1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Abraham Pandithar

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Aug 3, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Yesterday,Aug 2nd was the birth day of a great Tamil scholar.

    ஆபிரகாம் பண்டிதர் அவர்கள், 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு 2 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில், முத்துசாமி நாடார் அவர்களுக்கும், அன்னம்மை அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை பங்களாச் சுரண்டையில் முடித்த அன்னார், திண்டுக்கல் நகரில் உள்ள CVES ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தன்னை தமிழ் ஆசிரியராகத் தகுதிப்படுத்திக் கொண்டார். ஆபிரகாம் பண்டிதரின் பாட்டனார் தமிழ் மருத்துவராக இருந்தமையால், தமிழாசிரியராக இருந்த பண்டிதர் மருத்துவ இலக்கியத்தில் இயற்கையாகவே ஆர்வம் கொண்டார். .

    1886 முதல் 1890 வரை பாதிரியார் பிளேக் துரை ஆபிரகாம் பண்டிதரையும் அவர்தம் மனைவியாரையும் சீமாட்டி நேப்பியர் பெண்கள் பாடசாலையில் முறையே தமிழ்ப் பண்டிதராகவும் தலைமை ஆசிரியையாகவும் நியமித்தார். அவர்கள் கையாண்ட கல்விமுறை அனைவராலும் பாராட்டப்பட்டது.


    1879 ஆம் ஆண்டு தமிழ் மருத்துவ துறையால் மூலிகை மலையாக அறியப்பட்ட சுருளி மலைக்குஆராய்ச்சிக்காகச் சென்ற பண்டிதர், தமிழ் மருத்துவத்தில் புகழ்பெற்று விளங்கிய பல வல்லுனர்களைச் சந்தித்து தனது அறிவை பெருக்கிக் கொண்டார். சுருளி மலையில் கருணானந்த முனிவர் என்று அறியப்படும் தமிழ் மருத்துவ வல்லுனரைச் சந்தித்த பண்டிதர், அவரைத் தன் குருவாக எற்றுக்கொண்டு அவரிடம் தமிழ் மருத்துவ முறைகளைக் கற்றார்.

    1890ஆம் ஆண்டுக்குப் பின் சித்த மருந்துகளைப் பெரும்பான்மையான அளவில் தயாரித்து "கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்" என்ற பெயரில் வழங்கிவந்தார்.

    பிரகாம் பண்டிதர் 1899ஆம் ஆண்டு தஞ்சாவூருக்கு அருகில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தை வாங்கி, அதற்கு "கருணானந்தபுரம்" என்று பெயரிட்டார். பொதுமக்கள் அதைப் "பண்டிதர் தோட்டம்" என்றே அழைத்தனர். அவ்விடத்தில் பல வகையான மரம் செடி கொடிகளையும், மூலிகைகளையும் மலர்களையும் பயிரிட்டார். வேளாண்துறையில் புதிய ஆய்வுகளையும் மேற்கொண்டு பரிசுகளும் பெற்றார்.

    தஞ்சாவூரில் அவருடைய இல்லத்தில் பண்டிதர் "கருணாநிதி மருத்துவக் கூடம்" (Karunanidhi Medical Hall) என்றொரு பிரிவைத் தொடங்கி அங்குக் கூடிவந்த மக்களுக்கு மருத்துவ நல உதவி நல்கினார். அவர் வழங்கிய "கோரோசனை மாத்திரைகள்" பிரபல்யமானவை. அவை இந்தியாவில் மட்டுமன்றி, அந்நாளைய சிலோன், பர்மா, மற்றும் ஆங்கிலேயர் கைவசம் இருந்த கிழக்கு ஆசிய நாடுகள் (இன்றைய சிங்கப்பூர், மலேசியா) முதலியவற்றில் அந்த மாத்திரைகளுக்கு அமோக வரவேற்பு இருந்தது.



    1909ஆம் ஆண்டு பிரித்தானிய இந்திய அரசு ஆபிரகாம் பண்டிதருக்கு "ராவ் சாகிப்" என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தம்மைச் சந்திக்க வந்த பிரித்தானிய ஆளுநரின் வருகையின் நினைவாகப் பண்டிதர் ஒரு பெரிய சமூகக் கூடம் கட்டி அதற்கு "லாலி சமூகக் கூடம்" (Lawley Hall) என்று பெயரிட்டுச் சிறப்பித்தார்.



    தமிழிசை பங்களிப்பு
    பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் மங்கியிருந்த தமிழ் மரபுசையை, தமிழ் இலக்கிய அறிவுடன் புதுப்பொலிவு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர் என்றால் அது மிகையாகாது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இந்திய இசை ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக, தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர். திண்டுக்கல் சடையாண்டி பட்டரிடம் ஆபிரகாம் பண்டிதர் இசைபயின்ற பண்டிதர், பின் தஞ்சையில் ஒரு நாதஸ்வர வித்வானிடமும் இசை கற்றார். மேலும் பல இசை கருவிகளை இசைக்கப் பயின்ற பண்டிதர், ஆர்மோனியம், வீணை, பிடில் முதலிய வாத்தியங்களில் புலமை பெற்றிருந்தார். தமிழகத்தில் தெலுங்கு மொழியை முக்கியமாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் இசைமரபு உண்மையில் பழந்தமிழ் இசைமரபே என்பதை உணர்ந்த பண்டிதர் அதனை மெய்ப்பிக்கும் வகையில் பல பழந்தமிழ் இசை நூல்களைக் கற்றுணர்ந்தார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி. பிச்சைமுத்து அவர்களின் மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ் இசையின் மேல் கொண்ட பற்றினால், 1910 முதல் 1914 வரையிலான காலகட்டத்தில் பண்டிதர் ஆறு இசை மாநாடுகளைத் தஞ்சையில் நடத்தினார். 1912 ஆண்டு மே மாதம் 27ஆம் நாள் தஞ்சையில் சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை நிறுவினார். பல்வேறு பாடகர்களையும் இசை நிபுணர்களையும் மேற்கத்திய இசை வல்லுநர்களையும் மாநாடுகளுக்கு அழைத்து விரிவாக உரையாடினார். மாநாடுகளை முழுக்க தன் சொந்த செலவில் பண்டிதர் நடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.

    பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917 இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார். 1395 பக்கங்கள் உடையது இந்நூல். இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது. பரதரின் "நாட்டிய சாஸ்திரம்", சாரங்க தேவரின் "சங்கீத ரத்னாகரம்" முதலிய பிற மொழி இசை நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத்தமிழ் நூல்களையும் விரிவாகக் கற்ற பண்டிதர் தன் ஆய்வுகளில் இவற்றையெல்லாம் ஆழ்ந்து பரிசீலிக்கிறார்.

    சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார். இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார். இராகங்களை உண்டு பண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றை பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார். அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.

    I really don't know why Tamil music which was so much popularised by Abraham Pandithar seemed to have lost the glory and people are struggling to revive the status.I think efforts in this direction are not sufficient.
    ramasala
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,755
    Likes Received:
    12,577
    Trophy Points:
    615
    Gender:
    Male

Share This Page