Proverbial Tamil Proverbs - Part 3

Discussion in 'Jokes' started by Chitvish, Nov 27, 2006.

  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தங்களுக்கு நல்வரவு, என் இனிய நண்பரே !

    என் மதிப்புக்கும், அன்புக்கும் உரிய வரலொட்டி ரங்கசாமியே !
    இதை
    இதை
    இதைத் தான் நான் எதிர்பார்த்தேன் !

    நீங்களும், உங்கள் அன்பு மனைவியும் ( துணைவி என்ற சொல்லுக்கு, இப்பொழுது சென்னையில் அர்த்தமே வேறு !) என் இனிய தோழியுமான இந்துவும், என் "தொடர் சங்கிலியில்", பங்கு எடுத்துக் கொள்ளுவது, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது என்பது மிகையே இல்லை ! "அ"காரத்தில் தொடங்கி விட்டு மதிய உணவு வேளை நெருங்குவதால், நான் "ஆ"காரத்திற்கே போகிறேன்!


    அழகிருந்து அழும் அதிர்ஷ்டமிருந்து வாழும்

    அன்னமிட்ட வீடு சின்னம் கெட்டுப் போகாது

    அசலாத்து பிராம்மணனே பாம்பைப் பிடி
    அல்லித்தண்டைப் போல குளிர்ந்திருக்கும்

    அக்கச்சி உடமை அரிசி தங்கச்சி உடமை தவிடு!

    அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை

    அல்பத்துக்கு பாவிஷு வந்தால் அர்த்த ராத்திரி குடை பிடிக்கும்

    அசல் வீட்டுக்காரனைப் பரிந்துகொண்டு, ஆம்படையானை அடித்தாளாம்

    அரிசி பகையும் ஆம்படையான் பகையும் உண்டா?

    அரைத்துட்டிலே கல்யாணம்
    அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை

    அலை ஓஞ்சு சமுத்திர ஸ்னானம் பண்ணினாற்போல

    ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்

    ஆட்டுக்குட்டியைத் தோளில் வைத்துக் கொண்டு ஊரெல்லாம் தேடினது போலே

    ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

    ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப்பறக்கும்போது
    இலவம்பஞ்சு என்ன சேதி என்று கேட்டதாம்

    ஆடை பாதி அழகு பாதி

    ஆண் தாக்ஷிண்யப் பட்டால் கடன்
    பெண் தாக்ஷிண்யப் பட்டால் விபசாரம்

    ஆண் பிள்ளை அழுதால் போச்சு; பெண் பிள்ளை சிரிச்சால் போச்சு

    ஆடு பகை, குட்டி உறவா

    ஆடிக்கு ஒரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒரு காய் காய்க்கும்

    ஆடிச்சேர் தேடி வரும்

    அரைக்கசை ஆயிரம் பொன்னாக்குபவளும் பெண்சாதி
    ஆயிரம் பொன்னை அரைக்காசு ஆக்குபவளும் பெண்சாதி

    மீண்டும் வருக !

    அன்புடன்,
    சித்ரா.
     
  2. indhusri

    indhusri Bronze IL'ite

    Messages:
    646
    Likes Received:
    9
    Trophy Points:
    38
    Gender:
    Female
    sabaash ....

    Dear Chithra ,
    I m reminded of the old movie ' vanjikkottai vaaliban ' ... So i can say nothing but ... "SABAASH.... SARIYAANA POTTI ! " ( between you & my beloved husband Mr. Varalotti ! )
    CARRY ON ... LET US ALL ENJOY !
    Love ,
    Indhu .
     
  3. meenaprakash

    meenaprakash Silver IL'ite

    Messages:
    941
    Likes Received:
    50
    Trophy Points:
    63
    Gender:
    Female
    good one..

    Dear Chitra,

    I felt so thrilled that I knew some of them. Its nice to go thru these - with some havig such intense meaning.
    Now, what is our youngest man upto????
    is it some kind of a competition going on here????
    whatever, we are all ready & here to cheer......


    L, Hs & Ks
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Competition? - no way, Meena !

    How can a simple housewife ever pose a competitor to an ezuththaalar ?
    Let us call it" pazamozikku pazamozi" like Pattukku Paattu !
    Thankyou, Meena, I wait for you in every thread of mine !
    Love & regards,
    Chithra.

    உயிரோடு இருக்கும்போது ஒரு முத்தம் கொடுக்கவில்லை;
    செத்த பிறகு கட்டிக் கட்டி முத்தமிட்டாளாம்
     
  5. Kamla

    Kamla IL Hall of Fame

    Messages:
    8,454
    Likes Received:
    5,103
    Trophy Points:
    440
    Gender:
    Female
    Dear Indhusri and Meena...

    Haaa...it is indeed a competition! Considering that both Chitra and Varalotti are still in the prime of their life, they seem to dish out Pazhamozhigal far beyond their tender age can command! Mr V gives 10, Ms C give 2 back for each..a double whammy:) So, it is not 'pattukku pattu', it is 'pattukku rendu pattu':))....Looks like the younger you are, the more 'jor' you have:)

    Besides Indhu, a whole load of us are still waiting for meaning of One P'mozhi:)
    See, we are 'even' more younger and 'far too innocent'. Help needed!

    L, Kamla
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    My dear Sujata !

    Indhu PMed that she has got the meaning of the pazamozi from her ezuthaalar husband, but because he claims to be an innocent " பால் வடியும் முகம்", she feel delicate to reveal the other side of him.
    So, let us not embarass dear Indhu anymore. I am PM ing you the meaning, from what little, I know.
    Love & regards,
    Chithra.

    குமரியாயிருந்தால் கொண்டாட்டம்
    கிழவியாயிருந்தால் திண்டாட்டம்
     
  7. Kamla

    Kamla IL Hall of Fame

    Messages:
    8,454
    Likes Received:
    5,103
    Trophy Points:
    440
    Gender:
    Female
    :))))

    Ayyo Chitra........Ingu yaar kezhavi...ellarum kumarigal dhan:)

    L, Kamla
     
  8. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    தொடர்கிறேன், இது போட்டியில்லை!

    உங்களுடன் போட்டி போட எனக்கு அனுபவம் பத்தாது.... (இது பழமொழியல்ல)

    அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான் ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்.

    அஞ்சினாரைக் கெஞ்ச வைக்கும்; அடித்தாரை வாழ வைக்கும்

    அஞ்சு பணம் கொடுத்து அடிக்கச் சொன்னானாம்; பத்து பணம் கொடுத்து நிறுத்தச் சொன்னானாம்

    அஞ்சு பணம் கொடுத்துக் கஞ்சித் தண்ணியக் குடிப்பானேன்?

    அஞ்சு பிள்ளை பெற்றவளுக்கு தலைச்சன் பிள்ளைக்க்காரி மருத்துவம் சொன்னாளாம்

    அஞ்சு பெண்டாட்டி கட்டியும் அறுக்க (to help in the harvest) பெண்டாட்டி இல்லை; (the power of this proverb lies in the second part; but unfortunately ladies, that is against forum etiquette. I leave the second part to your fertile imagination ha ha ha)

    அஞ்சும் சரியாக இருந்தால் அறியாச் சிறுக்கியும் கறி சமைப்பாள்.

    அஞ்சு மாசம் வரைக்கும் தாய்க்கும் மறைக்கலாம் சூல்.

    அஞ்சு வந்தாலும் அவசரம் ஆகாது; பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது.

    அஞ்சு வயசுல அண்ணன் தம்பி; பத்து வயசுல பங்காளி.

    என்றும் அன்புடன்
    வரலொட்டி ரெங்கசாமி
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஐயா, வரலொட்டியாரே !

    28 வயதே ஆன தங்களுடன், பருவக்குமரியான நான் எப்படி போட்டி போட முடியும் ? நீங்கள் எழுதியது, முற்றிலும், சரி, இது போட்டியே அல்ல ! எல்லோரும் ரசிக்கும் ஒரு விளையாட்டு !

    அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

    அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையுமா ?

    அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும்
    செவ்வை ஆகாது

    அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடையாது

    அழகு ஒழுகுகிறது, நாய் வந்து நக்குகிறது; ஓட்டைப்பானை கொண்டுவா பிடித்து வைக்க

    அழகுக்குச் செய்தது ஆபத்துக்கு உதவும்

    அரைச்சொல் வித்தை கொண்டு அம்பலம் ஏறலாமா ?

    அடுப்பே வனவாசம் கடுப்பே கைலாசம்

    நீங்கள்
    (the power of this proverb lies in the second part; but unfortunately ladies, that is against forum etiquette. I leave the second part to your fertile imagination ha ha ha)
    எழுதியதை, நான் சின்னப் பெண் ஆனதால், விவரம் புரியாமல், எழுதி விட்டேன், ஐயா ! மன்னிக்கவும் !!

    என்றும் அன்புடன்,
    சித்ரா.
     
  10. sudhavnarasimhan

    sudhavnarasimhan Silver IL'ite

    Messages:
    1,310
    Likes Received:
    20
    Trophy Points:
    70
    Gender:
    Female
    dear Chitra,
    It has been fun watching you both on the pazhamozhikku pazhamozhi potti! And your rejoinders in every post is also fun to read.....i enjoyed this one among others!

    உயிரோடு இருக்கும்போது ஒரு முத்தம் கொடுக்கவில்லை;
    செத்த பிறகு கட்டிக் கட்டி முத்தமிட்டாளாம்:clap

    Keep them coming....looks lik the monday thread has become a every day thread!
     

Share This Page