1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Religion and Spiritualism-Bhagavad Gita in Tamil- திருக்குறளும் கீதையும்

Discussion in 'Stories in Regional Languages' started by PushpavalliSrinivasan, Dec 10, 2012.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    குறள்

    குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
    உடம்பொடு உயிரிடை நட்பு.

    பறவை தான் கட்டிய கூட்டினுள் இருக்கும்வரை இருந்துவிட்டு வெளியேறி வேறிடம் செல்லுவதைப்போல உடம்பில் தங்கும் உயிரும் காலம் வந்தபோது உடம்பைத் தனியேவிட்டுப் பிரிந்துபோய்விடும்.

    புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
    துச்சில் இருந்த உயிர்க்கு.

    உடம்பாகிய வாடகை வீட்டில் உயிர் தங்கியுள்ளது. வாடகை வீட்டில் குடியிருப்பவருக்கு எப்படி வீடு சொந்தமில்லையோ அவ்வாறே உடம்பென்னும் வாடகைவீடு உயிருக்குச் சொந்தமில்லை.

    கீதை இரண்டாவது அத்தியாயத்தின் 22 வது ஸ்லோகத்தில் பகவான் இதே கருத்தினை வேறு விதமாக விளக்குகிறார்.

    வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
    நவாநி க்ருஹ்ணாதி நரோsபராணி !
    ததாஸரீராணி விஹாய ஜீர்ணாந்
    யன்யானி ஸம்யாதி நவாநி தேஹீ !!

    மனிதன் எவ்வாறு நைந்துபோன துணிகளை எறிந்துவிட்டு வேறு புதியவற்றை எடுத்துக்கொள்ளுகிறானோ அவ்வாறே ஜீவாத்மா பழைய நைந்துபோன உடலை நீத்துப் புதிய உடலை அடைகிறான்.

    உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு.

    உறக்கம் போன்றது இறந்து போவது, உறங்கி எழுவது போன்றது பிறப்பது. உறக்கமும் விழிப்பும் போன்றது இறப்பும் பிறப்பும். விழித்திருக்கும்போது கடமைகளைச் செய்வது போல, உயிர் வாழும்போது அறத்தைப் போற்றி உயரவேண்டும்.

    கீதையின் இரண்டாவது அத்தியாயத்தின் 27 வது ஸ்லோகம்
    :

    ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர் த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச !
    தஸ்மாபரிஹார்யேsர்த்தே ந த்வம்ஸோசிதுமர்ஹஸி !!

    பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயமானது. இறந்தவனுக்குப் பிறப்பு நிச்சயமானது. ஏனெனில் ஆத்மாவிற்கு அழிவில்லை . எனவே தவிர்க்க முடியாத இவ்விஷயத்தைக் குறித்து நீ துயரப்படத் தேவையில்லை என்று பகவான் அர்ஜுனனிடம் கூறுகிறார்.
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    You are doing a nice job Madam. Bringing the relevant context from both great texts and giving an easily understandable explanation. I just recollected "Punarapi jananam..." from Baja Govindham, while reading this. Thanks for sharing. -rgs
     
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear rgs,
    Thank you. In fact Adhi Sankara's "Bajagovindam" contains the gist of Bagavad Gita.
    PS
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    I second Rgs, in his comment...:)
    I am really enjoying this session.

    Sriniketan
     
  5. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Thank you Sriniketan. The support you are all giving me really acts as a tonic to me.
    PS
     

Share This Page