1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 4, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    என்னுடைய பதிவுகள் எல்லாமே எங்களுடைய பேச்சு வழக்கில் இருக்கும், இது உங்க எல்லாருக்குமே தெரியும், என்றாலும் இந்த பதிவை அப்படி போடாமல் முடிந்த அளவு செந்தமிழில் போடறேன். [​IMG] ஏன்னா விஷயம் அப்படிப்பட்டது.

    எனக்கு ரொம்ப நாளா 2 விஷயம் பற்றி பேசணும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது......அதை இங்கு பேசலாமா கூடாதா என்று நினைத்து நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். கொஞ்ச நாள் முன் நம் பிரதமர் ஒரு வெப்சைட் ஓபன் செய்து அதில் எப்படிப்பட்ட சஜிஷனும் தரலாம் என்று போட்டிருந்தார், அதை நான் பார்த்தேன்...முதலில் அதில் போடலாம் என்று நினைத்தேன்........ஆனால் அதில் நம் விவரங்கள் எல்லாம் தரவேண்டி இருந்தது.............அப்புறம் தேடிவந்து என்னை அடித்தால்???????????? அது தான் அங்கு போடலை............அப்புறம் இங்கு ஏன் ? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..............இங்கு எனக்கு எதுவும் ஆகாது!.அதுதான் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே? என்னை காப்பாற்ற மாட்டீர்களா? அது தான் தைரியமாய் இங்கு பதிவு போடுகிறேன்.:)

    1. நம் நாடு சுதந்திரம் பெற்று 60 வருடங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் பல விஷயங்களில் முன்னேறாமல் இருக்கிறோம். எனக்கு 'பளிச்' என்று தென்படுவது முதலில் 'இடஒதுக்கிடு' தான். நான் இதை ரொம்ப மேலோட்டமாக பார்க்க ஆசைப்படுகிறேன். இந்த இடஒதுக்கிடு என்பதே முன்னேறாத மக்கள் முன்னேறவேண்டும் என்பதற்காகத்தானே? அப்படி எத்தனை பேருடைய ஜாதிகள் முன்னேறிவிட்டது? இவர்களும் 'மாய்ந்து மாய்ந்து' ஒதுக்கிடு செய்கிறார்கள்....ஆனால் யாரும் முன்னேறலை.......காமெடி யாக இல்ல? இதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்தார்களா? இதைப்பற்றி எனக்கு தோன்றியதைத்தான் இங்கு எழுத வந்தேன்.

    இடஒதுக்கிடு கூடாது என்று நான் சொல்ல வரலை.............ரொம்ப கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு அரசாங்கத்தில் இருந்து இவ்வளவு உதவிகள் கிடைக்கிறது என்று தெரியவே இல்லை. அப்படி வைத்திருக்கிறார்கள். அதாவது, இன்று பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா ஜாதிகளுக்குமே சங்கங்கள் இருக்கின்றன, அவர்கள் ஏன் இப்படிப்பட்ட மக்களுக்கு எடுத்து சொல்லி உதவக் கூடாது என்று எனக்கு தோன்றும். யோசித்துப்பார்த்ததில், ஒருசிலரே மீண்டும் மீண்டும் அவர்களின் ஜாதிகளுக்கு தரப்படும் இடஒடுக்கீட்டை தொடர்ந்து பெற்று வருகிறார்கள், இவர்கள் நகர்ந்தால் தானே மற்றவர் அந்த சலுகைகளை பெறமுடியும் என்று எனக்கு தோன்றியது........... .

    அதாவது, கடைக்கோடி இந்தியன் வரை தனக்கு உரிய உரிமையை பெறவேண்டுமானால் ...ஏற்கனவே சலுகை பெற்றவர்கள் நகர்ந்து கொள்ள வேண்டும்............அப்படி செய்தால் தான் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் எல்லோருக்கும் இந்த சிறப்பு சலுகைகள் சென்று சேரும்.........குறைந்த பக்ஷம் அடுத்த 50 ஆண்டுகளிலாவது............அதற்கு என்ன செய்யவேண்டும்? அதை யோசிக்காமல் நான் எழுத உட்காரவில்லை..........

    ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு இடஒதுக்கிடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்...........அதை அவர் ஒரே ஒருமுறை மட்டுமே தன் வாழ்நாளில் பயன் படுத்த வேண்டும். அதாவது, அதை அவை நர்சரி இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்......டாக்டருக்கு சேரும்போதும் பயன்படுத்தலாம்.....இல்லை காத்திருந்து வேலை இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்............அவ்வளவுதான்.

    இப்படி அவர் உபயோகப்படுத்தியதும், அவரின் birth certificate இல் ஒரு முத்திரை போட்டுவிடவேண்டும். இப்படி செய்வதால் அவர் மீண்டும் இந்த இடஒடுக்கீட்டை பயன் படுத்த முடியாது............இது மற்றவர்கள் முன்னுக்கு வர உதவும். இப்படியே போனால் நான் சொன்னது போல அடுத்த 50 வருடத்திலாவது நாம் நாடு உருப்பதும்.......இல்லா விட்டால் .........நடுவில் இருக்கும் சில பேர் மட்டும் நன்றாக கொழித்துக்கொண்டு, அவர்களின் மக்களின் கண்ணிலே அவர்களே மண்ணை போட்டுக்கொண்டு........ரொம்ப கவனமாக தங்கள் குடும்பத்துக்கே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு ...அது தங்களைத்தாண்டி கீழே உள்ள மக்களுக்கு போகாமல் பார்த்துக்கொண்டு காலம் கழிப்பார்கள்.

    ரொம்ப சிக்கலான நேரத்தில் இருக்கவே இருக்கிறார்கள் முன்னேறிய மக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்...............அவர்களை தாக்கி 2 அறிக்கை விட்டால் போதும், தன் கீழ் உள்ள மக்களை அடக்க [​IMG] இது தான் இப்பொழுது நடக்கிறது.............

    ரொம்ப பெரிய அறிவாளிகள் எல்லாம் இருக்கிறார்கள் நம் நாட்டில்' நான் சொல்வது ஒரு சின்ன 'பொறி' தான் இதை ஊதி பெரிதாக்கினால் நம் நாட்டுக்கு நல்லது மக்கள் நலம் அடைவார்கள்.

    2. இரண்டாவது, மேலே சொன்ன ஜாதியே இல்லாமல் செய்வது. அது எப்படி என்று பார்ப்போம். 70 களில் சொன்னார்கள் -

    "இப்போது காதல் கல்யாணங்கள் பெருகிவிட்டன எனவே எதிர் வரும் காலத்தில் ஜாதிகள் இல்லாமல் போகும்"

    என்று 40 -45 வருடங்கள் ஆகிவிட்டன..ஆனால் ஜாதிகள்?????????????அன்று 20 இருந்திருந்தால் இன்று 200 இருக்கிறது சோகம் ஜாதி மாறி கல்யாணங்கள் நடந்ததால் ஜாதி ஒழியவில்லை மாறாக அதிகமாகி விட்டது ...........கல்யாண வெப்சைட் அல்லது பிள்ளை வேண்டும் பெண் வேண்டும் என்று வரும் விளம்பரங்களில் பாருங்கள் எவ்வளவு ஜாதிகள் இருக்கிறது என்று. இந்த கலப்பு கல்யாணம் செய்து கொண்டவர்கள் கூட அப்பாவின் ஜாதி இல் தேடுகிரார்கள் ..............அப்போது மட்டும் ஜாதி நினைவுக்கு வருமா? சரி இதற்கு என்ன செய்யலாம்?

    முதலில் எல்லோரும் அவர்களின் கல்யாணத்தை அது எப்படி செய்து கொண்டதாக இருந்தாலும் 'பதிவு செய்யவேணும்' என்கிற சட்டம் கட்டாயம் கொண்டுவர வேண்டும். அப்படி செய்து கொள்ளும்போது, செய்து கொள்ளும் தம்பதிகள் வேறு வேறு ஜாதிகளாக இருந்தால், அங்கேயே அப்போதே அவர்களின் கல்யாண sartificate இல் MIXED என்று போட்டு கொடுத்துவிடவேண்டும். அயல் நாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போது நாம் நம்முடைய மற்ற certificate களுடன் கண்டிப்பாக கல்யாண certificate ம் தரவேண்டும்; கல்யாண போட்டோ வும் தரவேண்டும். அதுபோல இங்கும் கொண்டுவரவேண்டும் .

    எனவே. கல்யாண நாள் முதல் அவர்களின் ஜாதி யாருக்கும் தெரியாது. அப்படி செய்வதால், அவர்களின் குழந்தைகளின் படிப்பின் போதும் இதே MIXED தான் , நாளை கல்யாணம் வரும்போது, வரன் பார்க்க இதேMIXED என்று மட்டும் பார்த்து செய்தால் போதுமானதாக இருக்குமே. இப்படி செய்வதால், பல ஜாதிகள் ஒழிந்து சிலவாக குறையும்.

    அவ்வளவுதான் .....எனக்கு தோன்றியதை எழுதிவிட்டேன் ........ படித்தது விட்டு திட்டவேண்டாம்............[​IMG]

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
    coolmum, bhagya85 and vaidehi71 like this.
    Loading...

  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Ha Ha, Adithaalum Adithuviduvargal, Nalla velai Neenga Andha website il poda villai.

    Ennaku indha ida udukeedu patri ninaippapugal eppavum undu.

    Adhai neenga solrathu pola adhigam per payam paduthuvadhilai. Adhuvum vazhkaiyil pinadainthavargal payan peruvadhilai.

    Idharku mel, naan pesa virumbavillai, Enakku indha adi ellam vendam Saami!!
     
    Last edited: Apr 4, 2016
    krishnaamma likes this.
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,372
    Likes Received:
    10,578
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Madam, a great sensitive isuue in Idia? How did you escape being hit? Some 25 years back my husband wrote a very big article about this in Tamil and it was accepted for publication also. Meanwhile the news was leaked and the journal destroyed all our papers including the address.We were warned to change our house immediately to a different area.My husband sought transfer to a rural branch.
    It is a misfortune that Ambedkar's intentions were totally misinterpreted.Definitely our children cannot be blamed.They don't want to live in the country( though, motherland) in which their capabilities are not recognized at all.Brain drain will continue for ever.All attending problems like old age home etc etc are bye products of this issue.
    I am reminded of an incident,

    A reserved category candidate joined the bank as telephone operator.Though she was posted to the desk, she could not understand the technicalities..
    The senior operator just asked her name.That's all.

    The girl spread the rumour that the senior lady enquired about her caste,creed etc etc and that she was insulted.It was the 2nd day of her joining.The news spread like wild fire.So many people belonging to Reserved caste uplift association entered the telephone operator's room, threw away all the devices.A telegram was sent to the media and top brass in New Delhi..The lady with 20 years' service was threatened of dismissal.The calm girl's name was published on the notice board and wide publicity was given in popular tamil magazines.
    In India Reservation is the most sensitive topic.The day the above incident happened, we never express our opinion about Reservation just to save our skin and muscles or even life.
    jayasala 42
     
    krishnaamma and vaidehi71 like this.
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,372
    Likes Received:
    10,578
    Trophy Points:
    438
    Gender:
    Female
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஹா..ஹா..ஹா.. என்னை சொல்லிவிட்டு நீங்க இப்படி பயப்படறீங்களே வைதேகி :)..நீங்க இதியாவை விட்டு தொலை தூரத்தில் தானே இருக்கீங்க, வரும்போது பார்த்துக்கலாம் ................மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு............

    தமிழில் சுலபமாக அடிக்க விருப்பமா?............ஜஸ்ட் கிளிக் திஸ் லிங்க் :)

    English to Tamil Converter
     
    vaidehi71 likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஐயோ, மாமி, நீங்க எங்க அம்மாவை விட பெரியவா, என்னை மேடம் என்று சொல்லக்கூடாது.........என்னை கிருஷ்ணாம்மா என்றே (என் பேர் சுமதிசுந்தர் ) கூப்பிடுங்கோ :).ப்ளீஸ் :) ....என் பிள்ளைபேர் கிருஷ்ணா, எனவே நான் கிருஷ்ணாம்மா :)........அவன் நண்பர்கள் அப்படி கூப்பிட்டு பழகிவிட்டது :)

    உங்களின் பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி.........நீங்கள் சொன்ன விஷயம் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது:flushed::flushed:............ எது தெரிகிறதோ இல்லையோ, இப்படி வீண் புரளி கிளப்பிவிட நல்லா தெரியும் அவங்களுக்கு............

    பாவம், அந்த பெண்மணி , எவ்வளவு பயந்து போய் இருப்பார்கள், எவ்வளவு வருத்தமும் வேதனையும் பட்டிருப்பார்கள்? ..நான் பேர் தான் கேட்டேன் என்றுசொன்னால் நம்புவதற்கு கூட ஆட்கள் இருந்து இருக்க மாட்டார்கள்.............:angry:

    தன் படிப்புக்கும், தன் புத்திசாலி தனத்துக்கும் மதிப்பு கொடுக்கும் இடத்துக்கு நல்லா படிக்கும் குழந்தைகள் பறந்து விடுவது தவிர்க்க முடியாததே! ..அதனால் வரும் பல இழப்புகளுக்கும் நாம் தான் மீண்டும் பலியாகிறோம் பாருங்கள்...........இது இன்னும் எத்தனை தலிமுறைக்கு நீடிக்குமோ தெரியாது.ஆனால் இப்படியே போனால் நாம் வல்லரசாக முடியாது...........சுலபமாய் நம்மை ஆங்கிலேயர்கள் ஆளும் நாள் மீண்டும் வந்துவிடும் :angry:
     
  7. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    பார்தீங்களா மாமி, இந்தியா வில் இல்லாவிட்டால் கூட அடி தடி நினைத்தால் பயம் தான்...

    ஹா ஹா

    மிக்க நன்றி
    வைதேஹி
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    என்ன பண்ணறது?.ஒரு படத்தில் ரஜினி சொல்லுவாரே, "சண்டை அங்கே நடக்குது என்றால் நான் இந்தப்ப:grinning:க்கமாய் ஓடிவிடுவேன்" என்று.நாம் அது போல இருக்கோம் :)...ஹா...ஹா..ஹா....

    தமிழில் மறுமொழி பார்க்க சந்தோஷமாய் இருக்கு வைதேஹி...........அதுவும் 'மாமி' என்று அடை மொழிவேறு ...........:sunglasses::hearteyes::grinning:
     
    vaidehi71 likes this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
  10. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
    நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
    இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
    பட்டாங்கில் உள்ள படி. _ நல்வழி,ஔவையார்

    ஜாதிகளின் பெயராலும், மதங்களின் பெயராலும் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடரும்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    சரவண குமார்
     
    krishnaamma likes this.

Share This Page