Saina Shining !

Discussion in 'General Discussions' started by swarnalata.N.S., Jul 15, 2010.

  1. sweety17

    sweety17 Gold IL'ite

    Messages:
    1,346
    Likes Received:
    285
    Trophy Points:
    158
    Gender:
    Female
    yep Saina Nehwal walked the ramp recently after her 3 international wins in a row....:bang
     
  2. sweety17

    sweety17 Gold IL'ite

    Messages:
    1,346
    Likes Received:
    285
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Hey Check these pics where Saina Nehwal walked the ramp for Hyderabad Fashion Week
     

    Attached Files:

  3. gkshyam

    gkshyam Silver IL'ite

    Messages:
    410
    Likes Received:
    30
    Trophy Points:
    55
    Gender:
    Male
    :eek :cry: Nooo...!!!!! :notthatway:


    Saina too joining the glamour bandwagon....??? :bang :bangcomp:


    Honestly, God save her now.... before it is too late...!!! :roll:
     
  4. malarvizhi

    malarvizhi New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Male
    விரைவான வெற்றியை நோக்கி சாய்னா

    வீர இனமான ஜாட் இனத்தை சார்ந்த சாய்னாவின் தந்தை ஷவீர்சிங்கும் அவரது மனைவி உஷா நெவாலும் ஷரியானா மாநிலத்தில் இறக்கை பந்தாட்ட விளையாட்டான பாட்மிட்டனில் மிக சிறந்து விளங்கியவர்கள்.

    ஹவிர் சிங்கின் தொழில் காரணமாக குடும்பத்தினருடன் அவர் ஹைதராபாத் செல்ல வேண்டி வந்தது. சாய்னா அங்கு தான் வளர்ந்தார். ஐரீஷ் நாட்டு விளையாட்டு தெய்வமான மச்சாவின் மறு அவதாரமோ என்று எண்ணும்படியாக வளர்ந்த சாய்னா தனது தாய் தந்தையரை பார்த்து மிக சிறிய வயதிலேயே பாட்மிட்டன் விளையாட்டில் பெரும் ஆர்வம் காட்டினார்.

    சாய்னாவின் ஆர்வத்தை கண்ட ஹவிர் சிங், சாய்னாவுக்கு எட்டு வயதாக இருக்கும்போது நானி பிரசாத் எனும் பாட்மிட்டன் பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார்.

    இந்தியாவின் பாட்மிட்டனில் முதன்மையாக திகழ்ந்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அபர்ணா பொப் பட் எனும் வீராங்கனையிடம் முதலில் தோல்வி அடைந்தாலும், சாய்னா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தார்.

    ஆசிய ஸ்டாட்டிலைட் பாட்மிட்டன் இந்தியா பிரிவில் சாய்னா பெரும் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் அவர் ஒரு முறை அல்ல. இரு முறை பெரும் வெற்றி பெற்று தனக்கென்ன ஒரு நிலையான இடத்தை பிடித்தார்.

    சாய்னாவின் திறமையை அறிந்த கோபிசந்த் இறக்கை பந்தாட்ட வீரர். அவரின் திறமையை முழுவதும் வெளிக்கொண்டு வரப் பெரிதும் பாடுபட்டார். சாய்னாவின் முன்னேற்றத்தில் அவர் எடுத்துகொண்ட பெரும் முயற்சி பல இடங்களில் வெற்றிக்கொடி நாட்ட உதவியது.

    பிலிப்பைன்ஸ் தேசத்தில் நடக்கும் அகில உலக பாட்மிட்டன் விளையாட்டில் இந்தியாவை சேர்ந்த முதல் பெண்ணாக பங்கு பெற்ற சாய்னா, முதலில் 86வது இடத்தில் தான் இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, பாட்மிட்டன் விளையாட்டாளர்களை தோற்கடித்தார்.

    மலேசியாவை சேர்ந்த ஜூலியா லியான் என்பவரை தோற்கடித்து 2006ம் ஆண்டு நாலு நட்சத்திர டோர்னமண்டை வென்றார்.
    சாய்னாவுக்கு பெரும் வெற்றி 2008 ம் ஆண்டில் கிடைத்தது.

    யாருமே எதிர்பார்க்காதபடி ஜப்பானை சேர்ந்த சாயகா சாட்டோவை உலக இளைஞர்களுக்கான பாட்மிட்டன் சாம்பியன் போட்டி 21-9, 21-18 வென்று சாய்னா உலக சாதனை படைத்தார்.

    மிக அருமையாக விளையாடுபவர் என்று 2008ம் ஆண்டு கணிக்கப்பட்ட சாய்னா, உலக அளவில் நடைபெறும் அரை இறுதியாட்டத்திற்கு விளையாடும் வகையில் அந்த வருடம் தகுதி பெற்றார். உலக இளநிலை இறக்கை பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்திய பெண் இவர் தான்.

    ஜாகார்த்தாவில் நடந்த இந்தோனேஷிய ஓப்பன் போட்டியில் தர வரிசையில் முன்னிற்கும் சீனாவை சேர்ந்த லின் வாங்கை அதிரடியாக வென்று, பட்டத்தை பெற்று பாட்மிட்டன் வரலாற்றில் பெரும் சாதனை படைத்தார். இந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி ஜூன் மாதம் 21ம் தேதி 2009 ம் வருடம் நடைபெற்றது.

    இந்த போட்டியில் வென்ற முதல் இந்திய பெண் இவராகும். நமது நாட்டில் விளையாட்டு துறையில் சிறந்து விளையாடுவோருக்கு தரப்படும். அர்ச்சுனா அவார்ட் 2009ம் ஆண்டு சாய்னாவுக்கு வழங்கப்பட்டது.

    சாய்னாவில் பயிற்சியாளரான கோபிசந்த்துக்கு துரோணச்சாரியார் அவார்டும் அதே ஆண்டு வழங்கப்பட்டது.

    இந்த வருடம் 2010ல் சாய்னா அவர்களின் திறமையை பாராட்டி நமது குடியரசு தலைவர் அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கினார்கள்.
    தற்பொழுது இந்திய பிரிமியர் குழுவுக்கு சாய்னா அம்பாஸடர் ஆக இருக்கிறார். அவர் உலகத்தில் இரண்டாவது நிலையில் உள்ளார்

    . சமீபத்தில் பாட்மிட்டன் கழகத்தில் சாய்னாவை பாராட்டி நடைபெற்ற விழாவில் கோச் கோபிசந்த் அவர்கள் சாய்னாவின் வெற்றிக்கு அவரின் கடின உழைப்பும் எளிமையும் தான் முக்கிய காரணம். இனி உலக போட்டிகளில் சாய்னா கவனம் செலுத்துவார் என்று கூறினார்.

    தன்னுடைய பயிற்சியாளரின் யோசனையை ஏற்ற சாய்னா இனி நான் பெரும் போட்டிகளில் மிகுந்த கவனம் செலுத்துவேன் என்கிறார்.
    =====================================
    நன்றி; மஞ்சரி, ஆகஸ்ட் 2010
     
    Last edited by a moderator: Aug 17, 2010

Share This Page