1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆமையும், இன்மையும்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jan 17, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    குழந்தையில் கல்லாமையும்,
    இளமையில் இல்லாமையும்,
    நடுவயதில் இயலாமையும்
    முதுமையில் தள்ளாமையும்,
    வந்தாலும் நாம் சகிப்போம்.

    என்றும் முயலாமையும்,
    எப்போதும் ஈயாமையும்,
    எவரிடத்தும் பொறாமையும்,
    எவ்வாசையும் துறவாமையும்,
    நமக்கு வர அனுமதியாதிருப்போம்.

    என்றைக்கும் இரவாமையும்,
    எறும்புக்கும் தீதெண்ணாமையும்,
    எவரிடத்தும் கோபமில்லாமையும்,
    எவர் குறித்தும் புறம் பேசாமையும்,
    நமது கொள்கையென வரிப்போம்.

    எங்கும் ஆடம்பரமின்மையும்,
    எதிலும் பதட்டமின்மையும்,
    எதற்கும் பயப்படாமையும்,
    எதிலும் குழப்பமின்மையும்,
    நாம் எப்போதும் கொள்வோம்.
    -ஸ்ரீ
     
  2. sana009

    sana009 New IL'ite

    Messages:
    53
    Likes Received:
    0
    Trophy Points:
    8
    Gender:
    Female
    எவற்றுக்கெல்லாம் ஆமையாக இருக்கவேண்டும், இல்லாமல் இருக்கவேண்டும் என்பதை மிக அஅ(ரு)மை சொல்லிவிட்டீர்கள்.:):)
     
  3. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    90% எ வரிசையில் வந்த கருத்துக்கள் ஏற்புடையதாய் இருக்கிறது ஸ்ரீ
     
  4. nityakalyani

    nityakalyani Gold IL'ite

    Messages:
    2,664
    Likes Received:
    96
    Trophy Points:
    130
    Gender:
    Female
    rgs,

    so many prefixes for ஆமையும், which has different meaning and connotations.Very aptly said that this has to be faught by an individual during his life cycle till he reaches old age. Very wonderful thoughts
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் உடனடி பாராட்டுக்கு நன்றி சனா. -ஸ்ரீ
     
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் கருத்துக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி லதா. -ஸ்ரீ
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி நித்யகல்யாணி. உங்கள் அவதாரத்தில் இருப்பது உங்கள் புகைப்படமா? நன்றாக இருக்கிறது -ஸ்ரீ
     

Share This Page