1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Religion and Spiritualism-Bhagavad Gita in Tamil- 15 .புருஷோத்தம யோகம்

Discussion in 'Stories in Regional Languages' started by PushpavalliSrinivasan, Jun 4, 2012.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத: !
    யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர: !! 17

    ஆனால் எவன் மூவுலகிலும் புகுந்து நின்று தாங்குபவனோ மாறுதலில்லாதவனோ இறைவனோ பரமாத்மா என்று கூறப்பட்ட உத்தமபுருஷனோ, அவன் வேறானவன்.

    மூன்று உலகங்களிலும் உட்புகுந்து நின்று அவற்றைத் தாங்குபவனும் போஷிப்பவனும் மாறுதலில்லாதவனும் பரமாத்மா புருஷோத்தமன் என்று அழைக்கப்படுபவனும் க்ஷர அக்ஷர புருஷர்களிடமிருந்து வேறு பட்டவர். பரமாத்மா. க்ஷராக்ஷரர்களை அடக்கியாள்பவர். ஸர்வ வல்லமை படைத்தவர். எங்கும் யாவற்றிலும் வியாபித்திருந்து எக்காலத்தும் நிலைத்திருப்பவர்.ஆகவே அவரே புருஷோத்தமன்.

    யஸ்மாத்க்ஷரமதீதோsஹமக்ஷராபி ஸோத்தமா !
    அதோsஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புருஷோத்தம: !! 18

    எக்காரணத்தினால் நான் க்ஷர என்கிற அழியும் ஜடவர்க்கத்திற்கும் அக்ஷர என்னும் அழியாத ஜீவாத்மாவைக் காட்டிலும் மேலானவனோ அதனால் உலகிலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்று பிரசித்தி அடைந்துள்ளேன்.

    க்ஷரம் ஜடப்பொருளான அசித்துக்களைக் குறிக்கும் சொல்லாதலால் தான் அதனினும்மேலானவன் என்று கூறுகிறார். அக்ஷரம் ஜீவாத்மாக்களைக் குறிப்பதென்றாலும் பரமாத்மாவின் அம்சமென்ற போதிலும் பிரகிருதிக்குட்பட்டு முக்குணங்களுக்கு வசப்பட்டவனென்பதாலும் அவன் தம்மால் ஆளப்படுபவனென்பதாலும் தான் அவனினும் எல்லா விதத்திலும் சிறந்தவன் என்பதால் புருஷோத்தமன் என்று போற்றப்படுவதாகக் கூறுகிறார்.

    யோ மாமேவஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம் !
    ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத !! 19

    அர்ஜுனா! எவன் இவ்வாறு மதிமயக்கமில்லாதவனாக புருஷோத்தமனாகிய என்னை அறிகின்றானோ அவன் அனைத்துமறிந்தவனாய் அனைத்தையும் நான் எனப்பாவித்து என்னை வணங்குவான்.

    மேலே கூறிய க்ஷர அக்ஷரர்களிலிருந்து பரமாத்மா முற்றிலும் வேறானவர் என்ற தத்துவ உண்மையை அறிந்த ஞானியானவர் தம்மைப் புருஷோத்தமன் என்று அறிந்து சதா சர்வகாலமும் தன்னையே வழிபடுவார் என்பதாகப் பரமாத்மா அர்ஜுனனிடம் கூறுகிறார்.

    இதி குஹ்யதமம் ஸாஸ்த்ரமிமுக்தம் மயாந !
    ஏதத்புத்த்வா புத்திமாந் ஸ்யாத் குதக்ருத்யஸ்ச பாரத !! 20

    பாவமற்றவனான அர்ஜுனா! இங்ஙனம் மிக ரகசியமான இச்சாஸ்திரம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. இதை அறிந்து புத்திமானாகவும் செய்யவேண்டிய கருமத்தைச் செய்து முடித்தவனாகவும் ஒருவன் ஆகிறான்.

    இந்த அத்தியாயத்தில் கூறப்பட்ட பகவானுடைய குணங்கள், பிரபாவங்கள், தத்துவங்கள், ஸ்வரூபம் முதலானவற்றை நன்கு அறிந்து கொண்டவன் தத்துவ உண்மையான பகவான் புருஷோத்தமன் என்று தெளிந்து செய்ய வேண்டிய கருமங்களைச் செய்து முடிப்பான்.

    ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோஸாஸ்த்ரே

    ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே புருஷோத்தமயோகோ நாம பஞ்சஸோத்யாய: !! 15 !!

    இத்துடன் "புருஷோத்தமயோகம்" என்ற பதினைந்தாவது அத்தியாயம் முற்றுப்பெற்றது.
     
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nice explanation to who Paramathma is..and why Jeevathama, eventhough a part of Paramathma, is not and cannot be a Paramathma.

    Sriniketan
     
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Sriniketan,
    The Lord Himself put forth the reasons why He is considered Supreme. Those who realize this will become wise and they will attain perfection and will perform their duties diligently.
    Love,
    PS
     
  4. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,406
    Likes Received:
    24,162
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Dear Mrs.Srinivasan,

    Lord Krishna is giving an important lesson that three gunas bind us to this world. The one who conquers and raise above the three gunas (which is the effort Jeevatma needs to make) and worship the Lord of the Universe (which is the Grace we need to get) can get liberated. In essence, Lord Krishna is telling that if we eliminate our vasanas and gunas, we are pure and unsullied part of the whole.

    Viswa
     
  5. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Viswa,
    Let us pray to Him and seek His benevolence to get rid of vasanas and gunas . He is mercy personified and He will definitely heed to our prayers and will relieve us from the cycle of birth and death.
    PS
     

Share This Page