1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    செம மெலடி! பாட்டு கேட்டதில் இருந்து நான் சொக்கி போய்ட்டேன்.

    Lyricist: Kannadasan
    MD: KV Mahadevan
    Singers: TMS, PS

    YT - தூங்காத கண் என்று ஒன்று - குங்குமம்

    Long distance கடலை க்கு இந்த வரிகள் ஏக பொருத்தம்..

    முற்றாத இரவொன்றில் நான் வாட
    முடியாத கதை ஒன்று நீ பேச


    கவியரசு இந்த வரிகளில் என்னமாய் கலக்கி இருக்கிறார்..அசந்து போய்ட்டேன்!

    வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
    உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
    வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
    பெறுகின்ற சுகமென்று ஒன்று
     
    Sweeti83 likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கற்பனை உலகம் ஒரு மாய உலகம். கற்பனை வளம் இருந்தால், எது உண்மை எது பொய் என்று பாகு படுத்தி பார்க்க முடியாத ஒரு மாய நிலைக்கு இழுத்து செல்லும். இந்த பாடல் வரிகளில் வரும் வர்ணனை எல்லாம் மாயம் செய்வதற்கு தான். இப்படி வர்ணித்தால் எந்த பெண் தான் மயங்க மாட்டாள்?

    Lyricist: Vaali
    MD: MSV-TKR
    Singer: TMS

    YT - ஒரு பெண்ணை பார்த்து - தெய்வத்தாய்

    இதழில் மதுவோ குறையாது

    இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
    நாளை என் செய்வாளோ
     
  3. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hi veda

    Welcome. எப்படி இருக்கீங்க. உங்கள் இந்திய பயணம் எப்படி இருந்தது?

    உங்களுடைய யசோதா பற்றிய பதிவும், மகாபாரத பதிவும் அருமை.
    பொன்னியின் செல்வன் நான் 5 அல்லது 6 தடவை வாசித்திருப்பேன். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் முதல் முறை வாசிப்பதை போல் இருக்கும். இதை படமாக எடுத்தால் நிச்சயம் 5 பகுதிக்கு மேல் கட்டாயம் செல்லும். ஆனால் நாவலை படிக்கும் போது இருக்கும் சுவாரிஸ்யம் பூர்த்தி செய்ய இயலுமா என தெரியவில்லை.

    இதை மகாபாரதம் போல் நெடுந்தொடராக வேண்டுமானால் எடுத்தால் ஓரளவிற்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன்

    நான் மீண்டும் பாடலுடன் நாளை வருகிறேன்
     
    Thyagarajan and singapalsmile like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi APS,

    வாங்க வாங்க. உங்களை இங்கும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இதுவரை நான் பயணித்ததில் கடந்த தாய் நாட்டு பயணம் தான் சிறப்பானது; மறக்க முடியாதது; இனிமையானது.

    பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறீர்கள். கண்டிப்பாக விரைவில் படிப்பேன்.

    பாடலுடன் இங்கும் அடிக்கடி வாங்க. கலக்குங்க!
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    போன வார இறுதியில் பார்த்த படத்தில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த படம் கொஞ்சம் வித்யாசமாக இருந்தது. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். 8 தோட்டாக்கள் - சில காட்சிகள் நெஞ்சை துளைக்கும்.

    TT - நீ இல்லை என்றால் - 8 தோட்டாக்கள்

    கலங்கரை வெளிச்சமும் அணைந்து போனாலே
    கடலினில் சூழலினில் எங்கு போவேன் நான்
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தினமும் கொஞ்சம் சிரிப்பது மனதிற்கு இதமாகவும்/சந்தோசமாகவும் இருக்கிறது..
    இன்று சிரித்தது --> எனது நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட WA மெசேஜ் கேட்டு..

    YT - Stand-up comedy (English grammar) - Praveen Kumar
     
  7. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - சிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே

    பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை
    சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை

    கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
    நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
    தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை
     
  8. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - துயிலாத பெண் ஒன்று கண்டேன் - மீண்ட சொர்க்கம்

    அழகான பழம் போலும் கன்னம்
    அதில் தர வேண்டும் அடையாள சின்னம்

    பொன் போன்ற உடல் மீது மோதும்
    இந்தக் கண் தந்த அடையாளம் போதும்

    மாலைக்கு நோயாகிப் போனேன்
    காலை மலருக்குப் பகையாக ஆனேன்

    உறவோடு விளையாட எண்ணும்
    கண்கள் உறங்காது உறங்காது கண்ணே

     
    singapalsmile likes this.
  9. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - என்ன பார்வை உந்தன் பார்வை - காதலிக்க நேரமில்லை - ஜேசுதாஸ்/ சுசீலா - கண்ணதாசன்

    என்ன பார்வை உந்தன் பார்வை
    இடை மெலிந்தாள் இந்தப் பாவை

    கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு
    கை பட்டு சின்னங்கள் கொண்டதோ


    இந்த பாடலில் கண்ணதாசன் வார்த்தை விளையாட்டை பாருங்கள்

    இடை மெலிந்தாள் இந்தப் பாவை
    இந்த வரிகளுக்கு இரு பொருள் படுமாறு எழுதியுள்ளார்

    'பார்வை' யில் இடை நீங்கினால் பாவை என்று வரும்.
    காதலனின் பார்வையால் காதலியின் இடை மெலிந்தது .
     
    singapalsmile likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi APS,
    வீட்டுக்கு விருந்தாளி கையில் மூன்று விதமான இனிப்போடு வந்தால் நான் எவ்ளோ சந்தோசப்படுவேனோ அந்த அளவிற்கு உங்களது மூன்று பாடல்களையும் பார்த்ததில்/கேட்டதில் எனக்கு அளவு கொள்ளா சந்தோஷம். :grinning::grinning:

    முதல் பாடல் - வழக்கமா ரசித்து சாப்பிடும் இனிப்பு.

    இரண்டாவது பாடல் - இதுவரை நான் சாப்பிட்டு பார்க்காத ஒரு செம பெங்காளி ஸ்வீட்..WOW!

    பாடல் வரிகள், பாடிய விதம், இசை அத்தனையும் எங்கோ இழுத்து செல்கிறது..எத்தனை முறை இந்த பாடலை தொடர்ந்து கேட்டேன் என்று கணக்கு சொல்ல தெரியவில்லை..இந்த பாட்டில் வரிகள் செம! :wink::wink:

    மூன்றாவது பாடல் - நான் பார்த்து பார்த்து இந்த வாரம் இங்கு விநியோகிக்க நினைத்த எனக்கு பிடித்தமான இனிப்பு..

    மக்கள் நிறைந்த கூட்டத்தில் ஒரு யானையை பற்றி விவரிக்க சொன்னால் பார்க்கும் பார்வையை பொறுத்து ஒவ்வொருத்தரும் யானையின் தந்தங்கள் அல்லது துதிக்கை அல்லது காதுகள் பத்தி பேச ஆரம்பிப்பார்கள். அது போல திரைப்பட பாடல்களை விவரிக்க சொன்னால் ஒவ்வொருத்தரும் தங்களின் தனிப்பட்ட ரசனைக்கு ஏற்ப பாடல் விளக்கம் கொடுப்பார்கள். நீங்கள் போஸ்ட் பண்ண வரிகளும், உங்களது கமெண்ட்டும் சூப்பர்.

    ஒரு சின்ன சந்தேகம் - காதலன் பார்க்கவில்லை என்றால் தான் பசலையில் காதலி இடை மெலிந்து போவாள். இங்கு எப்படி காதலனின் பார்வைக்கு காதலியின் இடை மெலிந்தது? :wink::wink:
     

Share This Page