1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Tamil And English

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by ksuji, Oct 29, 2016.

  1. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    எங்க ஆஃபிஸ்ல நாங்க நாலஞ்சு பேர் அறுவை ஜோக்ஸ் / கடி ஜோக்ஸ் சொல்லிக்கொண்டிருப்போம் . நிறைய பேர் ரசித்துக் கேட்பார்கள் , சிலபேர் " அறுவை அறுவை " என்று பரிகாசம் செய்வார்கள் . ஆனால் , அவர்களே " ஏதாவது ஜோக் சொல்லுப்பா " என்று கேட்பதுண்டு .
    நான்தான் ஜூனியர் most அறுவை .
    எங்க சான்ஸ் கிடைக்கிறதோ அதை விட மாட்டோம் .
    ஒரு நாள் மதியம் சாப்பிடுவதற்காக டைனிங் ஹாலுக்குச் சென்றோம் .
    சிவராமன் மனைவி அவங்க அம்மா வீட்டிற்குச் சென்றதனால் , ஒரு வாரமாக அவருக்கு ஹோட்டல் சாப்பாடுதான் .
    ஹோட்டலுக்குப் போகும் முன் சிவராமன் டைனிங் ஹாலுக்குள் எட்டிப்பார்த்தார் .
    ஹரி தன் காரியரைத் திறந்து கொண்டிருந்தார் . அதிலிருந்து ரசம், சாம்பார் வாசனை மூக்கைத் துளைத்தது .
    சிவராமன் ஒரு டம்ளர் எடுத்து வந்து ஹரியின் காரியரின் ரசத்தை சிறிது விட்டுக்கொண்டே , " வீட்டு ரசமா ?" என்று கேட்டார் .
    உடனே,ஹரி (நம்பர் 3 அறுவை )
    "வீட்டுலே ரசம் செய்ய மாட்டார்கள் ", என்றார் .
    சிவராமனுக்கு ஒன்றும் புரிய வில்லை.
    " எங்க வீட்டுல ரசம் செய்ய மாட்டார்களா என்று கேட்கிறீர்களா ?" என்றார் .
    அதற்கு ஹரி ," உங்களை நான் எதுவும் கேட்கவில்லை , ஆனால் நான் சொல்கிறேன் : வீட்டுல ரசம் செய்ய மாட்டாங்க ", என்றார் .
    உடனே சிவராமனுக்கு வந்ததே கோபம் .
    " உங்களிடம் ரசம் வாங்கிக் கொண்டால் , நீங்கள் என்ன வேணா சொல்வீர்களா ?" என்று ஹரியிடம் சண்டைக்குப் போய் விட்டார் .
    இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குமார் ( நம்பர் 1 அறுவை ) உதவிக்கு ஓடி வந்தார் .
    " கூல், கூல் சிவராமன் . நீங்க இந்த பிராஞ்சுக்குப் புதுசு . அதனால்தான் இந்த குழப்பம் .
    ஹரி என்ன சொன்னாருன்னா ,'வீட்டுல ரசம் வைக்க மாட்டாங்க , பருப்பு போட்டுத்தான் செய்வாங்க ' ன்னாரு " என்றார் .
    அப்படியும் சிவராமனுக்குப் புரியவில்லை .
    குமார் மறுபடியும் சிவராமனிடம் ," எல்லோருமே பருப்பு போட்டுதான் ரசம் வைப்பாங்க , WHEAT ல ரசம் வைக்க மாட்டாங்க அப்படின்னு சொன்னாரு .
    அதுக்குள்ள கோச்சுக்கிறிங்களே !
    போகப் போக உங்களுக்குப் பழகி விடும் , நீங்களும் கடிக்க ஆரம்பித்து விடுவீர்கள் ", என்றார் .
    ஹரி சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார் .
    சிவராமன் "சாரி" என்று சொல்லி ஹரியிடம் கை கொடுத்தார் .
     
    periamma and vaidehi71 like this.
    Loading...

Share This Page