1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thirunelveli Upacharam By A Native Of Thirunelveli

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Jan 13, 2020.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,459
    Likes Received:
    10,685
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எதெல்லாம் என்னெங்க பெரிய ETIQUETTE
    எங்க ஊரில் எல்லாம் ஏதாவது விருந்தாளிகள் வந்தால்,
    "நீங்கள் எல்லாம் எங்கள் வீடுகளுக்கு வரவே மாட்டீர்களே, ஏதாவது
    காரணம் இருக்கும்" என்று முதலிலேயே முகத்தை சுளிக்க வைத்து
    விடுவோம்.
    அடுத்து வீட்டு சிறார்களை வலுகட்டாயமாக இழுத்து
    வந்து அவர்களை விருந்தாளிகளின் முன் நிறுத்தி, மாமாவை வாங்கன்னு
    கேளு; அப்பத்தான் போகும் பொது காசு எல்லாம் கொடுப்பார் என்று
    ஒரு குண்டைத் தூக்கி அனாசயமாகப் போடுவோம் .
    எங்கள் ஊர் பக்கம் விருந்தாளிகள் எல்லாம், கையை வீசிக் கொண்டு
    வெறுங்கையுடன் வந்தால் வீட்டுக் காரர்கள் முகத்தில் எள்ளும், கொள்ளும்
    வெடிக்கும்.
    இதில் எல்லாம் ஒளிவு மறைவுல்லாம் கிடையாதாக்கும்.
    எங்கள் ஊர் பக்கம் விருந்தாளிகள் கோவிலில் வரிசையாக
    அமர்ந்திருக்கும் பிச்சைக் காரர்களுக்கு சில்லரையாக மாற்றி கொடுப்பது
    போல,
    திரும்பிச் செல்லும் பொது இடுப்பிலுள்ள கைப் பிள்ளையில் இருந்து
    அணிவகுத்து
    நிற்கும் மழலைப் பட்டாளங்கள், உள் கட்டுக்குள் தாவணி
    அணிந்து வெட்கத்துடன் எட்டிப் பார்க்கும் சமைந்த பெண்கள் வரை,
    சில்லரையாக இல்லை, குறைந்தது ஐந்து பத்து என்று நோட்டாக கொடுக்க
    வேண்டுமாக்கும்.
    வந்தவரிடம் எங்கள் வீட்டில் எல்லாம் நீங்கள் சாபிடுவீர்களா என்ன, என்று
    வந்தவர் சாப்பாட்டு நேரத்தில் வந்தால் கூட பசியில் களைத்த முகத்தை
    வலிய ஒரு அசட்டுப் புன்னகையில் மறைத்து இப்போதுதானே
    பஸ்டாண்டில் போத்தி ஹோட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டு வந்தேன்
    என்று பொய் சொல்ல வைத்து விடும்.
    விருந்தினர் முன்னேயே ஒரு சிறுவனிடம் ஒரு பெரிய லோட்டவைக்
    கொடுத்து, எங்க வீட்டுக்கு வெளியூர் மாமா வந்திருகின்றார், என்று
    சொல்லி, எதி வீட்டு மதினியிடம் பால் வங்கிக் கொண்டு வர
    அனுப்புவோம்.
    வந்த விருந்தினருக்கு நன்றாக நம் வீட்டு நிலைமையை சொல்ல,
    மறந்து விடாமல் ஒரு கரண்டி காப்பிதூளையும் வாங்கி வரச் சொல்லிவிட்டு,
    காலையில் கடன் வாங்கிய காபிதூளையும், அம்மா சேர்த்து தந்துவிடுவாளா
    ம்

    என்று சொல்லும் படியும் கூறுவோம்.
    வீட்டில் நேற்று வாங்கிய மைசூர் காப்பித்தூள் பாட்டிலில் இருப்பதை அவர்
    பார்க்கவா போகிறார்


    என்ன, திருநெல்வேலி உபச்சாரம்னா சும்மாவா, பின்னே.
    நானும் இன்னும் திருநெல்வேலி ஆள்தான் என்பதால், எனது வீடு தேடி
    வரும் நண்பர்கள் இந்த எழுதிய விஷயங்களை மறந்தா விடுவீர்கள்.
    செல்விருந்து நோக்கி வர விருந்து காத்திருப்பான் என்று வள்ளுவர்
    சொன்னாராமே அதுவெல்லாம் எங்களுக்கு எட்டுச் சுரைக்காய்தான்.
    எங்கள் சீமையில் வரும் விருந்தினர்களும் முகம் திரிந்து நோக்க
    குழையும் அனிச்ச மலர்கள் எல்லாம் இல்லையாக்கும்.
    There is similar famous upacharam called 'thirupoonduruthi upacharam'.The place is near Kumbakonam
    jayasala 42


     
    Sachini likes this.
    Loading...

Share This Page