1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சைக்கோ விளையாட்டு செயல்களுக்கு எதிர்ப்பதமாக மன நிம்மதி தரும் செயல்கள் பற்றி இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன். படிப்பவர்களுக்கு இந்த மாதிரி நாமும் செய்யலாம் என்ற உத்வேகம் வரலாம்.

    இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வார ஆரம்பித்தில் ஒரு கேள்வி கேட்பேன். என்னுடைய பதில் அடுத்த கேள்வி போஸ்ட் பண்ணுவதற்குள் எழுதுகிறேன். உங்களில் யாருக்காவது விருப்பம் இருந்தால் என்னுடைய கேள்விக்கு உண்மையான பதில் இங்கே எழுதலாம். நீங்களும் பாஸிட்டிவ் கேள்வி போஸ்ட் பண்ணலாம்.

    #1: எந்த வித பிரதிப்பலனும் எதிர்பார்க்காமல் இதுவரையில் நீங்க செய்த நல்ல காரியம் எது?
     
    jskls and kaniths like this.
  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Attagasam! Enakkum miga pidikkum!
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Indha video paarunga, naan evlovo thevala/paravaala nu ungalukku thonum :smile:
     
    PavithraS and kaniths like this.
  4. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Endha paadal la vara madiri dan en vazhvum thotangiyadhu... Varigal kagavum pidikkum... Engu munbe share seiya patirkalaam, meendum oru murai kettu rasikka... :blush:

     
    PavithraS, singapalsmile and jskls like this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இந்த பாடலில் தான் முதன்முதலில் தாமரை மீது என் நாட்டம் தொடங்கியது. இரவாகிவிட்டது இல்லை எனில் இப்பாடலை மீண்டும் ரசித்து கேட்டிருப்பேன்
     
    PavithraS likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    முன்பே பாடல் பகிர்ந்தாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரே பாடலை திரும்ப திரும்ப இங்கு பகிர்ந்து கொள்ளலாம். சாரல் மழை வரும் நாட்களை கணக்கு பார்ப்பார்களா என்ன? :smile:

    அருமையான பாடல். பாடலுக்கு பதிவிட்ட சொந்த வாழ்வு பற்றிய தூண்டில் பற்றி இழுக்கிறது. தூக்க கலக்கத்தில் கேள்வி கேட்டால் எக்கு தப்பாக போய்டும். அதனால் ஒன்றும் கேட்காமலே இப்போதைக்கு விடைப் பெறுகிறேன்.
     
    kaniths likes this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    8 வருடத்திற்கு முன் பிரதிபலன் கொண்டு தொடங்கபட்ட ஒரு நற்செயல் இன்று புதிய கிளை பரப்பி (பிரதிபலன் நிறைவுற்றது)சிலரின் உதவியோடு தன்னார்வ தொண்டாய் பலரை சென்றடைய ஆரம்பித்திருக்கிறது. இதை தலைகேற்றாமல் செயற்படும் நோக்கை மட்டும் மனதில் நிறுத்தி மெதுவாய் பயணிக்கிறேன்.
     
    singapalsmile, kaniths and PavithraS like this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நானும் நலமே,வேதா ! நன்றி ! மகிழ்ச்சி !

    ஹா..ஹா.. வேதா ..நல்ல பொறி வைத்துவிட்டீர்கள் எனக்கு ! விவகாரமான ஆள் தான் நீங்கள் ! நீங்கள் விளக்கச் சொல்லிக் கேட்டிருக்கும் பாடலும் சற்றல்ல முற்றுமே விவகாரமானதுதான் ! இருப்பினும் எனக்குத் தெரிந்த வகையில் பதிகிறேன், கண்ணதாசன் மன்னிப்பாராக ! அவரது எழுத்தின் இரசிகர்களும் மன்னிப்பார்களாக ! இந்த நீ..ண்டப் பதிவைப் படிக்கவைப்பதன் மூலமாக உங்கள் பொறியை உங்களுக்கேத் திருப்பி வைக்கிறேன்.
    இந்தப் பாடல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. எம்ஜிஆர் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படம் என்று எண்ணுகிறேன். அந்த முழுப் பாடல் இங்கே

    ஆண் :
    நாணமோ இன்னும் நாணமோ
    இந்த ஜாடை நாடகம் என்ன ?
    அந்தப் பார்வை கூறுவதென்ன ?
    நாணமோ.. நாணமோ..

    காதலர் இருவரும் கூடும் வேளையில்,பெண்மைக்கேயுரிய அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற நாற்குணத்தில் மூன்றாவதான நாணத்தை- வெட்கத்தைக் காதலி பூணுகிறாள். வாய்மொழியால் தான் வேண்டுவதுஇதுவென்று சொல்லாமல் தன் வேல்விழியால் சொல்லாமல் சொல்கிறாள். இவனுக்கு இவளென்று ஆனதன் பின்னே உரிமையுள்ளவனிடம் வெட்கம் கொள்ளுவதும்,மௌனமுறுவதும் அவசியம் தானா என்று காதலன் வினவுகிறான்.

    பெண் :
    நாணுமோ.. இன்னும் நாணுமோ
    தன்னை நாடும் காதலன் முன்னே
    திரு நாளைத் தேடிடும் பெண்மை
    நாணுமோ.. நாணுமோ..

    காதல் கணவனது வினாவிற்குத் தலைவி விடையளிக்கிறாள். இந்தத் திரைப்படம் பார்த்திருந்தால் புரியும். அதாவது இந்தக் கதாநாயகி (பூங்கொடியாக வரும் ஜெயலலிதா) முதன்முதலில் கதாநாயகனைக் (மணிமாறனாக வரும் எம்.ஜி .ஆர். ஐக் ) கண்டதும் காதல் கொண்டுவிடுகிறாள். அவன் மறுத்தும் இவள் விடாப்பிடியாக இருந்து தன் காதலில் வென்று கரம் பிடிக்கிறாள். அப்படிப் போராடிப் பெற்ற வாழ்க்கையில் முதல் அத்தியாயத்தை எழுதும் நேரத்தில், தன்னை விரும்பி அடையவெண்ணும் தலைவனிடம் தன்னைக் கொடுக்கும் சமயத்தில்,தன் பெண்மை வெட்கமடையுமோ என்று வினவி,தான் நாணவில்லை என்பதை உறுதிப் படுத்துகிறாள்.

    ஆண் :
    தோட்டத்துப் பூவினில் இல்லாதது -
    ஒருஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
    ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
    ஆனந்த வெள்ளத்தில் நீராடுது.. அது எது ?

    இங்கே தான் கவிஞர் தனது வரிகளில் சுவாரஸ்யத்தைக் கூட்டத் தொடங்குகிறார். வாழ்க்கையே ஒரு தேடல் தான். மணமுடித்து வாழ்விலிணையும் இருவர்- வினாக்களும் அதற்கான விடைகளுமாக ஒன்றாய்த் தேடித்தான் தங்களைக் கண்டுபிடித்துக் கொள்கிறார்கள். அதற்கான முன்னோட்டமாகவே இந்தக் கதாநாயகன் முதல் வினாவாய்த் தொடுக்கிறான். பூ என்றதும் நினைவில் வருவது அதன் தேன் தானே ? அவன் சொல்கிறான் இந்தத் தேன் சாதாரணமாகத் தோட்டங்களில் மலரும் பூக்களில் இருப்பதில்லை. அது மட்டுமா ? "கற்றுத் தெரிவதில்லை மன்மதக் கலை !" என்பதற்கிணங்க அதை இன்னதென்று உடைத்து யாரும் பாட்டிலும்,ஏட்டிலும் எழுதவில்லையாம் ! பூடமாகச் சொன்னால் தலைவிக்குப் புரியுமோ என்னவோவென்று இன்னும் மேல்சென்று அந்தத் தேன் உடையணிந்து ஆடுகின்றது என்றும், வாடைக்காற்றின் குளிர்மையில் நடுங்குகிறது என்றும், இன்பத்தின் வெள்ளத்தில் மிதக்கிறது என்றும் தலைவன் கூறுவதாய் அமைக்கிறார். அது என்னவென்று தலைவிக்குப் பரிட்சையும் வைக்கிறார். சேலை கட்டும் பெண்ணுக்கு வாசம் மட்டுமா உண்டு ? அவள் மலென்றால் தேனும் உண்டுதானே ? (பெண்களை மலரென்றால்,ஆண்களை வண்டுகளாகத் தானே இந்தக் கவிஞர்களால் சித்தரிக்கமுடியும் ? இது பெண்மைக்கு அழகா இழுக்கா என்ற விவாதங்களுளெல்லாம் நான் நுழைய விரும்பவில்லை )

    பெண் :
    ஆடவர் கண்களில் காணாதது -
    அதுகாலங்கள் மாறியும் மாறாதது
    காதலன் பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை மூடுவது.. அது இது..

    தமிழ்ப்பெண்கள் என்ன சூட்சமம் இல்லாதவர்களா ? அதுவும் தன் மனங்கவர்ந்த ஆடவனைக் கரம்பிடித்தப் பெண் அவன் கேள்விக்கு சரியான பதில் தாராமலிருப்பாளா ? கதைப்படி அவளொரு இளவரசியுங்கூட.அழகோடு அறிவும் வாய்த்தவள். எனவே தலைவன் கேட்டதற்குத் தானும் பூடகமாகவே பதிலளிக்கிறாள். அவன் கேட்ட அந்தத் தேன் எந்த ஆண்களுக்கும் கண்களில் தெரியாது என்கிறாள். இந்தப் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து ஆணுக்கும் பெண்ணுக்குமான அந்தத் தேனுறவு இன்னும் மாறவில்லை,இனியும் மாறப்போவதில்லை என்கிறாள்.கண்களில் காணாததும்,பிரபஞ்சத்தையேத் தொடர்ந்து இயக்கிவருவதுமானதை ஒவ்வொரு காதலனும் தன் காதலியிடம் தேடிப்பருகுகிறான் என்கிறாள்.அப்போது பெண்மை தன் விழிகளை மூடிக்கொள்ளும் என்று சூசகமாய்த் தெரிவிக்கிறாள். தலைவன் எதுவென்று வினவிய தேன் கன்னித்தேன் என்பதை இலைமறை காயாகக் கவிஞனின் தமிழ் நிறுவுகிறது.

    பெண் :
    மாலையில் காற்றினில் உண்டாவது -
    அதுமஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
    காலையில் நீரினில் ஆடிடும் வேளையில்
    காதலி எண்ணத்தில் தேனாவது அது எது ?

    காதலர்களுக்கு எப்போதுமே மாலைப்பொழுது ஒரு மயக்கமளிக்கும் பொழுது தான். மயக்கும் மாலையைப் போவெனச் சொல்லி இனிக்கும் இன்ப இரவை வரவேற்பதே அவர்களுக்கு வாடிக்கை. காலையில் கடமையாற்றத் தலைவன் தன்னை நீங்கினால் கூட தலைவிக்குத் தாபமும்,பசலையும் வந்து விடும். அவன் திரும்பியபின் அவர்களது பள்ளியறையில் அந்தத் தாபம் நீங்கும். இதையென்னும் போது மறுநாள் காலையில் நீரில் மூழ்கிக் குளிக்கும் தலைவிக்கு அந்த நினைவே தேனென இனிக்கும். அதுயாதென்று காதலியும் காதலனுக்குக் கேள்வி வைக்கிறாள்.

    ஆண் :
    உண்டால் மயக்கும் கள்ளாவது -
    அதுஉண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
    நாளுக்கு நாள் மனம் மாறுவது
    ஞானியின் கண்களும் தேடுவது.. அது இது..

    தேனென்று சொன்னாலும் அந்த உறவு மயக்கத்திலாழ்த்தும் போதைதானென்பது காதலன் எண்ணம். அப்படியிருப்பின் அதையுண்ணாமல் தவிர்க்கலாமே என்றால்,அதுவும் கடினம் தானாம் ! மலரைப் பறிக்க முனைந்தால் முள்ளிருப்பின் கரத்தைப் பதம் பார்க்கும். பறிக்காமல் விட்டால்,தேனினைப் பருகுவதெப்படி ? ஆயினுமிங்கேப் பெண்ணெனும் மலரை சூடாமல் தவிர்ப்போருக்கு அவளது உறவைத் தவிர்த்தோமென்ற நினைவே நெஞ்சினில் முள்ளாய் மாறிக் காயப்படுத்துமாம் ! என்ன ஒரு முரண் ! அப்படித் தவிர்த்து விடலாமென்று தள்ளிச் சென்றாலும் மனம் தானாக மாறி அவளிடமே ஓடுமாம் ! உலகப்பற்றுகளை நீக்கித் துறவறம் கொள்ள விரும்புவோரும் சறுக்குமிடம் இந்தப் பெண்ணுறவு தானாம் ! ஆக இப்படிப் போகின்றது இந்தக் காதல் பாடல் !

    வேதா, நீங்கள் கேட்டதற்கிணங்கப் பதித்தேன். தமிழில் இலக்கியப்படைப்புகளோ இல்லை இதுபோன்றத் திரையிசைப்பாடல்களோ, படிப்பதற்கும்,கேட்பதற்கும் மட்டுமல்ல,பொருளறியவும் இன்பம் பயப்பவை தான். இந்த வரிக்கு இதுதான் பொருள் என்று முற்றும் முழுதுமாக எப்போதும் சொல்ல முடியாது. அவரவர் கோணத்தில் எப்படித் தோன்றுகிறதோ அப்படியெல்லாம் பொருள் விளக்கிக் கொள்ள முடியும். ஆகவே இந்த என் பதிவையும் அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். எனக்குத் தோன்றியதைப் பதித்தேன். வேறொரு பார்வையில் யார் பதிந்தாலும் படித்துத் தெரிந்து கொள்ளப் பிரியப்படுகின்றேன்.
     
    Last edited: Sep 5, 2017
    singapalsmile and jskls like this.
  9. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Manamarndha Vazhthukkal LS.
     
    jskls likes this.
  10. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சங்கீதம் கற்று கொடுத்தேன்.
     

Share This Page