Village --- கிராமம்

Discussion in 'Tamil Nadu' started by gladiolus, Jan 27, 2011.

  1. gladiolus

    gladiolus Bronze IL'ite

    Messages:
    290
    Likes Received:
    14
    Trophy Points:
    40
    Gender:
    Female
    Hai!
    உங்களுக்கு கிராமத்தில் வாழ ஆசையா?
    கிராமத்து வாழ்க்கைப் பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்க!
    நான் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டதின் எல்லையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் மிகவும் அமைதியான சூழ்நிலையில் வசிக்கிறேன்.
    சில்லென்ற காற்று!
    தூய்மையான நீர்!
    வெள்ளந்தி மனிதர்கள்!
    சிலர் கிராமத்தில் வாழ விரும்புவீர்கள்! ஆனால் சில தயக்கங்கள்............?
    அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்!
    மேலும், கிராமங்களைப் பற்றி விவாதிக்க தனி forum இருக்கா?
    Pls யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க!
     
    Loading...

  2. krni

    krni New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Yes..Spent my childhood in village..After college, i had been out of village for a long time (apart from occassional visits for functions)..Visited towns, cities, countries - but still I'm longing for no-stress village life. I think the blessed are the one who can make a good earning by being in village...We are in a city and kids are in school now..My hubby and I have all the plans to settle down in our native place once the kids go to college..
     
  3. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    நான் கிராமத்தில் பிறந்தவன்தான். ஆறு, ஏரி, குலம், வாய்க்கால், நெல் வயல்கள் என சுற்றி திரிந்தேன். துவக்க கல்வி கிராமத்திலேயே. மேல்நிலைகல்வி இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்திருந்த சிறு டவுனில். பின்பு இன்ஞினேரிங் படிப்பு சிறு நகரத்தில். மேற்படிப்பிற்காக வட இந்தியா. வேலைக்காக நகரங்களில் - பின்பு அமேரிக்கா. தற்போது சில மாதங்களாக மீண்டும் பிறந்த கிராமத்திற்கு அருகிலுள்ள சிறு டவுனில்.

    வீட்டிற்கு பின்புறம் புதிய தோட்டம் - மரவகைகள், தானியங்கள், காய்கறிவகைகள், பூக்கள் - தோட்டத்தில் உலவும் சிறு உயிரினங்கள், வண்ணத்து பூச்சிகள், பறவைகள். கணினி முன் அமர்ந்து மூலைக்கு வேலை கொடுத்தது சிலகாலம். தோட்டத்தில் உடலுக்கு வேலை கொடுத்துக்கொண்டிருப்பது சிலமாதம்.

    வருவாய்க்காக மீண்டும் நகரத்தை நோக்கி போகவேண்டிதானிருக்கும். தோட்டத்தை கவனிக்க ஒவ்வொரு வாரமும் திரும்பி வரவேண்டிதானிருக்கும்.
     
    Last edited: Feb 10, 2011
  4. Coffeelover

    Coffeelover Platinum IL'ite

    Messages:
    2,007
    Likes Received:
    593
    Trophy Points:
    208
    Gender:
    Female
    @FirstBite, very interesting write about your village. :thumbsup:thumbsup:thumbsup:thumbsup
     
  5. gladiolus

    gladiolus Bronze IL'ite

    Messages:
    290
    Likes Received:
    14
    Trophy Points:
    40
    Gender:
    Female
    Hai Firstbite & Coffelover!
    உங்கள் பதில் கண்டு மகிழ்ச்சி!
    சில நாட்களாக யாரும் பதிலளிக்காததைக் கண்டு வருத்தமாகவே இருந்தது. யாருமே கிராமத்தை விரும்பவில்லையோ என்று நினைத்தேன். முதலில் உங்களுக்கு நன்றி!
    நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கிராமத்தில் தான் என்றாலும் கல்விக்காகவும், பிற தேவைக்களுக்காகவும் அருகில் உள்ள சிறு நகரங்களுக்கு செல்ல வேண்டியதாய் உள்ளது. நான் திருமணம் முடிந்து 2 வருட நகர வாழ்க்கைக்கு பிறகு மீண்டும் கிராமத்திற்கே திரும்பிவிட்டேன். என் கணவருக்கு கிராம்ம சூழல் பிடித்ததாலும், எங்கள் நிலத்தில் விவசாயம் செய்யவும் கடந்த இரண்டு வருடங்களாக கிராமத்தில் வசிக்கின்றோம். விவசாயத்தோடு என் கணவரின் transport business யும் கவனித்து கொள்கிறோம். கிராமத்தில் போக்குவரத்து வசதிதான் மிக மிக குறைவு. இரண்டே முறை மட்டுமெ ஒரு பேருந்து வந்து செல்லும். சில குறைகள் இருந்தலும் அவற்றையும் மீறி பல செளகரியங்கள் உள்ளதை எண்ணும்போது மகிழ்ச்சியே!
    தொடருவோம்...........
     
  6. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    உங்கள் கிராமபகுதியில் தங்கள் கணவர் போக்குவரத்து தொழில் நடத்துகின்றாரெனில், தங்களின் கிராமத்தின் முன்னேற்றத்திற்கு தங்கள் குடும்பம் முக்கிய பங்குவகிக்கின்றது என நினைக்கின்றேன். தங்களின் சேவை மென்மேலும் தொடர எனது வாழ்த்துகள்.

    நான் பிறந்த கிராமத்தில் வசதிகள் தற்போது பெருகிவிட்டன. தற்போது ஒரு பொறியியல் கல்லூரியே வந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இரு நகரங்களை இணைக்கும் சாலையின் ஓரத்திலேயே அமைந்திருப்பதனாலும், பேரூராட்சிக்கு அருகிலேயே அமைந்திருப்பதனாலும், பேரூராட்சியில் கிடைக்கும் வசதிகளை சுலபமாக பெறமுடிகின்றது. ஆனால் உட்புற கிராமங்களில், தாங்கள் கூறியதுபோலத்தான் ஒருசில மினி-பேருந்துகள் மட்டும்தான் சென்றுவரும். இருசக்கர வாகனங்கள் பெருகிவிட்டநிலையில் சிலர் அதனை பயன்படுத்துகின்றார்கள். ஆனால் மழைகாலங்களில் பல சாலைகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.

    உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் போக்குவரத்துவசதிகள் மிகமோசமானவை. ரயில்பாதை, தேசியநெடுஞ்சாலை இவற்றின் ஓரத்தில் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் மட்டும்தான் போக்குவரத்து வசதி கொஞ்சம் சுமாராக இருக்கும். இதர பகுதிகளுக்கு அரசு/பொது போக்குவரத்தை பயன்படுத்தி செல்லவேண்டுமென்றால், சிலநாட்கள் காத்துகிடக்கும் நிலையும் ஏற்படுமாம்!!!

    சிறுவயதுமுதல் விவசாயத்தில் எனக்கு விருப்பமுண்டு, ஆனால் வேடிக்கை பார்த்ததோடு சரி. ஐயனார்கோவில் காடு, ஆத்தங்கரை புலியமரங்கள், வயல்வெளி பனைமரங்கள், ஏரி/குலங்களில் ஆல்லி பூ, அல்லிக்காய், தாமரை பூக்கள் என எதுவும் என்னிடமிருந்து சிறுவயதில் தப்பவில்லை. ஒருசில தனியார் தோட்டத்திலிருந்த இலந்தை பழங்களையும், மாங்காய்களையும் ருசிபார்த்ததுண்டு.
     
  7. Coffeelover

    Coffeelover Platinum IL'ite

    Messages:
    2,007
    Likes Received:
    593
    Trophy Points:
    208
    Gender:
    Female
    I miss my village after reading both of your postings. my small village became big town now. But they had one street with temple for Brahmins and it is gone. But my school is still there. I want to take my sons over there to show them my school and Chrurch and especially Monday Bazar.

    Clean water, simple life and land etc were nice. Miss it.

    Sorry not writing in Tamil. I haven't written it for a long time. Hope you both understand it.

    By the way, which village do you belong? ( If it is too personal, sorry to ask you)

    Great day!!!!!!:cheers
     

Share This Page