Proverbial Tamil Proverbs - Part 2

Discussion in 'Jokes' started by Chitvish, Nov 20, 2006.

  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஸ்ரீதரன், நீங்கள் செய்வது..................................

    எப்படி தெரியுமா இருக்கிறது ?

    ஆடு மேய்த்தாற் போலும் ஆச்சு
    அண்ணனுக்கு பெண் பார்த்தாற் போலும் ஆச்சு !

    இன்னும் நீங்கள் நிறைய பிராக்டிஸ் பண்ண வேண்டும் என்று தோன்றுகிறது ! அதனால் வாரா வாரம் அவசியம் வாருங்கள் ஸார் ! மதுரைக்காராளுக்குப் பழமொழிக்கா பஞ்சம் ?

    அன்புடன்,
    சித்ரா.

    உங்கள் பழமொழிகளைப் படித்து விட்டு

    எலுமிச்சம்பழ வண்டிக்காரன் உருண்டு உருண்டு சிரிச்சானாம்
    வெத்தலை வண்டிக்காரன் விழுந்து விழுந்து சிரிச்சானாம் !
     
    Last edited: Nov 26, 2006
  2. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    அடுத்த வாரம் என்ன இந்த வாரமே வருகிறேன்!

    திருமதி சித்ரா அவர்களே, இதோ பிடியுங்கள் 15 பழமொழிகளை!

    1) அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்

    2) அக்காள் இருக்கிற வரையில்தான் மச்சான் உறவு.

    3) அக்காள் உறவு மச்சான் பகையா?

    4) அக்காள் வீட்டுக்கு போனாலும் அரிசியும் பருப்பும் கொண்டு போக வேண்டும்.

    5) அக்காள் வீட்டுக் கோழியை அடித்து மச்சானுக்கு விருந்து வைத்தாளாம்.

    6) அகப்பை பிடித்தவன் தன்னவன் ஆனால் அடிப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன?

    7) அகமுடையான் அடித்த அடியும் அருவாள் அறுத்த அறுப்பும் வேண் போகாது.

    8) அகமுடையாளுக்குச் செய்தால் அபிமானம்; அம்மாளுக்குச் செய்தால் அவமானம்.

    9) அகமுடையான் அடித்ததற்கு கொழுந்தனைக் கோபித்துக் கொண்டாளாம்.

    10) அகமுடையானுக்கு பெண்டாட்டி மேல் ஆசை, பெண்டாட்டிக்கோ புடவை மேல் ஆசை.

    11) அகமுடையானுக்கு பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்ல முடியுமா?

    12) அகமுடையானைக் கண்ட் போது தாலியைத் தடவுவாளாம்.

    13) அகல இருந்தால் நிகள உறவு. கிட்ட இருந்தால் முட்டப் பகை.
    (நிகள = நீண்ட)
    14) அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்.

    15) அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால் வெங்காயம் கறிவேப்பிலை என்பாளாம்.

    நீங்கள் சொன்னது போல் நான் ஆட்டையும் மேய்த்து விட்டேன், அண்ணனுக்கு பெண்ணும் பார்த்துவிட்டேன். இது எப்படி இருக்கு?

    என்றும் அன்புடன்,
    வரலொட்டி ரெங்கசாமி
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    திரு ஸ்ரீதரனே !

    நீங்கள் அகாரமா ? நான் சித்விஷ் ஆனதால் ஆகாரம் தான், ஐயா !


    ஆக்குகிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண்

    ஆகவேண்டும் என்றால் காலைப் பிடி
    ஆகாவிட்டால் கழுத்தைப் பிடி

    ஆகாயத்தை வில்லாக வளைப்பான்
    மணலைக் கயிறாகத் திரிப்பான்


    ஆண் தாக்ஷிண்யப் பட்டால் கடன்
    பெண் தாக்ஷிண்யப் பட்டால் விபசாரம்

    ஆண் பிள்ளை அழுதால் போச்சு; பெண் பிள்ளை சிரிச்சால் போச்சு

    ஆசை இருக்கிறது ஆனை மேல் ஏற
    அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க


    ஆற்று நிறைய வெள்ளம் போனாலும் நாய் நக்கித் தானே குடிக்க வேண்டும்

    ஆட்டுக்குட்டியைத் தோளில் வைத்துக் கொண்டு ஊரெல்லாம் தேடினது போலே

    ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

    ஆற்றுவாரும் இல்லை; தேற்றுவாரும் இல்லை
    ஏன் என்பாருமில்லை; எடுத்துப் பார்ப்பாருமில்லை

    ஆட்டுக்கு வால் அளந்து தான் வச்சிருக்கார்


    ஆபத்துக்கு உதவாத பெண்சாதி அழகுக்கா வைத்திருக்கிறது ?


    ஆட்டைத் தூக்கி மாட்டிலே போட்டு மாட்டைத் தூக்கி மந்தையில் போடுகிறான்

    ஆடை வாய்ப்பதும் அகமுடையான் வாய்ப்பதும் அவரவர் அதிர்ஷ்டம்

    கடைசி பழமொழி இந்துவிற்காக எழுதியிருக்கிறேன் !

    பயம் வேண்டாம், நிறுத்தி விட்டேன் !

    அன்புடன்,
    சித்ரா.
     
    Last edited: Nov 26, 2006
  4. indhusri

    indhusri Bronze IL'ite

    Messages:
    646
    Likes Received:
    9
    Trophy Points:
    38
    Gender:
    Female
    really ve....ry nice !

    Dear Chith ,
    This forum has become more enjoyable ever since u started posting proverbs ! Rea...lly ve....ry nice ! The one i like the most is : ' eduththu vechaalum koduththu vechchirukkanum ' !
    Ur translation to the proverbs are prompt & sweet !
    Expecting more and more .......ok ?
    With lots of love ,
    Indhu .
     
  5. indhusri

    indhusri Bronze IL'ite

    Messages:
    646
    Likes Received:
    9
    Trophy Points:
    38
    Gender:
    Female
    aaahhaa !

    Dear Chith ,
    Just now i saw ur reply to Sridhar - aahhaa ...... kadaisiyaa ezhudhinadhu correctdhaane ( positve point-la !) ............ U agree with me or not ? ........ Do reply ( of course aiong with one sweet pazhamozhi !) ...ok ?
    Love ,
    Indhu .
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    My dearest Indhu !

    Your command is my wish !
    Yes, I plan to punish you all weekly !
    Husband & wife both partaking in my thread - I cannot ask for more !

    Love & regards,
    Chith.

    பணமும் பத்தாயிருக்கணும் பொண்ணும் முத்தாயிருக்கணும்

    இதைக் கேட்டதும்

    பிறந்தகத்துப் பெருமையை உடப்பிறந்தானிடம் பீற்றிக் கொண்டாளாம்

    ஞாபகத்திற்கு வருகிறதா? - ஏனென்றால், இந்தப் பழமொழியை எனக்கு சொல்லியதே நீங்கள் தானே ??
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    I am scared, now, Indhu !

    If we both join together, Sridhar may comment

    சம்பந்தியும் சம்பந்தியும் ஒன்று
    கொட்டு மேளக்காரன் தனி !

    அன்புடன்,
    சித்ரா
     
  8. Varloo

    Varloo Gold IL'ite

    Messages:
    4,022
    Likes Received:
    498
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Dear Chithra,
    this proverb thread is just thriving, with participation from our couple-members also. It is nice to see that both are participating in the same thread, a rare feat.
    I could not get ready the font you sent me. It may take some time.
    There is a proverb in Kannada similar to the 2nd proverb which Sridhar had posted- akkanu illa bhavanu, thuppa ella thoyanu. Meaning bil without sister is like dal without ghee.
    Her are some more-
    Dhanam kudutha mattin pallai pidungi pathanam
    Arandaval kannukku irundathellam pey
    Pichai eduthatham perumalu, adhai pidunki thinnutham anumaru
    Pillayar pidikka kurangai mudinthathu
    Anathaikku aandavane thunai
    Aalilla thukkam azhuthalum theerathu
    Kaathirunthavan pondattiyai nethuvanthavan konduponan
    Thalaikku mele ponal, chan enna muzham enna
    Aadu kalpanam, chuma cooli mukkappanam
    Oorukkellam oru vazhinna, onnarai kannanukku oru vazhi
    Kannal kanpathum poi, kadhal ketpathum poi, theera visarippathe mei
    More on the way
     
  9. Kamla

    Kamla IL Hall of Fame

    Messages:
    8,454
    Likes Received:
    5,103
    Trophy Points:
    440
    Gender:
    Female
    What fun..

    Ha ha....I just now caught up with the latest on this thread. But ..... my Tamil is too bad to keep up with the stalwarts here:) All the same, enjoying and learning and trying to understand...even if my fingers are trembling to join the Pazhamozhi clan, the lack of know how hinders:(

    Hmmmm......
    Aasai irukkiradhu aanai mel era
    Adhrishtam irukkiradhu kazhudhai meyka...:))

    L, Kamla
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Sujata, you have....

    come out with a grand finale for the pazamozi thread, this week !

    Something very similar to what you have written is;

    ஆசை இருக்க தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு மாடுமேய்க்க

    Let us meet again in the new thread, I plan to start today, Part 3.

    Love & regards,
    Chithra.
     

Share This Page