1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண்ட நாள் முதலாய்...

Discussion in 'Stories in Regional Languages' started by shinara, Apr 11, 2013.

  1. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Karthik Shruthi seruvangalanu pakalam dear..........
     
  2. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    20.விடையில்லாத கேள்வி....

    கல்யாணாத்தைப் பற்றி ஸ்ருதி கார்த்திக்கிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் தீவிரமாக கல்யாண வெலைகளில் இறங்கினாள். பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக செய்தாள். இரண்டு மூன்று 'கார்டு' கடைகள் ஏறி எந்த மாடலும் பிடிக்காமல் போக அவளாகவே 'பேஜ் மேக்கரில்' கல்யாணப் பத்திரிக்கையை வடிவமைத்தாள்.

    கல்யாணத்திற்கு மூன்று வாரங்களே இருந்தன. தன் குடும்பத்தில் நடக்கும் முதல் விஷேஷத்திற்காக ஓடி ஓடி வேலைகள் செய்தார் சுந்தரம். 'மே' மாத கத்திரி வெயிலும் ஏற்கனவே மோசமாக இருந்த உடல்னிலையும் சேர்ந்து சுந்தரத்துக்கு உடல் நிலை சரி இல்லாமல் ஆயிற்று. சுந்தரத்தை வந்து பார்த்த டாக்டர் உடல் நிலைக்கு எதுவுமில்லை அதிக வேலைப்பளு மற்றும் வெயிலின் காரணமாக வந்த களைப்பு தான் என்றும் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்றும் சொன்னார்.

    வேணு தாமே எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்வதாகக் கூறினார். வேணு சுந்தரத்தின் உடல் நிலை குறித்து கார்த்திக்கிடம் கூறியதும் கார்த்திக் ஸ்ருதிக்கு அழைத்தான்.

    "ஹலோ..."

    "ஸ்ருதி.. எப்படி இருக்கே? அங்கிள் எப்படி இருக்காங்க?"

    "ம்.. இப்ப நல்லாயிருக்காங்க கார்த்திக். மாமா தான் எல்லா வேலைகளையும் பார்த்துக்குறாங்க!"

    சிறிது இடைவெளி விட்டு பேசியவன்," நீ இன்னும் வீட்டுல சொல்லலை அப்படி தானே?" என்றான் கரகர குரலில்.

    "இப்போ அதற்கு அவசியம் இல்லைனு தோனுச்சு"

    "ஏன் இல்லை. கட்டாயம் இருக்கு"

    "ஏன் கார்த்திக்?"

    " நிறைய காரணங்கள் இருக்கு. அதைவிடு ஸ்ருதி. ஆனால் இந்த கல்யாணம் வேண்டாம்.ப்ளீஸ். நீ தான் எப்படியாவது நிறுத்தனும்" என்று மீண்டும் பழைய பல்லவியையே பாடினான் கார்த்திக்.


    "உண்மைய சொல்லுங்க கார்த்திக். என்னை உங்களுக்கு பிடிக்கலை அப்படி தானே?"

    " நீயா ஏதாது கற்பனை பண்ணிகாதே ஸ்ருதி"

    "இல்ல கார்த்திக் சொல்லுங்க. எனக்கு தெரியனும்."

    "ஸ்ருதி பிடிக்குது பிடிக்கலைன்றது இப்ப ப்ரச்சனை இல்லை.." என்றவனை குறுக்கிட்ட ஸ்ருதி " இது ஒன்னு தான் ப்ரச்சனை கார்த்திக். இதை தவர வேற எதுவும் இல்லை. நானும் எத்தனை நாள் தான் இதையே யோசிச்சுட்டு இருப்பேன். எனக்கு தெரியணும் கார்த்திக்.இன்னிக்கே எனக்கு தெரியனும்" என்று மூச்சுவிடாமல் குழந்தை போல் பேசியவளிடம் ஒரு உறுதி இருந்தது.

    கார்த்திக்கை பேசவிடாமல் தொடர்ந்தாள் ஸ்ருதி .

    "உங்களை முதல்ல ஃபோட்டோல பார்த்ததுமே எனக்கு பிடிச்சுருச்சு கார்த்திக். எத்தனையோ வருஷம் பேசி பழகு மாதிரி இருந்தது. அப்பவே அன்னிக்குலருந்தே உங்க கூட தான் என் வாழ்க்கைனு முடிவெடுத்துட்டேன். ஆனால் பொண்ணு பார்க்க வந்தப்போ நீங்க கல்யாணத்தை நிறுத்த சொன்னீங்க. ஏதோ என் உயிரே போற மாதிரி வலிச்சுது. அப்புறம் ஒவ்வொரு முறை உங்கள பார்க்கும் போதும் நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்ல தெரியுமா. எங்க அம்மாவே எனக்கு திரும்ப கிடச்ச மாதிரி இருந்துச்சு கார்த்திக்." என்று முடிவெடுத்தவளின் குரல் தழுதழுத்து உதடு நடுங்கியது.

    மீண்டும் தொடர்ந்தவள் "அன்னைக்கு நான் கல்யாணத்தை நிறுத்த சம்மதிச்சேன். காரணம் அப்போ... அப்போ ஸ்வாதி இருந்தா. ஆனால் இப்போ என்ன கார்த்திக்? இப்ப நீங்க வேண்டாம்னு சொன்னா அதுக்கு ஒரே காரணம் என்னை பிடிக்கலைன்றது மட்டுமா தான் இருக்கனும். சொல்லுங்க கார்த்திக் என்னை பிடிக்கலை அப்படி தானே?" என்று கண்ணீரில் முடித்தாள் ஸ்ருதி.

    கார்த்திக்குக்குத் தான் பாவமாக இருந்தது. தன்னைப் பற்றி மட்டுமே இதுவரை நினைத்துக் கொண்டிருந்த கார்த்திக்குக்கு இப்போது ஸ்ருதியை நினைக்கும் போது ரொம்பவே பாவமாக இருந்தது.

    ஒரு நோடி கண்களாஇ மூடினான் கார்த்திக். நீ வேண்டாம் என்று விட்டுச் சென்ற ஸ்வாதியும் கண்முன்னால் வந்தாள். நீ தான் என் உலகம் என்று சொல்லும் ஸ்ருதியும் கண் முன் தோன்றினாள்.

    "ப்ளீஸ் ஸ்ருதி. அழாத ப்ளீஸ்... உன்னை பிடிக்காம இல்ல ஸ்ருதி. ப்ளீஸ் என் நிலமையை புரிஞ்சுக்கோ" என்றவனின் குரல் ஸ்ருதியை தேற்றும்படி இருந்தது.

    அவனே மீண்டும் தொடர்ந்தான்," என்னை கல்யாணம் பண்ணினா உன் லைஃப் நல்லாருக்காது"

    " நோ கார்த்திக் நீங்க இல்லேனா எனக்கு லைஃபே இல்ல"

    "ஸ்ருதி நீ நினைக்குற மாதிரி இல்ல இப்போ நான். ஐ அம் அ செயின் ஸ்மோக்கர் அன்ட் ...ட்ரிங்கங்... "

    " இட் டஸின்ட் மேட்டர் கார்த்திக். ஆல் ஐ நீட் இச் யூ"

    " பட் இட் மேட்டர்ஸ் டொ மீ ஸ்ருதி. அன்ட் என்னால் ஸ்வாதியை இன்னும் மறக்க முடியலை"

    " நான் காத்திருக்கிறேன் கார்த்திக்"

    "ஸ்ருதி ப்ளீஸ்"

    "கார்த்திக் ப்ளீஸ் நீங்க தான் புரிஞ்சுக்கனும். அப்பா இப்போ இருக்குற நிலமைல நான் எப்படி கல்யாணத்தை நிறுத்துவேன். என்னல எப்படி சொல்ல முடியும் கார்த்திக்?"

    "ஓகே ஸ்ருதி. நானே நிறுத்துறேன். உன்னை பிடிக்கலைனு நெனைக்காத. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும். கண்டிப்பா அதை என்னால தெர முடியாது"

    "கார்த்திக் ப்ளீஸ்.."

    "வேண்டாம் ஸ்ருதி. எதுவும் சொல்லாதே. நீ புரியாம பேசுறே. நானே பார்த்துக்குறேன்.'பை'" என்றவன் ஃபோனை வைத்துவிட்டான்.

    கடவிளே இது என்ன? கடைசி வரை கார்த்திக் எனக்கு இல்லையா?" என்று ஸ்ருதி நினைத்தாலும் அவள் உள்மனதில் நல்லதே நடக்கும் என்று தோன்றியது.

    காதல் பெருகும்...
     
    8 people like this.
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Achacho...... ena shinara idhu..........
     
    1 person likes this.
  4. anadev16

    anadev16 Silver IL'ite

    Messages:
    117
    Likes Received:
    84
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Dear,

    U r story is very nice and interesting. Ana yaru seruvanganu enaku mattum sollidunga. Keep posting. Wish you more to write stories like this.
     
    1 person likes this.
  5. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi dear... thanks for ur words.... konjam wait panunga... nalaiku solidalam yar seruvanganu....
     
  6. blessbabydust

    blessbabydust IL Hall of Fame

    Messages:
    2,893
    Likes Received:
    1,972
    Trophy Points:
    310
    Gender:
    Female
    jolly nalaiyoda yen hair lossuku stop agividum ............romba mousam karthik .............stupid and loser karthik hehehe nice twist
     
  7. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    appo..karthik vittu kuduthuduvan pola..theriyuthu..interesting ah thaan poguthu..
     
  8. Agilas

    Agilas Gold IL'ite

    Messages:
    375
    Likes Received:
    301
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Appo tomo final episode ah superb sikaram nala eppo varimunu irukkum..................
     
  9. krithivenugopal

    krithivenugopal Bronze IL'ite

    Messages:
    124
    Likes Received:
    44
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Enanga ethu rendu perum sernthuduvanga nu santhosama iruntha... agaium twist ah OMG!!!!! next update pl.. :coffee
     
  10. upfsabari

    upfsabari IL Hall of Fame

    Messages:
    3,562
    Likes Received:
    1,918
    Trophy Points:
    308
    Gender:
    Female

Share This Page