1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Whatsapp Kalyanam

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jul 20, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வாஷிங்டன் திருமணம் மாதிரி இனி வாட்ஸ்அப் கல்யாணம் இனி களைகட்டும்....

    கல்யாணங்களை வீட்டிலிருந்தே பார்க்கலாம்.

    வீட்டுக்கே கல்யாண சாப்பாடு டெலிவரி.

    ஆனால், ஆன்லைனில் சண்டையைக் கொளுத்திப்போட முடியுமா ?

    Let's go on a limb and imagine a Tam Brahm wedding of the future.

    "இந்த வாட்சப் அழைப்பிதழை நேரில் வந்து அழைத்ததாகக் கொள்ளவும். இத்துடன் 100 GB data pack இணைக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு இரண்டு நாள் முன்னதாகவே பிக்பாஸ் வீடு மாதிரி ஸூமில் லைவ் ரிலேவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும்."

    "என்னது, கல்யாண சாப்பாடு வீட்டுக்கே வந்துடுமா ? அப்ப மாப்பிள்ளை அழைப்புலேர்ந்தே லாகின் செஞ்சுடறோம். எங்காத்து கீழ் போர்ஷன்ல வயசான மாமா இருக்கார். அவருக்கும் சேர்த்து அனுப்பிடுங்கோ"

    "என்னால நேர்ல வரமுடியாது. சாப்பாடோட, ஊஞ்சல்ல சுத்தறதுக்கு பச்சபுடியும் டோர் டெலிவரி செஞ்சுட்டா, நேர்ல கலந்துண்ட திருப்தி இருக்கும்"

    "சம்பந்தி ஆத்துக்கு தனி சூம் மீட்டிங்.. பொண்ணாத்துக்கு தனி சூம் மீட்டிங்.. அப்படித்தானே ? இல்லைன்னா நம்மாத்து கொணஷ்டை, மொகறைல இடிச்சுக்கறதெல்லாம் அவா பார்க்கவேண்டாம்"

    "சூம் மீட்டிங்ல அவ்ளோதான் வரும், மாமி. சம்பந்தி மாமி புடவை ராமர் பச்சையா, நீலமான்னு போன் செஞ்சு கேக்கறேளே, நியாயமா ?"

    வாத்தியார் :" இப்ப சப்தபதி மந்திரம் சொல்லபோறேன். எல்லாரும் ம்யூட்ல போங்கோ"

    "புடவை மாத்திண்டு வர இவ்ளவு நேரமா? அம்புஜம், அவ மேடைக்கு வந்தோன்ன ping பண்ணு, நான் அரிசி ஊர வெச்சுட்டு வந்துடறேன்"

    "அய்யோ பாட்டி.. Connection terminatedந்னா இண்டர்னெட் வேலை செய்யலைன்னு அர்த்தம். கல்யாணம் நடந்துண்டுதான் இருக்கு. சண்டையெல்லாம் இல்லை"

    "மானிட்டருக்கு அட்சதை போட்டியே, ஓரளவுக்கு நியாயம். ஆனா, ஹோமம் செஞ்ச எஃபக்ட் வரனும்னு வரட்டியெல்லாம் கொளுத்தறியே, இதெல்லாம் அடுக்குமா ?"

    "பெரிப்பா.. ஏதோ முடிஞ்சது கல்யாண சாப்பாடை ஸ்விகில அனுப்பி வெச்சோம். அதுக்காக கட்டுச்சாதக்கூடையெல்லாம் டோர் டெலிவரி செய்யமுடியுமோ ?"

    "ஏண்டி, லலிதா.. உனக்கு அரக்கு பார்டரா ? ஏற்கனவே உன்கிட்ட இந்த கலர் இருக்கோன்னோ. மாத்திப்போமா..? டன்ஸோல போட்டு அனுப்பி வெக்கறேன். நீ உன்னோடத அனுப்பி வை. புடவை வாங்கறப்ப கொஞ்சம் டேஸ்ட்டோட வாங்கப்டாது ?"

    "பாச்சு மாமா. நீங்க வரது அத்தையைப்பத்தி, சேகர் மாமகிட்ட சொல்றதா நினைச்சு அன்ம்யூட்ல எல்லார்கிட்டயும் சொல்லிட்டேள். வரது அத்தை கோச்சுண்டு லாகாஃப் செஞ்சுட்டா பாருங்கோ"

    "ஏண்டா கேமராமேன். லைவ் ஆன்ல வெச்சுண்டே பாத் ரூம் போய்டுவியா. இத்தனை பேர் பாத்துண்டுருக்கோமோன்னோ.. யார் கைலயாவது கொடுத்துட்டுப் போப்டாது ?"

    "ஏண்டா அம்பி, எட்டு மணிக்கே கல்யாண சாப்பாடு ஆத்துக்கு டெலிவரி ஆயிடுத்துன்னு கேட்டேன். ஸ்விகிக்காரன் 'மாமி.. நீங்கல்லாம் மொத பந்தி'ங்கறான்"

    "இந்த ஜெயந்தி சித்தி ரொம்ப மோசம். செலவானாலும் பரவாயில்லைன்னு ஆத்துக்கே ஸ்விகில கல்யாண சாப்பாடு அனுப்பி வெச்சா, திருப்பி டன்ஸோல ரெண்டு டிபன் கேரியர் அனுப்பி - அந்த பிசிபேளாபாத்தும், ஸ்வீட்பச்சிடியையும், உருளைக்கிழங்கு கறியையும் ஃபில் செய்து அனுப்பவும்னு எழுதி அனுப்பியிருக்கா"

    "யாருப்பா ? ஸ்விகியா ? அதான் கல்யாண சாப்பாடு கார்த்தாலயே வந்துடுத்தே.. ஓஹோ தாம்பூலப் பையா..? பெரிய இடத்துக் கல்யாணம்தான் "

    "ஆன்லைன் கல்யாணம். மொய் எழுதவேண்டாம்னு நினைச்சா.. ஈமெய்ல்ல Payment link அனுப்பறான் இந்த பஞ்சாபகேகன். விடாக்கண்டனாயிருக்கானே"

    "கெட்டிமேளம் வாசிக்கும்போது ம்யூட்ல போய்டறார் வாத்தியக்காரர். பயிஞ்சாயிரம் தண்டம்"

    "மாங்கல்ய தாரணம் ஆயிடுத்து. மாப்பிள்ளை இப்ப ம்யூட்ல போலாம்"

    "எல்லாரும் அன்ம்யூட் செஞ்சு 'மாப்பிள்ளை வந்தாரா", " மாட்டுப்பொண் வந்தாளா"ந்னு கேக்கலாம்"

    "சம்பந்தி சண்டை தனி சூம் மீட்டிங்க்ல நடக்கறது. விருப்பப்பட்டவா இந்த லின்க்ல க்ளிக் செஞ்சு கலந்துக்கலாம்".

    "அதான் ஆத்துக்கு சாப்பாடு வந்திருக்கு. அதிலேர்ந்து எதுக்கு அந்த பாதாம் அல்வாவை பொட்டலம்கட்டி வெச்சுக்கறே.. பழக்க தோஷம் விடாதுபோலருக்கே"

    "சார், நான் டெலிவரி மட்டும்தான் செய்ய முடியும். பரிமாறல்லாம் முடியாது. வாழை இலை நுணி எந்தப்பக்கம் போடனும்னெல்லாம் என்கிட்ட கேக்கறீங்க ?"

    "சாப்பாடு ப்ரமாதம். யார் கேட்டரிங்க்னு கேட்டேன். தேங்க்ஸ் மாமா. நீங்க எந்த ஏரியான்னு சொல்லுங்கோ, அதுக்கேத்தமாதிரி கேட்டரர் யாருன்னு சொல்றேங்கறான்"

    தன்யோஸ்மி
    Jayasala42
    A similar wedding was celebrated in my brother-in-law's
    house at Coimbatore.The marriage was on Apr 25th.nobody could attend from our side.We recd youtube ref two days earlier.We enjoyed seeing the wedding on line.Swiggy delivered the lunch/dinner items to the invitees in Coimbatore.
     
    Amica, vidukarth and Thyagarajan like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I love the creation of this story and enjoyed reading.
    But then No huge gathering. No rustling of kanjivarams. No perfumery. No sandle incense.no aroma from huge kitchen. No ogling! No thamboolam bags. Zoom weddings create so many no’s for me. No meeting of friends and hellos. No new wedding fixes.
     
  3. vidukarth

    vidukarth Platinum IL'ite

    Messages:
    2,444
    Likes Received:
    1,091
    Trophy Points:
    283
    Gender:
    Female
    very nice article, hats off to the imagination
     
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Hereafter such weddings will become common.Bride's parents may be asked to deposit the amt in a bank
    Jayasala42
     
    Thyagarajan likes this.

Share This Page