1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழகர் கோயில் தோசை !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Feb 27, 2017.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தேவையான பொருள்கள்:

    பச்சரிசி - 3 கப்
    கருப்பு உளுத்தம்பருப்பு – 2 கப் (தோலுடன்)
    மிளகு – 2 டீஸ்பூன்
    சுக்குப் பொடி - 1/4 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நெய், உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    அரிசியை ஊறவைத்து நீரை வடித்து வறட்டு மாவாக, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். (கோயிலில் இதை உரலில் போட்டு இடிப்பதற்காக ஆட்களை நியமித்திருப்பார்கள்.)

    உளுந்தை இரண்டு மூன்று முறை களைந்து கொள்ளவும். பாதி அளவு தோலை மட்டும் நீக்கிவிட்டு, மீதியை அதிலேயே சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    தேவையான உப்பு, அரிசி மாவோடு கலந்து 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். (கோயிலில் காலையில் அரைத்து இரவில் செய்வார்கள்.) இந்தக் கலவை, தோசை மாவு மாதிரி இல்லாமல் வடை மாவு பதத்தில் கெட்டியாக இருக்க வேண்டும்.மறுநாள் மாவில் சுக்குப் பொடி, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல் சூடானதும், மாவை சற்று கனமான தோசைகளாக (இரண்டு அங்குல உயரம்) வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு அடுப்பை சிம்’மில் வைக்கவும்.நன்கு சிவந்து மொறுமொறுப்பாக ஆனதும், மறுபக்கம் திருப்பிப் போட்டு, மீண்டும் நெய் விட்டு, சிவக்க மொறுமொறுப்பாக எடுக்கவும்.

    குறிப்பு : அடுப்பு சிம்மில் மட்டுமே இருக்க வேண்டியது முக்கியம்.

    வீட்டில், கொஞ்சம் மென்மையான தோசை வேண்டும் என்று நினனப்பவர்கள், பாதிக்குப் பாதி புழுங்கல் அரிசி சேர்த்துக் கொள்ளலாம். வாசனைக்குப் பெருங்காயமும். இவை இரண்டும் கோயிலில் தவிர்ப்பவை.
     
    ramyarajan likes this.
    Loading...

  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    irandu angulam or irandu cm?I have seen this dosai in Srirangam.It will be just half an inch thickness.taste will be ok.But 'look' will be horrible.Normally the dosa will never be purchased by anyone.So only very limited quantity will be prepared daily.

    Jayasala 42
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @krishnaamma அழகர் கோயில் தோசை செய்முறை மிக அருமை .நான் பல முறை சாப்பிட்டு இருக்கேன் .அழகர் கோயில் போகும் போது எல்லாம் வாங்குவோம்
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    karuppu ulunthu serppathaal appadi irukkum .aanaal rusi miga nanraaga irukkum .alagarkoilil anaivarum virumpi vaanguvaargal
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கனமாக 2 இன்ச் தான் வார்ப்பார்களாம் கோவிலில்.........ஒரு படி மாவில் ஒரேயொரு தோசை வார்த்து, ( வார்ப்பது எளிது, ஆனால் அதை திருப்பிப் போட துடுப்பு, ஜல்லிக்கரண்டி என்று மிகப்பெரிய கரண்டிகள் உபயோகிப்பார்களாம்...வேளுக்குடி கிருஷ்ணன் மாமா தன் உபன்யாசத்தின் போது விவரித்து இருந்தார் :) ) அதை 'விண்டு விண்டு ' போட்டு சுண்டலுடன் கலந்து பிரசாதம் தருவார்களாம். மற்றபடி நமக்கு கிடைக்கும் பிரசாதம் அத்தனை தடிமனாக இருக்காது :)
     
    periamma likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி , நீங்கள் அந்த திரி இல் கேட்டிருந்ததை பார்த்தேன், அது தான் போட்டேன்.இன்னும் சிலதும் போடுகிறேன் :).............இது போல செய்தால் மிகநன்றாக வரும் தோசை, என்றாலும் பிரசாதம் என்பதால் கோவில் தோசை மிக அருமையாக இருக்கும் .அது இதில் 'மிஸ்' ஆகும் ருக்மணி :)
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாஸ்த்தவம், நான் ஸ்ரீரங்கத்தில் தோசை சாப்பிட்டது இல்லை :)
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இன்னும் நெறைய பதிவு செய்யுங்கள் .பதில் வரவில்லை என்று நினைக்க வேண்டாம் .இளையதலைமுறையினர் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !............இன்னும் பல குறிப்புகளை கண்டிப்பாக போடுகிறேன் ருக்மணி :)
     
  10. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    I ate this dosai in Alagar koil. very tasty. we can try at home too. thanks for the measurement. we will try.
     

Share This Page