள

    நீ ஆரம்பி

    மன்னாதி மன்னனை எல்லாம் பாத்தவன் நான்
    அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்
    அப்பேற்பட்ட என்ன பஞ்சாயத்துல நிருத்திட்டானுகளே
    படுபாவி பசங்க

    ஆமாம்………………

    என் அருமை என்ன பெருமை என்ன அந்தஸ்தென்ன

    ஆமாம்……………….

    என் குஸ்தி என்ன பஸ்கி என்ன தண்டால் என்ன

    ஆமாம்……………………

    இத நான் எங்க சொல்வேன் என்ன செய்வேன்
    மாப்ள இதுக்கு மேல நீயே பாடுரா

    அட உன் கதை எனக்கு எதுக்கு மாமா
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே

    ஆமாம் தாய்க்குலமே

    அத கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே

    ஆமாம் உங்க மனமே

    இந்த ஊரு பொண்ண நம்பி எம்மனச தொறந்து வச்சேன்
    சொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே

    ஆமாம் தாய்க்குலமே

    நம்ம தாய்க்குலமே

    ஆத்தங்கரை தோப்புக்குள்ள ஓடி விளையான்டதும்
    யாருமில்ல சமயத்துல ஜாடையில சிரிச்சதும்
    தோட்டத்துல வரப்புக்குள்ள தொட்டு தொட்டு புடிச்சதும்
    தூண்டில் போட்டு மீனை சுட்டு ரெண்டு பேரும் கடிச்சதும்

    அத்தனையும் மறந்துபுட்டு இவன் நெஞ்ச வதைக்கிறா
    அப்பனோட பேச்ச மட்டும் பெருசாக நினைக்குறா
    ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்
    ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்
    (என் சோக)

    ஆசை வச்ச ஆம்பிளை நான் ஆண்டியா அலையுறேன்
    அல்லும்பகல் உன்ன எண்ணி தெருவுல திரியுறேன்
    நேத்துவரை நடந்ததெல்லாம் தெய்வம் செஞ்ச சோதனை
    நீ மட்டும் மனசு வச்சா தீருமடி வேதனை

    நான் மட்டும் இல்லையினா சன்யாசம் வாங்கிருப்பான்
    காசி முதல் ராமேஸ்வரம் காவி கட்டி போயிருப்பான்
    மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா
    மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா
    (என் சோக)

    படம்: தூறல் நின்னு போச்சு
    பாடல்: என் சோக கதையே கேளு தாய்க்குலமே
    இசை: இளையராஜா
    பாடியவர்: மலேசியா வாசுதேவன்
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆ: வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
    நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
    பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
    தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது
    பெ: வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
    நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன


    பெ: பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
    வழியை மறந்த குயிலும் சேர்ந்தது
    ஆ: ஆ.. ஆஆஆ.. கோலம் போட்டு ஜாடை சொன்னது கன்னி மானே
    கோடு நமக்கு யாரு போட்டது
    பெ: நெஞ்சுக்குள்ள நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்
    நெத்தியில பொட்டு வச்சு உங்களத்தான் தொட்டுக்கிட்டேன்
    ஆ: நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா நாளும் நாளும் சந்தோஷம்
    பெ: ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்

    ஆ: வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
    பெ: நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன


    பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
    ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
    ஆஆ ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ.. ஆ..


    ஆ: மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு
    மோகத்தோடு கூடிப் பாடுது
    பெ: ஆ.. ஆஆஆ.. கேட்டுக் கேட்டுக் கிறங்கத் தோணுது உங்க பாட்டு
    கேள்வி போல என்னை வாட்டுது
    ஆ: ஆத்து வெள்ளம் மேட்டை விட்டு பள்ளத்துக்கு ஓடி வரும்
    ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய்ப் பாடி வரும்
    பெ: ஏதோ ஒண்ணைச் சொல்லிச் சொல்லி என்னை இப்போ கிள்ளாதே
    ஆ: போதும்.. போதும்.. கண்ணால் என்னைக் கட்டி இழுக்கிற செண்பகமே

    பெ: வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
    நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன
    பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
    தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது
    ஆ: வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
    நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா…

    படம்: செண்பகமே செண்பகமே
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஒரே முறை உன் தரிசனம்

    உலா வரும் நம் ஊர்வலம்

    ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம் ஊர்வலம்
    என் கோயில் மணிகள் உன்னை அழைக்கும்
    நெஞ்சோடு.. என் கண்ணோடு நீ வா
    ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம் ஊர்வலம்


    ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஹா..
    ஓஓஓ ஆஆஆ ஆஆஅ ஆஹா..


    இளமை என்னும் பருவம் சிறிது காலமே
    உறவில் காணும் சுகமும் விரைவில் மாறுமே
    தென்றல் வந்து தென்றலைச் சேர்ந்த பின்பும் தென்றலே
    கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்றுதான்
    கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்றுதான்
    ஆத்ம ராகம் பாடுவோம்.. அளவில்லாத ஆனந்தம்.. மனதிலே

    ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம் ஊர்வலம்
    என் கோயில் மணிகள் உன்னை அழைக்கும்
    நெஞ்சோடு.. என் கண்ணோடு நீ வா
    ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம் ஊர்வலம்


    தெய்வம் என்றும் தெய்வம்.. கோவில் மாறலாம்
    தீபம் என்றும் தீபம்.. இடங்கள் மாறலாம்
    கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே
    உருவம் இல்லையென்றால் உண்மையில்லையா
    உருவம் இல்லையென்றால் உண்மையில்லையா
    வானம் பூமியாகலாம்.. மனதுதானே காரணம்.. உலகிலே

    ஒரே முறை உன் தரிசனம்

    உலா வரும் நம் ஊர்வலம்

    ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம் ஊர்வலம்
    என் கோயில் மணிகள் உன்னை அழைக்கும்
    நெஞ்சோடு.. என் கண்ணோடு நீ வா
    ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம் ஊர்வலம்


    படம்: என் ஜீவன் பாடுது
    இசை: இளையராஜா
    பாடியவர்: எஸ். ஜானகி
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
    காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ

    கூ.. சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு
    பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
    காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
    பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
    காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ


    ல்ல்ல்ல் ல்ல்ல்ல் லலல்லா..
    லல்லலலல்லல லலல்லா.. லல்லலலல்லல லாலா..


    தூது போ ரயிலே ரயிலே.. துடிக்குதொரு குயிலே குயிலே..
    என்னென்னவோ என் நெஞ்சிலே

    தூது போ ரயிலே ரயிலே.. துடிக்குதொரு குயிலே குயிலே..
    என்னென்னவோ என் நெஞ்சிலே
    பட்டணம் போனா பார்ப்பாயா
    பார்த்தொரு சங்கதி கேட்பாயா
    கிழக்கே போகும் ரயிலே.. நீதான் எனக்கொரு தோழி
    தூது போவாயோ..

    பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
    காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ


    நடப்பதோ மார்கழி மாசம்.. தையிலே நிச்சயதார்த்தம்
    நாதசுரம்.. மேளம் வரும்
    நடப்பதோ மார்கழி மாசம்.. தையிலே நிச்சயதார்த்தம்
    நாதசுரம்.. மேளம் வரும்
    நெதமும் நெல்லைச் சோறாக்கி.. நெத்திலி மீனைக் குழம்பாக்கி
    மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன்
    மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனே

    பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
    காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
    கரகர வண்டி காமாட்சி வண்டி.. கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி
    கூ.. திரி திரி திரி திரி.. திரி திரி திரி திரி..
    ஆ..


    நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்.. சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
    தூக்கமில்லே.. காத்திருக்கேன்
    வீரபாண்டிக் கோயிலிலே.. வருகிற தைப் பொங்கலிலே
    வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்
    கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்கு

    பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
    காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
    பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
    காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…

    படம்: கிழக்கே போகும் ரயில்
    இசை: இளையராஜா
    பாடியவர்: எஸ். ஜானகி
     

Share This Page