1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்புள்ள அப்பா ...

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Oct 19, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தாயும் தந்தையுமாய் நானிருப்பேன் என்றாய் !
    நீயுமேன் எமைத் தனியில் நீங்கியேச் சென்றாய் !
    வாய் வார்த்தையிலும் கவனம் வைக்கச் சொல்வாய் !
    நோய் இருப்பதைச் சொல்லாமல் மறைத்தேன் வைத்தாய் ?
    பார்த்துக் கொள்வேனென்று தெரிந்தே தான் சென்றாயோ ?
    நீர்த்துப் போகாளென்றென் மேல் நம்பிக்கைக் கொண்டாயோ ?
    ஆர்த்தெழுமுன் நினைவலைகள் நெஞ்சிலுள்ள காலம் வரையில்
    சேர்த்தணைத்துச் செல்லுவேன் நீயும் விட்டுச்சென்றிட்ட விழுதினையே !

    Regards,

    Pavithra
     
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சில கேள்விகளுக்கு பதிலேது நம் கொடுப்பினை அவ்வளவே. வருந்தாதீர்கள் பவித்ரா
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உண்மைதான் லக்ஷ்மி ! மற்றுமோர் ஆண்டு கடந்து செல்லும் போது எழும் ஒரு பெருமூச்சின் வெளிப்பாடு தானிது. ஆறுதல் வார்த்தைக்கு நன்றி !
     
    jskls likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஆண்டுகள் பல கடந்தாலும் நினைவுகள் நம்மை விட்டு நீங்குவது இல்லை .வருத்தம் வேண்டாம் .
     
    jskls likes this.
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    It is easy to console others, but difficult to reconcile .
    Time is the healer.
    Jayasala 42
     
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உண்மை தான், பெரியம்மா. வருத்தமில்லை. ஒரு வித வெளிப்பாடு. ஆதரவிற்கு நன்றி !

    ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ ? அவரவர் விதி முடிந்தால் போக வேண்டியது தான்.. நடக்கும் போது காலிடறிக் கீழே விழுந்த குழந்தை, யாராவது பார்த்தால் அழும்,இல்லையெனில் தட்டிக் கொண்டு தானே எழுந்து விடும். அது போலத்தான் நமக்கு வரும் துக்கங்களும். அதைப் பெரிது படுத்திக்கொண்டே இருந்தால், ஆறுதல் தேடிக் கொண்டே இருந்தால், அது நம்மைப் போட்டு அழுத்திக் கொண்டே இருக்கும் .வெளிவரவே இயலாது. எல்லோருக்கும் உண்டானது நமக்கும் என்றுணர்ந்து விட்டால், நிம்மதி . பின்னூட்டத்திற்கு நன்றி !
     

Share This Page