1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thiruvalluvar, M. B. A.

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jan 8, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Whether your preliminary degree is art, science or Engineering or even medicine, now a days it is followed by a management Diploma or Degree.This is the trend.

    As people have started taking more and more interest in religion and mythology, they select topics and characters relevant to management. Even in our group mails, we have seen Hanuman, Lord Krishna and garuda as management Gurus.


    திருவள்ளுவர் மேலாண்மை ப்பற்றி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா என்று திருக்குறளைப் புரட்டியபோது தென்பட்டது இந்த குறள் .


    " வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை

    அதற்குரியன் ஆகச் செயல்"


    ( இந்த வேலைக்கு இவன் தான் தகுதி உடையவன் என்று கண்டு கொண்ட பிறகு அந்த வேலைக்கு அவனையே முழுப் பொறுப்பாளனாக ஆக்கி விட வேண்டும்)


    இந்நாளில் இந்திய அறிஞர்களும் மேலை நாட்டு அறிவாளர்களும் எடுத்துச் சொல்லி வருகிற மேலாண்மைத் தத்துவம் ஒன்றினைப் பட்டறிவு ( அனுபவ அறிவு ) மிகவே படைத்த திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.


    இந்தப் பணியினை முடிக்க இவனே முடிக்கத் தகுந்தவன் என்ற முடிவுக்கு வந்த பின்னர்,அவனுடைய உரிமை வளையத்தில் மூக்கை நுழைப்பது அவன் ஊக்கத்தை முற்றிலும் பாழ்படுத்தி விடும் என்பது மேலாண்மைத்துறை

    அறிஞர்களின் முடிவாகும்.

    மேற்பார்வை ( supervision ) என்பது மென்மையான உரசல் அற்ற செயல்.நமது நிறுவனம் என்றாலும், நாமே ஒப்படைத்த பொறுப்பு எனினும் , பொறுப்பாளர்களைப் புரட்டிப் புரட்டி எடுப்பதும்,அளவுக்கதிகமான நெறி முறைகளையும், இலக்குகளையும் ( targets )நினைத்த நேரத்தில் புகுத்து வதும் செயல்திறனைப் பாதிக்கும்.ஊக்கத்தைச் செல்லரித்து விடும்.


    நம்ப வேண்டும் . நம்பப் படுகிறோம் என்பது வெளிப்படையாக விளங்க வேண்டும்.

    It is not enough if justice is rendered, but it should seem to have been rendered.In the same way the belief should be explicit.

    Now our grown up children also expect the same thing from parents.

    அவநம்பிக்கை என்பது அலுவலக நிர்வாகத்துக்கு மட்டுமின்றி குடும்ப அமைதிக்கும் வைக்கும் தீப் பொறி ஆகும்.முற்றிலும் நம்புகிறோம் என்பதற்கு வெளி அடையாளம் அவரது சுதந்திரத்தை மதிப்பது,அவரது பொறுப்பு வளையத்தில் புகுந்து விடாமல் இருப்பது.

    2000 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் பஞ்சுப் பிரதேசமாக ( cotton field ) ஆக இருந்த வள்ளுவச் சிந்தனை, இன்று புடவை வேட்டிகளாய் ,ready made ஆடைகளாய் , management

    guidelines ,Human Resources Development என்ற நாமகரணம் பெற்றுப் பொலிவுடன் விளங்குகிறது.
    Jayasala42
     
    2 people like this.
    Loading...

  2. Geetamohan

    Geetamohan Bronze IL'ite

    Messages:
    140
    Likes Received:
    47
    Trophy Points:
    48
    Gender:
    Female
    nice write up, keep them coming
    intrested to learn more from you
     

Share This Page