1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Does Your Head Swirl?

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Mar 29, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கத்தரி வெய்யிலில் தலை சுற்றுகிறதா ?கவலை வேண்டாம்.கீழே உள்ள கவிதையைப் படியுங்கள்.

    வீமனுக்கு மைந்தனார் வேதனாகும்
    வேதனுக்கு மைந்தனார் ஈசனாகும்
    காமனுக்கு மைந்தன் வீமன் தம்பி
    கந்தனுக்கு மாமனார் காமன் தானே
    மாமனுக்கு முன் தமையன் தந்தை காலன்
    வையகத்தில் இம்முறை வழங்கலாலே
    ராமனுக்கு சீதை தங்கை தானே?
    ராவணனுக்கு தகப்பன் ராமன் தானே ?

    என்ன? தலை சுற்றல் நின்றதா ?
    பொறுமை இருந்தால் கீழே உள்ள பொருளைப் படிக்கவும்.

    1 வீமனுக்கு மைந்தனார் வேதனாகும்
    வீ =பறவை, மன்= மன்னன் -கருடனுக்கு மன்னன் திருமாலின் பிள்ளை பிரும்மா
    2 வேதனுக்கு மைந்தனார் ஈசனாகும்
    வேல்+தனக்கு = வேதனுக்கு
    வேல்= மூங்கில்
    -திருநெல்வேலியில் மூங்கில் காட்டில் புதையுண்டு சிவன் வெளிப்பட்டதால் ,மூங்கிலின் மகன் ஆனார்.
    3 காமனுக்கு மைந்தனார் வீமன் தம்பி
    கா=சோலை ,கற்பகச் சோலையின்
    தலைவனான இந்திரனின் புதல்வன் வீமனின் தம்பியான அர்ஜுனன்
    4 கந்தனுக்கு மாமனார் காமன் தானே
    காமன்=சோலையின் தலைவன் இந்திரன் மகள் தேவயானியை மணம் செய்து கொண்டான் கந்தன்
    5 மாமனுக்கு முன் தமையன் தந்தை
    காலன்
    மா=குதிரை ,மன்=தலைவன்
    குதிரையின் தலைவன் நகுலனின் அண்ணன் தருமனின் தந்தை காலன் (யமன்)
    6 உலகில் இந்த உறவு முறை அனுசரிக்கப் படுவதால்
    7 ராமனுக்கு சீதை தங்கை தானே ?
    ரா +மன் =இரவின் தலைவனாகிய சந்திரன்
    பாற்கடலைக் கடையும்போது முதலில் தோன்றியது சந்திரன் ,பின்னால் தோன்றினாள் மகாலட்சுமி .எனவே சந்திரனின் தங்கை மகாலக்ஷ்மியான சீதை
    8 ராவணனுக்கு தகப்பன் ராமன் தானே ?
    ரா +வண்ணன் =இரவு நிறம் கொண்ட
    மன்மதன்
    மன்மதனுக்குத் தந்தை திருமால் ,அதாவது திருமாலின் அவதாரமாகிய ராமன் .

    என்ன ,அக்னி நட்சத்த்ரமே தேவலாமா ?
    Jayasala 42
     
    Thyagarajan and rgsrinivasan like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,749
    Likes Received:
    12,573
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:தேவலாமாவா? இடப்புறம் வலப்புறமாக சுற்றிய தலை இப்ப இந்த அற்புத விளக்கம் கண்டு வலப்புறம் இடப்புறமாக சுற்றுக்கிற்றற்றற்றற்றற்றற்றற்றறதுதுதுதுது.
    நன்றி
     

Share This Page