'Puthukkavithai' -Thanks to Kumudam for these poems.

Discussion in 'Jokes' started by Renukamanian, Feb 22, 2011.

  1. Renukamanian

    Renukamanian Senior IL'ite

    Messages:
    36
    Likes Received:
    23
    Trophy Points:
    23
    Gender:
    Male
    {நன்றி: இந்த புதுகவிதையாளர்கட்கு.}


    துடிப்பு

    குழந்தையின் கையை

    நசுக்கியதால்

    கிரீச் ஒலியிட்டுக்

    கதறியது

    கதவு. :rant

    தி. பச்சமுத்து, கிருஷ்ணகிரி.
    +++

    புனிதம்

    குழந்தைகள்

    தப்புத் தப்பாய்

    பாடினாலும் கெடுவதில்லை...!

    தேசியகீதத்தின் புனிதம். :cool2:

    -- கு. வைரச்சந்திரன், திருச்சி.

    ரசனை

    குழந்தையின் நடையை

    ரசிக்க முடியாமல்

    குமுறியது...

    நடைவண்டி! :idontgetit:

    -- கோவை. நா.கி. பிரசாத்
    +++

    ஈஸ்வரா

    சாப்பிடாத குழந்தையை

    ‘சனியனே' என்று

    அம்மா திட்டியபோதும்

    குழந்தையுடனேயே

    இருந்தார்

    கடவுள். சனீஸ்வரனாக! :thumbsup

    -- ஆர்.பி. ஜெயச்சந்திரன்,பூனாம்பாளையம்.

    +++

    தவிப்பு

    பருந்து

    கோழிக்குஞ்சைத்

    தூக்கிச் சென்ற இடத்தில்

    இன்னமும்

    காயாமல் கிடக்கிறது

    குழந்தையின்

    கண்ணீர்த் துளி! :shock:

    -- தஞ்சை கமருதீன்

    கல்நீர்

    குழந்தையை விட

    அதிகமாய் அழுதது

    குழந்தை இடித்துக்கொண்ட

    கல்!

    --ப. கோபி, கிருஷ்ணகிரி.
    +++

    ஊஞ்சல்

    மகிழ்ச்சியில் ஆடிக்

    கொண்டேயிருந்தது

    குழந்தை காதில் இருந்த

    தொங்கட்டான்!

    -- ப. கோபி, கிருஷ்ணகிரி.

    +++

    போட்டி

    குழந்தை

    வரைந்த

    வானத்தில்

    இடம் பிடிக்க

    முடியாமல்

    தவித்தன

    நிஜ நட்சத்திரங்கள்! :redface::roll:

    -- சொக்கம்பட்டி, தேவதாசன்.
    +++

    விடுமுறை

    அரையாண்டு

    விடுமுறையை

    ஆவலோடு எதிர்பார்த்து

    காத்துக் கொண்டிருந்தன

    பொம்மைகள்! :)

    -- பி. கோபி, கிருஷ்ணகிரி.
    =============================================
    Reproduction by : "Renukamanian"

     
    Loading...

  2. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
    அழகான கவிதைகள்.. உண்மையான வரிகள் .. கவிதை எழுதியவர்க்கும், குங்கும இதழிற்கும், இங்கே பகிர்ந்தமைக்காக உங்களுக்கும் மனதார நன்றிகள் பல
     
    Last edited: Feb 22, 2011

Share This Page