1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அதிசயம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Aug 31, 2015.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    சற்றே சலித்து வானமகள்
    நீலத்திலிருந்தே பழுப்புடையும்
    சூடிட, சிறு நம்பிக்கை அகல்
    கண்டவர் விழியில் தோன்றி வரும்

    முதல் மழைத்துளியை எதிர்நோக்கி,
    விசும்பவளை தலை தாழ்த்தாது
    பார்த்திடவும் விழுந்தது அவரேங்கி
    காத்திருந்ததும் அருகே தவறாது!

    சிறுபொழுதில் பெருமாற்றம் வருமா?
    எனும் கேள்வியதற்குப் பதிலாக,
    மழை வலுத்து, "இன்றைக்கு நின்றிடுமா?"
    எனும் ஐயம் பலர் மனதில் தோன்ற,

    மழை குறைந்தது, பெண்ணும் முகமலர்ந்தே
    புன்சிரிப்பை உமிழ, அது இரவியாய்
    மறைவிடத்தில் இருந்தே தலை நிமிர்ந்தே
    தன்னிருப்பை உணர்த்த, மிக விரைவாய்

    வான்மகளின் உடையில் ஒரு ஓரம்
    ஒரு அதிசய மாற்றம் வந்ததுவே!
    பல நிற வளையங்களின் தோற்றம்
    கண்டாரின் நெஞ்சை அள்ளியதே!

    வானில் மட்டும் தானா அதுவும்
    தெரிந்தது? மண்ணில் அதன் பிரதியும்
    பல நூறாய், ஆயிரமாய் விளையும்
    அற்புதம் கண்டார் விழியும் நிறையும்!

    தோன்றியதும் சிறிதும் சுவடின்றி,
    மறைந்தது, ஒரு சோகம் கௌவியது.
    அதை மறுபடி காணும் வழியின்றி
    மனமும் பல விதமாய் ஏங்கியது.

    வாழ்வில் சிற்றிளமைப் பொழுதே போல்,
    கடைசி துளி அன்னை அமுதே போல்,
    அது வந்தது, என்றும் மறையாத
    நினைவை அளிக்கின்ற அது வாழ்க!
     
    Loading...

Share This Page