ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, "இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,'' என்று கூறினார். பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன. மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது கண்ணா!'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார். "கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,'' என்று கூறினார். உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,'' என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, "இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான். அதிர்ந்த பாண்டவர்கள் உண்மையில் மனிததுவதில் மனித எண்ணத்தில் மனித தர்மத்தில் மனித தானத்தில் சிறந்தவன் கர்ணனே என்று ஏற்று கொண்டு தங்கள் அறியாமை கர்வத்தை எண்ணி வெட்க்க பட்டனர். கண்ணன் அப்பொழுது கூறினார் கர்ணன் நான் கொடுத்த பொருள் என்று எண்ணவில்லை, அவன் பொருளுக்கு பெரும் கவனம் செலுத்துபவன் அல்ல, எண்ணத்தில் அவன் எவ்வளவு விசாலமான தயாலனோ அவ்வாறே அவன் தானமும் விசாலமான எல்லை அற்றது. அவனுக்கு அரசன் என்ற அந்தஸ்து வேண்டுமானால் துரியோதனன் குடுத்திருக்கலாம் ஆனால் கர்ணனுக்கு எவர் பொருள் ஆயினும் தன் வசம் சக்திக்குள் இருப்பின் தன் சக்தி மேற்பட்டது ஆனாலும் அவன் அதை வேண்டியவருக்கு தானம் செய்து விட்டே ஓயுவான். இதனாலேயே அவன் மனிதத்துவ தர்மத்தில் சிறந்தவன் இரையும் இவன் முன் யாசிக்கும். இதுவே கர்ணனின் மகத்துவம்
Aarthi,I think you can move this post to the regional section, Tamil, which will be more appropriate.. cheers.
Good one. This reminds me in Gita Lord himself said to Arjun, pomp and vanity in Bhakthi I do not accept. A simple tulsi leaves or few drops of water offered to me with purity of mind and devotion I would gladly receive it with open arms.