1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Religion and Spiritualism-Bhagavad Gita in Tamil- திருக்குறளும் கீதையும்

Discussion in 'Stories in Regional Languages' started by PushpavalliSrinivasan, Dec 3, 2012.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    குறள்

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

    அதனின் அதனின் இலன்.

    வேண்டின் உண்டாகத் துறக்க; துறந்தபின்

    ஈண்டியற் பால பல.

    ஒருவன் எதனிடம் பற்றுக்கொண்டு வாழ்கிறானோ அதனால் துன்பம் அடைவான். எதிலிருந்து பற்று நீங்கி வாழ்கிறானோ, அதனால் அவனுக்குத் துன்பமில்லை.

    ஆகையால் துன்பமற்ற வாழ்வை விரும்பினால், எல்லாம் உள்ளபோதே பற்றற்ற துறவு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும். துறந்த பிறகு இந்த வாழ்க்கையினும் சிறந்த இன்பம் கிட்டும்.

    கீதையின் பதினெட்டாவது அத்தியாயத்தின் 49வது ஸ்லோகத்தில் பகவானும் இதனையே கூறுகிறார்.

    அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா வித ஸ்ப்ருஹ: !
    நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேநாதி கச்சதி !!

    எங்கும் பற்றற்ற புத்தியுடையவனாகவும் அந்தகரணங்களை ஜெயித்தவனாகவும் ஆசைகள் ஒழிந்தவனாகவும் உள்ளவன் ஸந்நியாஸத்தினால் "நைஷ்கர்ம்யஸித்தி" என்னும் உயர்ந்தநிலையை அடைகிறான்.

    குறள்

    யான் எனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு

    உயர்ந்த உலகம் புகும்.

    நான் என்னும் அகப்பற்றும் எனது என்னும் புறப்பற்றும் துறந்தவன் வானோர்க்கும் அரியதான உயர்ந்த முக்தி என்னும் பேற்றினைப் பெறுவான்.

    கீதை

    மோக்ஷஸந்நியாஸயோகத்தின் 53 வது ஸ்லோகம்:

    அஹங்காரம் லம் ர்பம் காமம் க்ரோம் பரிக்ரஹம் !

    விமுச்ய நிர்மம: ஸாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே !!

    நான் பற்றொழிந்தவன் என்ற அகங்காரத்தையும், பலத்தையும், கருவத்தையும், ஆசை, கோபம், இது எனது உடைமை என்ற எண்ணத்தையும் துறந்து மன அமைதியுற்றவன் பிரம்மம் ஆவதற்கு உரியவனாகிறான்.
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Very happy to see that this continues, Madam. And the first thirukkuRaL is one of the best, according to me. The other one that I like the most in similar lines is:
    "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின்."
    -rgs
     
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear rgs,
    Thanks a lot for your appreciation. Because of the support and encouragement I received from people like you I tried to compare Thirukural and Bhagavad Gita. I have almost come to the end of this new venture.
    Sriniketan and Viswa also encouraged me with their feed backs.
    PS
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Very good effort, Ma.

    Sriniketan
     
  5. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Sriniketan,
    Your comments gives me enthu.
    PS
     

Share This Page