விளக்கேற்றுவது ஏன்??? நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளகேற்றுகிறோம்! விளக்கு எரிந்த வீடு வீணாகிப் போகாது' என்று ஒரு பழமொழி உள்ளது. எதற்கு என்று தெரியுமா?? சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் சக்தி உண்டு! அவ்வாறு ஈர்க்கும் போது! நம்மை சுற்றி பொசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்! இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும் ஏதோ வீடே மாயணம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள்! இதுவே விளகேற்றுவதன் தத்துவம்! நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி, குளுமையைத் தருகிறது. சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது. நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. பொதுவாகவே நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது. திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர். சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை. ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.... அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் சாயந்திரங்களில் தன் மகனும், மகளும் தாமதமாக வீடு சேர்வதை பார்க்கிறார். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். ஒரு நாள் மகன் முன்னதாகவும், ஒரு நாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை. இருவரையும் ஒரு சேர பார்க்க முடிவதில்லை அந்த தாய்க்கு. ஒரு்வர் வருவதற்குள் மற்றொருவர் தூங்கியே போயிருப்பார். ஒரு நாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க “உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!! இருவரும் கவுன்சிலிங் போய் வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிகச் சிறந்த மருத்துவர் அவர். எல்லாம் சரியாகி விடும்” என்று சொல்ல நாளை அந்த மருத்துவரை பார்க்க போகவேண்டாமென்றும் சீ்க்கிரம் வீட்டுக்கு வரவேண்டுமென்றும் தாயார் சொல்கிறார். அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் இருவரின் மூக்கையும் சுகந்த மணம் துளைக்கிறது. கைகால் கழுவி, உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு சொல்ல அங்கே செல்கின்றனர் இருவரும். மணம் வீசும் மலர்களின் வாசம்... அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்று நேரம் அமரச் சொல்கிறார். தாமாகவே கண் மூடி அந்தச் சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர் இருவரும். கண் திறந்த போது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாகச் சொல்ல... தாயார் மகிழ்ந்தார்...... குறிப்பு: மெழுகுவர்த்தி ஏற்றக் கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும் ! ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவத்திதான் தாய் ! மண்ணெண்ணை விளக்கும் வேண்டாம்.... என்ன சுவாமிக்கு விளக்கு ஏற்ற கிளம்பிட்டீங்களா ? உங்கள் வாழ்வில் நல்லதே நடக்க வாழ்த்துகள் ... (Source from Facebook internet)
migavum nalla thagaval. veettil vilakketruvathu pura irulai mattum alla aga irulaiyum virattum. nallennaiyil vilakketruvathal katru masum adaivathu illai
Dear Mala, You have shared a very good information with all of us. Though some of us may be knowing the reasons, in depth knowledge giving information is shared by you. Thank you very much. The example quoted is great.