1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Questions and Answers

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jul 7, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    [TABLE]
    [TR]
    [TD]

    1.அச்சம், மடம் ,நாணம்,பயிர்ப்பு என்ற நான்கு குணங்கள் பெண்களுக்கு உரியவை என்று சொல்லப் படுகிறது.ஆடவருக்குஎன வரையறுக்கப்பட்ட குணங்கள் உண்டா?


    அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்ற நான்கும் ஆடவருக்கு உரியவை என்று சொல்லப்படுகிறது.

    எதனையும் கூர்ந்து கண்டு உண்மையை அறிந்துகொள்வது அறிவு.

    காக்க வேண்டியதைக் காத்து விளக்க வேண்டியதை விலக்குதல் நிறை


    ஒரு பொருளை ஆராய்ந்துஉணர்தல்
    ஓர்ப்பு.

    மேற்கண்ட கொள்கைகளை விடாமல் கடைப் பிடித்தல் கடைப்பிடி


    2.'அப்பாவி என்ற சொல் எப்படி வந்தது?

    பாவம் செய்யாதவனை 'அபாபி என்று vadaமொழியில் குறிப்பிடுவர்.இதுவே திரிந்து அப்பாவி என்றாகி விட்டது.


    3.கழிப்பறையை 'கக்கூஸ் 'என்று சொல்வதுண்டு.இது எந்த மொழிச் சொல்?

    டச்சு மொழியில் கழிப்பிடத்தை'கக்விஸ் (kakhuis ) என்று சொல்வார்கள்.அதிலிருந்து வந்ததுதான் இந்த சொல்.


    4. கட்டிப் பொன், பணிப் பொன் என்னே வேறுபாடு?

    வெறும் கட்டியாக உள்ள சுத்தத் தங்கம் கட்டிப் பொன்.( 24 காரெட் ) பணி எனும் சொல் ஆபரணத்தைக் குறிக்கும்.ஆபரண மாகச் செய்த பிறகு அதிலுள்ள தங்கம்
    பணிப் பொன்.










    .5.அகராதி என்ற பெயர் எப்படி வந்தது?


    'அகாராதி க்ஷகாராந்தம் ' என்பது வடமொழி வழக்கு.

    அ முதல் க்ஷ வரை என்பது பொருள்.

    அகரம் முதல் வரிசையாக உள்ள எழுத்துக்களை முதலாக உடைய சொற்களின் தொகுப்புக்கு அகராதி என்ற பெயர் வந்தது.


    6. ஆங்கிலத்தில் வேஷ்டியை dhothi என்கிறார்கள். இது எப்படி வந்திருக்கும்?


    ''தோதவத்தித் தூய மறையோர்' என்று திவ்ய பிரபந்தத்தில் வருகிறது.தோதவத்தி 'தோவத்தி ஆயிற்று.

    அங்கவஸ்திரத்தை தௌத வஸ்திரம் என்று கூறுவது வழக்கம்.அதிலிருந்து தோதவத்தி என்றாகி,தோவத்தி என்று மாறி dhothi ஆகிவிட்டது.


    7..கண்ட்ராவி என்ற சொல்லின் பொருள் என்ன/

    கண்ணராவி -( கண் அராவி )என்ற தொடரின் சிதைவு.கண்ணை அராவுவதுபோலத் துன்பம் தரும் காட்சி என்ற பொருளில் வழங்கப் படுகிறது.


    8.'கரணம் தப்பினால் மரணம் '- என்பதன் பொருள் என்ன?


    மூங்கில் மேல் நின்று கழைக் கூத்தாடி ,தவறினால் மரணம் சம்பவிக்கும் எனும் பொருள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதாவது சில காரியங்களில் சிறு தவறு நேர்ந்தாலும் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.

    இலக்கியத்தில் இதற்கு வேறு பொருள் காண்கிறார்கள்.


    களவிலே காதல் செய்து ,பிறகு உலகறியத் திருமணம் செய்து கொண்டு வாழ்வது பழந்தமிழர் மரபு.நூல்களில் களவு, கற்பு என்று இந்த இரு வகை வாழ்க்கையையும் குறிப்பிடுவர்.

    களவிலே உள்ளம் ஒன்றுபட்ட காதலர்கள் மணம் புரிந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டால் இறந்து விடுவார்கள்.கற்புக்குக் கேடு வரும் என்று அஞ்சி இறந்து விடுவர்.

    ' கரணம் 'என்ற சொல் மண வினையைக் குறிக்கும் சொல்.

    கரணம் தப்பி விட்டால், அதாவது திருமணம் செய்யத் தவறி விட்டால் மரணம் சம்பவிக்கும் .


    9. 'தமிழுக்கு முகம் இல்லை;வட மொழிக்கு வாய் இல்லை 'என்று சொல்கிறார்கள்.இதன் பொருள் என்ன?


    முகம் என்பது வட மொழிச் சொல் தமிழில் நெற்றி,தலை, வாய் முதலிய உறுப்புக்களுக்குரிய பெயர் இருப்பினும் ,முகம் என்பதைக் குறிக்கத் தனிச் சொல் இல்லை

    அது போல வட மொழியில் 'வாய்' என்பதற்குத் தனியாகச் சொல் இல்லை. ' வாக் ' என்பதும் 'முகம்' என்பதும் ஆகுபெயர்களாக நின்று வாயைக் குறிக்க வழங்குமேயன்றி .இயல்பாக ஒரு சொல் இல்லை.


    மூஞ்சி என்ற சொல்லும் தமிழ்ச் சொல்தான் என்றாலும், அந்த சொல் இழித்துக் கூறும்போது மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.


    10.இராமன் என்ற சொல்லை மரியாதையாகச் சொல்ல வேண்டுமானால் எப்படி வழங்க வேண்டும்/

    இராமர், இராமனார் என்று இருவகையிலும் குறிக்கலாம்.

    ஆனால் ' இராமனார் ' என்ற சொல்சொல்தான் திட்டமாக ஒருவரை மட்டும் குறிக்கும்.

    ' இராமர் 'எனும் சொல் ஒருவரையும் குறிக்கலாம்..பல இராமர்களையும் குறிக்கலாம்.
    11..உத்தராயணம் ,தட்சிணாயனம் என்ற இரண்டு தொடர்கள் திசையைக் குறிக்கும் சொற்களோடு 'அயனம்' என்ற சொல் சேர்ந்தது .ஆனால் ஒன்றில் ண 'வும் ,மற்றொன்றில் ன வும் இருக்கிறது.ஏன் ?



    வடமொழிப் புணர்ச்சி விதிகளில் 'ர ' என்ற எழுத்து எங்கு ' வந்தாலும் 'னகரம் ' ண கரமாக' மாறும். உத்தர என்ற எழுத்தில் 'ர' இருப்பதால் அது உத்தராயணம் ஆக மாறுகிறது. தக்ஷிணம் என்பதில் 'ர' இல்லை.


    இதே காரணத்தால் தான் 'ராம +அயனம் 'ராமாயணம் ஆனது.


    12.உறை போடக் காணாது ---உறை என்பது என்ன?

    சாதாரணமாக 'உறை ' என்பது மூடியைக் குறிக்கும் சொல் என நிறைய பேர் நினைக்கிறார்கள்.

    அது தவறு.

    நெல் அளக்கும்போது ஐந்து கலம் ஆனதும்,அதைக் குறிக்கக் கணக்குப் பிள்ளை ஒரு பிடி நெல்லைத் தனியாக எடுத்து வைப்பார்.களத்தில் எத்தனை பிடி தனியாக இருக்கிறதோ அத்தனை ஐந்து கலங்கள் என்று பொருள்.

    அந்த 'பிடி' நெல்லுக்குத் தான் உறை என்று பெயர்.

    கலம் கலமாக நெல் விளையும்போது 'உறை ' நெல்லுக்கு எந்த மதிப்பும் கிடையாது. அது போல மிக்க அறிவாளியுடன் சாதாரண மனிதனை ஒப்பிடும்போது உறை போடக் காணாது என்பர்.


    Jayasala 42




























































    [/TD]
    [/TR]
    [/TABLE]
     
    1 person likes this.
    Loading...

  2. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    JayMa,

    Nice article about Tamil words and phrases. Were you a tamil teacher/professor, or is it just you have so much fascination for tamil language or languages in general? I don't agree with "Ramar" for plural form, but I don't know, you definitely know what you are writing about, nan porundhalaiyunnu ninaikirane.

    Novel ideas always flow in your snippets. I'm reminded of a few words in our hometown "Hold on" by bus conductors over the period of time became "oldane oldane" if we ask them what was the word I don't think they will guess it as "Hold on". In theaters Popcorn, became paapgon, I picked up like them never thought it to be popcorn.

    In US, for big Spiders that make cobwebs in our houses, are called "daddy long legs", the children probably didn't know it was a type of spider and called their dad's describing the insect...hence people call it "daddy Long legs". I had in mind few more but forgot now. Enjoyed reading yours as always. Thanks for sharing.
     
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Shri Velukkudi Krishnan while referring to Lord Shiva uses the expression'Shivanaar?as a form of respect.Some say that as Vaishnavite he uses the word 'Shivanaar' in a mockery tone.In fact the word 'Shivanar' is the correct respectful plural ( mariyathai panmai) for Shivan.

    While we use 'Ramar' casually we don't use the word 'shivar'.While I was thinking about all these things I happened to read a book by the eminent Tamil scholar
    Ki.. Vaa.Jagannaathan.
    In connection with use of singular, plural ( orumai, panmai) he has clearly stated that for Raman, the respectful term will be both Ramar and Ramanaar.
    But Ramanaar is more applicable since 'Ramar' may denote a respectable one Ramar or the plural form 'Ramars'.and it can be decided only after seeing the predicate( verb) of the sentence.
    But Ramanaar refers only to a singular person as a respectful term.

    In Tamil ,we have many incorrect usages in common speaking and we have formed an impression that what we use is correct.

    Another example is the word srimathi and thirumathi.
    When the Sanskrit term 'sri' was translated as 'thiruvaalar' every one accepted this.
    The feminine form of 'Thiruvaalar in Tamil is definitely not thirumathi ' and the correct form is 'thiruvaatti'only.

    But if I address any lady as 'Thiruvaatti' ,they see me with an eye of contempt .
    I can cite many such colloquial wrong usages being used in written Tamil also.The pity is we don't accept one as wrong as it has been registered in our mind as 'correct'..

    Thank you for spending time to read my snippet.

    Jayasala 42
     

Share This Page