1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Vanaspathi

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Sep 11, 2022.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    போலி நெய்யை தயாரிக்க வெறும் ஒரு கிலோவுக்கு 23₹ மட்டுமே....
    லெதர் சிட்டி என்று பிரபலமாக அறியப்படும் கான்பூரில், ஜஜ்மாவிலிருந்து கங்கைக் கரையோரம் உள்ள 10 -12 கிலோமீட்டர் சுற்றளவில் நீங்கள் நடந்து செல்ல நேர்ந்தால் நீங்கள் மூக்கை பொத்தி தான் செல்ல வேண்டும்,
    இங்கே, கங்கைக் கரையில்
    பல ஆயிரங்களில், உலைகள் எரிந்து கொண்டு இருப்பதை நீங்கள் காணலாம். இந்த உலைகளில் விலங்குகளை வெட்டிய பிறகு எடுக்கப்படும் கொழுப்பு கரைக்கப்படுகிறது.
    முக்கியமாக 3 விஷயங்கள் இந்த கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
    1- எனாமல் பெயிண்ட் (இது வீடுகளின் சுவர்களில் பொருந்தும்)
    2- ஒட்டு பசை (ஃபெவிகால் போன்று, காகிதம், மரம் ஓட்ட பயன்படுத்துகிறோம்)
    3- மேலும் மூன்றாவது மிக முக்கியமான விஷயம் "சுத்தநாட்டு நெய்" (அவர்கள் வைத்த பெயர்) ஆகும்.
    ஆம் "தூய நாட்டு நெய்" இந்த நெய் ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை மொத்த சந்தைகளில் விற்கப்படுகிறது. இதை "பூஜை நெய்" என்றும் அழைக்கப்படுகிறது,
    இது பெரும்பாலும் அன்ன தானம் (லங்கர் மற்றும் பண்டாரா) போன்ற இடங்களில் மேலும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படுகின்றன. மக்களும் 15 கிலோ டின் வாங்கி கோயில்களுக்கு அளித்து புண்ணியம் சம்பாதிக்க அறியாமையில் செய்கிறார்கள்.☹️
    இந்த "தூய நாட்டு நெய்யை" அசலா அல்லது போலியா என நீங்கள் அடையாளம் காண்பது கடினம். இது ரவைரவையாக தோற்றமளிக்கும் எஸ்ஸென்ஸ் போடப்படுவதால் நறுமணத்தினாலும் கண்டு பிடிக்க முடியாது,
    கங்கை பகுதியில் உள்ள ஒவ்வொரு வனஸ்பதி தொழிற்சாலைகளும் இந்த விஷத்தை (அதாங்க தூய நாட்டு நெய்) ஏராளமாக வாங்குகின்றன. கிராமப்புறங்களில் மக்கள் இந்த வனஸ்பதி நெய்யால் செய்யப்பட்ட லட்டுக்களை திருமணங்களில் மகிழ்ச்சியுடன் சாப்பிடுகிறார்கள்.
    திருமணங்கள் மற்றும் விருந்துகளில், இது காய்கறிகள் தாளிக்க பயன்படுத்தப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் சுத்த சைவமாக உள்ளவர்களும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் தள்ளபடுகின்றனர்.
    திருமணங்களில் அவர்கள் இந்த நெய்யில் தாளிக்கபட்ட உணவை உண்ணுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
    உங்கள் ஊரில் உள்ள கால்நடை வளர்ப்பாளரின் காளையின் (எருமையின் ஆண் குட்டி) கொழுப்பு தான் கான்பூர் வழியாக உங்கள் உணவை அடைந்துள்ளது.
    சுத்த சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் மற்றும் விரதம் இருப்பவர்கள் இது போன்ற மிருக கொழுப்பு கொண்டு தயாரிக்கப்பட்ட நெய் போன்ற உணவுகளில் இருந்து தங்கள் வாழ்க்கையில் சாப்பிடாமல் எந்த அளவுக்கு தப்பிக்க முடியும் என்பதை உங்கள் அனுமானத்துக்கே விட்டு விடுகிறேன்.
    இப்போது நீங்கள் உண்ணும் வனஸ்பதி நெய் போன்றவற்றில் என்ன கிடைக்கும் என்று நீங்களே சிந்தியுங்கள். (முதல் வரியை மீண்டும் படிக்கவும்)
    சுத்த நாட்டு நெய்யை விற்பனை செய்வதாகக் கூறும் பெரும்/ சிறு நிறுவனங்கள் கூட இதைப் பயன்படுத்தி தங்கள் பைகளை நிரப்புகின்றன என்பது ஆச்சரியம் அல்ல.
    எனவே நெய்யை தயாரிக்கிறார்கள்?
    யார் எவ்வளவுக்கு விற்கிறார்கள் என்ற விவாதம் அர்த்தமற்றது.
    ஒரே வழி மட்டும் உள்ளது....
    நீங்கள் தூய நெய்யை மட்டுமே சாப்பிட விரும்பினால், உங்கள் வீட்டில் ஒரு பசுவை வளர்த்து தூய்மையான நெய்யை தயாரித்து உண்ணலாம், அல்லது மாடு எருமை வளர்ப்பவர்கள் வீட்டிலிருந்து வாங்கி நெய் சாப்பிடலாம்.....
    அது நன்றாக இருக்கும்.
    அப்புறம் உங்கள் விருப்பம்....தமிழகத்திலும்கிடைக்கிறது
    பொது நலன் கருதி இந்த பதிவு....
     
    Kohvachn likes this.
    Loading...

Share This Page