"Religious Corner"-உலகுக்கே வழிகாட்டுகிறது இந்து தர்ம&

Discussion in 'Religious places & Spiritual people' started by Renukamanian, Jul 21, 2011.

  1. Renukamanian

    Renukamanian Senior IL'ite

    Messages:
    36
    Likes Received:
    23
    Trophy Points:
    23
    Gender:
    Male
    அன்பு "Indus Ladies Group" நண்பர்களே,

    இதை ஒரு மிக முக்கியமான செய்தியாகத்தான் நான் கருதுகிறேன்.

    "குடியிருக்கும் வீட்டை பூஜை அறையாகவும், திருமணத்தை வரலட்சுமி வருவதாகக் கருதுவதும் நமது பண்பாடாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றால் சிரிப்பான விஷயமாக இணையதளங்களிலும், புத்தகங்களிலும் இடம்பெறுகிறது." என்று ஸ்வாமிஜி கூறியுள்ளார். {அது நூற்றுக்கு நூறு உண்மை.}

    ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் நம் மதத்தைப் பற்றியும், நமது பண்பாடு, கலாசாரத்தைப் பற்றியும் சுருக்கமாகவும், அழகாகவும், எளிமையாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆழ்ந்த கருத்து. அவர் சதாபிஷேகம் பூர்த்தியான இந்த தருணத்தில் என் பணிவான வாழ்த்துக்கள்.

    "In the mountain stage, which starts from the Gangotri glacier - the source of the "Ganga" up to Rishikesh, the river flows across snow clad high peaked mountain. During this stage, the crystal-clear water gushes through rocks and uneven land." So flows Swamji's words & his thoughts are crystal-clear.
    [FONT=century schoolbook, times new roman, times][/FONT]

    அவர் கூறியதின், அடித்தளத்தை நன்கு உணர்ந்து, இவ்வுலகத்திற்கே பயன் அளித்துக்கொண்டிருக்கும், பரந்த, நம் இந்து தர்ம மரத்தை நாம் நன்கு பேணி வளர்ப்போம், முழுமையான பயன் அடைவோம். அது தான் நாம் உய்ய சிறந்த வழி, கோட்பாடாகும். Pl. go ahead to read excerpts of his speech.

    "ரேணுகாமணியன்"







    First Published : 21 Jul 2011 03:14:08 AM IST

    [​IMG]
    சதாபிஷேக விழாவில் பேசுகிறார் சுவாமி தயானந்த சரஸ்வதி. உடன் (இடமிருந்து) பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ண
    கோவை, ஜூலை 20: இந்து தர்மம் உலகிற்கே வழிகாட்டியாக இருக்கிறது என்று ஆனைகட்டி ஆசிரமம் ஆர்ஷ வித்யா குருகுலத்தின் நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதி கூறினார். அவரது சதாபிஷேக விழா கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இவ்விழா நிகழ்ச்சிகள் மகாராஜபுரம் ஸ்ரீராமச்சந்திரனின் கடவுள் வாழ்த்துடன் புதன்கிழமை துவங்கியது. இதில் சுவாமி தயானந்த சரஸ்வதி பேசியது: ஒவ்வொரு மனிதரும் பிரச்னைகளைக் கண்டு அஞ்சுகின்றனர். எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வி அவர்களுக்குள் எழுகிறது. சில நேரங்களில் அத்தகைய பிரச்னைகளுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என இருந்துவிடுகின்றனர். மாணவர்களிடம் புத்தகங்களைக் கொடுக்கும்போது அவற்றின் அளவைப் பார்த்து, எங்களால் படிக்க முடியாது என்கின்றனர். அளவைப் பார்த்து முடிவு செய்யாமல், எவ்வளவு முடியுமோ அதைப் படியுங்கள் என்றால், அதன் பிறகு படிக்கத் தொடங்குகின்றனர். புத்தகம் முழுவதையும் படித்து முடித்துவிடுகின்றனர். கடவுளின் அவதாரங்களால் கூட பிரச்னைகளைத் தீர்க்க முடியவில்லை. ஆனால், அதைத் தீர்ப்பதற்கான வேலையைச் செய்தனர். நமது வீடு என்பது விடுதி அல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். மகாலட்சுமி குடியிருக்கும் இடமாகக் கருத வேண்டும். இதனாலேயே, தினமும் காலையில் வீட்டைச் சுத்தம் செய்து, வாசலில் கோலமிடுவது வழக்கத்தில் இருக்கிறது. அரிசி மாவு கோலம் எறும்புகளுக்கும், சிறிய பறவைகளுக்கும் உணவு படைப்பதைப் போன்றது. இது நமது பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது. குடியிருக்கும் வீட்டை பூஜை அறையாகவும், திருமணத்தை வரலட்சுமி வருவதாகக் கருதுவதும் நமது பண்பாடாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றால் சிரிப்பான விஷயமாக இணையதளங்களிலும், புத்தகங்களிலும் இடம்பெறுகிறது. சமூகத்தின் மேன்மைக்காக நாம் உழைக்க வேண்டும். நதி, மலை, நிலம் என இயற்கை தான் நம்மை வாழ வைக்கிறது. இதனால் தான் பெற்ற தாயும், பிறந்த நாடும் சொர்க்கத்தைக்காட்டிலும் மேலானது என்று சனாதன தர்மம் கூறுகிறது. நாட்டின் பண்பாடு என்பது மதத்தில் இருந்து உருவாகிறது. மதம் விவேகத்தின் அடிப்படையாக இருக்கிறது. இந்து தர்மம் மிகப்பெரிய மரம் போன்றது. இது உலகிற்கே நிழல் கொடுத்து பலன் அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த மரத்தைக் காப்பாற்றினால் தான் நிழலின் பலன் நம்மைக் காக்கும் என்றார் சுவாமி தயானந்த சரஸ்வதி. விழா குழுத் தலைவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் வரவேற்புரையை, கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வாசித்தார். பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, தொழிலதிபர் பி.கே.மோடி, சுவாமி மகா பிரியதாஸ் ஆகியோர் பேசினர். [Thanks to 'Dinamani'] :thumbsup
    ---------------------------------------------------------------------------
     
    Loading...

  2. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Re: "Religious Corner"-உலகுக்கே வழிகாட்டுகிறது இந்து தர்&#29

    அருமையான கட்டுரை ரேணுகா. இந்துமதம் சனதான தர்மத்தை போதிக்கிறது.பல அரிய விஷயங்களை மிக எளிதாக பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பகிர்ந்து கொண்டதற்க்கு பாராட்டுக்கள்.
     

Share This Page