1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thirukkural Meaning In Tirunelvel Slang

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Jun 27, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    திருநெல்வேலிக்கார்ரை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னா எப்புடி இருக்கும்....?

    1) கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத்தக.

    பொருள்:
    ஏல, எல்லாத்தையும் ஒளுங்கா படி. கூமுட்டை படிச்சா போதாதுல. அதுல என்ன எளுதிருக்கோ அது படியே நடக்கணும்ல. போ போ… போய் சோலியப் பாரு, போ.

    2) மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து.

    பொருள்:
    அனிச்சம்பூ தெரியுமால ஒனக்கு? எனக்கே தெரியாது அப்ப ஒனக்கெங்கல தெரியப் போவுது. சரி, அத வுடு. அத மோந்தாலே… ஏல மோண்டுறாதே, மோந்து பாக்கச் சொன்னேம்ல. அத மோந்தா வாடிடுமாம், சொல்லுதாவ… நம்ம வூட்டுக்கு விருந்தாளி வார நம்ம மூஞ்சி கோணக்க மாணக்க போச்சு வெச்சுக்க, எவம்ல வருவான்? ஒரு பய வரமாட்டான். போ போ… போயி அந்த பூவ தேடு, போ.

    3) இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

    பொருள்:
    ஏல மொந்தம் பளம் இருக்கும் போது மொந்தங் காயத் திம்பியா… நீ தின்னாலும் திம்பேல… திம்பியா சொல்லு… தின்ன மாட்டேல்ல… அப்பம் ஏம்ல நல்லத பேசாம ஆக்கங்கெட்ட கூவை கணக்கா எல்லாரையும் திட்டிட்டு அலையுத… போ போ… போயி மொந்தம் பளத்த தின்னு, போ.

    4) புறம் கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
    அறம் கூறும் ஆக்கம் தரும்.

    பொருள்:
    அவன பாக்கேல சக்கரையா பேசுத… இல்லேன்னா ஒரே வெசவு… இதால ஒம் பொளப்பு.. நீ வெளங்க மாட்டேல… ஏல இதுக்கு நீ செத்தே போயிடலாம். போ போ… போயி யோசி, போ.

    5) சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்.

    பொருள்:
    நல்ல பேசுதல நீ… இம்புட்டும் எங்கல படிச்ச?… ஏல நீ பேசற மாரி நடக்கியா? எம்ல முளிக்க… போ போ… போயி சொள்ள மாடன் முன்னாடி முளி, போ.

    Forwarded
    Jayasala 42
     
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,718
    Likes Received:
    12,541
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Nice sharing. Thanks.
     

Share This Page