1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

tamil novel lovers

Discussion in 'Books & Authors in Regional Languages' started by deepthiraj, Jun 26, 2014.

  1. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    பக்கம் வரத் துடித்தேன் – (விஜிபிரபு)
    லிங்க் : https://www.amazon.in/பக்கம்-வரத்-துடித்தேன்-pakkam-thudithaen-ebook/dp/B082RBWX7D

    காதல் உருவாக்க சுலபமான வழிகளில் மோதல் எப்பொழுதுமே முதல் இடம் பிடிக்கும். ஒருவரிடம் மனம் ஈர்க்க அவரைபற்றிய எண்ண நினைவுகள் எப்பொழுதும் மூளையில் பிராண்டிக் கொண்டிருந்தாலே போதும்.

    அன்புக்காக ஏங்குபவனின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டால் எதைப் பற்றியும் யோசிக்காம் தன் மனதிற்கு என்ன தேவையோ அதை ஏதோ ஒரு வழியில் அடைந்துவிடுவான் அப்படிபட்டவனின் கதை இது.

    பெற்றோரை இழந்து தனியாகப் போராடி மிகப் பெரிய செல்வந்தரான தீபன். இவனுக்கும் கொஞ்சம் கருப்புப் பக்கம் உண்டு தன் செல்வநிலையை உயர்த்தியதில். வம்பு செய்வர்களுக்கு மட்டும் தன் பலத்தைக் காட்டுபவன்.

    அழகு சுந்தரியான, அருமையான குடும்பத்தில் முதல் பெண்ணான நிகிதா.

    பெங்களூரில் தொழிலில் கொடிகட்டி பறக்கும் தீபன் தன் நண்பனை பார்க்க சென்னை வருகிறான். பீச்சில் உட்கார்ந்து இருக்கும் போது நிகிதா விளையாடிக் கொண்டிருந்த பால் இவனிடம் வருகிறது அதை எடுக்க வந்த நிகிதாவின் அழகால் ஈர்க்கப்படும் தீபன் மீன் சாப்பிட்டுக் கொண்டிருந்த கையால் அவளைப் பிடிக்க சைவமான அவள் அந்த மீன் வாசனை காரணமாக அவனைத் திட்டி கன்னத்தில் அடித்துவிடுகிறாள்.

    அடித்த கோவம் மற்றும் மனதில் சஞ்சலம் ஏற்படுத்திய முதல் பெண் என்பதால் அவளை வாழ்க்கை துணையாகக் சில நடவடிக்கை எடுத்து அவளுடனான திருமணத்தை நடத்திவிடுகிறான்.

    அடித்த பிறகு வீட்டிற்கு வரும் நிகிதாவிற்குக் கோபம் வராமல் காதல் வந்துவிடுகிறது. ஆனால் தன்னை மிரட்டி கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள வைத்ததால் தன் காதல் மனதை தீபனிடம் மறைக்கிறாள்.

    மிரட்டியதால் தான் தன்னை மணம் முடித்தால் என்று அடிக்கடி கோபப்படும் தீபனிடம் நிகிதாவின் தங்கை உண்மையைச் சொல்லி விடுகிறாள் தீபன் மேல் நிகிதாவிற்கு இருக்கும் காதலை.

    தன் மனம் கவர்ந்தவளுக்கும் தன்னைப் பிடித்துத் தான் தன்னுடனான வாழ்க்கையில் சேர்ந்தால் என்பதைத் தெரிந்து தன் முழுக் காதலையும் காட்டுகிறான் தீபன்.

    கர்ப்பவதியான நிகிதா பெற்றோர் பாசத்திற்காக ஏங்குவதை அறிந்து தன் இருப்பிடத்தைப் பெங்களூரில் இருந்து சென்னைக்கு மாற்றும் காதல் கணவனாக தீபன்.

    அடிதடி ஆளாக இருந்தாலும் பாசத்துக்கு ஏங்குவதை தீபன் கேரக்டர் வெளிப்படுத்துகிறது.

    கதை எழுதும் போதே கதாசிரியர் முடிவெடுத்தார் போல இந்தக் கதையைப் படிக்கும் பெண்களுக்குப் பொறாமையைத் தூண்ட வேண்டும் என்று அவ்வளவு அழகு வர்ணனை இந்த ஹீரோயினியை பற்றி.

    மோதலில் ஆரம்பித்த காதலே என்றாலும் பொதுவாக குடும்பநாவலில் ஹீரோயினியை கஷ்டப்படுத்தி கொடுமைபடுத்தித் தான் தன் காதலை சொல்வார் ஹீரோ. ஆனா இந்தக் கதையில் அவளைக் காயப்படுத்தலாம் என்று நினைக்கும் போதே காதல் வந்த உள்ளம் அதைத் தடுத்து காதலை மட்டுமே அவளிடம் காட்டுவது கொஞ்சம் மாறுபட்டுத் தெரிகிறது மற்ற கதைகளில் இருந்து.
     
    Thyagarajan likes this.
  2. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    காத்திருந்தாய் அன்பே – (மாயா)
    ஒவ்வொரு சுயநலமான மனிதர்களால் பலரின் வாழ்வு துன்பத்தை மட்டுமே காணும் வாழ்வாக மாறியதை அவர்கள் உணரும் காலம் இறுதியில் என்றாலும் அதன் பயன் யாதொன்றுமில்லை.

    ஏழை பெண்ணான பூரணி புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததுமே தவறாக அங்கே ஏதோ இருப்பது பிடிபட்டாலும் அது என்ன என்பதை இனம்காண முடியாமல் கல்யாண வாழ்வில் சித்தார்த்தின் கையணப்பிலே சுகம் காண்கிறாள்.

    தன் மாமியார் பெற்றெடுத்த இரண்டாவது குழந்தையைப் புத்தி சுவாதீனம் இல்லாத முதல் குழந்தை கொன்றதாகக் கேள்விப்பட்டதிலிருந்தே அவர்கள் தன்னிலையில் இல்லை என்பதைக் கணவன் மூலம் கேள்விப்பட்ட பூரணிக்கு அவர்களை இருபத்தி இரண்டு வருடமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் லீலாவின் மேல் சந்தேகம் எழத்தொடங்கி அது தான் உண்மை என்ற ஆதாரம் அவளின் முன் நிற்கிறது.

    எவரின் கைபாவையாகவோ இருக்கும் லீலா போதை மருந்தை கொடுத்தே பூரணியின் மாமியார் அபிராமியை இவ்வளவு வருடங்களாக அமிழ்த்தி வைத்திருக்கிறாள் என்ற உண்மை பேரடியாகவே அனைவரையும் தாக்குகிறது.

    திருநங்கையான லீலாவை குடும்பம் ஒதுக்கியதால் அபிராமிக்கு செய்யும் துரோகத்தால் வரும் பணத்தைக் காட்டி தன் குடும்பத்தின் கானல் அன்பில் திளைப்பவள் உண்மை தெரிந்த பிறகு இனி காசு அவளிடம் பெயராது என்பதால் குடும்பம் அவளை விற்கும் இடம் அபிராமிக்கு லீலா செய்த செயலுக்கான பதிலாகிறது. தர்மம் அதன் விதியை நேர் செய்துவிடுகிறது.

    ஓரினச் சேர்க்கையாளனான மார்க்கண்டன் எதிர்காலத்திற்கு ஒரு குழந்தை தேவை என்ற பதத்தில் அபிராமியை மணந்து முதல் குழந்தையைத் தன் நண்பன் திலீப்புடன் சேர்ந்து வளர்க்கலாம் என்று போட்ட திட்டம் அது புத்தி சுவாதீனம் இல்லாமல் போனதால் இரண்டாவது குழந்தையைப் பெற்ற பிறகு அது இறந்ததாகக் காட்டி தன் ஜோடி திலீபனுடன் கனடாவில் தன் குழந்தையுடன் வசிக்கிறான். மனைவிக்கு இது எதுவும் தெரியகூடாது என்று போதையை லீலாவின் மூலம் செலுத்தி அவளின் வாழ்க்கையும் சிதைத்துவிடுகிறான்.

    பூரணியின் கவனிப்பால் மெல்ல மீண்ட அபிராமிக்கு சித்தார்த்தனின் வளர்ப்பு ரகசியமும் ஞாபகத்தில் வந்தாலும் அதை எவருக்கும் தெரியப்படுத்த முயலவில்லை. அவரின் புத்தி சுவாதீனமான முதல் மகனை மற்றவர்கள் போற்றும் அளவிற்கு பூரணி மாற்றியது அக்குடும்பத்தின் மகிழ்வான பக்கத்தை உலகம் அறியச் செய்கிறது.

    மார்க்கண்டன் இறுதிகாலத்தில் தான் செய்த தவறுகளை எல்லாம் எண்ணிக் கொண்டு காலத்தைக் கழிக்கிறார்.
     
    Thyagarajan likes this.
  3. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    புத்தம் புது காலை – (விஜிபிரபு)
    லிங்க் : https://www.amazon.in/புத்தம்-புது-Tamil-பிரபு-Prabu-ebook/dp/B07GNVNSJS

    தான் கொண்ட அன்பு விலங்காக மாறி வாழ்வில் முன்னேற துடிப்பவனுக்குத் தடையாக மாறுகிறது என்பதை அறிந்து கொண்ட பின் அவர்களிடம் இருந்து விலக எடுக்கும் முடிவுக்கு அந்த அன்பே ஆதாரமாகிறது.

    எப்பொழுதும் காயப்படுத்தவும் கிடைத்த நேரத்தில் அவமானத்தைத் தரவும் எவராவது ஒருவர் இருந்து கொண்டே தான் இருப்பர் அதிலும் அவர் தன் மனத்திற்கு நெருக்கமானவர்களின் உறவாக இருக்கும் பொழுது மனது மேலும் மேலும் துவண்டு கொண்டே தான் போகும் அதிலிருந்து மீளும் வழியைத் தெரிந்து கொள்ளும் போது எத்தகைய துன்பமும் அருகில் வராது.

    பொருளாதார ரீதியாக அடிமட்டத்தில் இருக்கும் சத்யாவை மகள் விரும்பி போராடி திருமணம் செய்து கொண்டதால் அவளை விட்டு விலகி இருக்கின்றனர் மதுமதியின் பெற்றோர்.

    காதலித்தவனுடன் திருமணப் பந்தத்தில் நுழைந்த மதுமதி புதிய சூழலை எதிர் கொள்ளத் தவித்துப் போனாலும் சத்யாவின் அன்பு அவளை அனைத்தையும் தாங்க செய்கிறது.

    தன் மாமனான சத்யாவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட திலகாவிற்கு அது நடக்காமல் போனதால் மதுமதியை அவனிடம் இருந்து பிரிக்கச் செய்த சூழ்ச்சியில் வெற்றியும் பெறுகிறாள்.

    தினசரி வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்ற தன் கனவுகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு சத்யா செய்யும் வேலையில் மதுமதிக்கு விருப்பமில்லாமல் போகிறது தனக்காக அவன் கனவை பொசுக்கிக் கொள்கிறானே என்று.முதலில் தனது கனவுகளைக் காதலுக்காக விட்டவனுள் வெறுமை சூழ அதன் மூலம் வெளிவரும் வார்த்தைகள் தம்பதிகளுக்குள் பிரிவை உண்டாக்கி விடுகிறது.

    வயிற்றில் குழந்தையுடன் கணவனைப் பிரிந்த மதுமதி மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவனைச் சந்திக்கிறாள்.இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் தன்னை மிகப் பெரிய தொழிலதிபராக மாற்றிக் கொண்ட சத்யாவிற்கு இனிய அதிர்ச்சி தன் வாரிசாக ஆனந்த் எதிரில் இருப்பது.

    ஒருவர் மீது மற்றொருவர் கொண்ட அன்பே அவர்களுக்குள் பிரிவை உண்டாக்கினாலும் அதை நீட்டிக்க விரும்பாமல் மதுமதியின் தாத்தா மேற்கொண்ட முயற்சியால் மீண்டும் இருவரும் இணைகின்றனர்.

    அன்பு மட்டுமே காலம் கடந்தும் வலிமையாக மனிதர்களின் மனங்களில் தவழும்.
     
    Thyagarajan likes this.
  4. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    வா..வா.. என் தேவதையே..!– (பிரேமா சுப்பையா)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B082HZ93XG

    இரண்டாம் திருமணத்திற்கான முடிவை மனம் சுலபத்தில் எடுக்க விடுவதில்லை. ஏகப்பட்ட தயக்கங்களும் முன் சூழலின் எச்சங்களும் மனதை அலைபாயவிட்டு முடிவை நோக்கித் தள்ளாமல் பின்னுக்கு இழுத்து மறுப்பிற்கான காரணங்களைப் பட்டியலிடவே தூண்டும்.

    தன்னை விட்டுப் பிடித்தவனுடன் சென்ற மனைவிக்கு மனதால் கூட சாபத்தை விடாமல் பிடித்த வாழ்வை வாழட்டும் என்று தனிமைக்கு ஒப்புக் கொடுத்த சரணின் மனதை மாற்ற ராதா வருகிறார்.

    பெரும் போராட்ட வாழ்வு வாழ்ந்த ராதா மகனை வளர்த்து டாக்டராகி பல எதிர்கால கனவுடன் இருப்பதை சுகன்யாவுடனான அவனின் திருமணம் குலைத்து விடுகிறது.

    தன்னிடம் கூடச் சொல்லாமல் மகன் திருமணம் செய்ததால் பிரிந்து சென்றவர் அவனின் இறப்பிற்குப் பின்னே வீட்டிற்கு வருகிறார்.

    தனக்கு மேலதிகாரியான சரணை பார்த்தா பிறகு மருமகளுக்கு இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்து அதை நிறைவேற்றப் போராடும்‌போது பேத்தி அஞ்சலி பக்கத் துணையாகி அனைத்தையும் சுபமாக்கிவிடுகிறாள்.

    கடந்த காலத்தை மட்டுமே பிடித்துக் கொண்டு நிகழ்காலத்தைத் தொலைத்து யாரும் எவருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என்பது உள்ளுக்குள் ஓடும் மைய சரடாகிறது இக்கதையில்.

    அன்பை மட்டுமே அடையாளப்படுத்த விரும்பும் மனிதர்கள் கதை முழுவதும்.
     
    Thyagarajan likes this.
  5. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    வெட்டிவேரு வாசம் – (ஹன்சிகா சுகா)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B07Z27GXPC

    பாசத்தைக் கூட அடிதடி வழியில் காட்டுவது கிராமத்து தந்தைக்கே உரிய குணம். கௌரவம் என்பதைப் பிடித்துக் கொண்டு தொங்குவது கூடத் தன் பிள்ளையை மற்றவர்கள் தவறாக ஒரு சொல் சொல்லிவிடக் கூடாது என்ற அச்சமே.

    கிராமத்துக் கதைகளம், எளிய மனிதர்கள் அவர்களின் வாழ்வும், ஆசையும் நிதர்சனத்தையொட்டி நடைபோடும் தன்மையும் என்று கதைமுழுக்க அம்மண்ணின் வாசம்.

    வீட்டின் முதல்மகன் வேல்முருகன் படிப்பு இல்லை என்றாலும் தந்தையுடன் சேர்ந்து மளிகைகடை வைத்து மனம் விரும்பும் அத்தைமகள் பூங்குழலியை மணந்து நிறைவான வாழ்வையே வாழ்கிறான்.

    படிக்க அனுப்பிய இடத்தில் பெண்களை உரசப்போகக் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட துரையைத் திருத்த தந்தை கொடுத்த அடியை எல்லாம் தூசு போலத் துடைத்தெரிந்தவன் அண்ணன் வேல்முருகன் கொடுக்கும் பணத்தில் தான் மனம் போல் வாழ்கிறான். அத்தை மகள் தானே என்ற நினைப்பில் பூங்குழலியிடம் கூடத் தன் கைவரிசையைக் காட்ட தவறவில்லை.

    வேல்முருகனுக்கு முக்கியவேலையாக பூங்குழலியுடன் காதல் சூழலில் மூழ்குவது தான். திருமண ஏற்பாடாகிய இரு உள்ளங்களுக்கும் அது தானே முக்கியம்.

    துரையின் செய்கையால் அவமானங்களைச் சந்திக்கும் அழகர் மொத்த கோபத்தையும் அவனிடம் காட்ட வீட்டைவிட்டு போன துரைக்கு உலகம் புரிகிறது. மகனின் பிரிவு பெற்றவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து அவனின் ஆசையை நிறைவேற்ற துடிப்பும் கொடுக்கிறது.

    தன் தம்பியை கண்டுபிடித்துப் புதுமனிதாக இருக்கும் துரையை வீட்டிற்கு அழைத்தும் வரும் போது அக்குடும்பம் எதிர்பார்த்திருந்த நிறைவு எட்டுகிறது.
     
    Thyagarajan likes this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,755
    Likes Received:
    12,577
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:அருமை எளிமை கவிதையாக வழங்குகிறார்.
    பாடல் வரி தலைப்பில் கதை வடிவம் மிக நன்றாக உள்ளது.
    But I wish the new authors stop plagiarise the popular first line hit vine songs of yore and ride on hit.
    நன்றி.

    வணக்கம்.
     
    Last edited: Dec 20, 2019
    storiesdetails likes this.
  7. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    அந்தபுரத்தில் ஒரு நந்தவனம் - (ஜி.சியாமளா கோபு)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B07MBPV8J4

    ஆட்சியில் அமர துடிக்கும் அரசியல் விளையாட்டில் துரோகங்களுக்கே முதலிடம் கிடைக்கும்,அது ஏற்படுத்திக் கொடுக்கும் வழியிலே மற்றவர்களின் பயணம் தொடரும்.

    வேட்டுவமங்கலத்தை ஆள்பவர் இறந்த பிறகு வாரிசான ரோகிணி சிறு பெண் என்பதால் அவளின் பொறுப்பைத் திவானிடம் ஒப்படைக்கிறார் சுந்தர உடையார்.

    ரோகிணியைத் தன் மகனுக்கு மணமுடித்தி அந்த அரண்மனையின் அரசனாக்க திவான் பல வகையில் முயன்று இளவரசியைத் தனக்கு அடிமையாகவே வைத்திருக்கிறான்.

    ரோகிணி பருவ வயதை எட்டிய பிறகு சுந்தர உடையார் தனக்குக் கீழ் இருப்பவரின் மகன் விஜயனை ரோகிணியிடம் அனுப்பி வைக்க அங்கிருக்கும் சூழ்ச்சிகளைப் பார்த்தவுடனே புரிந்து கொண்டு மற்றவர்களிடம் இளவரசியைப் பற்றித் தவறாக எடுத்துரைத்து உண்டாக்கி வைத்திருந்த பிம்பத்தைக் களைகிறான்.

    ரோகிணியைச் சுற்றி இருக்கும் மர்மங்களை எல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த விஜயன் அவளை ராணியாக்கி தனிப்பட்ட வாழ்வில் அவளுக்கான ராஜாவாக இருந்தாலும் ஆட்சியில் தளபதியாக அமர்கிறான்.

    மெல்லுணர்வுகள் தகர்த்தப்படுவதே பல நேரங்களில் மூர்க்கம் கொள்ள வைக்கும் அதுவே பழிவாங்குதலுக்கு வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். ரோகிணியின் தாயாரை அவரின் பிறந்த வீட்டுடன் உறவாட விடாமல் விட்டதே அவளின் தந்தையின் கொலைக்குக் காரணமாகிவிட்டது.
     
  8. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    தர்மயுத்தம் - (எண்டமூரி வீரேந்திரநாத்)
    லிங்க் : https://www.amazon.in/தர்மயுத்தம்-Tamil-எண்டமூரி-வீரேந்திரநாத்-ebook/dp/B06XX82W3G

    இம்மண்ணில் வாழப்போகும் கடைசி நேரத்தில் போராளியின் மகன் தன்னைப் போலவே மக்களுக்காக அவர்களின் அநீதிக்காகக் குரல் கொடுத்து தன் வாரிசாகவே வாழ்வான் என்று அறியும் வேளையில் அப்போராளியின் மரணம் அவனால் துன்பமாக எதிர்கொள்ளமுடியாது, காலக்கணக்கு முடிந்ததாக எண்ணி புதிய விதை முளைக்கும் போது பழையது மறைந்து போகும் என்ற கணக்காகவே அதை எதிர்கொள்வர்.

    கதையின் நிகழ்வுகளைக் கதை சொல்லியாக மாறி நமக்குச் சொல்லும் முக்கியக் கதாபாத்திரமான சக்ரதர் வழியாக வருகிறது.

    புகழ் பெற்ற ஜெயிலில் சக்ரதர் கண்டிப்பான அதிகாரியாக நடத்தப்படுகிறான். மோசமான குற்றவாளிகள் அடைக்கும் இடமான அங்கே இருந்து அரசியல்வாதியான தர்மராஜின் அடியாள் பீமராஜ் தப்பிக்கும் போது சக்ரதரால் தடுத்து நிறுத்தப்பட்டு அந்த ஜெயிலுக்கு வர வேண்டிய கெட்டபேரும் இல்லாமல் போகிறது.

    அரசியல்வாதியுடன் சேர்ந்து அந்த ஜெயிலின் உயர் அதிகாரியான ஜெகன்னாதன் தான் பீமராஜை தப்பிக்க வைக்கும் திட்டம் போட்டதைத் தகுந்த சாட்சிகளுடன் கண்டுபிடித்ததால் அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.அந்த அதிகாரியின் மகளான ரேகாவுடன் ஏற்கனவே நல்ல பழக்கத்தில் இருந்த சக்ரதரால் அந்த இழப்பு அவளைப் பெரிதும் தாக்கவில்லை.

    அப்புகழ் பெற்ற ஜெயிலுக்கு இருபத்தி மூன்று பேரை கொலை செய்த மரணதண்டனை குற்றவாளி கோடாலி வருகிறார்.

    அரசியல்வாதியும் அவர்களின் மூலம் பிழைக்கும் கந்துவட்டி கும்பலால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த அக்கொலைகளைச் செய்த கோடாலி மக்கள் மனதில் “அண்ணனாக” நிலைபெற்றுவிடுகிறார்.

    மக்களுக்காகப் போராடி தான் மரணதண்டனை வரை வந்ததைக் கோடாலியின் கடைசி ஆசையை சக்ரதர் நிறைவேற்றும் போது அறிந்து கொள்கிறான். அக்கடைசி ஆசையை நிறைவேற்ற ஜெயில் அதிகாரியான அவனே போராளியாக மாறி ஆயுதத்தைக் கையில் ஏந்திய பிறகு தான் நிறைவேற்ற முடிந்தது என்ற உண்மை அவனுக்குப் பெரிய கண் திறப்பாக மாறுகிறது.

    ஏற்கனவே தன் உயிரை காப்பாற்றிய கோடாலியின் மேல் லேசாக மதிப்பு இருந்தாலும் அவர் தான் தன் தந்தை என்று அறிந்த பிறகு ஜெயிலில் இருந்து அவரைத் தப்புவிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்து அதையும் செயலாற்றுகிறான் சக்ரதர்.

    மக்களுக்காக என்று வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த கோடாலிக்கு மகன் செய்யப் போகும் செயலால் அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்த பிறகு அங்கே இருந்து தப்பிக்காமல் அரசாங்கம் கொடுத்த மரணதண்டனையை ஏற்றுக் கொண்டு தன் வாரிசாக ஏழைமக்களுக்குப் பயன்படும் வகையில் மகனை திருப்பிவிடுகிறார்.
     
  9. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    இங்கே மழை...! அங்கே...! - (ஜெய்சக்தி)
    லிங்க் : https://www.amazon.in/Inge-Mazhai-Ange-Tamil-Jaisakthi-ebook/dp/B07VCG5RGP

    மற்றவர்களுக்கு நல்லதையே நினைப்பவனுக்கு இறந்த பிறகும் வாழ்வு இருக்கும் சம்மந்தபட்டவர்கள் மனதில்....

    சுயமரியாதை வேண்டி போராடுபவர்களுக்கு அதனால் உடனடியாக இல்லை என்றாலும் என்றோ ஒரு நாள் மதிப்பு கிட்டும்.

    பெரியப்பாவின் வாரிசாக தூயவன் அவர் வைத்திருந்த பதிப்பகத்தை புதுப்பித்து பெரியதாக மாற்றுகிறான். தன்னிடம் வேலை செய்தவர்களை குடும்பத்து ஆட்கள் போல பார்த்தவர் உடல் நிலை குறைவால் இறந்தாலும் அவர்கள் நினைவுகளில் வாழ்கின்றார்.

    நல்ல குணங்களை கொண்ட சராசரியானவனான தூயவன் அங்கே வேலை செய்யும் ஸ்வேதா மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி செல்வதை கண்டு தன்னால் முடிந்த அளவிற்கு அவளை கலகலப்பானவளாக மாற்றுகிறான்.

    லஞ்சம் வாங்கியதால் தற்போது ஜெயிலில் இருக்கும் தந்தையால் அவமானப்பட்டு தான் மற்றவர்களிடம் இருந்து விலகி தன்னை கூட சரிவர பார்க்காமல் இருப்பவளுக்கு தூயவனின் பெரியப்பா தான் கார்டியனாக இருந்தவர்.

    ஸ்வேதா மேல் லேசாக இருந்த ஈர்ப்பு பெரியப்பாவின் டைரியை படித்த பிறகு பிணைப்பு அதிகமாகிறது. அதில் இவர்கள் இருவரும் வாழ்வில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று எழுதியதை பார்த்து.

    மெல்ல அவளை மாற்றி தன் வாழ்க்கை துணையாக்கி கொள்கிறான் தூயவன்.
     
  10. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நினைப்பதெல்லாம் – (C.V.இந்திராணி)
    ஏழ்மையில் துவண்டு அவமானத்தைச் சந்திப்பவர்களுக்குப் பணம் ஒன்றே குறிக்கோளாக மாறும். நியாயம் என்ற வார்த்தையைக் கூடக் காதில் கேட்க விரும்பமாட்டார்கள்.

    சரியான குடும்ப அமைப்பு இல்லாத அமர்நாத்திற்கு உதவ வந்த நண்பன் கேசவன் கூட எதிரியாகவே தெரிகிறான். நண்பனை குடிக்கு அடிமையாக்கி அவனின் பணத்தைத் தனதாக்கி கொண்ட அமர்நாத்திற்கு அது துரோகம் மற்றும் ஏமாற்றுவேலை என்ற நினைப்பே மகன் அடிப்பட்டு மருத்துவமனையில் போராடும் போது தான் உணருகிறார்.

    செய்யும் சிறு சிறு விஷயத்தில் கூடப் பணத்தை நோக்கியே அடி எடுத்து வைக்கும் தந்தை அமர்நாத்தின் குணத்தைப் பிடிக்காத விக்னேஷ் சராசரி வாழ்வையே வாழ்கிறான். ஆசிரமத்தில் இருந்த பெண்ணான பானுமதி இவனிடம் வேலைக்கு வருவதுமட்டுமில்லாமல் மனதிலும் இடம் பிடித்துவிட, தந்தை பணக்கார வீட்டுப் பெண்ணைத் தான் மருமகளாக்குவார் என்ற உண்மையைத் தெரிந்திருந்தவன் குழப்பத்தில் வண்டியோட்டி விபத்தில் உயிருக்கு போராடும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

    மகன் விபத்தில் மீண்டெழுந்த பிறகு அமர்நாத்தின் மனம் முற்றிலும் மாற்றமடைகிறது. மகன் காதலித்தவளையே மருமகளாக ஏற்றுக் கொண்டவருக்கு அவள் தான் தன் நண்பன் கேசவனின் மகள் என்று தெரிவதற்கு முன்பே புத்திபேதலித்துப் போகிறது.

    காலம் கர்மாவின் வழியே தனக்கான பதிலை ஏற்படுத்திக்கொண்டுவிட்டது
     

Share This Page