Sujata's Engineer

Discussion in 'Jokes' started by jayasala42, May 13, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இஞ்ஜினியர்களுக்கு என்று சிறு பத்திரிகைகள் பல உண்டு. அவைகளிலிருந்து சில கேள்விகள் தந்திருக்கிறேன். விடை தெரியவில்லை என்றால் கடைசியில் பார்க்கலாம்.

    1. சராசரி மனிதனுக்கு எத்தனை பிறந்த தினம்?

    2. முப்பதைப் பாதியால் வகுத்துப் பத்தைக் கூட்டினால் எத்தனை?

    3. என்னிடம் இரண்டு நாணயங்கள் இருக்கின்றன. அவைகளின் மொத்த மதிப்பு 30 பைசா. ஆனால் அதில் ஒரு நாணயம் 25 பைசா அல்ல. இது எப்படி சாத்தியம்?

    4. நீண்ட சதுர வடிவில் வீடு கட்டினேன். வீட்டின் இரண்டு பக்கங்களும் தெற்கு நோக்கின. ஒரு கரடி வந்தது. அதன் நிறம் என்ன?

    5. காவேரிக்கு வடபுறம் வசிப்பவனை ஏன் தஞ்சாவூரில் புதைக்க முடியாது?

    6. காலை ஒன்பது மணிக்கு அடிக்கும்படியாக ராத்திரி எட்டு மணிக்கு அலாரம் வைத்தால் எத்தனை மணி நேரம் தூங்கமுடியும்?

    ஆறு கேள்விகளுக்குப் பதில் தர 'லேடரல் திங்கிங்' வேண்டும். பிரச்னையைப் பறறி சிந்திப்பதற்கு இருப்பது ஒரு வழி மட்டும் அல்ல. எத்தனையோ சாத்தியங்கள் உள்ளன. அவைகள் எல்லாவற்றையும் அலசிப் பார்ப்பதுதான் 'லாட்டரல் திங்கிங்'. சம்பிரதாய சிந்தனைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் ஏற்படமுடியும் என்று நம்புகிற சிந்தாந்தம் அது.



    விடைகள்:
    1.ஒன்றே ஒன்று.

    2. 70

    3. 25, 5. ஒரு நாணயம்தான் 25 பைசா இல்லை. மற்றது
    .
    4. வெள்ளை. வடதுருவத்தில்தான் இது சாத்தியம்.

    5. அவர் உயிருடன் இருப்பதால்.

    6. ஒரு மணிதான். அலாரத்துக்குக் காலையாவது, மாலையாவது.

    (சுஜாதா, மே 1979)


    Jayasala 42
     
    Loading...

Share This Page