Religion and Spiritualism-Bhagavad Gita in Tamil- 15 .புருஷோத்தம யோகம்

Discussion in 'Pujas Prayers & Slokas' started by PushpavalliSrinivasan, May 31, 2012.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா !
    புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: !! 13

    நான் என் சக்தியினால் பூமியினுள் புகுந்து உயிர்களைத் தாங்குகின்றேன். ரஸமயமான சந்திரனாக இருந்துகொண்டு எல்லாப் பயிர்களையும் போஷிக்கின்றேன்.

    பூமிக்கு எதையும் தாங்கும் சக்தி இருப்பபதாகக் கருதப்படுகிறது. ஆனால் தானே பூமியில் புகுந்து எல்லா உயிரினங்களையும் தன்னுடைய தடையற்ற சக்தியினால் தாங்குவதாகப் பகவான் கூறுகிறார். சந்திரனிலுள்ள அமுதமயமான பயிர்களைப் போஷிக்கும் சக்தியும் தன்னுடையதே என்று கூறுகிறார்.

    அஹம் வைஸ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஸ்ரித: !
    ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விம் !! 14

    நான் வைச்வாநரன் என்ற அக்னியாகிப் பிராணிகளின் உடலை இருப்பிடமாகக்கொண்டு பிராணனுடனும் அபானனுடனும் கூடி நான்குவிதமான உணவைப் பக்குவம் செய்கின்றேன். நாம் உண்ணும் உணவை நான்கு வகையாகப் பிரிக்கிறார்.

    உடலில் உள்ள வெப்பத்தினால் நாம் உண்ட உணவு செரிமானமாகின்றது. எப்படி அக்னியின் ஒளிரும் சக்தி என்னுடையதோ, அவ்வாறே அக்னியின் வெப்ப சக்தியான ஜீரணசக்தியும் என்னுடைய சக்தியின் ஓர் அம்சம் தான்

    .நானே பிராணவாயு, அபானவாயு என்ற வாயுக்களுடன்கூடி பிராணிகளின் உடலிலுள்ள வைச்வானரன் என்ற அக்னியாக (ஜடராக்னி அமிலமென்று விஞ்ஞானத்தில் கூறப்படுவது) இருந்து கடித்து உண்பது,(சாதம், ரொட்டி) விழுங்கி உண்பது,(பால், தண்ணீர்) நக்கி உண்பது,(தேன், பாயஸம்) உறிஞ்சி உண்பது (கரும்புரசம், பழரசம்) என்ற நால்வகை உணவுப் பொருள்களையும் செரிமானம் செய்கிறேன்.

    ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
    மத்த: ஸ்ம்ருதி ஜ்ஞானமபோஹநம் !
    வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
    வேதாந்தக்ருத் வேவிதேவ சாஹம் !! 15

    எல்லோருடைய இதயத்திலும் உட்புகுந்து ஆத்மாவாக விளங்குபவன் நானே.மற்றும் எல்லாருடைய இதயத்திலும் நினைவாகவும் மறதியாகவும் இருப்பவனும் நானே. வேதத்தினாலேயே நான் அறியப்படுகிறேன். வேதாந்தத்தை ஆக்கியவனும் வேதத்தை முற்றிலுமாக உணர்ந்தவனும் நானே. வேதத்தின் பலன்களை அளிப்பவனும் நானே.

    எல்லாப் பிராணிகளுடைய இதயத்திலும் தாமே அந்தர்யாமியாக இருப்பதாகக் கூறுகிறார். அவரிடமிருந்தே அறிவும் நினைவும் சந்தேகங்களுக்கு விளக்கமும் தெளிவும் கிடைக்கப் பெறுவதாகக் கூறுகிறார். வேதாந்தத்தைச் செய்தவனும் வேதங்களின் உட்பொருளை அறிந்தவனும் தானே என்பதாகக் கூறுகிறார்.

    த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச !
    க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோsக்ஷர உச்யதே !! 16

    இவ்வுலகில் அழிபவன், அழியாதவன் என்று இரண்டு வகையான புருஷர்கள் உள்ளனர்.எல்லா உயிர்களின் உடலும் அழியத்தக்கது என்றும் ஜீவாத்மா அழியாதவன் என்றும் கூறப்படுகிறது.

    வேதசாஸ்திரத்தில் இருவிதமான புருஷர்கள் சொல்லப்படுகிறார்கள்.அழியக்கூடிய சரீரத்துடன் இருப்பவன் க்ஷரன். இவனைக் கண்ணால் பார்க்கமுடியும் . இவன் மாறுதலுக்கு உட்பட்டவன். அனைத்து ஜீவராசிகளும் க்ஷரம்.
    கண்ணுக்குப் புலப்படாததான விகாரமடையாத ஜீவாத்மா கூடஸ்தன்.

    அழியக்கூடிய அனைத்து ஜடப் பொருட்களும் ஜீவராசிகளின் உடலும் க்ஷரம் என்றும் அழியாத ஆத்மா அக்ஷரன் என்றும் கூறப்படுகின்றனர். உடலில் இருக்கும் ஜீவாத்மாவிற்கு அழிவோ மாறுதலோ கிடையாதென்பதால் இவர் கூடஸ்தன் என்று அறியப்படுகிறார்.

    கீதை தொடரும்​
     
    Loading...

  2. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,406
    Likes Received:
    24,162
    Trophy Points:
    538
    Gender:
    Male
    When I read this, the following chant came to my mind:

    "Asathoma Satgamaya
    Tamosoma Jyothir gamaya
    Mruthyorma Amirdum Gamaya

    From the unreal lead me to the real
    From darkness lead me into light
    From death lead me into immortality

    Viswa
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Engum, edhilum, yellavarin moola sakthiyaaga Iraivan irukkiraar enbadhu, unarappadugiravdhu indha above said verses.
    Thank you for the extra explanations you give helps me understand much better.

    Sriniketan
     
  4. aarthy5

    aarthy5 New IL'ite

    Messages:
    6
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi All ,

    I am very much interested in Srivaishnavam . Anyone please guide me how to improve my skills in this ... Already i have learnt thiruppavai, thirupallandu . Please anyone guide me
     
  5. ambrose

    ambrose Senior IL'ite

    Messages:
    73
    Likes Received:
    15
    Trophy Points:
    23
    Gender:
    Female
    i like your tweety very much. tamilfonts are google type in english geetaachaaram you will get and tamil .
    GEETHACHARAM


    [FONT=&quot]GEETHACHARAM[/FONT]​
    [FONT=&quot]
    WHATEVER HAS HAPPENED, HAS HAPPENED GOOD

    WHATEVER IS HAPPENING, IS HAPPENING GOOD
    [/FONT][FONT=&quot]WHATEVER WILL HAPPEN IN THE FUTURE, WILL HAPPEN GOOD

    WHAT DID YOU LOOSE?

    WHY DO YOU CRY?

    WHAT DID YOU BRING TO LOOSE?

    WHAT DID YOU CREATE TO GO AS WASTE?

    WHATEVER YOU TOOK, YOU TOOK IT FROM HERE[/FONT][FONT=&quot] WHATEVER YOU GAVE, YOU GAVE IT HERE

    WHATEVER IS YOURS TODAY WILL BE SOMEONE ELSE'S TOMORROW

    ANOTHER DAY IT WILL BE SOMEBODY ELSE'S

    THIS IS THE RULE OF THE WORLD[/FONT]
     
  6. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Viswamitra,
    Thanks for sharing the sloka which shows the path to achieve eternity.
    Love,
    PS
     
  7. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Sriniketan,
    The Omnipresent resides within us, but due to our ignorance and vasanas we are not in a position to recognize Him.
    When we are born as humans, we have the opportunity to recognize this and we should try to liberate ourselves from the cycle of birth and death.
    Love,
    PS
     
  8. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Aarthy,
    Welcome to IL and I hope you will be benefited a lot by joining IL. Members discuss all topics under the Sun and if you join face book you can learn a lot more where there is a group formed by Aiyangars who discuss Divya Prabandam.
    Love,
    PS
     
  9. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear ambrose,
    Thanks for sharing the Geethacharam and for liking my write up.
    Love,
    PS
     

Share This Page