1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் - Part 1

Discussion in 'Stories in Regional Languages' started by tuffyshri, Jun 5, 2013.

  1. tuffyshri

    tuffyshri Gold IL'ite

    Messages:
    987
    Likes Received:
    996
    Trophy Points:
    188
    Gender:
    Female
    *****************
    Hi :hiya,

    After so much courage and time I am trying to write a historical story. We all know about the brave side of the kings and queens.. am trying to write about the other side.. especially about the queens and their war over each other to win the heart of their husband. was greatly inspired by one english novel and this is the result of that. pls do let me know ur FB.. both positive and negative. I will try my best to post bi-weekly bcoz i have a small baby to take care :thumbsup.
    *******************

    1) ராஜமாதாவின் விஜயம்

    பொன்னந்தி மாலை பொழுது. இன்னும் சற்று நேரத்தில் சூரியன் விடை பெற்று சந்திரன் தலை தூக்கி விடுவான். பகல் பொழுது முழுதும் உழைத்த மக்கள் அனைவரும் மெல்ல மெல்ல வீடு திரும்ப எத்தனித்தனர். கடைகளில் சாயங்கால வியபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. மான்களும் முயல்களும் பயமின்றி தெருக்களில் வலம் வந்தன. பறவைகள் தங்களின் தினம் போன விதத்தை உரக்க கூறியபடி கூட்டுக்கு திரும்பின. அந்த பறவைகள் அமர்ந்திருக்கும் மரங்கள் அனைத்தும், என்னவோ அவைகளுக்கே வாய் வந்து விட்டது போல் எங்கும் 'கீச்சு கீச்சு' என சப்தம் கேட்டது. சில பெண்கள் வாசலில் கோலம் போடுவதற்காக, கூட்டி சாணம் மெழுக ஆரம்பித்தனர். இன்னும் சிலர் வீடு திரும்பிய பசுக்களை தட்டி கொடுத்து கொட்டகையில் அடைக்க தொடங்கினர். வேறு சிலர் இரவு சமையலுக்காக கூட்டமாக திண்ணையில் அமர்ந்து காய் கறிகளை அரிந்து கொண்டு அப்படியே சில பலரை வாயில் பந்தாடியபடி இருந்தனர். எங்கும் பசுமையும் வளமுமாக திகழ்ந்தது அந்த பாண்டிய தேசம்.

    அந்த சங்கதிகளுக்கு முற்றிலும் புறம்பாக ஒரு ஓசை கேட்டது. அதை கேட்டதும் அனைவரும் தத்தம் வேலையே அப்படியே போட்டு விட்டு தெருவில் கூடினர். அனைவரும் வியப்புடன் 'இந்த வேளையில் என்ன...' 'என்ன விஷயம் என்பது போல தங்களுக்குள் பேசி கொண்டு இருந்தனர்.

    அப்போது மற்றுமொரு முறை பேரிகை முழங்கி 'ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ பராக்கிரம, வீர தீர மாமன்னர் மதிற்பிற்குரிய சுந்தர பாண்டியர் அவர்கள் பணிவோடு வணங்கும் ராஜமாதா, வீர தீர மங்கை பாண்டிமாதேவி விஜயாம்பாள் அவர்கள் பராக்... பராக்...' என்ற உறையும் கேட்டது. சட்டென்று அங்கு மௌனம் குடி கொண்டது. அழகாக அலங்கரித்திருந்த பல்லக்கு நிறுத்தப்பட்டதும் உள்ளிருந்து ராஜமாதா இறங்கினாள்.

    வயது அறுபதுக்கு மேல் இருந்தாலும் அவள் அவ்வளவு வயோதிகமாக தோன்றவில்லை. போர் முனைக்கு இப்போது கூட யானை ஏறி பொய் விடும் துணிச்சல் முகத்தில் ததும்பியது. இறங்கியவள் சுற்று முற்றும் பார்வையை சுழல விட்டாள். இள வயது பெண்கள் அவரவர் வீட்டு பலகணியிலிருந்தும் முற்றத்திலிருந்தும் ஆவலுடன் நோக்கி கொண்டு இருந்தனர். தன்னை சூழ்ந்து இருக்கும் மக்களை தவிர்த்து இளம் பெண்களையே நோக்குவதை கண்டவுடன் அனைவருக்கும் புரிந்து விட்டது. ராஜமாதா தன்னுடைய புதல்வனுக்கு மற்றுமொரு திருமணம் செய்ய முடிவு செய்து இருக்கிறார் என்று. அதனால் தான் முக்கிய வீதிகளில் வந்து சரியான பெண்ணை தேர்ந்தெடுக்க அலசுகிறாள் என்று.

    இது புரிந்தவுடன் அனைவருக்கும் இன்னும் ஆர்வம் அதிகமானது அதிலும் இளம் பெண்கள் வேக வேகமாக தங்களை திருத்தி கொண்டனர். சிலர் உள்ளே ஓடி முகம் கழுவி வந்தனர் சிலர் உடையை அவசர அவசரமாக மாற்றினர். சிலர் எங்கே உள்ளே செல்வதற்குள் வாய்ப்பு கை நழுவி விடுமோ என அஞ்சி அங்கேயே இருந்தனர். சுற்றும் பார்த்த பின்பு மகாராணி அவர்களுக்கு எதுவும் சரி வரவில்லை என்பது அவர் விடுத்த பெருமூச்சிலே தெரிந்தது.

    'ராஜமாதா மன்னிக்க வேண்டும்' என்று ஒருவர் தைரியமாக பேச்சை ஆரம்பித்தார்.

    'யாரது.. ஒ... அம்பலக்காறரா' என்றாள் ராணி

    'ஆம் தேவி.. தங்கள் வரவு நல்வரவாகுக'

    'மகிழ்ச்சி'

    'தேவி இங்கு வந்ததன் நோக்கம் ஒரளவு அனைவருக்கும் புலப்பட்டு விட்டது'

    'ஒ.. நான் என்ன அவ்வளவு வெளிப்படையாகவா செயல்ப்படுகிறேன்?'

    'மன்னிக்க வேண்டும் தேவி... நான் அப்படி கூறவில்லை'

    'இருக்கட்டும்!! ஆம் நீர் யூகித்தது சரி தான்... ஆ.. ஆனால் அதனால் தங்களுக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லையே'

    'எனக்கு என்ன தேவி ஆட்சேபம் இருக்க போகிறது?'

    'இல்லையா பின்... உன்னுடைய இரு மகள்களும் தான் என்னுடைய மருமக்கள் ஆயிற்றே... அந்த கலக்கம்...?'

    'தேவி.. அரச விஷயங்கள் எனக்கு தெரியத்த என்ன... '

    'நல்லது!'

    'ராஜமாதா.. அருள் கூர்ந்து இந்த சிறியவன் இல்லத்திற்கு தங்கள் பாதம் பட வேண்டுகிறேன்'

    'இல்லை அம்பலக்காரறே... நான்...' என்று இழுத்தவளின் கண்களில் அவரது மூன்றாவது புதல்வி கண்ணில் பட்டாள். மற்ற பெண்களை போல் இல்லாமல் இவள் சிறிதும் ஆர்வம் எதுவும் இன்றி அணிந்து இருந்த வளையலை கையால் சுழட்டி கொண்டு இருந்தாள். அது விஜயாம்பாளை ஈர்த்தது.

    'சரி... ஒரு ஐந்து நிமிடம் வருகிறேன்' என முடிவெடுத்து கூட்டத்தை விலக்கி அம்பலக்காறார் வீட்டுக்குள் நுழைந்தாள். அந்த இளம் பெண் நிமிர்ந்து பார்த்து வாசலுக்கு ஓடி ஆரத்தியை சுழற்றி ராஜமாதாவை வரவேற்றாள். அத்தனை நேரமும் ராணியின் கூறிய பார்வை எங்கும் விலகாமல் அந்த இலம்பென்னையே நோக்கி, அலசி, ஆராய்ந்து கொண்டு இருந்தது. இந்த இளம்பெண் தான் நம் கதாநாயகி என்று புரிந்து இருக்குமே...
     
    5 people like this.
    Loading...

  2. gopika1406

    gopika1406 New IL'ite

    Messages:
    24
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    nice start..weekly once post panalum konjam lenghty ah panunga.all the best
     
  3. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Good start. After a long time, reading a histroical story.
     
  4. tuffyshri

    tuffyshri Gold IL'ite

    Messages:
    987
    Likes Received:
    996
    Trophy Points:
    188
    Gender:
    Female
    enna kodumai.. am seeing junks everywhere while yesterday when I posted it was all clean. Thanks for the likes and FB inspite of this
     
  5. tuffyshri

    tuffyshri Gold IL'ite

    Messages:
    987
    Likes Received:
    996
    Trophy Points:
    188
    Gender:
    Female
    thanks! yes am also trying but... oru kattathula type adikka romba kashtama irukku! :) reading is always faster than writing right
     
  6. tuffyshri

    tuffyshri Gold IL'ite

    Messages:
    987
    Likes Received:
    996
    Trophy Points:
    188
    Gender:
    Female
    thank you for the FB Padhmu! pls continue reading and commenting
     
  7. MahiSree

    MahiSree Gold IL'ite

    Messages:
    562
    Likes Received:
    283
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Aarambame romba interestinga irukuthu Tuffy. adutha pagathukku kaathirukiren :)
     
  8. helennixy

    helennixy Silver IL'ite

    Messages:
    94
    Likes Received:
    60
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Hiyo historical story paddichu romba naal achi pa.....


    good start............hats off to ur effort......continue writing....

    waiting for your updates,
    Cheers,
    Helen
     
  9. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi tuffi...
    BEST WISHES for this story ma...

    nice start...
    hero-ine aarvamey illama casual ah nintu irundhadhey rajamaatha va attract panniruchu !!!
     
  10. niranjanii

    niranjanii New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    வாவ்.. ரொம்ப நாள் அப்புறம் சரித்திர கதை படிக்கிறேன்.. ஹீரோயின் பாத்தாச்சு அடுத்து ஹீரோவா கண்ணுல காட்டுங்க
     

Share This Page