1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Read Gita

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jul 8, 2024.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,459
    Likes Received:
    10,685
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கீதை படியுங்கள்
    - சுஜாதா

    துவாரகையில் இடையர் குலத்தில் பிறந்த மாயக்காரன் கண்ணன். அவன் நமக்கு
    வெகுதூரத்தில் இருப்பவனா எனில் ஆம். கிட்டத்தில் இருப்பவனா ஆம். மிகப் பெரியவனா ஆம். சிறுவனா ஆம். அவன் அன்று யுத்தத்தின் நடுவில் ஓதிய கீதையை கற்காதவர்கள் ஞானமற்ற அந்நியர்கள்.

    நான்முகன் திருவந்தாதியில் திருமழிசை ஆழ்வாரின் இந்த வெண்பாவில் மூன்று அழகிய
    தமிழ் வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளலாம். சேயன் என்றால் தூரத்தில் இருப்பவன்.
    அணியன் கிட்டத்தில் இருப்பவன்.
    ஏதிலர் என்றால் அந்நியர்கள்.

    'ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்' என்று வள்ளுவர் சொல்லும்
    'மற்றவர்கள்'.
    இம்மூன்று சொற்களில் அணியன் என்ற சொல் தற்போது வழக்கில்
    மலையாளத்தில் இருக்கிறது, கையாள் என்கிற அர்த்தத்தில்.
    பகவான் நம் கையாளாக இருந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

    இப்போது பாடலைப் பார்ப்போம்:
    சேயன், அணியன், சிறியன், மிகப்பெரியன்,
    ஆயன், துவரைக்கோனாய் நின்ற மாயன் - அன்று
    ஓதிய வாக்கு அதனைக் கல்லார், உலகத்தில் ஏதிலர் ஆம், மெய்ஞ் ஞானம் இல்.
    துவரை என்று துவாரகையை தமிழ்ப்படுத்தியிருக்கிறார் ஆழ்வார். அவர் வாக்கு என்று சொல்வது பகவத்கீதையை. அதைக் கற்காதவர்கள் உலகத்தில் எதற்கும் தகுதியில்லாதவர்கள்.

    JAYASALA 42
     
    Last edited by a moderator: Jul 25, 2024
    Induslady and Thyagarajan like this.
    Loading...

Share This Page