1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Religion and Spiritualism-Bhagavad Gita in Tamil- திருக்குறளும் கீதையும்

Discussion in 'Stories in Regional Languages' started by PushpavalliSrinivasan, Dec 31, 2012.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    கீதையின் பதினேழாவது அத்தியாயமான ஸ்ரத்தாத்ரய யோகத்தில் ஸாத்வீக ராஜஸ தாமஸ உணவு வகைகளை விளக்கிக் கூறுகிறார். திருவள்ளுவரும் பொருட்பாலில் மருந்து என்ற தலைப்பில் உணவு பற்றிக் கூறுகிறார்.

    குறள்

    அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்கத துவரப் பசித்து.

    முன் உண்ட உணவு செரித்ததை அறிந்து, உடலுக்கு மாறுபாடில்லாத உணவுகளை அறிந்து அவற்றையும் நன்றாகப் பசித்த பிறகு உண்ணவேண்டும்.

    மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

    உடலுக்கு மாறுபாடில்லாத உணவைத் தன் மனம் விரும்பும் அளவு உண்ண மறுத்து , உடலுக்குத் தேவையான அளவே உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால் நோயினால் துன்பப்பட நேரிடாது.

    கீதை

    கீதாசாரியன் இதனையே சாத்வீக ராஜஸ தாமஸ குண முடையவர்களுக்குப் பிரியமான உணவுகளை பற்றிக் கூறும்போது விளக்கிக் கூறுகிறார்.

    ஆயு: ஸத்வபலாரோக்ய ஸுகப்ரீதி விவர்த்தனா !
    ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா -ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்விகப்ரியா: !! 17// 8

    ஆயுள், புத்தி, ஆரோக்கியம், சுகம், விருப்பம் இவற்றை வளர்ப்பனவும் , ரஸமுடையனவும் பசையுடையனவும், உரமுடையனவும், இன்பமளிப்பனவும் ஆன உணவுகள் ஸாத்வீகர்களுக்குப் பிரியமானவை.

    கட்வம்ல லவணாத்யுஷ்ண தீக்ஷ்ண ரூக்ஷ விதாஹீன: !
    ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:க்க: ஷோகமயப்ரதா: !! 17/ 9

    கசப்பு, புளிப்பு, கடுஞ்சூடு, காரம் உவர்ப்பு, எரிப்பு முதலிய குணங்களுடையனவும் துன்பம், துயர், பிணி இவற்றைத் தருவனவுமாகிய உணவுகள் ராஜஸர்களுக்குப் பிரியமானவை.

    யாதயாமங் தரஸம் பூதி பர்ஷியுதஞ் ச யத் !
    உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸப்ரியம் !! 17/ 10

    சமைத்து ஆறிப்போனதும், சுவையிழந்ததும், புளித்துப்போனதும் , பழையதும், உண்டுமிகுந்ததும், பூஜைக்கு உதவாததுமான உணவு எதுவோ அது தாமஸிகர்களுக்குப் பிரியமானது.

    ஸாத்வீக உணவினைத் தேர்ந்தெடுத்து உண்டு ஸாத்வீக குணமுடையவர்களாக வாழ முற்படுவோம்.
    அதனையும் " செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்னும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க உணவிற்காகவே உயிர் வாழ்கிறோம் என்ற எண்ணமின்றி உயிர் வாழ்வதற்காக நல்லன உண்டு நல்லன கேட்டு அவற்றைக் கடைப்பிடித்து நலம் பெறுவோம்

    இத்துடன் திருக்குறள் கீதை இரண்டினையும் என்னுடைய சிற்றறிவிற்கு எட்டியவரை ஒப்பு நோக்கி எழுதியதைப் படித்துப் பாராட்டியவர்களுக்கு நன்றி கூறி முடித்துக் கொள்ளுகிறேன்.
     
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Very nice effort, Ma..:bowdown:
    Enjoyed all the episodes of the same. :)

    Sriniketan
     
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Sriniketan,
    Thank you for your motivating comment.
    PS
     

Share This Page