1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Tamil Proverbs ( continued)

Discussion in 'Posts in Regional Languages' started by PushpavalliSrinivasan, Jun 3, 2008.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    111.எண்ணெயிலிட்ட அப்பம் போல குதித்தானாம்
    112.எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம்.
    113.எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?
    114.எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி?
    115.எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தார்ப் போல.
    116.எருதின் வலி காக்கைக்குத் தெரியுமா?
    117.எருமை மாட்டின் முதுகில் மழை பெய்தார்ப் போல.
    118.எருமை வாங்குமுன் நெய் விலை பேசாதே பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
    119.எய்தவன் இருக்க அம்பைப் பழிப்பானேன்?
    120.எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி தான் போய்க் காடிப் பானையில் விழுமாம்.
    121.எலிப் பாழியானாலும் தனிப் பாழி.
    122.எள் என்பதற்கு முன் எண்ணெயோடு நின்றானாம்.
    123.எள்ளையும் தின்று எதிரேயும் உறுமினாளாம்.
    124.எறும்பூரக் கல்லும் குழியும்.
    125.ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
    126.ஏதாடி என்றால் கோதாடி என்றாளாம்.
    127.ஏமாந்தவன் தலையில் மிளகை அரைத்தானாம்.
    128.ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கியசாலி.
    129.ஏழு கடலும் சுற்றினவனுக்கு ஏரிக்குப் போக வழி தெரியலையாம்.
    130.ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை.
     
    Loading...

Share This Page