1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அதுவே போதும்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 14, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    கல்லாதான் முன்னே இலக்கண நூல் வைத்தது போல்,
    என் போன்றோரிடம் சிலர் உன் பெருமை சொல்கின்றார்.
    பல் போன முதியவனாய் ஆனாலும் நான் உன் பால்,
    பக்தி கொள்வேனா என எனை அறிந்தோர் சிரிக்கின்றார்.

    நான் ஒரு நாளும் கண் மூடி வேண்டியதில்லை,
    இதைத் தா, அதைத் தா என்று கேட்டதுமில்லை.
    எனக்கென்ன தர வேண்டும் என உனக்குத் தெரியும்,
    உன் செயல்பாட்டின் அருமை எனக்கெப்படி புரியும்?

    உடம்பில் தென்பு உள்ள வரை உழைப்பேன்,
    அதுவே என்னால் முடிந்த பிரார்த்தனை ஐயா.
    நோயில் படுத்தாலும் உனைத் தான் நினைப்பேன்,
    எனத் தீர்மானமாய் சொல்ல முடியாது ஐயா.

    இதிகாசம், புராணங்கள், வேதம், கீதை
    இவையெல்லாம் நான் படித்ததில்லை ஐயா.
    எளியவனே! உன்னுடைய தயாள சிந்தை,
    எல்லோர்க்கும் உண்டு என அறிவேன் ஐயா.

    உனைக் காண வேண்டும், உன்னுடன் பேச வேண்டும்,
    எனும் பேராசையெல்லாம் என்னிடம் இல்லை ஐயா.
    உன் அருள் மழையில் கோடியில் ஓர் சிறு பங்கேனும்,
    கிடைத்தால், அது போதுமென மகிழ்வேன் ஐயா!
    -ஸ்ரீ
     
    Last edited: Dec 14, 2010
    Loading...

  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Sri,ipadi vendradhukum manasu venum...nalla poem...
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciative feedback Prana. -rgs
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அதுவே போதும்!
    சத்தியமான வார்த்தை.
    எது,எப்போது,எப்படி வாய்க்கினும்,அதையும் அன்புடன்,அவன் தந்த கருணை என ஏற்ப்பது சாலச் சிறந்தது!
    நமக்கு,எதை,என்று தந்தருளல் வேண்டும் என்பதும் அவனுக்கு தெரியும்.
    ஒவ்வரு,அசைவிற்கும் ஒரு பொருள் உண்டு.
    இவ்உலக பொருள் இந்த உடல்,அதையே பெரியதாய் எண்ணி,அதற்க்கு வரும்,நன்மை,தீமையை எண்ணி உளறுதல் நன்று அல்ல.நல்ல சிந்தனை கவியின் கவிதை,வாழ்த்துக்கள்.
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கும், பொருள் பொதிந்த பின்னூட்டத்துக்கும் நன்றி தீபா. -ஸ்ரீ
     
  6. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    கடவுளை நினைத்து உருகி கவி எழுதுவதே அந்த கடவுள் அருள் இருந்தால் மட்டும் முடியும்

    உங்கள் அழகான கவிதையில் கடவுள் அமர்ந்துள்ள உங்கள் உள்ளம் தெரிகிறது
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி ஹேமா. அப்படி இறை வந்து விட்டால் நிச்சயம் மகிழ்ச்சி தானே! -ஸ்ரீ
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Rgs,

    Kadai kann paarvai adhu podhume...very true..arul mazhaiyil siru thuli...nijamaagave podhume..

    Rasithu asai podugiren ungal karuthukkalai.

    sriniketan
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your nice feedback Sriniketan. Enjoyed writing this, esp., the first 2 lines. -rgs
     

Share This Page