1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Religion and Spiritualism-Bhagavad Gita in Tamil- திருக்குறளும் கீதையும்

Discussion in 'Stories in Regional Languages' started by PushpavalliSrinivasan, Dec 17, 2012.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    குறள்
    அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்ற தறம்.

    பொறாமை, பேராசை, பெருங்கோபம், கடுஞ்சொல் ஆகிய நால்வகைக் குற்றமும் இல்லாமல் செயல்படுவதே உண்மையான அறம் எனப்படும்.

    கீதை சந்நியாஸயோகம் 26 வது ஸ்லோகம்:

    காமக்ரோ வியுக்தாநாம் யதீனாம் யதசேதஸாம் !
    பிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம் !!

    காமத்தினின்றும் கோபத்தினின்றும் விடுபட்டவர்களும் அடங்கிய சித்தமுடையவர்களும் , ஆன்ம தரிசனம் பெற்றவர்களும் ஆகியோருக்கு இகத்திலும் பரத்திலும் பிரம்மஸாயுஜ்ய முக்தி கிடைக்கின்றது.

    குறள்

    முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானால்
    இன்சொ லினதே அறம்.

    ஒருவரைக் காணும்போது மலர்ந்த முகம்காட்டி மகிழ்ச்சி தரும் இனிய சொற்களைக் கூறுவதே தலை சிறந்த அறமாகும்.

    சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
    இம்மையும் இன்பம் தரும்.

    சிறுமை நீங்கிய பெருமை வாய்ந்த இன்சொற்களைப் பேசுவதன் மூலம் இம்மை, மறுமை இரண்டிலும் இன்பம் பெறலாம்.

    கீதை

    ஸ்ரத்தாத்ரயவிபாகயோகம் 15 வது ஸ்லோகம்

    அநுத்வேகரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதஞ் ச யத்!
    ஸ்வாத்யாயாப் ப்யஸனஞ் சைவ வாங்மயம் தப உச்யதே !!

    கடுமையில்லாததும், உண்மையானதும், பிரியமானதும் நன்மையைக் கருதுவதுமான வார்த்தையும், தமக்குரிய வேதநூல் ஓதும் பழக்கமும் வாக்கினால் செய்யும் தவமாகும்.

    குறள்

    அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
    ஊதியமும் சூழ்ந்து செயல்.

    ஒருவன் ஒரு செயலைச் செய்யத் துவங்கும்போது அதனால் வரும் இழப்புகளையும் பின்வரும் நன்மைகளையும் ஆராய்ந்தறிந்து செயல்படவேண்டும்.

    கீதை

    மோக்ஷஸந்ந்யாஸயோகம் 25 வது ஸ்லோகம்:

    அநுந்ம் க்ஷயம் ஹிம்ஸா மநவேக்ஷ்ய ச பௌருஷம் !
    மோஹாதாப்யதே கர்மயத்தத் தாமஸ முச்யதே !!

    பின்னால் வரக்கூடிய பயனையும் நஷ்டத்தையும் பிறர்க்கு விளையும் துன்பத்தையும் தன் சக்தியையும் யோசிக்காமல் மதிமயக்கத்தால் எக்கருமம் ஆரம்பிக்கப்படுகிறதோ அது தாமஸம் எனப்படும்.
     
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ma,
    Aptly picked up the relevant verses! :)

    Sriniketan
     
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Its a bit of learning not just one, but two great texts with your commentary, Madam. Wonderful. Thanks a lot. -rgs
     
  5. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Thanks rgs. Sorry for coming in so late.
    PS
     

Share This Page