1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

tamil novel lovers

Discussion in 'Books & Authors in Regional Languages' started by deepthiraj, Jun 26, 2014.

  1. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi sisters/friends,
    I have started this thread named "tamil novel lovers" .. interested ppl can join... i love to read novels... enna madhiri yarna join pannikalam :welcome
     
    Last edited by a moderator: Jun 26, 2014
    Loading...

  2. PriyaSrini

    PriyaSrini Moderator Staff Member Platinum IL'ite

    Messages:
    1,381
    Likes Received:
    1,413
    Trophy Points:
    285
    Gender:
    Female
    Hi Deepthiraj,

    Welcome to the Book lovers forum. Everyone here likes to read novels, just like you.
    Share with us your favourite Tamil author or the novels you enjoy reading, and others will join in the discussion.

    Hope you have a memorable time here. Happy reading..
     
  3. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    விதி எழுதும் விரல்கள் – (என். கணேசன்)

    நமக்கு மிக மிக பழக்கமான கதைகரு. ஒரே இடத்தில் குவிந்திருக்கும் செல்வத்தைக் கலைத்து தேவைப்படுபவர்களுக்கு அளிப்பது.

    “ஏமாற்றுபவர்களை ஏமாற்றுவதில் தவறில்லை” இந்தக் கொள்கையை வசந்த் சொல்லும் போதே எதை நோக்கி அவனின் பயணம் இருக்கிறது என்று பிடிபடத் துவங்குகிறது.

    நாவலின் தொடக்கத்திலே வசந்தை பிடிக்க அடியாட்கள் முயன்று தோற்கும் போது இவனும் இந்தக் கதாசிரியரின் முன் நாவல்களில் ஒன்றான அமானுஷ்யன் கதாநாயகனின் அருகில் வருவானோ என்ற நினைப்பில் தொடர்ந்தால் இருவருமே வெவ்வேறு வார்ப்புகள்.

    நேர்மை ஒன்றையே தெரிந்திருக்கும் தகப்பனை விவரமில்லாதவர் என்ற வட்டத்தில் அடைத்துவிட்டு தன் கனவை நனவாக்க புறப்பட்ட வசந்தத்தின் முன் பாதைகள் விரிவடைந்து கொண்டே போகிறது. தடைகளைக் கூட மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவன்.

    திறமை ஒன்றையே மூலதனமாக்கி அமைச்சரின் வாரிசான சம்பத்தின் நம்பிக்கையைச் சம்பாதித்த நொடியிலிருந்து தன் வேலையைக் காட்டி மொத்த கறுப்பு பணத்தையும் காரிருளில் தள்ளிய வசந்த்தை பிடிக்கப் போராடும் சம்பத்தின் தேடுதலே கதையின் மையம்.

    கெட்டவனிடம் இருந்து திருடுவதில் என்ன தவறு என்று கேட்டவனுக்குள் வந்த காதல் மனதை மாற்றியமைக்கும் நிகழ்வாகிறது. பணம் என்பதற்குப் போதும் என்ற சொல்லை சொல்லாதவனை அதைச் சொல்லவும் வைத்துவிடுகிறது.

    கதாபாத்திர வடிவமைப்பின்படி கதையின் நகர்வு சராசரியான ஆளின் ஆசையைப் பூர்த்திச் செய்வதாகத் தான் அமையும் என்று எதிர்பார்த்தால் “முழுமையான கதாநாயகனாக” முடிவில் வசந்த் நின்றுவிடுகிறான்.

    எவர்களிடமிருந்து எடுக்கப்பட்டதோ அவர்களிடமே வந்து சேர்கிறது.
     
  4. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    காவ்யாவின் கறுப்பு தினங்கள் - (ராஜேஷ்குமார்)
    திருமண வாழ்வில் துரோகத்தைச் சந்திக்கும் பெண் முதலில் துவண்டு போனாலும் அதிலிருந்து மீண்டு வரும் வலிமையைத் தன்னையறியதல் மூலமே விரைவில் பெற்றுவிடுகிறாள்.

    தன்னைச் சந்திக்க வந்தவர்கள் சொல்லும் காவ்யாவை பற்றிக் கேள்விபட்ட எழுத்தாளர் ராஜேஷ்குமார் அதை நாவலாக எழுதத் தொடங்குகிறார்.

    தன் கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வந்ததால் வீட்டை விட்டு வெளியேறி தன் குழந்தைகளுடன் தனித்து வாழும் காவ்யாவிற்கு அண்ணன் இருந்தும் இல்லாத நிலை தான்.

    சட்டரீதியாகக் கணவனிடம் விவாகரத்து பெற்று வேறு ஒருவரை மணக்கும் காவ்யா விபத்தில் முதல் கணவன் இறந்ததைத் தன் குற்றமாகக் கருதி குற்றவுணர்வால் புதிய தாலி ஏறிய சில மணி நேரங்களிலே தன் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறாள். தாலி கட்டியவன் புரிய வைத்தாலும் மூடிய கண்ணைத் திறக்காமல் விடாப்பிடியாகத் தன் கருத்திலே இருப்பவள் அங்கேயே வாழ்வை தொலைக்கிறாள்.

    தன் இரு பிள்ளைகளும் வளர்ந்து அவர் அவர்கள் வாழ்வை பார்த்து போய்விட, தனிமை அவளை இதய நோயாளியாக்கிவிடுகிறது. தன் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் அப்பள்ளியிலே தன் கடைசி மூச்சையும் விட்டுவிடுகிறாள்.
     
  5. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நெஞ்சினிலே ஆசைமுகம் - (நீலம்மூன்)
    பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று சொல்வதை மெய்பிக்க எழுதப்பட்ட கதை.

    தாயின் உடல்நிலையை முன்னிட்டு கிடைத்த புது வேலையைப் பற்றிக்கொண்டு கொடைக்கானல் வரும் சிராவணியின் வருகை பலரின் மனதில் விதவிதமான உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது.

    முதலாளியின் குடும்பத்தினர் அவளின் மீது பாச மழையைப் பொழிய, முதலாளியின் தங்கை மகனான வம்சி கிருஷ்ணாவோ நீ தேவை ஆனால் திருமணம் எல்லாம் செய்யமாட்டேன் வைத்துகொள்கிறேன் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாலும் விசித்திரங்களை உள்ளடக்கிய பெண்ணின் மனம் அவனைத் தான் விரும்புகிறது.

    சிராவணியின் தாய் மீது தான் தவறு இருந்து இருக்குமோ என்பது மாதிரியான கதையோட்டத்திலே நகர்ந்து முடிவில் முதலாளிக்கு ஒரு தம்பி இருந்தான் என்று சொல்லப்படும் வேளையில் உன்னதப் பெண்மணியாக அவளின் தாய் உறவுகளின் மத்தியில் நிலைத்து நிற்கிறார். இவ்வளவு நாட்கள் தங்களைத் துரத்திய தவறான கேள்விகளின் வீரியத்தில் துவண்டிருந்தவள் மறைபொருளான கடந்தகாலம் வெளிவந்த பிறகு தலை நிமிர்ந்து நிற்கிறாள்.

    வார்த்தைகளால் சிராவணியைக் குத்தி குத்தி காயப்படுத்திக் கொண்டே இருக்கும் வம்சி உடலின் மீது வன்முறையான கதாநாயகியின் கையை உடைப்பது போன்ற குடும்ப நாவலின் இலக்கணம் ஒன்றையும் நிகழ்த்துகிறான்.

    தன்னை அரவணைத்து ஆளாக்கிய குடும்பத்திற்குத் துரோகம் செய்ய வேண்டுமா என்று யோசித்து வம்சியின் தங்கை வெளிப்படுத்தும் காதலை ஏற்காமல் உள்ளுக்குள் இருக்கும் அவளின் மீதான காதலையும் புதைத்துக்கொண்டு தவிக்கும் விஜேந்திரனுக்கு வம்சியாலே காதல் வானில் சிறகடிக்கும் சுதந்திரம் கிடைக்கிறது.

    இரண்டு மூன்று கதாபாத்திரங்கள் பேசுவதை இடைவெளியில்லாமல் ஒரே பத்தியில் கொடுத்து புரிந்து கொள்வார்களா என வாசிப்பவர்களின் சாதூர்யத்தை சோதிக்கிறார்கள் போல.
     
  6. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    ஜமுனா ஜாக்கிரதை - (ராஜேஷ்குமார்)
    தனிமனித வக்கிரங்கள் கற்பனைக்குக் கூட எட்டாதவை.

    ஐந்து வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களும் தற்போதைய நிகழ்வுகளும் மாறி மாறி ஒவ்வொரு அத்தியாயமாகக் கதைக்குள் இழுத்துச் செல்கிறது.

    பெங்களூரில் தீவிரவாதிகளின் வெடிகுண்டுக்கு பலியான கட்டிடத்தின் அடியில் இருக்கும் பாதாள அறையில் ஒன்பது ஆண்களின் முகம் பாடம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிரும் போலீஸை விசாரணையை மேற்கொள்ள முடியாமல் அரசியல் அழுத்தம் அதை மறைக்கச் சொல்கிறது.

    சென்னை ஆபிஸர் அகிலன் பெங்களூரில் நுழையும் போதே அங்கிருக்கும் நிலையைப் புரிந்து கொண்டவர் அரசியல் அழுத்தம் தன்னைப் பாதிக்காது என்று அடுத்த அடியை குற்றவாளியை நோக்கி எடுத்து வைக்கும் போது வீரபத்ர ராஜாவே உண்மையைச் சொல்லிவிடுகிறார்.

    சமஸ்தான வாரிசான தற்போதைய அரசியல்வாதி வீரபத்ரராஜாவின் அக்கா ஜமுனா தன் பேத்தி ஹரிணியை நாசப்படுத்தியவர்களைக் கொன்று இப்படி பாடம் பண்ணி சுவற்றில் மாட்டிவைத்ததைச் சொல்கிறார்.

    ஹரிணியைப் பெண் பார்க்க வர போகிற அஸ்வினை பற்றிய அனைத்து தகவல்களையும் கிடைக்கப் பெற்றவள் அதை அவனிடம் வெளிப்படுத்தி மறுப்பதால் கோபம் கொண்டவன் பணத்தைக் காட்டி அவளின் காதலனை தன் பக்கம் இழுத்துத் திருமணம் முடிந்து தேனிலவு சென்ற இடத்தில் அவளைக் கடத்திப் போய் தன் நண்பர்களுக்குப் பலியாக்கியதை தெரிந்து கொண்ட அவளின் பாட்டி ஜமுனா அனைவரையும் கொன்றாலும் ஹரிணியின் கணவன் சம்பத் கண்ணில் படாமல் போகிறான்.

    ஆனால் கேரளா எஸ்டேட்டில் வேலை செய்த சம்பத்தை ஜமுனா என்ற யானை கொன்றுவிட்டது தற்போதைய அகிலன் விசாராணையில் தெரியவருகிறது.
     
  7. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    அன்பே என் அன்பே - (நித்யா மாரியப்பன்)
    விரும்பியோ விரும்பாமலோ திருமண வாழ்வு தனிப்பட்ட மனிதர்களின் குணத்தை மாற்றித் தான் விடுகிறது. அவர்களின் சரிபாதியாக வருபவர்களின் குணத்தின் சார்பிலே அம்மாற்றமும் அமைந்துவிடுகிறது.

    தன் செயலால் பாதிக்கப்பட்டவர்களின் மனம் சமாதானம் ஆகும்வரை ஓயாமல் அதே சிந்தனையில் இருக்கும் ராகவ், தன் சுயமரியாதையை இழக்கும் ஒரு சொல்லைக் கூட விரும்பாத அவந்திகா என்ற இரு திசைகளில் தனித்துப் பறந்தவர்களைத் திருமணம் என்ற சடங்கு ஒரே பாதையில் செலுத்தும் கதை.

    தன் தோழியின் திருமணத்திற்கு வந்த அவந்திகா அந்த சம்பிரதாயங்கள் முடிவதற்கு முன்பே மாப்பிள்ளையின் தம்பிக்கு மனைவியாகிறாள். தொழில் போட்டியால் ராகவை வீழ்த்த எய்த அம்பில் அவந்திகா அகப்பட தன்னால் ஒரு பெண் பாதிக்கப்படுவாளோ என்ற பதட்டத்தில் அவளை மணந்தவன் காதல் கணவனாக மாறத் தேவைப்படும் நேரத்தை எடுத்துக் கொள்கிறான். இங்கே தான் கவனத்தில் தெரிந்து கொண்டது எழுத்தாளரின் மனப்போக்கை. முழுவதும் நேர்மறை மனிதர்களும் அவர்களின் செய்கைகளும் தான் கட்டாயம் என்பதைக் காதலாக மாற்றியது.

    மூன்று காதல் ஜோடிகள் அவர்களின் திருமண வாழ்வு என்று செல்கிறது. கூட்டுக் குடும்பம் கபூர் குடும்பமாகப் போனதால் சென்டிமெண்ட் கண்ணில் படவில்லை. இந்தி சீரியல்களின் தாக்கத்தை உணர முடிந்தது. வலிந்து திணிக்கப்படாத காதல் காட்சிகள் இல்லாததற்கு பாராட்டப்படவேண்டும்.

    இன்னும் கொஞ்சம் ஷார்ப் பண்ணி இருந்தால் நச்சென்று இருந்திருக்கும்.
     
  8. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    கண்ணில் தெரியாத வானம் - (ராஜேஷ்குமார்)
    ஆராய்ச்சியாளரின் பார்வையில் அனைத்துமே அவன் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் பொருட்கள் தான். விதிவிலக்குகளும், நியாய அநியாயப் பேதங்களும் அவனுக்கில்லை.

    மூன்று துறையில் இருக்கும் முதன்மையானவர்கள் திடீரெனக் காணாமல் போகின்றனர். எந்தவித தடயமும் இல்லாமல் இருப்பதால் போலீஸ் குழப்பத்திலே ஆழ்ந்திருக்கிறது.

    தன் தோழி கண்டுபிடித்ததை உலக அரங்கத்திற்குள் கொண்டு போக முடியாமல் சயின்டிஸ்ட் குப்தா தடை போட்டதால் தற்கொலை செய்து அவள் இறந்து போனதை பொறுக்க முடியாமல் நிகிதா பழிவாங்க புறப்படும் போது தான் தெரியவருகிறது.

    குப்தா மூளை ஆராய்ச்சியை மேற்கொண்டு மனித மூளையை ரோப்போட்டின் உள்ளே வைத்து அதைத் தன்னிச்சையாக இயங்க வைக்க அறிவான மூன்று ஆட்களைக் கடத்தி வந்து ஆராய்ச்சி என்ற பெயரில் அவர்களைக் கொலை செய்தது. உண்மை தெரிந்த நிகிதாவையும் ஆராய்ச்சிக்கு பலி கொடுக்க முயலும் போது தப்பித்தவள் குப்தா கண்டுபிடித்த ரோபோட் மூலமே அவரை அழித்துவிடுகிறாள்.
     
  9. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    உருகும் இதயம் உனைத் தேடி - (ராஜி அன்பு)
    கடந்த கால நினைவுகளை விட்டு ஒதுங்கினால் தான் நிகழ்கால விஸ்தரிப்பும் எதிர்கால ஒழுங்கும் இல்லையேல் நிச்சயமின்மை தான்...

    தன் அலட்சிய கவனக்குறைவால் தாயை விபத்தில் பலிகொடுத்துவிட்டுக் குற்றவுணர்வில் தவிக்கும் தன்யாவிற்கு அசோக்கின் அரவணைப்பு அனைத்தையும் மறக்க செய்கிறது.

    பெற்றவர்கள் திட்டுவதால் பதினாங்கு வயதில் வீட்டைவிட்டு வெளியேறிய அசோக் சிறார் குற்றவாளியாகி தண்டனை காலம் முடிந்து நர்ஸ் சாருமதியின் அன்பால் திருந்து வாழ்கிறான். தன்யாவின் மூலம் காதல் அவனை அணைத்தாலும் தன் கடந்தால கருப்புப் பக்கங்கள் அவளை நெருங்கவிடாது என்று சுருங்கி போகுபவனை நிகழ்கால அசோக் மட்டுமே தன் காதலன் என்ற தன்யாவின் முடிவு இருவருக்கும் வசந்தத்தை அழைத்துவருகிறது.

    தன் போக்கில் சுற்றும் இந்தக் காதலர்களின் காதல் பலரின் கண்ணை உறுத்த விளைவு அவர்களின் வலையில் வீழ்ந்து சில மாத பிரிவை எதிர்கொள்கின்றனர்.

    பிரிவின் காலத்தில் அவர்களின் எண்ணங்களும் காதலுக்கான உருகுதலும் தவிப்பும் நன்றாகவே வந்திருக்கிறது கதையின் போக்கில்.

    அடிமன இயல்பான குணத்தை எவராலும் மாற்றமுடியாது என்பதற்கு வருண் சாட்சியாகிறான்.

    இயல்பான சுபமான முடிவை நோக்கி தங்களின் காதலை நகர்த்துகின்றனர் அக்காதலர்கள்.
     
  10. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    கண்ணன் என்னும் மன்னன் - (இந்திரா சௌந்தர்ராஜன்)
    சூரிய பகவானிடமிருந்து பூமிக்கு வந்த சமந்தகமணியைப் பற்றியது.

    துவாரகையில் கண்ணனைவிடத் தன் புகழ் பரவ வேண்டும் என்று தவமிருந்து சூரியதேவனிடம் பெற்ற சமந்தகமணியால் பெரும் செல்வந்தனாகி மக்களுக்கு வாரி வழங்குவதால் தானே பேரரசன் என்ற கர்வமும் எழுகிறது சத்ராஜித்துக்கு,அதனால் கண்ணனை துச்சமாக மதிப்பவன் வேட்டைக்குப் போகும் தம்பியிடம் சமந்தகமணியைக் கொடுத்தனுப்ப அதன் பவித்திரம் கெட்டதால் சிங்கத்தின் பசிக்கு அவன் உணவாக,காட்டில் சிங்கத்தைக் கொன்ற ஜாம்பவானின் கையில் அம்மணி வந்து சேர்கிறது.

    மணியைத் தேடிவந்த கண்ணன் தான் தான் வணங்கும் ராமன் என்பதை அறிந்தவர் அவருக்காகவே காத்திருக்கும் தன் மகளை மணமுடித்து வைத்து மணியை அவரிடம் ஒப்படைக்கிறார்.

    சமந்தகமணியை மீட்டெடுத்த கண்ணனுக்குத் தன் மகள் பாமாவை மணமுடித்து வைத்து கண்ணன் மேல் இருந்த காழ்ப்புணர்ச்சிகளை மாற்றிக் கொள்கிறார் சத்ராஜித்.

    போற்றி வணங்கப்பட வேண்டிய மணியைக் கவனக்குறைவால் அதற்குறிய பூஜையில் இருந்து தவறியதால் எதிர்மறையான நிகழ்வுகள் ஏற்படுகின்றன.சத்ராஜித்தை கொன்று அதை அபகரித்தவனைக் கண்ணன் கொன்றாலும் அம்மணி அவரின் கையில் அகப்படாமல் போக மறுபடியும் களவாடியவன் என்ற இழிச் சொல் வந்து சேர்கிறது கண்ணனுக்கு..

    கணபதியின் அருளால் தனக்கு ஏற்பட்ட பழியில் இருந்து மீண்டுவரும் கண்ணன் அதன் மூலமாக இன்னல்களில் இருந்து மனிதர்கள் காத்துக்கொள்ள வழிமுறைகளையும் உருவாக்குகிறார்.
     

Share This Page