1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,551
    Likes Received:
    2,550
    Trophy Points:
    338
    Gender:
    Female
    MR இயக்கத்தில் உலகநாயகன் நடித்த இந்த வருடத்தில் வெளியான புத்தம் புது படத்தை பார்க்க ஆவலாக தான் இருந்தோம். Online reviews பார்த்து பயந்து போய் இந்த படத்துக்கு போகணுமா வேண்டாமா என்று யோசித்து ஒரு முடிவிற்கு வருவதற்கு முன்பே அந்த படத்தை திரை அரங்கில் இருந்து தூக்கி விட்டார்கள். நாங்களும் தப்பித்தோம் என்று நினைக்கிறேன். அதனால் நான் எடுத்த முடிவு - தலைவர் படத்தை FDFS பார்த்து விடுவது. நானும் எனது இணையும் சேர்ந்து இந்த படத்திற்கு சென்றோம். ஆஹா ஓஹோ என்றும் இல்லாமல் மரண மொக்கை என்றும் இல்லாமல் தலைவலி படம் என்றும் இல்லாமல் எங்களுக்கு OK படம் தான்..படம் பார்த்த பிறகு விமர்சனம் பார்த்தேன்.. எதற்கு இந்த படத்தை இப்படி ரோஸ்ட் செய்தார்கள் என்பது எனக்கு புரியவே இல்லை.. "வா வா பக்கம் வா", மோனிகா பாடல்கள் எனக்கு கிளிக் ஆச்சு..சில ட்விஸ்ட் ஒர்க் ஆச்சு..ஸ்டைல் வில்லன் ok..வில்லத்தனமான தம்பதிகள் கலக்கி இருந்தார்கள்..Cameo - சுத்த வேஸ்ட்..அதான் REELS என்று படத்தின் ஆரம்பத்தில் போடுகிறார்களே? லாஜிக் ஓட்டை எல்லாம் பார்க்க தோணவில்லை..நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க..நாம தான் நமக்கு பிடிக்குமா இல்லையா என்று எதையும் முடிவு எடுக்கணும்..
     
    Thyagarajan likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,551
    Likes Received:
    2,550
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இரண்டு மாதங்களுக்கு பிறகு புது பாடல்களை தேடி பிடித்து கடந்த வார இறுதியில் கேட்டு கொண்டிருந்தேன்..இன்னும் மண்டைக்குள் மூணு பாடல்கள் ஓடி கொண்டிருக்கிறது..பாடல்கள் பதிவிடவே இன்று இங்கு வந்தேன்..

    என் மனதில் முதல் இடத்தை பிடித்த பாடல்..

    தீக்கொளுத்தி - Bison Kaalamaadan

    இந்த மாதிரி ஒரு பாடல் கேட்டு பல வருடங்கள் கடந்து போன உணர்வு எனக்கு..Heart and soul போட்டு பாடலை பாடி இருக்கிறார் பாடகர்/ இசை அமைத்து இருக்கிறார் இசை அமைப்பாளர்..மனதை பிழிந்து விட்டது..சோக பாடல் போட்டதிற்கு என்னை ராகிக் பண்ண நினைப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட காட்சி அமைப்பை பார்க்கவும்..அடடா ரகம்! :wink::wink: இங்கு ஒரு காலத்தில் ரொமான்டிக் ஆன பாடல் வரிகள் போஸ்ட் செய்த பெண் நண்பர்களிடம் நான் கேட்க நினைத்த கேள்வி என்ன என்பதை அவரவர் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்..:wink::wink:

    "கண்ணம்மா" எவ்ளோ கவித்துவமான செல்ல பெயரோ "ராசாத்தி" என்ற பெயரும் அங்ஙனமே!!
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,551
    Likes Received:
    2,550
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இரண்டாவது பாடல்

    திமிருக்காரி - காந்தி கண்ணாடி

    பாடல் படம் பிடித்து இருக்கும் விதம் - அருமையோ அருமை. செம fresh ஆக இருந்தது!!

    ஒரு இளம் ஜோடி; ஒரு வயதான ஜோடி - இரண்டு ஜோடியும் போட்டி போட்டு மனதை கொள்ளை அடிக்கும்.. துளிர் விடும் ஒற்றை ரோஜா அழகா? தொடுத்த மல்லிகை அழகா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?

    பாடலில் நாய் நடிப்பும் இதம்..
     
    Thyagarajan likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,551
    Likes Received:
    2,550
    Trophy Points:
    338
    Gender:
    Female
    மூன்றாவது பாடல்

    ரொமான்டிக் பாடல் வரிகள் ரசிப்பது ஒரு கட்ட ரசனை..அதுபோல படம் பிடித்து இருக்கும் அழகை ரசிப்பது இன்னும் தூக்கலான ரசனை..குறிப்பாக இந்த பாடலின் ஆரம்ப காட்சி - அடடா ரகம்!! :wink::wink:

    கல்லூரும் காத்து என் மேல - வீர தீர சூரன் Part 2

    ஏ ஒன்னாக வாழ்ந்தாச்சு
    பல முத்தத்த பார்த்தாச்சு
    அட இன்னைக்குமே நான் உன்ன கண்டா
    என் உள்ளாற தீ பிடிக்கும்

    நான் ஏதோ ஒரு flow ல கிறுக்கியதா நினைக்க வேண்டாம்..பாட்டுல வந்த பட்டுனு மனசுல நின்ன வரிகள் தான் போட்டு இருக்கிறேன்!! :wink::wink:

    படத்துல வருவது போல் எல்லாம் வாழ்க்கை அமையாது.. இது தான் யதார்த்தம் :grinning::grinning:

    கடந்த வருடம் தாயகத்தில் இருந்த போது எனது இணையிடம் கேட்டேன்: நாம ரெண்டு பேரும் பக்கத்துக்கு பீச்சுக்கு பைக் ல போலாமா?
    எனது இணை: எனது கல்லூரி காலத்தில் பைக் ஒட்டி இருக்கிறேன். இப்போ பைக் ஒட்டி ரெண்டு
    பேரும் ரோட்டுல விழுந்தால் பரவாயில்லையா?

    இப்படி தான் எங்களது 31-Dec-2024 பொன்மாலை சென்றது:

    வீட்டில் இருந்து நறுக்கிய மாங்கா துண்டுகளை மிளகாய்/உப்பில் நனைத்து Ziplock பேக் செய்து, ஒரு சின்ன A2B ஸ்வீட் பாக்ஸ்/ ஒரு சிப்ஸ் பாக்கெட், ஒரு வாட்டர் கேனில் பில்டர் தண்ணீர், கைகள் துடைக்க நாப்கின்ஸ் - இதெல்லாம் ஒரு backpack ல எடுத்து வைத்தார் எனது இணை. நாங்கள் இருவரும் சென்ற இடம் பீச். இப்பவும் கண்ணுக்குள் அத்தனை நிகழ்வுகளும் வந்து போகிறது - அலைகள் நிம்மதியில்லாமல் சத்தமிட்டு கொண்டிருந்தாலும் நாங்கள் நிம்மதியாக கழித்த அந்த இனிய பொழுதுகள்..!!

     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    13,178
    Likes Received:
    13,746
    Trophy Points:
    645
    Gender:
    Male
    :hello:#8131 onwards... படித்தவுடன் இதமாக இருந்தது.
    அன்த நாள் ஞாபகம் வந்ததேன்?
    காலை விடியும் நேரம். மணி 6. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சன்னதியில் ராஜாத்தியும் நானும் . பிறகு நடையாக மெரீனா கடற்கரையில் . கடலின் அலைகள் கால்களை நீராட்ட....இணையுடன் இணைந்து.. கடல் காற்று நீர்த்திவலையுன்..முகத்தில் வீச....ம் அது அந்த காலம்..
    கி பி 2000த்தில்.
     
    singapalsmile and vidhyalakshmid like this.
  6. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,825
    Likes Received:
    1,964
    Trophy Points:
    325
    Gender:
    Female
  7. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,825
    Likes Received:
    1,964
    Trophy Points:
    325
    Gender:
    Female
    படத்துல வருவது போல் எல்லாம் வாழ்க்கை அமையாது.. இது தான் யதார்த்தம் (Liked the lines)
    பெரும்பாலான மக்களுக்கு படங்களில் வருவது ஒரு கனவு வாழ்க்கை தான். மாய உலகம் !
    தாங்கள் கடற்கரைக்கு எடுத்து சென்றதை ரசனையாய் கொஞ்சம் கவிதையாய் எழுதி இருக்கீங்க ! அருமை !
     
    singapalsmile and Thyagarajan like this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    13,178
    Likes Received:
    13,746
    Trophy Points:
    645
    Gender:
    Male
    Sep 30 pala chevaikal kadanthu vittana. @singapalsmile ku pāttû onuum pudusa inge Podura Madhiri thonalaiya .
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,551
    Likes Received:
    2,550
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நலமாக இருக்கிறீர்களா? நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். மகிழ்ச்சி.

    இந்த போஸ்ட் எனக்கு மிகவும் பிடித்தது..அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது..இங்கு சொல்ல இயலாது..

    நான் எழுததியதை படித்து உங்களது மலரும் நினைவுகள் பகிர்ந்து கொண்டீர்கள். நன்றி. உங்களது போஸ்ட் எனது மலரும் நினைவுகள் தட்டி எழுப்பியது. திருமணம் ஆன புதிதில் நானும் எனது இணையும்/இணையின் குடும்பத்து நபர்களோடு சென்னையில் சென்ற முதல் கோவில் இது. பிறகு சென்ற இடம் Ratna Cafe - இட்லியும் வழிய வழிய ஊற்றி சாப்பிட்ட சாம்பாரும் நினைவில் இன்றும் சுவையாக நிற்கின்றது..இதற்கு சம்பந்தப்பட்ட ஏதாவது நிகழ்வுகள் உங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்..
    இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்..சேகரித்த இனிய நினைவுகளை வயதான காலத்தில் அசை போடுவது அலாதி இன்பம் தானே? எங்கள் இருவருக்கும் ஆன நினைவுகளை சேகரிக்க நான் இப்போதெல்லாம் நிறைய முயற்சி எடுக்கிறேன்..:grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,551
    Likes Received:
    2,550
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    எப்படி இருக்கீங்க? வழக்கம் போல பேச்சு அருமை. முடிந்தவரை புதுசு புதுசாக காலத்திற்கு ஏற்ப பேசுவது சிறப்பு. நிறைய கருத்துக்கள் யதார்த்தமாக ஏற்றுக்கொள்ள முடிந்தது..நானும் உங்களது கட்சி தான். தீபாவளி தித்திப்பது ஆண்களால் தான் - ஆனால் நிதிக்காக இல்லை..குடும்பத்தில் ஆணும் பெண்ணும் சரி சமமாக நிதியில் பங்கு எடுக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன்/செயல்படுத்துவேன்..

    தீபாவளி ஷாப்பிங் வந்து பொறுமையாக இருந்து துணிக்கடையில் அலசி ரசனை மிகுந்த உடை வாங்க உதவும் ஆண்கள் இருந்தால் தீபாவளி தித்திக்கும்..

    நலனுக்கு போட்டியாக சமைப்பவராக இருந்து இனிப்பு காரம் வடை பாயசம் செய்யும் ஆண்கள் இருந்தால் தீபாவளி இரட்டிப்பாக தித்திக்கும்..

    பாதுக்காப்பு சரியாக இருக்கிறதா என்று மேற்பார்வை இட்டு பட்டாசு வெடிப்பதற்கு வசதி செய்து கொடுக்கும் ஆண்கள் இருந்தால் தீபாவளி மும்மடங்காக தித்திக்கும்..

    வீடு முழுவதும் தூசி துப்புரவு படுத்தும் ஆண்கள் இருந்தால் தீபாவளி எவ்ளோ தித்திக்கும்?

    எனது வாழ்வில் இரண்டு அதி முக்கியமான ஆண்கள் இருக்கிறார்கள்..இரண்டு நபர்களும் தீபாவளியை தித்திக்க செய்தவர்கள்..வயதில் வித்யாசம் இருந்தாலும் ஒரே நட்சத்திரத்தில்/ராசியில் பிறந்தவர்கள்..என்னை கோபுர உயரத்திற்கு மதிக்க தெரிந்தவர்கள்..அர்த்த பழசான பழக்கம் என்றாலும் - அதிகம் உபயோகிக்காத எனது ஒரு கைக்கு அடக்கமான பர்சில் இவர்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் இடம் ஒன்றும் வலம் ஒன்றும் இருக்கும்.:grinning::grinning:
     
    Thyagarajan likes this.

Share This Page