1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,531
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Feb 2025 CC - #2 தம்பதிகளில் ஒருவர் Night owl; இன்னொருவர் Early bird

    அந்த காலத்து உலகம் என்ன சொன்னது - பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி. பெண்களை எப்படி எல்லாம் சொல்லி அடக்கி வைத்து இருக்கிறது அந்த கற்காலத்து ஆண் ஆதிக்க சமூகம். இப்பவும் இதை சொல்லி கொண்டிருந்தால் சொல்/கல் அடி தான் கொடுப்பார்கள் இந்த Gen Z/Gen Alpha வகையறா.

    நான் பிறந்ததில் இருந்து இன்று வரை எனது காதில் இது லைவ் ஆக விழுந்தது இல்லை.
    Gen Z/Gen Alpha இல்லை என்றாலும் சொல்/கல் அடி கொடுக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது இல்லை :grinning::grinning:

    இந்த வீடியோ பாருங்கள் - எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது

    சொல்லணும் என்று நினைத்ததை சொல்லாமல் விட்டால் தான் mind voice க்கு வேலை. நிகழ்ந்ததை சொல்வதற்கு?? நிஜமான உரையாடல்!!

    Early bird - எப்படி இவ்ளோ நேரம் காலையில உன்னால தூங்க முடியுது? காரில்/டிரெயினில்/விமானத்தில்/புது இடத்தில எங்க போனாலும் உன்னால எப்படி தூங்க முடியுது?

    Night owl - கண்ணு வைக்காத பா. அதுக்கெல்லாம் சூப்பர் மனசு வேணும். சித்திரகுப்தரிடம் பாவ கணக்கு பூஜ்யமா இருக்கணும். மொத்தத்தில் குடிப்பினை இருக்கணும். :grinning::grinning:

    Early bird - அதுவும் சரி தான்!!

    பொதுவான கேள்வி: 5:30 AM parties இருந்தால் தான் வண்டி சுமுகமாக ஓடுமா?

    YT - புத்தம் புது காலை
    YT - ஊரு சனம் தூங்கிருச்சு
     
    vidhyalakshmid likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,531
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    CC - #3 சுமார் தோற்றம் vs சுந்தர தோற்றம்

    எடை/ நிறம்/உயரம்/லட்சணம் - சுருக்கமாக சாமுத்திரிகா லட்சணம் - இதெல்லாம் ஒருவர் கையில இருக்கா? அரைகுறை அறிவியல் தெரிந்தவர்களுக்கு கூட தெரியாதா - இதெல்லாம் பெற்றோர்கள்/தாத்தா/பாட்டி/வம்ச வழியாக வந்தது என்று?

    அழகி/அழகன் போட்டி, ரொமான்டிக் சினிமா வா மண வாழ்க்கை? அழகு - மண வாழ்விற்கு கடைசி வரைக்கும் உதவுமா?
    ஆரம்பத்தில் ஆசை அறுபது நாட்கள் மோகம் முப்பது நாட்கள் உதவி இருக்குமா? என்றெல்லாம் கண்ணா பின்னாவென்று யோசிக்காதீர்கள். எனது யோசனைக்கு வந்தது இது தான்.

    தபு ஷங்கர் கவிதை

    எதை கேட்டாலும்
    உன் வெட்கத்தையே தருகிறாய்
    உன் வெட்கத்தை கேட்டால்
    எதை தருவாய்?


    இந்த கவிதைக்கு என்னோட பதில்: என்னை தருவேன் :wink::wink:

    தடம் மாறி விட்டது...சொல்ல வந்ததை சொல்கிறேன். சுந்தர தோற்றம் ஆணாக இருந்து பெண் சுமாராக இருந்து விட்டால் இந்த உலகம் என்ன பேச்சு பேசும் ? அதே நேரத்தில் ஆண் சுமாராக இருந்து பெண் சுந்தரமாக இருந்து விட்டால் இந்த உலகம் கண்ணை மூடி கொள்ளும். தராசு வைத்து அழகை எடை போட்டா திருமணம் முடிச்சு போட முடியும்? திருமணத்தில் ஆணை விட பெண்ணிற்கு தான் இந்த 'தோற்றம்' பாரம் அதிகம் என்று நான் நினைக்கிறேன்.

    சில நேரங்களில் தம்பதிகள் சண்டை போட்டு கொள்ளும்போது இப்படி எல்லாம் வார்த்தைகள் விழும் என நினைக்கிறேன்:

    ஆள் வளர்ந்த அளவிற்கு அறிவு வளரல
    கலர் அதிகம்/அழகாய் இருக்கோம் என்கிற திமிர்

    சண்டை என்று வந்து விட்டால் சண்டைக்கான காரணம் தான் விவாதப்பொருள் ஆக இருக்க வேண்டும்? எதற்கு தோற்றத்தை/ பெற்றோர்களை/குடும்பத்தை/ வளர்ப்பை/ நண்பர்களை/கடந்து போன கசப்புகளை தூசி துடைத்து எடுத்து வந்து சண்டையை ஊதி பெரிதாக்கணும்?

    குறிப்பு : எங்களது சொந்த அனுபவம் இந்த பதிவில் துளியும் இல்லை. நான் பார்த்ததை வைத்து எழுதுகிறேன்.

    கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
    அவத்த பையா செவத்த பையா

    அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
    பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,531
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    CC - #4 சுட்டெரிக்கும் சூரியன் vs குளிர்ந்த நிலவு

    வெளி உலகத்திடம் கோபத்தை வெளிப்படுத்தாதவர்கள் வீட்டிலும் கோபப்படாமல் இருப்பார்களா? பெரும்பாலும் இரட்டை முகங்கள் - வீட்டிற்கு ஒன்று! உலகத்திற்கு ஒன்று!! வீட்டு முகம் உலகம் அறியுமா?

    எந்த மனைவியாவது கணவரது வீட்டு முகத்திற்கு 100 மார்க்ஸ் கொடுப்பார்களா? எந்த கணவானாவது மனைவியின் வீட்டு முகத்திற்கு 100 மார்க்ஸ் கொடுப்பார்களா? இந்த காலத்தில் மனைவியிடம் திட்டு வாங்காத கணவர் இருக்க முடியுமா? கணவரிடம் திட்டு வாங்காத மனைவி இருக்க முடியுமா?

    சுட்டெரிக்கும் சூரியன் - திட்டு வாங்கிவிட்டு சூரிய கதிர்க்கு tough கொடுக்கும் விதமாக கோபத்தில் கொந்தளிப்பவர்

    குளிர்ந்த நிலவு - திட்டு வாங்கினாலும் மண் பானையில் ஊற்றி வைத்த தண்ணீர் போல ஜில்லுனு இயல்பாக இருப்பவர் :wink::wink:

    சுட்டெரிக்கும் சூரியன் - கோபம் இருக்கும் இடத்தில தான் குணம் இருக்குமா?

    YT - ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
    YT - நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,531
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    CC - #5 Public display of affection vs Private display of affection - Vday's special post

    பார்க்கில்/ரோட்டில் தாத்தா பாட்டி கரம் பற்றி நடந்து போவதை நான் எத்தனையோ முறை நான் தற்போது வசிக்கும் இடத்தில பார்த்து இருக்கிறேன். பார்க்கும்போது ஏதோ இனம் புரியா சந்தோசம் பரவும். தமிழ் நாட்டில் இப்படி பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை.

    தாயகத்தில் நாங்கள் வசித்த gated community க்குள் இரவு உணவிற்கு பிறகு சிறிது நேரம் சேர்ந்து நடப்பது எங்களது வழக்கம். அப்போது ஒன்றோ இரண்டு முறை எனது இணையின் கரம் பற்றி நடந்து இருப்பேன். நாங்கள் இருவர் மட்டுமே பீச் சென்ற போதும்/ரோடு கிராஸ் பண்ணும்போது எப்பவும் கரம் பற்றி இருப்பேன். விமான நிலையத்தில் நான் மட்டும் பயணிக்கும்போது என்னை வழி அனுப்ப எனது இணை மட்டும் வந்த போது hug பண்ணி இருக்கிறேன். வெளியே காட்டிக்கொள்ள வேண்டும் என்று எதையும் நான் செய்ததில்லை. நான் நானாக இருந்தேன். அவ்ளோ தான்! Holding hands/Hugs - Public DA அவ்ளோவே 2024 கடைசி வாரத்திற்கு முன்பு வரை!! கடைசி வாரம் என்ன நடந்தது?

    கடந்த வருட கடைசியில் தாயகத்தில் நாங்கள் எனது இணையின் நண்பர்கள் குடும்பத்தோடு சுற்றி பார்த்த இடம் தமிழ் நாட்டிற்கு வெளியே. C1-C5 தம்பதிகள். நாங்கள் அனைவரும் ஒரு ஹோட்டல் சென்று இருந்தோம். அவர்களது குழந்தைகள் (பள்ளி/கல்லூரி செல்லும் பெண்கள்/பசங்கள்) எங்களுடன் தான் அமர்ந்து இருந்தார்கள். அப்போ ஒரு குட்டி போட்டோ செஷன் C1-C5 க்கு மட்டும். அவரவர் இணையின் கன்னத்தில் முத்தமிடும் போஸ். C1-C4: இயல்பாகவே கன்னத்தில் முத்தம் பதித்த போட்டோ எடுத்தாச்சு. ஒரு தம்பதி C5 - Wife மட்டும் முகம் சிவந்து மறுத்து விட, கஷ்டப்பட்டு மற்ற எல்லோரும் (கல்லூரியில் படிக்கும் அவர்களது பெண் குழந்தை உட்பட ) கன்வின்ஸ் செய்து ஒரு வழியாக போட்டோ எடுக்க பட்டது. பீச் பின்னணியில் C1-C5 தம்பதிகள் சேர்ந்து நின்று போட்டோ எடுத்து கொண்டோம். குழந்தைகள் எல்லாம் முழு சப்போர்ட் தான். C5 தம்பதிகளின் பெண் சொன்னது: "அம்மா, எதுக்கு இவ்ளோ இடைவெளி. Daddy பக்கத்தில நில்லு. அவரு உன்னோட husband." அந்த பெண்ணை எனக்கு ரொம்பவே பிடித்தது. பொதுவாக கல்லூரி வாழ்க்கை பற்றி பேசினோம். நாங்க பேசுவதை பார்த்து அந்த பெண்ணின் சகோதரனும் எங்களது பேச்சில் இணைந்தார். எங்களது ஒரு மணி நேரம் பேச்சு எனக்கு ஆத்மார்த்தமாக இருந்தது. ஷாப்பிங் சென்றபோது அந்த பெண்ணிற்கு ஏதோ வாங்கி தரவேண்டும் என்று தோன்றியது. அழகான ஒரு ஸ்கர்ட் வாங்கி கொடுத்தேன்.

    விசயத்திற்கு வருகிறேன்: முத்தமிட்ட போஸ் போட்டோ காண்பித்தார்கள். எல்லாமே அவ்ளோ அழகாக இருந்தது. அப்படி எடுத்த முதல் போட்டோ அது தான். என்னிடம் அந்த போட்டோ இல்லை. அசல் இருக்கும்போது நகல் எதற்கு ?? :wink::wink:

    Happy V-day!!:beer-toast1::beer-toast1:

    பொதுவான கேள்வி: Public display of affection - 'கண் திருஷ்டி' யா?? 'Cringe' aa??

    YT - யாரோ யாருக்குள்
    YT - ஒன்றா ரெண்டா ஆசைகள்
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,531
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    CC - #6 எண்ணி எண்ணி செலவழிப்பவர் vs தண்ணீர் போன்று செலவழிப்பவர்

    செலவு செய்வது உலகத்துக்காகவா ? நமக்காகவா? உலகம் நம்மை வியந்து பார்ப்பதற்காக ஆஹா ஒஹோ என்று செலவழித்தால் செலவு செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்..இதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய்டும்..

    உலகத்திற்காக/பகட்டுக்காக தண்ணியாக செலவழித்துவிட்டு தனக்கு தேவையானவற்றை வாங்குவதற்கு எண்ணி எண்ணி செலவழிப்பவர்களை எதில் சேர்த்து கொள்ள வேண்டும்?

    உலகத்திற்காக/பகட்டுக்காக செலவிடாமல் தனக்கு/குடும்பத்துக்கு/நெருங்கிய நண்பர்களுக்கு தண்ணீரை போல செலவழிப்பவர்களை எதில் சேர்த்து கொள்ள வேண்டும்?

    மேலே போகும் போது பணத்தை எடுத்து செல்ல முடியாது..அதனால இருக்கற வரைக்கும் தங்களது வசதிக்கும் வரவுக்கும் ஏற்ப செலவழித்து அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது தவறா?

    உதாரணங்கள்:

    • வைத்து இருப்பதோ விலை உயர்ந்த புத்தம் புது வாகனம் - போடும் வாகன எரிபொருளோ regular
    • தனக்கென புது துணி எடுக்கும்போது எப்போதுமே discount விலை மற்றவர்களுக்கு எடுக்கும்போது முழு விலை
    -----------------------------------------------------------------------------------
    • வைத்து இருப்பதோ LV bag ஊர் சுத்தும்போது எடுத்து செல்வதோ Coach bag
    • ஒரு டஜன் தங்க/வைர கம்மல்கள்/மோதிரங்கள் வைத்து இருந்தாலும் அணிந்துகொள்வதோ வருடம் முழுவதும் ஒரு எளிமையான கம்மல்/மோதிரம்
    -----------------------------------------------------------------------------------

    உதாரணங்களா? உண்மைகளா? என்றெல்லாம் யோசிக்காமல் இந்த பதிவை தங்களுக்கு சம்பந்தப்படுத்த முடிந்தால் சம்பந்தப்படுத்தி புன்னகைத்து கொள்ளவும் :grinning::grinning:

    YT - ஏயா என் கோட்டிக்காரா
    YT - அடுத்தாத்து
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,531
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த மாதத்தின் கடைசி கட்டம் வந்து விட்டது..யோசிச்சா அருவி மாதிரி கொட்டுது..இன்று அத்தனையும் கொட்டி விட வேண்டியது தான்..

    CC #7 Head vs Heart

    ஒருவர் - மூளையை தக்க வைத்து இதயத்தை தொலைத்தவர்
    இன்னொருவர் - இதயத்தை தக்க வைத்து மூளையை தொலைத்தவர்

    ரெண்டுமே வேணுமா? எதுக்கு? 2X வீணா போவதற்கா? :wink::wink:

    CC #8 First bencher vs Last bencher

    பள்ளி/ கல்லூரி யில் முதல் ஆள் - நூற்றுக்கு 1 மதிப்பெண் குறைந்தாலும் அழுபவர்..படிப்பை தவிர வேறு ஒன்றுமே தெரியாது..

    அரியர்ஸ் வைத்து இருப்பதை கூட கெத்தாக சொல்பவர்கள்..படிப்பை தவிர மற்றது எல்லாம் தெரியும்..

    ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவுமா?

    CC #9 Book smart vs Street smart

    Intellectual னு நினைப்பு..தினமும் புத்தகம் படித்தால் தான் தூக்கம் வரும்..
    வாழ்க்கையில் எவ்ளோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டாமோ னு நினைப்பு..புத்தகத்தை பார்த்தாலே தூக்கம் வரும்..

    நெனப்பு தான் பொழப்ப கெடுக்குது..யாரோட பொழப்பை? உன்னால் நான் கெட்டேன்..என்னால் நீ கெட்ட..

    CC #10 Indoor vs Outdoor

    வீட்டு வாசி - பத்து நாட்கள் வீட்டில் அடைந்து கிடந்தாலும் உற்சாகமாக துள்ளி திரிபவர்.. பத்து நாட்கள் ரோடு ரோடாக சுத்தினால் வீட்டு ஏக்கம் எட்டி பார்த்து விடும்

    ரோட்டு வாசி - பத்து நாட்கள் ரோடு ரோடாக சுத்தினாலும் வீட்டு நெனப்பு வராது..பத்து நாட்கள் வீட்டில் அடைந்து கிடந்தால் சிறைப்பட்டவர் போல சோக கீதம் வாசிப்பவர்..
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,531
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    CC #11 Risk lover vs Risk averse

    எதற்கும் துணிந்தவர்
    எதுக்குமே துணியாதவர்

    Risk-Reward --> மண வாழ்விற்கு பொருந்துமா? திருமணத்தில் Risk lover க்கே எதற்கு மணம் புரிந்தோம்? என்று ஒரு முறையாவது தோணும்..Risk averse க்கு தினம் தோறும் தோணுமா?? :wink::wink:

    CC #12 பழைய பஞ்சாங்கம் vs புது பஞ்சாங்கம்
    Boomer: பழைய புராணத்தை போற்றுதல்..
    பழையன கழிதலும் புதியன புகுதலும்..

    காலத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனமா?
    அந்த காலத்துல சொன்னதை எல்லாம் கல்வெட்டில் எழுதி வைத்து காவல் காப்பவர்களை என்னவென்று சொல்வது ?

    CC #13 நளபாகம் - கலக்குவது - நளன்? தமயந்தி?

    பொங்கல் செய்தாலும் பிரியாணி சுவையை கொண்டு வரும் கைப்பக்குவம்
    பிரியாணியை பொங்கலாக மாற்றும் பக்குவமில்லா கை

    சமையல் அறையில் சுமாராக சமைக்கும் நளனின் நளபாகத்தை அளவிற்கு அதிகமாக புகழ்ந்து நளனை அடிக்கடி சமைக்க வைத்து விட முடியாதா?

    குறிப்பு: சொந்த ட்ரிக் மாதிரி இருக்கே என்று எண்ணி விட வேண்டாம்..எனது நளன் இயல்பாகவே நளபாகத்தில் கைத்தேர்ந்தவர்..திருமணத்திற்கு முன்பு தினசரி சமையல் பற்றி நான் கேள்வி கேட்டபோது எனக்கு கிடைத்த பதில்: சமையல் அறை பெண்களுக்கு மட்டும் என்று நான் நினைக்கவில்லை. நானும் சமைப்பேன். அந்த பதிலில்/ அன்று சமைத்து கொடுத்த உணவிலும் அன்று மயங்கினேன் இன்றும் செய்யும் உணவிற்கு மயங்குவேன்..மிகைப்படுத்தி சொல்லவில்லை..பாவக்காய் பிடிக்கவே பிடிக்காத எனக்கு எனது இணை சமைக்கும் பாவக்காய் இனிப்பாய் இனித்து இருக்கிறது..வெல்லம் சேர்ப்பார்..
    ஏதோ ட்ரிக் வைத்து இருக்கிறார்..மீதமாகும் சப்பாத்தியை கொத்து பரோட்டா போல மாற்றி விடுவார். கண்டிப்பாக கண் பட கூடிய கைப்பக்குவம்!

    CC #14 Foodie vs Non-foodie

    ருசியாக சமைக்கவும் தெரிந்து சாப்பிடவும் தெரிந்தவர்க்கு சாப்பாடு பிடிக்காத இணை அமைந்தால்? ருசியா பேசினால் ஈடு செய்ய முடியுமா?? :grinning::grinning:
    நாவில் சுவை அறியாதவர் சொல்லின் இனிமையை அறிய முடியாதா?

    Live to eat? Eat to live?

    CC #15 Atheist vs Theist

    பொதுவாக சொன்னால், கடவுள் பக்தி உள்ளவர்களை உயர்வாக பார்க்கிறது இந்த சமூகம்..

    பாவம் செய்துவிட்டு காசிக்கு சென்று கங்கையில் நீராடினால் பாவத்தை போக்கி விட முடியுமா?
    பாவமும் செய்ய வேண்டாம் காசிக்கும் போக வேண்டாமே என்ற கொள்கை இருந்தால் தவறா?

    YT - கதைகளை பேசும் விழி அருகே
    கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
    வருகிற வாசனை நீயல்லவா


    YT - தொட்டு தொட்டு
    தொடக்கமும் இல்லை
    முடிவுகள் இல்லை
    கடவுளை போலே காதல்
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,531
    Likes Received:
    2,527
    Trophy Points:
    338
    Gender:
    Female
    CC #16 கற்பனைவாதி vs யதார்த்தவாதி
    கற்பனையோடு கலந்தவர்.. எதையுமே அணு அணுவாய் ரசித்து வாழ்பவர்..ரசனை இருக்கும் வாழ்க்கை தான் ருசிக்கும் என்று ஆணித்தரமாக பேசுபவர்.. கனவுகளை துரத்துபவர்..மழையில் நனைந்தால் கவிதை வரும்..

    கவிதை கிராம் எத்தனை விலை? என்று கேட்பவர்..ரசனை என்ற வார்த்தைக்கு அகராதியை தேடுபவர்..நிஜங்களை துரத்துபவர்..மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும்..


    CC #17 Engineer vs Doctor

    Biology allergy..தண்ணி/தம் அடிச்சால் வீணா போவது Kidneys? Lungs? இந்த கேள்விக்கு விடை தெரியாதவர்..multiple organ failure என்று சாமர்த்தியமாக பதில் சொல்லி சமாளிப்பவர்..

    Mathematics allergy..Original price: 129.99; Discount: 25%; Final price என்ன வென்று கேட்டால் Calculator தேடுபவர்கள்..[Mental calculation: 130 la ல பாதி 65; 65 ல பாதி 32.5; Final price: 65+32.5= ~97.5 Or 130 - 32.5 = ~97.5]

    YT - முன்பே வா
    YT - இது என்ன மாயமோ


    இவ்ளோ பேசிட்டு இந்த முக்கியமான மேட்டர் எழுதலேனா இந்த poetic thread என்னை மன்னிக்காது.. இது பத்தி நான் எவ்ளோவோ இங்கு கிறுக்கி விட்டேன்..

    அதனால் தக்க பாடல்களுடன் Feb 2025 Special assignment முடித்து கொள்கிறேன்!! :wink::wink:

    CC #18 APK vs A1C

    என்ன இது - APK special :grinning::grinning:

    நெஞ்சமெல்லாம் காதல் - A1C special :wink::wink:
     

Share This Page